Green spiro spirulina

  • Home
  • Green spiro spirulina

Green spiro spirulina Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Green spiro spirulina, Medical and health, .

தினமும் ஸ்பைரூலினா சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்! பலரும் ஸ்பைரூலினா பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஸ்பைரூலினா ...
14/05/2024

தினமும் ஸ்பைரூலினா சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!

பலரும் ஸ்பைரூலினா பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஸ்பைரூலினா என்பது ஒரு செல் புரத பாசி வகையைச் சேர்ந்தது. இதன் முழுமையான பயன்களையும், சக்தியையும் முன்னரே அறிந்திருந்தால், இன்று நம்மைத் தாக்கும் பல பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். ஸ்பைரூலினாவில் பச்சையம் அதிகம் உள்ளது. அதனால் தான் இது பச்சை நிறத்தில் உள்ளது. மேலும் இது இந்தியா, ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, இலங்கை போன்ற வெப்பமான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் அதிகம் வளரக்கூடிய பாசி. இதனை மீன்கள் சாப்பிடுவதால் தான், மீன்களில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த ஸ்பைரூலினா பொடி, மாத்திரை மற்றும் கேப்ஸ்யூல் வடிவில் கடைகளில் விற்கப்படுகிறது. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை தினமும் சிறிது எடுத்து வந்தால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, உடலை நோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். சரி, இப்போது ஸ்பைரூலினாவை தினமும் சிறிது சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

புரோட்டீன்கள் ஸ்பைரூலினாவில் 60-70 சதவீத புரோட்டீன்கள் உள்ளன. அதாவது பால், முட்டை மற்றும் பருப்பு வகைகளை விட அதிகமான அளவிலான புரோட்டீன்கள் ஸ்பைரூலினாவில் உள்ளது. எனவே இதனை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் புரோட்டீன் குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

காமா-லினோலினிக் அமிலம் (GLA) இது ஓர் அத்தியாவசிய ஃபேட்டி அமிலம். அதாவது இது தான் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம். மேலும் ஸ்பைரூலினாவில் நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை அதிகம் உள்ளதால், இது உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும் உணவுப் பொருளாகவும் இருக்கும்.

அமினோ அமிலங்கள் ஆய்வுகளில் ஸ்பைரூலினாவில் அனைத்து வகையான அமினோ அமிலங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த அமினோ அமிலங்கள் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

வைட்டமின்கள் ஸ்பைரூலினாவில் வைட்டமின்களான ஏ, பி, சி, டி மற்றும் ஈ உள்ளது. ஆய்வுகளும் இதில் சூடோவைட்டமின் பி12 மற்றும் வேறுபல வைட்டமின்களும் இருப்பதாக கூறுகின்றன.

கனிமச்சத்துக்கள் ஸ்பைரூலினாவில் உடலுக்கு தேவையான மைக்ரோ கனிமங்கள் மற்றும் மேக்ரோ கனிமங்கள் வளமாக உள்ளன. அதில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், ஜிங்க் மற்றும் குரோமியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. முக்கியமாக இதில் பாலை விட அதிகமான அளவில் கால்சியம் உள்ளது.

உடல் சுத்தமாகும் ஸ்பைரூலினாவில் பச்சையம் அதிகமான அளவில் உள்ளது. இது உடலை நச்சுக்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், தினமும் சிறிது ஸ்பைரூலினாவை உட்கொள்ளுங்கள்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும் உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேறிவிட்டால் தானாக நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்தால், உடலைத் தாக்கும் கிருமிகளில் இருந்து உடல் பாதுகாப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும்.

நீரிழிவு நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் ஸ்பைரூலினாவை எடுத்தால், 6 வாரத்தில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்பம் சரும பிரச்சனைகள், பாதத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

புத்துணர்ச்சி அளிக்கும் ஸ்பைரூலினாவை தினமும் உட்கொண்டு வந்தால், நாள்பட்ட களைப்பைப் போக்கி, நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.

எடை குறையும் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், ஸ்பைரூலினாவை உட்கொண்டு வருவதன் மூலம் எளிதில் குறைக்கலாம். எப்படியெனில், இதனை உட்கொண்டால், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதன் மூலம் உடலில் கலோரிகளின் அளவைக் குறைத்து, உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.

17/09/2023

😎Spirulina Face pack 💅💄

💊Offers onwards 🥗
05/04/2023

💊Offers onwards 🥗

💊Pamphlets 😎
05/04/2023

💊Pamphlets 😎

🥳Our Visiting card 🥰🥳
05/04/2023

🥳Our Visiting card 🥰🥳

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Green spiro spirulina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share