24/05/2025
கடந்த மாதம் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கு கண்கானிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட சுகாதார அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் சிலாவைத்துறை பிரதேச வைத்திய சாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆனது 22.05.2025 இன்று நடைபெற்றது.
வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அவர்களின் திட்டமிடல் பிரிவு, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ,அவர்களின் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப பிரிவினர் மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் அவர்களின் தொழில்நுட்ப பிரிவினர் ,வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி,பல்வைத்திய அதிகாரி, வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்,பிரதேச அரசியல் பிரமுகர்கள் ,ஏனைய நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மனித வள, உள்கட்டமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு பல தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்பட்டன.
குறிப்பாக வெளிநோயாளர் பிரிவினை பாவனையற்று பிரதானவீதிக்கு அருகாமையில் காணப்படும் உரிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதி பகுதியில் ஆரம்பித்து வைத்தல், இதற்க்கான ஒப்புதலையும் நிதியுதவிகளையும் சுகாதார அமைச்சின் செயலாளர் வழங்கி வைத்தார்.
மேலும் ஏனைய விடுதிகள் புனர்நிர்மாணம்,சுற்றுமதில் , குடிநீர் வசதி,போன்ற அபிவிருத்தி திட்டங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கைகள் பெறப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.விரைவில் உரிய ஒப்பந்ததாரர்களினால் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்படும்
எனவே கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு பொதுமக்களினது ஒத்துழைப்பு களையும் உதவிகளையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.