23/09/2020
நிறைய பேருக்கு தங்களுடைய அந்தரங்க வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் உண்டு. இதை வெளியில் சொல்லவும் கூச்சப்பட்டு, மருத்துவரிடமும் ஆலோசிக்காமல் தங்களுடைய வாழ்க்கையையே பாழாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பது தான் ஜாதிக்காய். நம்முடைய முன்னோர்கள் டஜன் கணக்கில் குழந்தை பெற்று வளர்த்து, தாங்களும் கம்பீரமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் அப்படியில்லை. இந்த தலைமுறையினரின் வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் இந்த பிரச்சினையின் தீவிரம் தான் இன்றைக்கு ஏராளமான செயற்கை கருத்தரிப்பு மையங்கள், குழந்தைப் பேறின்மையை தீர்க்கும் மருத்துவமனைகள் ஊருக்கு ஊர் முளைத்துவிட்டன.
இதுபோன்ற தாம்பத்திய உறவில் ஏற்படும் விந்து வேகமாக வெளியேறுதல், நரம்புத் தளர்ச்சி, விந்து நீர்த்துப் போதல் போன்ற பிரச்சினைகளுக்கு ஜாதிக்காய் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.
பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை. இரவு தூங்கும்முன் பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி கலந்து குடியுங்கள். காலையில் வழக்கம் போல நீங்கள் குடிக்கும் டீயில் கலந்தோ டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் வெந்நீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்தும் குடிக்கலாம்.
ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்து, கொலஸ்ட்ரால் உடல் பருமனாலும் அவதிப்படுகிறவர்கள் ஏராளம். அப்படி உடல் பருமனாலும் கொலஸ்ட்ராலாலும் அவதிப்படுகிறவர்கள் தங்களுடைய உணவில் அடிக்கடி ஜாதிக்காய் சேர்த்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும். ரத்தத்தில் கொழுப்பு படிவது தடுக்கப்படும். அதோடு மட்டுமின்றி புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய வல்லமையும் ஜாதிக்காய்க்கு உண்டு.
எகஸ்போர்ட் குவாலிட்டி ஜாதிக்காய் பொடி ஆன்லைனில் வாங்க இந்த லிங்க் கிளிக் செய்யவும்.
https://myristica.co.in/product/jathikkai-powder-100g/
இன்றைய தலைமுறையினருக்கு இருக்கிற மிகப்பெரிய பிரச்சினையே போதிய தூக்கம் இல்லாதது தான். இரவு முழுக்க தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பது, மொபைல் போனில் அதிக நேரம் செலவிடுவது என்றிருப்பதால், சரியான நேரத்திலோ போதிய நேரமோ தூங்குவதில்லை. இதனால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அப்படி குறைந்தபட்சம் 6 மணி நேரம் கூட தூங்காமல் இருப்பவர்கள் இரவு உணவுக்குப் பின் ஒரு டம்ளர் பாலில் இரண்டு சிட்டிகை அளவு ஜாதிக்காய் பவுடர் சேர்த்து குடித்து வந்தால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
ஜாதிக்காயில் பொட்டாசியம் அதிகமாக நிறைந்திருக்கிறது. பொட்டாசியம் பொதுவாக உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. அதே போல் ஜாதிக்காயில் உள்ள பொட்டாசியம், உடலின் ரத்தம் பாயும் பகுதிகளை சீர்படுத்தி இரத்த அழுத்தத்தை நன்றாக குறைக்கிறது. ஜாதிக்காயை “கிங் ஆஃப் ஸ்பைஸஸ்” என்று சொல்வார்கள். நாம் வெறுமனே சுவையைக் கூட்டுவதற்காக ஜாதிக்காயை முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து இப்போது நாம் பயன்படுத்துகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
பற்கள் பலவீனமாக இருப்பவர்கள், ஈறுகளில் ரத்தம் வடிதல், ஈறு வீக்கம் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த அரு மருந்தாக ஜாதிக்காய் இருக்கும். இதுபோன்ற பல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்கள் தினமும் பல் துலக்கும் போது டூத் பேஸ்ட்டில் சிறிது ஜாதிக்காய் பொடியைத் தூவி பல் துலக்குங்கள். பல் ஈறுகள் உறுதியாகும். ஈறுகளில் ரத்தம் வடிதல் குறையும். சொத்தைப்பற்கள் ஏற்படாமலும் பாதுகாக்கும்.
பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்கின்ற பொழுது, நாம் உண்ணும் மற்ற உணவுகளில் உள்ள நார்ச்சத்துக்களும் நம்முடைய உடலுக்கு சரியான நேரத்தில் முறைப்படுத்தப்பட்டு மெட்டபாலிசம் வேகமாக நடைபெறுவது தாமதப்படுகிறது. அதனால் அஜீரணக் கோளாறு, வயிற்றுப் பொருமல் ஆகியவை ஏற்படும். ஆனால் வெந்நீரில் இரண்டு சிட்டிகை அளவு ஜாதிக்காய் பவுடரைக் கலந்து குடித்து வந்தால், உணவில் உள்ள நார்ச்சத்துக்கள் ஆற்றலாக முறைப்படுத்தப்பட்டு அஜீரணக் கோளாறை சரிசெய்யும்.
கர்ப்பிணிப் பெண்கள் ஜாதிக்காய் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கிற தாய்மார்களும் ஜாதிக்காய் சேர்த்துக் கொள்ளக் கூடாது. கர்ப்பிணிகள் மட்டுமல்லாது, பொதுவாக யார் ஜாதிக்காய் எடுத்துக் கொண்டாலும் குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். சிட்டிகை அளவுகளில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஜாதிக்காயை அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாமா கூடாதா என தங்களுடைய குடும்ப மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளுங்கள்.
Nutmeg is found to have health benefits, including its ability to relieve pain, soothe indigestion, strengthen cognitive function, detoxify the body, boost skin health, alleviate oral conditions, reduce insomnia, increase immune system function, and prevent leukemia, and improve blood circulation.