11/05/2020
“இன்னும் ஒரிரு மாதங்களே எஞ்சியுள்ளது உயர்தர்ப் பரீட்சைக்கு...” போஸ்ட்டின் தொடர்ச்சி.....
உயர்தரப் பரீட்சையினை எதிர் கொள்ளக் கூடிய முதல் முறை,இரண்டாம் முறை,மூன்றாம் முறை மாணவர்களுக்கு மத்தியில் எழுகின்ற பொதுவான பிரச்சினைகளே இவைகள்.
01. “சகோ இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு,வகுப்புக்கும் போய்படல்ல ஒரே டென்சன்,ஸ்றெஸ்ஸாதான் இருக்கு என்ன செய்ற என்றே வெள்ஙகல்ல...!”
“பதில் :- சகோ, நீங்க மட்டும் டென்சன்,ஸ்றெஸ்ஸ உணர்ரல்ல, இந்த முறை எக்சாம் செய்ற எல்லாருமே அத பேஸ் பன்வாக அதுல பயப்பட வேணாம்.
உங்களுக்கு ஸ்ட்றெஸ் பயம் பதட்டம் எல்லாம் வரல்ல எண்டா நீங்க ஒழுங்கா இன்னும் படிக்கல்ல எண்டுதான் அர்த்தம்.அந்த பயம்,பதட்டம்,ஸ்ட்றேஸ் எல்லாத்தையும் வென்று ஒரு தன்னம்பிக்கையோட படிச்சீங்க எண்டா நீங்க உங்கட உயர்தர வாழ்க்கைல முதிர்ச்சி அடைந்ததைக் காட்டும்.ஆகவே தன் நம்பிக்கையினை கைல எடுங்க உங்களுக்கு பின்னால இருக்குற உங்கட பேரண்ட்ஸ் படும் கஸ்டம் எல்லாத்தையும் கண்ணுக்குள்ள கொண்டு வாங்க,வாழ்க்கைல நான் வெல்வன் எண்டு உறுதி கொள்ளுங்க இன்ஸா அல்லாஹ் நீங்க வெற்றி அடைவீங்க.
எவ்ளோ க்ளாஸ் கட் பண்ணாலும் (கட் பன்னுவது நன்றன்று) அந்த நோட்ஸ் எல்லாம் எடுத்து படிங்க, படிக்கும் போதே எனக்கு இது வெளங்காது நான் வகுப்புக்கும் போகல்ல எண்ட நினைப்போட படிக்காதங்க கடைசி வர அது உங்களுக்கு அது எட்டாக் கனிதான் விளங்கி எடுப்பது.என்னால ஏலும் நான் க்ளாஸ் போகாமலும் படிச்சி விளங்கி எடுப்பன் எனக்கு அல்லாஹ் அந்த அறிவ தந்து இருக்கான் நான் எதுக்கும் சழைத்தவன் அல்ல எண்டு மனசுல எடுங்க நீங்க ஒடோவா வென்றிடுவீங்க.எல்லாம் வரனும் எண்டா நமக்கிட்ட இருக்க கூடாத ஒரே விடயம் நெகடிவ் திங்கிங் அது மட்டும் வாழ்க்கைல எந்த நிலைக்கும் வர கூடாது.அதுவே போதும் எம் முயற்சியைத் தடுப்பதற்கும் எம்மாலே எம் வாழ்க்கையினை அழிப்பதற்கும்.சோ தயவு செய்து நெகடிவ் திங்கிங்க தவிருங்க ப்ரோ..”
02.”வீட்ல உம்மா,வாப்பா,குடும்பம் எல்லாம் நம்பிட்டு இருக்காக படிச்சித்தான் புள்ள நம்மட கஸ்டத்த எல்லாம் சரியாக்குவான் என்று...!”
பதில் :- இது ஒரு சாதரண அன்றாடம் தொழில் செய்து குடும்ப செலவைப் போக்கும் ஒரு குடும்பத்தில் காணப்படும் ஒரு அவா. உங்கட வாப்பா உங்கள படிப்பிக்க உங்கட சின்ன வயசில இருந்து இண்டக்கி வர எவ்ளோ செலவானாலும் பரவால்ல எண்டு நினைச்சி உங்கள படிப்பிக்காறு, அவரு அந்த காச எடுக்க படும் அவதிகள் துன்பங்கள் உங்கட உம்மாக்கும் வெளங்கி இருக்காது.
மகன ஒரு டொக்டரோ,இன்ஞினியரோ அல்லது ஒரு பல்கழைக்கழக அனுமதியையாவது பெற வைத்து அழகு பாக்கனும் எண்டுதான் நினைச்சிட்டு அவர் படும் கஸ்டதையும் அனுபவிக்காரு.துன்பம் வரும் போதும் ஒரு நாள் இவ் அனைத்துக்கும் நான் பெற்ற பிள்ளை முற்றுப் புள்ளி வைப்பான் எண்ட சந்தோசத்தில் துன்பத்தின் போது வந்த கண்ணீரை தன் அழுக்கு படிந்த கைகளால் துடைத்து விட்டு மீண்டும் அதே சிரமத்தோடு வயதான வீட்டுக்குள் இருக்கும் காலங்களில் தன் வேலைகளைத் தொடர்கின்றார்.
உம்மா,காலைல மகன் வகுப்புக்கு போகனும்,ஸ்கூலுக்கு போகனும் பசிக்க கூடா அங்க போய் சோ நாம ஏர்லியா எழும்பி சமைச்சி வைக்கனும் உடுப்ப அயன் பன்னனும் எண்டு பதற பதற அறை குறை நித்திரையுடன் தன் மகனுக்காக எழும்பிகிறாள்.சமைக்கும் போது கையில் நெருப்பு சுடுகிறது,அயன் பண்ணும் போது அயன் கையில் படுகிறது அணைத்தியும் தாங்கிக் கொண்டு அக் காயங்களினை சிறு புன்னகை கலந்த அவாவுடன் “என் மகன் டொக்டரான இதுக்கெல்லாம் மருந்து தருவான்லவா” எண்டு சந்தோசப்பட்டுக் கொண்டு தொடர்கிறாள்.பின்னர் நேற்று வகுப்புக்கு போட்டிக்கு போய் வந்த உடுப்ப கழுவி காய போடுகிறால் மகன் படிக்கட்டும் நாம டிஸ்றேப் பன்ன கூடா எண்டு.இவ்வாறு உன் உம்மா,வாப்பா படும் வேதனைகள் பெரிது எல்லாமே நீ நன்றாக வாழ வேண்டும் என்றுதான்.ஆகவே தயவு செய்து உன் உம்மா,வப்பா படும் கஸ்டத்தை நிறைவேற்றி அவர்களுக்கு நல்ல நிம்மதி மற்றும் சந்தோசமான வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது உன் கையில்.......!
“மீண்டும் ஒரு பதிவில் ஏனைய பிரச்சினைகளுக்கான பதில்கள் வந்து சேரும்.”
“(உங்கள் பின்னூட்டல்கள் ஏற்றுக் கொள்ளப்படும்)”
தொடரும்.........