Anatomic Therapy

  • Home
  • Anatomic Therapy

Anatomic Therapy I am the follower of anatomy therapy.I upload the audio and video is own by Healer Mr Bhasker.I crea

I am the follower of anatomy therapy.I uploaded the audio and videos of Healer Mr bhasker .I shared the good information for helathy and fearless life of my people. www.anatomictherapy.org

[email protected]

[email protected]

Enquires & Details : 9842452508

Dvd & Books : 9944221007

More Details : 9942616308

Five days course : 8870666966

https://m.youtube.com/watch?v=epZJCwK5brA
16/03/2020

https://m.youtube.com/watch?v=epZJCwK5brA

கேள்வி எண் : 237 : கரோணா வைரஸ் காய்ச்சல் குணமாக மூலிகை வைத்தியம் சொல்லுங்கள். தயவுசெய்து 5 நாள் வீடியோவை பார்க்க சொல...

https://m.youtube.com/watch?v=T5YkRUNysJ8
07/11/2019

https://m.youtube.com/watch?v=T5YkRUNysJ8

#கேன்சர் என்று பெயர் வைக்கப்பட்டு மக்களை பீதியடைய வைக்கும் நோய் எவ்வாறு உருவாகிறது..?

https://m.youtube.com/watch?v=rC1g1VxF7Ew&t=48s
07/11/2019

https://m.youtube.com/watch?v=rC1g1VxF7Ew&t=48s

#கேன்சர் என்று பெயர் வைக்கப்பட்டு மக்களை பீதியடைய வைக்கும் நோய் எவ்வாறு உருவாகிறது..?

09/12/2018
இயற்கை பற்பொடி
05/12/2018

இயற்கை பற்பொடி

https://youtu.be/EDKAorDbfdw
25/08/2018

https://youtu.be/EDKAorDbfdw

நாம் கடைபிடிக்க வேண்டிய நான்கு திட்டம்

https://m.youtube.com/watch?v=Zj_elX4Bvto
15/08/2018

https://m.youtube.com/watch?v=Zj_elX4Bvto

Healer Baskar Speech after Release அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க

11/08/2018

Healer Baskar gets condition bail from Coimbatore court. He was arrested on Augest 2 after claims to offer natural baby birth.

11/08/2018
06/08/2018

Siva Kannan
*ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்து மடல்.*

*1.சிறு வயதில் தலைவலி வந்தால் காய்ச்சல் வந்தால் மாத்திரை போட வேண்டும் என்று எண்ணி இரு‌ந்தேன் அதை மாற்றிய தெய்வம் நீங்கள்*

*2.கண் பார்வை கெட்டு போய் கண்ணாடி தான் இனி அணிய வேண்டும் என்று எண்ணினேன் அதை மாற்றிய மகான் நீங்கள்*

*3.மனம் கவலை அடைந்தால் வேறு வழி இல்லை என்று ஒரு மூலையில் உட்கார்ந்து இருந்தால் விபாசனா எனும் சொர்கத்தை காட்டிய தேவன் நீங்கள்*

*4.உலகம் முழுவதும் சுற்றி உலகில் உலகில் உள்ள நல்லவற்றை சேகரித்து அனைவருக்கும் கொடுத்த அமுத சுரபி நீங்கள்*

*5.உலக அரசியல் எனும் பேச்சின் மூலம் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி காவலன் நீங்கள்*

*6. தற்சார்பு வாழ்க்கை எனும் வழியில் அவரவர் தேவயை அவரே பூர்த்தி செய்து கொள்ள உதவிய குல தெய்வம் நீங்கள்*

*7. தெருவிற்கு தெரு நாட்டு மர செக்கு எண்ணெய் ஆலை இயங்குகிறது என்றால் அது நீங்கள் போட்ட விதை*

*8. வீட்டுக்கு வீடு பசும் பால் இயற்க்கை உணவுகள் நிறைந்திருந்தது என்றால் அது நீங்கள் அள்ளி தந்த அமுதம்.*

*9 இன்று தன் நலனை தானே காத்து கொள்கிறார்கள் என்றல் அது நீங்கள் காட்டிய அக்கறை.*

*10. அனைத்து மதத்தினரும் உங்கள் மீது அன்பு மரியதை வைத்துள்ளார்கள் என்றால் அது நீங்கள் செய்த சாதனை.*

*11. இம்மண்ணில் நீங்கள் பிறந்ததால் பூமி தாயே பெருமை அடைந்தாள்.*

*12. மனிதனை முழு மனிதனாக்கிய தெய்வம் நீங்கள்*

*13. நாங்கள் எல்லோரும் உங்களுக்கு நிச்சயம் கடன் பட்டுள்ளோம்*

*14.நீங்கள் நினைத்திருந்தால் இச்சமயத்தில் கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம்!!*

*15. பல பொருட்கள் விற்று பெரும் முதலாளி ஆகி இருக்கலாம்!! ஆனால் நீங்கள் பணத்திற்கு மயங்கியவா் அல்ல*

*16.நீங்கள் எங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் சீக்கிரம் வெளியே வந்து என்றென்றும் உலக மக்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்*

*வாழ்க வளமுடன்*

*அதிகம் பகிருங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்*

05/08/2018
03/08/2018

ஹீலர் #பாஸ்கரை #விடுதலை செய். . . !!

- அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக்,
பொதுச்செயலாளர், அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு (இந்தியா)

தமிழகம் மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் வாழுகிற பல்வேறு நாடுகளில் உடல் நலம் பற்றிய #விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஹீலர் பாஸ்கர் #இந்தியன் #மெடிக்கல் #அசோசியேஷனின் புகாரின் அடிப்படையில் #கைது செய்யப்பட்டுள்ளார்.

#உடல்நலம் பற்றி மட்டுமல்ல. . . #உணவுக் #கலப்படங்கள், வீட்டுப் பயன்பாட்டுப் #பொருட்கள் செய்முறை, எளிய மனிதர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை #வெளிப்படுத்துதல், மாற்றுக் #கல்வி முறையை அறிமுகம் செய்தல், #இயற்கை வழி #வேளாண்மை குறித்து #விழிப்புணர்வு. . . என தற்சார்பு வாழ்க்கைக்கான அத்தனை அம்சங்களையும் #உலகம் முழுவதும் கொண்டு #சேர்க்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்தான் ஹீலர் #பாஸ்கர்.

அவருடைய உலக அரசியல் உரையிலும், #மருத்துவத்தையும், வீட்டுப் #பிரசவத்தையும் அவர் அணுகும் #முறையிலும் எனக்கு தனிப்பட்ட முறையில் முரண்பாடுகளும், மாற்றுக் கருத்துகளும் உண்டு. ஒவ்வொரு அக்குபங்சர் ஹீலருக்கும் இந்த முரண்பாடு இருக்கும். ஆனாலும், நவீன மனிதர்களின் #கண்மூடித்தனமான மருத்துவப் #பின்பற்றுதலையும், #இயற்கையை விட்டு விலகிச் செல்லும் வாழ்க்கை முறைபற்றியும் #விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஹீலர் பாஸ்கருடைய பணிகளை குறைத்து #மதிப்பிட முடியாது.

#சிறுதானியங்கள் பற்றிய சர்வதேச பரப்புரையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா #நம்மாழ்வார், சித்த மருத்துவர் கு. #சிவராமன், #இயற்கை வழி #வேளாண்மையாளர்களைத் தொடர்ந்து ஹீலர் #பாஸ்கரின் பணிகள் #முக்கியமானவை.

வீட்டுப் பிரசவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அறிவித்ததற்கான விசாரணை என்ற பெயரில் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் ஹீலர் பாஸ்கர். கோவை மாவட்ட ஆங்கில மருத்துவர்கள் சங்கம் (ஐ.எம்.ஏ) நேற்று பிற்பகல் அளித்த புகாரின் பேரில் நேற்று மாலையே கைது செய்யப்பட்டுள்ளார் ஹீலர் பாஸ்கர். இது போன்ற சமூக பணியாளர்களை கைது செய்வதில் காவல்துறையின் வேகம் வியக்க வைக்கிறது.

மோசடி வழக்கு அவர் மீது தொடரப்பட உள்ளது. மோசடி என்றால் நம்பிக்கை மோசடி அல்லது பொருளாதார மோசடி. . .இவைகள்தான் காவல்துறை சொல்லும் 420 சட்டத்தின் கீழ் வரும். ஹீலர் பாஸ்கர் யாருக்கும் வீட்டுப் பிரசவம் பார்த்து தருவதாகச் சொல்லி நம்ப்பிக்கை மோசடி செய்யவில்லை. விழிப்புணவ்ர்வு நிகழ்ச்சிக்காக குறைந்த பட்ச நுழைவுக் கட்டணம் கூட வாங்கவில்லை. பயிற்சி #இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை ஐ.எம்.ஏ அளித்த அறிவிப்பு ஆதாரத்தைப் பார்த்தாலே தெரியும். அப்புறம் என்ன மோசடி என்பதை #3நீதிமன்றமே கண்டுபிடிக்க வேண்டும்.

வீட்டுப் பிரசவம் 1930 களில் இருந்தே தடை செய்யப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை ஊடகங்களும், அரசு நிர்வாகமும் பரப்பி வருகிறது.

# ஒவ்வொரு நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களிலும் பிறப்பு பதிவு குறித்து ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ”வீட்டில் நிகழும் பிறப்புகளை குழந்தையின் பெற்றோர் 21 நாட்களுக்குள் பிறப்பு பதிவு அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. புதிதாக அச்சிடப்பட்ட ஃபளக்ஸ்களிலும் இதே வாசகங்களை இப்போதும் பார்க்க முடியும். ஒருவேளை அரசு ஊழியர்கள் யாருக்குமே வீட்டுப் பிரசவம் தடை செய்யப்பட்டிருப்பது தெரியாதோ. . ?

# பிறப்பு பதிவு செய்யும் படிவத்தில் பிரசவம் நடந்த இடம் வீடா? மருத்துவமனையா? என்ற கேள்வியை உள்ளாட்சித் துறை இப்போது கேட்டு வருவது சட்டம் பற்றிய விழிப்புணர்வு இன்மையாலா. . ?

# தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் வீட்டில் பிறந்துள்ளன. வீட்டில் பிறந்ததற்கான ஆதாரங்களாக அந்தந்த ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளால் வழங்கப் பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் அப்படி ஒரு சட்டம் இல்லையென்பதற்கான ஆதாரங்கள்.

#தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துறையில் நான் கோரிப்பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணத்தில் ”பிரசவம் நடைபெறும் இடம் மருத்துவமனையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா?” என்ற கேள்விக்கு “கட்டாயம் இல்லை” என்றும், “குழந்தை வீட்டில் பிறந்த காரணத்திற்காக பிறப்பு சான்றிதழ் தருவதை மறுக்க முடியுமா?” என்ற கேள்விக்கு “மறுக்க இயலாது” என்றும் துறை இயக்குநர் சார்பாக பதிலளிக்கப்பட்டுள்ளது.
. . அலோபதி மருத்துவமனைகளில் மட்டுமே குழந்தை பிறக்க வேண்டும், வீட்டில் குழந்தை பெறுவது சட்டப்படி குற்றம் என்ற சட்டம் எப்போது வந்தது. . ? அரசு பொறுப்பில் இருக்கும் யாருக்குமே நினைவிலும், நடைமுறையிலும் இல்லாத இந்த விதி எங்கிருந்து வந்தது. . ?

வீட்டுப்பிரசவத்தை முறைப் படுத்தும் விதிகளை கொண்டுவருவதிலும், அதனை அரசு முறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதிலும் எனக்கோ, எந்த இயற்கை மருத்துவருக்கோ ஆட்சேபனை இருக்க முடியாது. அதே நேரத்தில், ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருப்பதை மருத்துவப் பிரச்சினையாக மட்டும் அணுக முடியாது. இயற்கை வழி வாழ்வியலுக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகளின் ஒரு பகுதி இது.

தமிழக அரசே. . ஹீலர் பாஸ்கரை #விடுதலைசெய். .! நேர்மையான முறையில் அவரது #பணிகளை #விசாரணை செய். . !

ஹீலர் பாஸ்கர் அவர்களே. . . நம் ஜனநாயகத் திருநாட்டில் சமூக நலத்துக்காக போராடுபவர்கள் ஒருமுறையாவது சிறை செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி. மேடைகளில் இருக்கும் அதே துணிச்சலோடு போய் வாருங்கள் பாஸ்கர். . . நீதி மன்றத்திலும் உங்கள் விழிப்புணர்வு தொடரட்டும். அக்கு #ஹீலர்களும், இயற்கை வழி வாழ்வியல் #விரும்பிகளும் #துணையாக இருப்பார்கள்.

https://youtu.be/ttoft8DlkBM
12/07/2018

https://youtu.be/ttoft8DlkBM

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தபோக்குக்கு தற்காலிகமான தீர்வு

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Anatomic Therapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Anatomic Therapy:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share