Natural Helth& Food Tips

  • Home
  • Natural Helth& Food Tips

Natural Helth& Food Tips Natural Health improvement,food making tips ,how to prevent your health of body,beauty tips

01/07/2019

Good for health

12/01/2019
12/01/2019
நரம்பு முடிச்சி நோய்:- (Varicose Veins)வெரிகோஸ் நரம்பு முடிச்சி நோய் என்றால் என்ன?பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியில...
09/07/2015

நரம்பு முடிச்சி நோய்:- (Varicose Veins)

வெரிகோஸ் நரம்பு முடிச்சி நோய் என்றால் என்ன?

பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். முட்டிக்கால் களுக்கு கீழேயும் இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அட இதுதான் வெரிகோஸ் வெயின் நோயா? இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா? உண்மைதான். இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ, வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இது அலட்சியப்படுத்தக்கூடிய நோய் அல்ல.

நோய்களில் எதுவுமே அலட்சியத்துக்குரி யது அல்ல என்பதுதான் உண்மை. தலைவலி கூட தலை போகும் பிரச்சினையாக மாறலாம். நோய் என்றால் நோய்தான். அவற்றால் ஏற்படும் விளைவுகளிலும், வேதனைகளிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். எப்படி இருந்தாலும், எந்த நோயாக இருந் தாலும் அதனைக் குணப்படுத்த முயல வேண்டும் என்பதே மருத்துவத்தின் அடிப்ப டைக் கோட்பாடாகும். அது ஒருபுறம் இருக்கட்டும். இப்போது வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

கை, கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் களுக்கு வெயின் என்றுபெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்திற்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்று அழைக்கிறோம். வெரிகோஸ் வெயின் நோய் எதனால் வருகிறது ? மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப்பதைப் போல் கீழ்நோக்கித் தொங்கிய படி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின் பெருங்குடல் அடைக்கப் பட்டுள்ளது. மலச்சிக்கல் ஏற்படும் போது, இரத்தநாளங்கள் அனைத்தும் அழுத்தப்படு கின்றன. நாளங்கள் புடைத்தல் அல்லது வீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன. ஆக, மலச்சிக்கல் தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப் படுகிறது. அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது, ஒரே இடத்தில் கால்களை தொங்க விட்ட படியே அசைவற்று உட்கார்ந்திருப்பது போன்றவற்றாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவதற் கான காரணமாகும்.

இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாதங்களில் இருந்து இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிகவிசையுடன் வால்வு கள் இயங்க வேண்டி உள்ளது. அது இயலாமல் போகும் போது, இரத்தம் மீண்டும் கீழ்நோக் கியே செல்லத் தொடங்கும். இதனால், இரத்த நாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத் தும் வீங்கியும் காணப்படும். ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசைவில்லாத வாழ்க்கை முறையினால் வரும்கேடுகள் என்பது புரிகிறது. உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பும், அசைவும் தேவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

வெரிகோஸ் வெயின் நோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

அதிக எடை, மலச்சிக்கல், கருவுற்றிருக்கும் காலத்தில் போதிய பராமரிப்பின்மை, அசை வற்றிருத்தல் போன்ற காரணங்களால் பெண் களுக்கு வரவாய்ப்பு அதிகம். பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் இந்நோய் இரு பாலருக்கும் வரும். வயது முதிர்ந்தவர்களுக்கு இரத்த ஓட்ட பாதிப்பினால் வர வாய்ப்புண்டு. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கால் பகுதிகளில் உள்ள இரத்த நாளங்களில் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பாலான தாய்மார்களுக்கு 3 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் இந்த நோய் வருகிறது.

அதிக எடை உள்ளவர்கள், மற்றும் கொழுப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் எளிதில் வரும். பொதுவாக பிள்ளைப்பேறு, மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாட்டுக்கான அறுவைசிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களைவிட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டே வேலை செய்வது, அசைவற்று ஒரே இடத்தில்அமர்ந்திருப்பது போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெரிகோஸ் வெயின் நோய்க்கான அறிகுறி கள் என்ன? தோலின் உட்புறத்தில் இரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும். கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல். பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படு தல். பாதப்பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல். கணுக்காலிலும், பாதங்களிலும் அரிப்பெடுத் தல் (இதனை சில சமயங்களில் உலர்ந்த சருமத்தின் காரணமாக ஏற்படும் நோயாக மருத்துவர்கள் தவறாக கருதிவிடுவது உண்டு)

வெரிகோஸ் வெயின் இருக்கும் இடத்தில் தோலின் நிறம் வேறுபட்டு காணப்படுதல். வருமுன் தடுக்க ?

இந்த நோயை வரும் முன் மட்டுமே தடுக்க முடியும். வந்துவிட்டால் அதனை அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. மேலும் அதிகரிக் காமல் பார்த்துக்கொள்ளலாம். எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பதையோ, நின்றுகொண்டு இருப்பதையோ தவிர்க்க வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பது நல்லது. தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணி யக் கூடாது. தளர்ந்த ஆடைகளையே அணிய வேண்டும். எடை அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் அதனைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிகிச்சை வாழ்க்கை முறையை மாற்றச் செய்வதில் இருந்துதான் இந்த நோய்க்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் வெரி கோஸ் வெயின் புதிதாக உருவாவதைத் தடுப் பதுடன், ஏற்கனவே இருப்பவற்றால் வரும் வலி மற்றும் வேதனைகளைக் குறைக்க முடி யும். அறுவை சிகிச்சைகளாலோ, மற்ற விதிமுறை கள் மூலம் அகற்றுவதாலோ முழுமையாக பயன் கிடைக்காது. ஏனென்றால், மற்றொரு இரத்த நாளத்தின் மூலமாக இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. வெரிகோஸ் வெயின் நோய் வந்தபின்னர் அதனை அகற்றுவது கடினம் என்பதையும், வரும்முன் காப்பதற்கு முயல வேண்டும் என்பதுமே முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்.

ஆயுர்வேதத்தில் இந்நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருந்துகள் உட்கொள்வதாலும், தைலங்கள் கொண்டு நீவி விடுவதாலும் மற்றும் முறையான பஞ்சகர்மா சிகிச்சையும் மிகுந்த பலனை அளிக்கின்றன. கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சினை ஆண்களுக்குத்தான் அதிகம் வரும் என்பார்கள். இது பெண்களுக்கும் ஏற்பட வாய்ப்புண்டா? ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் வருவதற்கு வாய்ப்புள்ளது. பெண் களுக்கு சுரக்கும் ஹோர்மோன்கள்தான் இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்கு முக்கியக் காரண மாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் 70 வயது வரையான பெண்களுக்குத்தான் அதிகம் வருகிறது.

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சினை என்றால் என்ன?

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்பது, கால்களில் உள்ள நரம்புகள் புடைத்துக் கொள்வதுதான். ஆரோக்கியமான கால்களில் உள்ள நரம்புகள் இருதயத்திலிருந்து செலுத்தப்படும் இரத்தத்தை ஒரே சீராகச் செல்ல அனுமதிக்கும். அதேபோல கால்களி லிருந்து இதயத்திற்கு இரத்த ஓட்டம் சீராக நடைபெற வழி வகுக்கும். இதற்கு கால் நரம்புகளில் உள்ள வால்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை பழுதடைந்தால், நரம்பு களில் அடைப்பு ஏற்பட்டு, அவை கால் களிலேயே தங்கிவிடும். இதனால் கால்கள் பாதிக்கப்படும். அல்லது கடுமையான வலி ஏற்படுத்தும். கால் நரம்பு களில் இருந்து இரத்தம் மீண்டும் இருதயத் திற்கு செல்லாத நிலையில் கால்கள் வீக்கமடையும்.

இவ்விதம் கால் நரம்புகளில் ரத்தம் தேங்குவதால் நரம்புகள் சுருண்டு கொள்ளும். இதைத்தான் வெரிகோஸ் வெயின் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இவர்களது கால்கள் வீக்கமடைவதுடன், நரம்புகள் சுருண்டு கொண்டிருப்பதையும் காண முடியும். இரத்தம் தேங்கி விடுவதால் நரம்புகள் கருநீல நிறத்தில் காட்சி அளிக்கும். ஆரம்ப நிலை என்றால், சிறிய அளவில் மாறுபட்ட நிறத் திலான கோடுகள் சிலந்தி வலை போன்று காட்சியளிக்கும். பெரும்பாலோர் இது வெறும் தோல் சம்பந் தப்பட்ட பிரச்னை என்று நினைக்கிறார்கள். ஆனால் இது மருத்துவ ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு நோய். நரம்புகள் சுற்றிக் கொள்ளும் பிரச்சினை ஏற்பட்டால் கடுமையான வலி தோன்றும். சில சமயங்களில் உடலில் மிகுந்த களைப்பு ஏற்படும். இந்நோய் மிகவும் முற்றிய நிலையில் தோலின் நிறமே மாறும். தோலின் மீது கொப்புளங்கள் தோன்றும். கால் களிலும், கணுக்கால்களிலும் கொப்புளங்கள் தோன்றும். கொப்புளங்களிலிருந்து சில சமயம் இரத்தம் வெளியேறும். சில சமயங்களில் இரத்தக் கட்டிகள் நரம்புகளில் ஏற்படக்கூட வாய்ப்புண்டு.

எத்தகைய பெண்களுக்கு கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சினை ஏற்படும்?

உடல் பருமனான பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், அதிலும் குறிப்பாக அதிக குழந்தைகள் பெறும் தாய்மார்களுக்கு இப்பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில பெண்களுக்கு கருவுற்ற காலத்திலேயே கால்களில் நரம்புகள் சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்படும். குழந்தை பிறந்தவுடன் இந்த நரம்புகள் மறைந்துவிடும். ஆனால் குழந்தை பெற்ற பின்னரும் தொடரும். பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு இப்பிரச்னை இருந்தால் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்படாமல் தடுப்பது எப்படி?

இதைத் தடுப்பது மிகவும் கடினமானது. காரணம், மனிதர்கள் கால்களில் தானே நடக்கிறோம்? இருப்பினும் இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள சிலர் முன் கூட்டியே நடவடிக்கை எடுப்பதன் மூலம் அதைத் தடுக்க முடியும். உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத் திருத்தல். நீண்ட நேரம் நின்றபடியே பணிபுரிவதைத் தவிர்ப்பது. நார்ச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உண்பது. கால்களில் எப்போதும் காலுறை அணிவது என இப்பிரச்னை வராமல் தடுக்க முடியும்! கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வா? வேறு மாற்று வழிகள் ஏதேனும் உண்டா? இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு இல்லை. நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்து பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. காலுறை அணிதல்: நோய் ஆரம்ப நிலையில் இருப்பின், பிரத்யேகமாக தயாரிக் கப்பட்ட காலுறைகளை அணிந்து இந் நோயைக் குணப்படுத்தலாம்.

மருந்து மூலம் குணப்படுத்துதல்:

மருந்து அளித்து குணப்படுத்தும் நிலையில் சிலருக்கு இருக்கும். அத்தகையோருக்கு மருந்துகளுடன் பிரத்யேக காலுறை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும். இது உரிய பலனை அளிக்கும். இருப்பினும் கால்களில் முதலில் சுருண்ட நரம்புகளை முற்றிலுமாக பழைய நிலைக்குக் கொண்டு செல்லவோ, குணப்படுத்தவோ இயலாது. ஊசி மூலம் குணப்படுத்துதல்: இந்த சிகிச்சைக்கு ஸ்கெலரோதெரபி என்று பெயர். ஆனால் இந்த சிகிச்சை நீண்ட காலம் மேற்கொள்ள வேண்டியவை. இத்தகைய சிகிச்சை முறைகளை முழு அளவில் மேற் கொள்ளாவிடில் முழு அளவில் பயன் கிடைக் காது. மேலும் இத்தகைய சிகிச்சை முறைகளில் நரம்புகளில் இரத்தக்கட்டிகள் தோன்றும். சில சமயங்களில் இந்த இரத்தக் கட்டிகள் இருத யத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. அல்லது நுரையீரல் போன்ற பகுதி சிக்கலை ஏற்படுத்தலாம். அறுவை சிகிச்சை: நோயுற்ற காலில் உள்ள பழுதடைந்த நரம்புப் பகுதிகளை வெட்டி யெடுத்து நீக்கும் அறுவை சிகிச்சை முறை மிகவும் சிக்கலானது. மேலும் அறுவை சிகிச் சைக்குப் பிறகு மருந்துகள் சாப்பிட வேண்டி யிருக்கும். மருத்துவமனையில் இரண்டு வாரம் முதல் நான்கு வாரம் வரை தங்க வேண்டி யிருக்கும். லேசர் சிகிச்சை: பழுதடைந்த நரம்புகளில் லேசர் ஃபிளமென்ட் மூலம் அடைப்பது நவீன முறையாகும். இந்த சிகிச்சை முறையிலும் சில பாதக அம்சங்கள் உள்ளன. லேசர் சிகிச்சை யின் போது வெளியாகும் அதிகபட்ச வெப்பம், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத் தக் கூடும். அத்துடன் அருகிலுள்ள திசுக்களை யும் இது சேதப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு.

ரேடியோ அலை சிகிச்சை இப்புதிய முறை பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம், இந்த சிகிச்சை முறையில் வலி மிகக் குறைந்த அளவில் இருக்கும். தவிர, மருத்துவமனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறாமல், புற நோயாளிகளைப் போல சிகிச்சை பெற்றாலே போதும். பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் மறத்துப் போவதற்கான ஊசி செலுத்தப்படும். இந்த சிகிச்சை முறையால் ரத்த அடைப்பு ஏற்படுவதில்லை. மேலும் அருகிலுள்ள திசுக்களும் பாதிக்கப்படாது. அதிக வெப்பமும் வெளியேறுவதில்லை. பாதிக்கப்பட்ட நரம்புகள் மூடப்பட்டவுடன், அருகிலுள்ள ஆரோக்கியமான நரம்புகளில் ரத்தம் பாயத் தொடங்கும். இதனால் கால்கள் பழைய நிலைக்குத் திரும்பும்...

பித்தப்பை கல் நீங்க:--கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , ...
09/07/2015

பித்தப்பை கல் நீங்க:--

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும்.

இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.

ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்...

13/07/2014

Natural Health improvement,food making tips ,how to prevent your health of body,beauty tips

12/07/2014

Secret of "EGG" Quality Must Share It

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural Helth& Food Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram