ஆழ்வாா் பிள்ளை தமிழ் மருந்து கடை

ஆழ்வாா் பிள்ளை தமிழ் மருந்து கடை எங்களிடம் தைலம் ,சூரணம், லேகியம், பற்ப

இந்த புதிய மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது, இது நம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைய அனைவரும் நம்பிக்கையுடன் செயல்படுவ...
15/03/2023

இந்த புதிய மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது, இது நம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைய அனைவரும் நம்பிக்கையுடன் செயல்படுவோம். இந்த மருத்துவமனை செழித்து மக்களின் உயிரைக் காப்பாற்றட்டும். எதிர்காலத்தில் மேலும் மேலும் வெற்றிகளை அடைய நாம் அனைவரும் பாடுபடுவோம், மேலும் மனிதகுலத்தை சிறந்த எதிர்காலமாக உருவாக்க உதவுவோம். நன்றி

04/09/2022

*தோல் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஒரே எண்ணெய் செய்முறை விளக்கம்*

✍️ *தேவையான மூலப்பொருட்கள்:*

1.மூக்கிரட்டை வேர்கிழங்கு - 25g
2.பிண்ணை விதைகள் - 25g
3.ஆவாரம்பூ - 25g
5.மருதாணி - 50g
6.நல்லெண்ணெய் - 200ml

✍️ *செய்முறை விளக்கம்:*

மூக்கிரட்டை, பிண்ணை விதைகள், ஆவாரம் பூ, மருதாணி அனைத்தையும் வெயிலில் நன்கு காய வைக்கவும்

காயவைத்த பொருட்களை அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்து கொள்ளவும்

பிறகு நல்லெண்ணெய் கொதிக்க வைத்து இந்த பொடியை அதில் கலந்து நன்கு சுண்ட வைக்கவும்

200-மி எண்ணெய் 100-மி ஆகும் வரை சுண்ட வைக்கலாம் ஆறிய பிறகு வடிகட்டி நேரடியாக பயன்படுத்தலாம்

✍️ *பயன்படுத்தும் முறை:*

பாதிப்பு உள்ள இடங்களில் தடவி உளரவைக்கவும்,அல்லது வெயிலில் காயவைக்கவும்

✍️ *பயன்கள்:*

சொறி சிரங்கு,தோல் அரிப்பு, தீராத புண்,தோல் எரிச்சல்,படர்தாமரை, சொரியாசில் ஆகியவைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்

*வளமுடன் வாழ்க நலமுடன்🌺*

03/09/2022

சிறுநீரில் உப்புசத்து குறைய மருத்துவம்
பன்னீர் ரோஜா ஒரு பூவின் இதழ்
வெற்றிலை 1 கலாக்காய் 5 வில்வ இலை 9 இவற்றை இடித்து 200 மில்லி நீருடன் கலந்து காய்ச்சி 100 மில்லியாக வற்றவைத்து வடிகட்டி காலை மாலை குடித்து வரவும்

02/09/2022

அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவு குணம் பெற்று குழந்தை பாக்கியம் பெற மருத்துவம்
விஷ்ணுகிரந்தி இலை. ஓர் இதழ் தாமரை இலை இவற்றை சம அளவில் எடுத்து மசிய அரைத்து ஓர் சிறிய எலுமிச்சங்காயளவு எடுத்து மாதவிடாய் ஆகும் நாளிலிருந்து 6 நாள் சாப்பிட கருச்சிதைவு நின்று குழந்தை பாக்கியம் உண்டாகும்

31/08/2022

அடங்காத *வாந்தியை* கூட நிறுத்த வல்லது *நெல்பொரி* , மேலும் *சீரகத்தையும்* வாயிலிட்டு மென்று சுவைத்து சாப்பிடும் பொழுது வாந்தி எடுப்பது குணமாகும். அல்லது இரண்டையும் வாணலியில் இட்டு வறுத்து நன்கு பொடி செய்து கப்பி திப்பி நீக்கி *மோரில்* கலந்து அருந்தலாம் அல்லது நீர்விட்டு காய்ச்சி அருந்தலாம், இவ்வாறு செய்தாலும் வாந்தி எடுப்பது குணமாகும்.

27/01/2022

*வாய் புண், வயிற்று புண் (அல்சர்) வீட்டு வைத்தியம்*

தேவையான பொருள்கள்

மணத்தக்காளி சாறு - 50 மில்லி தேங்காய்ப்பால் - 50 மில்லி
வறுத்த கசகசா பொடி - 3 கிராம்

இவைகளை ஒன்றாக கலந்து முப்பது நிமிடம் அப்படியே வைத்திருந்து அதன் பின் குடித்து வரவேண்டும்

√ வாயிலிருந்து உணவு பாதை முழுவதும் தோன்றுகின்ற அனைத்து புண்களும் ஆறும்

√ வாயின் உட்புற தசைகளில் அண்ணாக்கின் மேலே தோன்றுகின்ற தீராத நீண்ட நாள் புண்களும் இதை பருகினால் மூன்றே நாட்களில் குணமாகும்

√ அல்சர் நோய் தீருவதற்கு ஒரு அற்புதமான மருந்து இது

20/01/2022

தடைபட்ட மாத வீடாய் கோளாறு சீராக மருத்துவம்
முறை 1
ஆடாதோடா இலையை கசாயம் வைத்து 50 மில்லி அளவு காலை மாலை குடித்து வர தடைபட்ட மாதவீடாய் மீண்டும் வரும்
முறை 2
கிழா நெல்லிசழு லமாக எடுத்து மசியஅரைத்து ஒரு லிட்டர் நீரில் கலந்து தினம் 3 வேளை குடித்து வர தடைபட்ட மாதவிடாய் சீராக வரும் புரோஸ்டேட் பிரச்சனை கிட்னி கல்பித்த கல் கரையும்
முறை 3
குங்கும பூ 5 கிராம்
முசாம்பரம் 10 கிராம்
பெருங்காயம் 10 கிராம்
பச்சை கற்பூரம் 5 கிராம்
இவற்றை கல்வத் தில் போட்டு தேன் விட்டு அரைத்து சுண்டக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி தினம் இரு வேளைஒரு மாத்திரை பால் அல்லது வெண்ணிரில் சாப்பிட்டு வர சரியாகும்
பருவமடையாத பெண்ணுக்கு மிளகு தண்ணிரில் கொடுக்க பருவமடைவால்
முறை 4
ஜடாமாஞ்சில்
கருஞ்சீரகம்
பூண்டு
மிளகு இவற்றை சம அளவில் எடுத்து தூள் செய்து தினம் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வென்னீர் குடித்து வர தடைபட்ட மாதவிடாய் மீண்டும் சீராக வரும்
முறை 5
மாவிலங்கம் பட்டை
பூண்டு
மிளகு இவற்றை சம அளவு எடுத்து அரைத்து கோலி குண்டு அளவு காலையில் கொடுக்க சீராகும்

Address

No 69 , South Chitharai Street
Alwar Tirunagari
628612

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 8am - 8pm

Telephone

9994131202

Alerts

Be the first to know and let us send you an email when ஆழ்வாா் பிள்ளை தமிழ் மருந்து கடை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ஆழ்வாா் பிள்ளை தமிழ் மருந்து கடை:

Share