Arun Healthcare

Arun Healthcare Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arun Healthcare, Medical and health, Arun Naturo Clinic, 54 Main Road, Forest office opposite, Ambasamudram.

15/01/2026
எடை குறைப்பும் மூட்டுப் பாதுகாப்பும் ⚖️🌾 (பாகம்-5)மூட்டுத் தேய்மானம் மற்றும் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், தங்கள் உ...
13/01/2026

எடை குறைப்பும் மூட்டுப் பாதுகாப்பும் ⚖️🌾 (பாகம்-5)

மூட்டுத் தேய்மானம் மற்றும் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், தங்கள் உடலின் உள்சுத்தத்தையும் (Internal cleansing) செரிமானத்தையும் சீர்செய்வது மிக அவசியம்.

1. குடலை சுத்தம் செய்வதில் நார்ச்சத்தின் (Fiber) பங்கு :
நார்ச்சத்து குடலில் உள்ள கழிவுகளை (Lumen cleaning) மென்மையாக அகற்றி, செரிமானப் பாதையைச் சுத்தமாக்கும். குடல் சுத்தமாக இருந்தால் மட்டுமே நாம் உண்ணும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் இரத்தத்தில் முழுமையாகக் செரிக்கப்பட்டு, புதிய செல்கள் (New cell production) உருவாகவும் மூட்டுத் திசுக்கள் வளரவும் உதவும்.

2.ஏன் உடல் எடையைக் குறைக்க வேண்டும்?
உடல் எடை அதிகரிக்கும்போது முழங்கால் மூட்டுகளின் மேல் விழும் இயங்கழுத்தம் (Mechanical stress) அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஒரு கிலோ எடை குறைப்பிற்கும், மூட்டுகளின் சுமை நான்கு மடங்கு குறைகிறது. இது குருத்தெலும்பு மேலும் சிதைவடையாமல் பாதுகாக்கும்.

3.உப்பு, புளிப்பு எண்ணெய் மற்றும் நீர்ச்சத்து:
அதிகப்படியான உப்பு உடலில் தேவையற்ற நீரைத் தங்கச் செய்து (Water retention) மூட்டு வீக்கத்தை உண்டாக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் மூட்டுகளில் அழற்சியை (Inflammation) அதிகரிக்கும்.
நீர்ச்சத்து: மூட்டுகளுக்கு இடையில் உள்ள திரவத்தை (Synovial Fluid) பராமரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் தினமும் 2 இல் இருந்து 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

4.மூட்டு வலி மற்றும் எடை குறைப்பிற்கான உணவுஅட்டவணை
காலை உணவு: கம்பு கூழ் அல்லது கேழ்வரகு அடை. அசைவ உணவர்கள் இரண்டு முட்டை சேர்த்துக் கொள்ளலாம். இவை எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் மற்றும் புரதத்தை வழங்கும்.

காலை 11 மணி: ஒரு துண்டு பப்பாளி அல்லது காய்கறி சாலட்.

மதிய உணவு: சாமை அல்லது குதிரைவாலி அரிசி சாதம். இதனுடன் அதிகப்படியான நார்ச்சத்து கொண்ட காய்கறிகள் (புடலங்காய், பீர்க்கங்காய்) மற்றும் ஒரு முட்டை (உணவுக்கு முன்). அசைவர்கள் வாரத்தில் இருமுறை 200 கிராம் இறைச்சி (குறைந்த காரம் மற்றும் எண்ணெயுடன்) உட்கொள்ளலாம். அசைவம் உண்ணும் நாட்களில் சோற்றின் அளவைக் குறைத்துக் கொள்வது உடல் எடையை விரைவாகக் குறைக்கும்.

மாலை சிற்றுண்டி: அவித்த வேர்க்கடலை அல்லது சுண்டல். இது மூட்டுகளுக்குத் தேவையான நல்ல புரதத்தையும் கொழுப்பையும் தரும்.

இரவு உணவு: இரவு 7:30 -8:00 மணிக்குள் சிறுதானிய இட்லி அல்லது கோதுமை ரவை உப்புமா. கோதுமை தோசை நார்ச்சத்து உள்ள பழங்கள் உட்கொள்ளலாம்
தொடரும்....

மூட்டு வலி மேலாண்மையில் உணவின் பங்கு (பாகம்‌ - 4)தேய்ந்த மூட்டுகளைப் புதுப்பிக்கவும், உடல் எடையைச் சீராகக் குறைக்கவும் உ...
12/01/2026

மூட்டு வலி மேலாண்மையில் உணவின் பங்கு (பாகம்‌ - 4)

தேய்ந்த மூட்டுகளைப் புதுப்பிக்கவும், உடல் எடையைச் சீராகக் குறைக்கவும் உதவும் இயற்கை உணவு முறை! 🥣🌿

குருத்தெலும்பு வளர்ச்சிக்கான முக்கிய சத்துக்கள் (Essential Nutrients):
வைட்டமின் சி (Vitamin C): நெல்லிக்காய், கொய்யாப்பழம் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றில் இது அதிகம் உள்ளது. அசைவ உணவர்கள் எலும்புகளை இரண்டு முதல் மூன்று மணி நேரம் கொதிக்க வைத்து சூப் செய்து சாப்பிடலாம்
இது மூட்டு இணைப்புகளில் உள்ள கொலாஜன் (Collagen) எனும் ஜவ்வுப் பகுதியை உருவாக்க பாதுகாக்க உதவுகிறது.
வைட்டமின் டி (Vitamin D): முட்டை, காளான் மற்றும் காலை சூரிய ஒளி மூலம் இது கிடைக்கும். இது எலும்புகளின் உறுதிக்கும் குருத்தெலும்பு தேயாமல் இருக்கவும் மிக அவசியம்.

வைட்டமின் கே (Vitamin K): முருங்கைக்கீரை மற்றும் பச்சை இலைக் காய்கறிகளில் இது நிறைந்துள்ளது. இது மூட்டு திசுக்கள் சேதமடைவதைத் தடுத்து பாதுகாக்கிறது.

ஒமேகா-3 (Omega-3):
வாதுமை பருப்பு (Walnuts) மற்றும் சியா விதைகளில் இது அதிகம். இது மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் இயற்கை மருந்தாகச் செயல்படுகிறது.

எடை குறைப்பிற்கான தினசரி உணவு அட்டவணை (Daily Schedule):

காலை உணவு:
முளைகட்டிய தானியங்கள் அல்லது கம்பு கூழ். அசைவ உணவர்கள் இரண்டு முட்டைகள் எடுத்துக் கொள்ளலாம் இவற்றில் உள்ள அதிகப்படியான புரதம் (Protein) சேதமடைந்த தசை மற்றும் மூட்டுத் திசுக்களைப் புதுப்பிக்கிறது.
காலை 11 மணிக்கு பழங்களோ அல்லது காய்கறி சாலடோ அல்லது பாதிவாக வேக வைத்த காய்கறிகளோ எடுத்துக் கொள்ளலாம்
மதிய உணவு:
அதிகப்படியான காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து (Fiber) நிறைந்த உணவுகள். அசைவ உணவர்கள் ஒரு முட்டை உணவுக்கு முன் எடுத்துக் கொள்ளலாம் இது வயிற்றை நிறைவாக வைத்திருக்கும், மேலும் அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை அல்லது இருமுறையோ நபருக்கு இருநூறு கிராம் இறைச்சி உட்கொள்ளலாம் இறைச்சி உட்கொள்ளும்போது சோற்றின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் தேவையற்ற கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவும்.
மாலை சிற்றுண்டி:
ஊறவைத்த பாதாம் அல்லது அவித்த வேர்க்கடலை அல்லது ஒரு கப் சுண்டல். இது மூட்டுகளுக்குத் தேவையான நல்ல கொழுப்புகளை வழங்குகிறது.
இரவு உணவு:
சிறுதானிய இட்லி அல்லது கோதுமை ரவை உப்புமா. இரவு 7:30 மணிக்குள் உணவை முடித்தால் எளிதில் செரிமானமாகும் அசைவ உணவர் இரவில் அசைவம் எடுத்துக் கொள்ளாது தவிர்க்க வேண்டும் இவ்வாறு சரிவிகித உணவை உணவை உண்பது உடல் எடையைக் கட்டுக்குள் கட்டுக்குள் வைத்து எலும்பு மற்றும் மூட்டுகளை வலிமையாக்கும்.
- தொடரும்.

மூட்டு வலிக்கான வெளிப்புற சிகிச்சைகள்🌿⚡ (பாகம் -3)இயன் முறை சிகிச்சை (Physiotherapy)மின் தூண்டல் சிகிச்சை (IFT):ஆழமான மூ...
11/01/2026

மூட்டு வலிக்கான வெளிப்புற சிகிச்சைகள்🌿⚡ (பாகம் -3)

இயன் முறை சிகிச்சை (Physiotherapy)
மின் தூண்டல் சிகிச்சை (IFT):
ஆழமான மூட்டு வலியைப் போக்க IFT (Interferential Therapy) சிகிச்சை வழங்கப்படுகிறது. இது நரம்புகளைத் தூண்டி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, வீக்கத்தை(Inflammation) உடனடியாகக் குறைக்கிறது.

யோகப் பயிற்சிகள் (Yoga - 5 Practice):
மூட்டு நெகிழ்வுத்தன்மைக்கு: தாடாசனம், பவனமுக்தாசனம், வஜ்ராசனம், சேதுபந்தாசனம், மற்றும் சவாசனம்.

இயற்கை வாழ்வியல் 5 வழிமுறைகள் (5 General Tips):

உடல் எடை குறைப்பு: எடையைக் குறைப்பது மூட்டு அழுத்தத்தை 50% குறைக்கும்.

கால்களை உயர்த்துதல்: தூங்கும் போது மூட்டுகளுக்கு அடியில் ஒரு மெல்லிய தலையணையை வைக்கவும்.

நிற்றலைத் தவிர்க்கவும்: நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதைத் தவிர்க்கவும்.

முறையான அசைவு: உடற்பயிற்சி இல்லாமை மூட்டுகளை இறுக்கமாக்கும்; மூட்டு வலி உள்ளவர்களுக்கு மெதுவான நடைப்பயிற்சி அவசியம்.

தடவல் முறை: வெதுவெதுப்பான மூலிகை எண்ணெய் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யவும்.

- தொடரும்....

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு :
📍 அருண் இயற்கை மருத்துவகம் & தமிழ்நாட்டு மருந்து கடை, அம்பாசமுத்திரம்.
(வர்மம் |சித்தா ஆயுர்வேத மருந்தகம்)
📞 9360496181 | 04634357106

மூட்டுத் தேய்மானத்தைத் தவிர்க்க முடியுமா? (பாகம் - 2) 🦴🛡️"வரும் முன் காப்பதே சிறந்தது." மூட்டு வலி வந்த பிறகு அவதிப்படுவ...
10/01/2026

மூட்டுத் தேய்மானத்தைத் தவிர்க்க முடியுமா? (பாகம் - 2) 🦴🛡️

"வரும் முன் காப்பதே சிறந்தது."

மூட்டு வலி வந்த பிறகு அவதிப்படுவதை விட, அது வராமல் தடுக்க சில எளிய வாழ்வியல் மாற்றங்களே போதுமானது.

நிபுணரின் பார்வை : மூட்டுகளைப் பாதுகாப்பதில் உடல் எடைக்கு முக்கிய பங்கு உண்டு. உங்கள் உடல் எடையில் 1 கிலோ குறைந்தால் கூட, அது உங்கள் மூட்டுகளில் 4 கிலோ அழுத்தத்தைக் குறைக்கும். இது தேய்மானத்தை வெகுவாகத் தாமதப்படுத்தும்.

இயற்கை வழி (The Natural path : கால்சியம் மற்றும் வைட்டமின்-D நிறைந்த உணவுகளை (உதாரணமாக கேழ்வரகு, முருங்கைக்கீரை, பால் பொருட்கள்...) அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது எலும்புகளின் அடர்த்தியை (Bone Density) அதிகரிக்கும்.

அறிவியலும் ஆரோக்கியமும் (Science & Health):
'குறைந்த தாக்கம் கொண்ட' (Low-impact) உடற்பயிற்சிகளான நடைப்பயிற்சி மற்றும் நீச்சல் போன்றவை மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை (Quad muscles) வலுப்படுத்தும். தசைகள் வலுவாக இருந்தால், மூட்டுகளின் சுமை குறையும்.
- தொடரும்...

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு :
📍 அருண் இயற்கை மருத்துவகம் & தமிழ்நாட்டு மருந்து கடை, அம்பாசமுத்திரம்.
(வர்மம் |சித்தா ஆயுர்வேத மருந்தகம்)
📞 9360496181 | 04634357106

மூட்டு தேய்மானம்: வலியைப் புரிந்து கொள்வோம்! (பாகம் - 1) 🦴🦵"உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" - திருமூலர் வாக்குப்படி, நம...
09/01/2026

மூட்டு தேய்மானம்: வலியைப் புரிந்து கொள்வோம்! (பாகம் - 1) 🦴🦵

"உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" - திருமூலர் வாக்குப்படி, நமது நடமாட்டத்திற்கு ஆதாரமான மூட்டுகளைக் காப்பது அவசியம்.

ஏன் இந்த வலி? (The Root Cause): நமது மூட்டுகளில் உள்ள 'சைனோவியல்' (Synovial Fluid) எனும் உயவுப்பொருள் வற்றிப்போகும் போது, எலும்புகளுக்கு இடையே உராய்வு ஏற்படுகிறது. இது கார்ட்டிலேஜ் எனும் மென்மையான பாதுகாப்பு அடுக்கைச் சிதைத்து, எலும்புகளில் சிறு சிறு முட்கள் (Osteophytes) வளரக் காரணமாகிறது.

யாரை அதிகம் தாக்குகிறது? (Risk Groups): வயது முதிர்வு ஒரு காரணம் என்றாலும், நீண்ட நேரம் நின்று வேலை செய்பவர்கள், முறையற்ற காலணிகளை அணிபவர்கள் மற்றும் முந்தைய காயங்கள் (Old injuries) உள்ளவர்களுக்கு இந்தத் தேய்மானம் விரைவாகத் துவங்குகிறது.

அறிவுரை : மூட்டு வலி என்பது வெறும் வயதானவர்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல; இன்று உடல் உழைப்பு குறைந்த இளைஞர்களிடமும் இது பரவலாகக் காணப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் மூட்டுகளில் ஏற்படும் இறுக்கம் (Stiffness) இதன் முதல் அறிகுறியாகும்.

இது பற்றிய தொடர்புக்கு:
📍 அருண் இயற்கை மருத்துவகம் & தமிழ் நாட்டுமருந்து கடை, அம்பாசமுத்திரம்.
(வர்மம் | சித்தா ஆயுர்வேத மருந்தகம்)
📞 9360496181 | 04634357106

சித்த மருத்துவ சூரணங்களும் உடல் சுத்திகரிப்பும்! 🌿🥣நமது உடல் ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவில் மட்டும் இல்லை, அந்த உ...
07/01/2026

சித்த மருத்துவ சூரணங்களும் உடல் சுத்திகரிப்பும்! 🌿🥣

நமது உடல் ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவில் மட்டும் இல்லை, அந்த உணவு செரிமானமாகி உடலில் தங்க வேண்டியவைகள் தங்கி வெளியேற வேண்டிய கழிவுகள் வெளியேறுவதில்தான் உடல் ஆரோக்கியம் உள்ளது.

மருத்துவத் தகவல்:
சித்த மருத்துவத்தில் 'சூரணம்' என்பது வெறும் மூலப்பொடி அல்ல. தற்போது மருத்துவ ஆலோசனை இன்றி தனித்தனி மூலிகைகளாக மற்றும் பொடிகளாக உட்கொள்ளும் பழக்கம் மக்கள் மத்தியில் பெருகி வருகிறது இது குறிப்பான பலன்களை தருவதில்லை இதனால் மக்கள் இயற்கை மற்றும் சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கை இழக்கிறார்கள்

ஒன்று அல்லது பல்வேறு மூலிகைகளை சரியான விகிதத்தில் கலந்து செய்யப்படுவதே சூரணம் ஆகும் இது குறிப்பான நோய்க்கான குறிப்பான மருந்தாக சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது

குறிப்பாக சுக்கு, கடுக்காய் நெல்லிக்காய் போன்ற மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் சூரணங்கள், உடலில் உள்ள தேவையற்ற வாயு மற்றும் கழிவுகளை அகற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கின்றன.
உதாரணத்திற்கு திரிபலா சூரணம் என்பது குடல் பகுதியில் உள்ள நச்சுக்களை (Toxins) மென்மையாக அகற்றி, செரிமான மண்டலத்தைச் சீராக்கும் ஒரு இயற்கை சுத்திகரிப்பான்.

ஆரோக்கியக் குறிப்பு:
இரவு உணவிற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணத்தை கொள்வது காலையில் உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

இது பற்றிய தொடர்புக்கு:
📍 அருண் இயற்கை மருத்துவகம் & தமிழ் நாட்டுமருந்து கடை, அம்பாசமுத்திரம்.
(வர்மம் | சித்தா ஆயுர்வேத மருந்தகம்)
📞 9360496181 | 04634357106

"Warm greetings from Arun Healthcare on the occasion of the 9th Siddha Day. Wishing you health and wellness!"✨
06/01/2026

"Warm greetings from Arun Healthcare on the occasion of the 9th Siddha Day. Wishing you health and wellness!"✨

வலி நிவாரண தைலங்களும் தோலின் அறிவியலும்! 🌿​நமது உடலில் ஏற்படும் தசை வலி மற்றும் மூட்டு வலிக்கு மேலே தடவப்படும் தைலங்கள் ...
06/01/2026

வலி நிவாரண தைலங்களும் தோலின் அறிவியலும்! 🌿

​நமது உடலில் ஏற்படும் தசை வலி மற்றும் மூட்டு வலிக்கு மேலே தடவப்படும் தைலங்கள் வெறும் வாசனையையும் குளிர்ச்சியையும் மட்டும் தருபவை அல்ல.

​மருத்துவத் தகவல்:
பாரம்பரிய தைலங்கள் (Thailams) மூலிகைகளின் சாற்றை நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நீண்ட நேரம் காய்ச்சி தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெய்கள் தோலின் அடுக்குகளைத் தாண்டி ஆழமாக ஊடுருவும் (Deep Tissue Pe*******on) திறன் கொண்டவை. இவை பாதிக்கப்பட்ட பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, வீக்கத்தை உண்டாக்கும் நச்சுக்களை அகற்றி, தசைநார்களை (Ligaments) வலுப்படுத்துகின்றன.

​ஆரோக்கியக் குறிப்பு:
குளிப்பதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன்னதாக மூட்டுகளில் தைலம் தடவி லேசாக மசாஜ் செய்வது, நாள் முழுவதும் மூட்டுகள் இலகுவாக இயங்க உதவும்.

​இது பற்றிய தொடர்புக்கு:
📍 அருண் இயற்கை மருத்துவகம் & தமிழ் நாட்டுமருந்து கடை, அம்பாசமுத்திரம்.
(வர்மம் | பிசியோதெரபி | நேச்சுரோபதி | சித்தா ஆயுர்வேத மருந்தகம்)
​📞 9360496181 | 04634357106

நரம்பு மண்டலமும் வர்ம சிகிச்சையும் - ஒரு மருத்துவ உண்மை! 🧠நமது உடலில் உள்ள நரம்புகள் மின்சாரக் கம்பிகள் (Electrical wire...
05/01/2026

நரம்பு மண்டலமும் வர்ம சிகிச்சையும் - ஒரு மருத்துவ உண்மை! 🧠

நமது உடலில் உள்ள நரம்புகள் மின்சாரக் கம்பிகள் (Electrical wires) போன்றவை. அவற்றில் ஏற்படும் சிறு தடைகளும் உடலில் வலி, மரத்துப்போதல் அல்லது சோர்வை ஏற்படுத்தும்.

மருத்துவத் தகவல்:
நமது உடலில் 108 வர்ம புள்ளிகள் உள்ளன. இந்த வர்ம புள்ளிகள் என்பவை நரம்பு முனைகளும் (Nerve endings), ரத்த நாளங்களும் சந்திக்கும் இடங்களாகும். வர்ம சிகிச்சையின் போது இப்பகுதிகளில் கொடுக்கப்படும் சீரான அழுத்தம், நரம்பு மண்டலத்தைத் தூண்டி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இது உடலில் உள்ள வலிகளைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், மூளையை புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.

ஆரோக்கியக் குறிப்பு:
தொடர்ச்சியான முதுகு வலி, கழுத்து வலி மற்றும் நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு வர்ம சிகிச்சை மற்றும் பிசியோதெரபி ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும்.

இது பற்றிய தொடர்புக்கு:
📞 9360496181 | 04634357106

📍 அருண் இயற்கை மருத்துவகம் & தமிழ் நாட்டுமருந்து கடை, அம்பாசமுத்திரம்.
(வர்மம் | பிசியோதெரபி | நேச்சுரோபதி | சித்தா ஆயுர்வேத மருந்தகம்)

செரிமானமும் அரிஷ்டமும் - ஒரு மருத்துவ உண்மை! 🌿நமது உடலில் செரிமானம் (Digestion) சரியாக நடைபெறவில்லை என்றால், அது சோர்வு,...
03/01/2026

செரிமானமும் அரிஷ்டமும் - ஒரு மருத்துவ உண்மை! 🌿

நமது உடலில் செரிமானம் (Digestion) சரியாக நடைபெறவில்லை என்றால், அது சோர்வு, வாய்வுத் தொல்லை மற்றும் உடல் பருமன் அல்லது உடல் மெலிவுக்கு வழிவகுக்கும்.

மருத்துவத் தகவல்:
ஆயுர்வேதத்தில் 'அரிஷ்டம்' என்பது இயற்கையான முறையில் நொதிக்க வைக்கப்பட்ட (Natural Fermentation) ஒரு திரவ மருந்தாகும். இதில் உள்ள இயற்கை உட்பொருட்கள் செரிமானத்தை தூண்டுவதோடு மட்டுமல்லாமல், இயற்கையான நல்ல நுண்ணுயிர்களை உருவாக்கி ரத்த ஓட்டத்தையும் சீராக்க உதவுகிறது. குறிப்பாக, உணவுக்குப் முன் அல்லது பின் சரியான அளவில் அரிஷ்டம் உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை (Gut Health) மேம்படுத்தும்.

ஆரோக்கியக் குறிப்பு:
எப்போதும் உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற சரியான மருந்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

இது பற்றியதொடர்புக்கு:
📞9360496181
04634357106

📍 அருண் இயற்கை மருத்துவகம் & தமிழ் நாட்டுமருந்து கடை, அம்பாசமுத்திரம்.
(வர்மம் | பிசியோதெரபி | நேச்சுரோபதி | சித்தா ஆயுர்வேத மருந்தகம்)

மேலும் இதுபோன்ற மருத்துவ தகவல்களை தினமும் பெற நம் குழுவில் இணையவும்: https://chat.whatsapp.com/1R99JwP4Fn08yLL20vBV24

🛡️ 8 ஆண்டுகால நம்பிக்கை.. இப்போது புதிய பரிணாமத்தில்!கடந்த 8 ஆண்டுகளாக அம்பாசமுத்திரத்தில் தரமான சித்த மற்றும் ஆயுர்வேத ...
02/01/2026

🛡️ 8 ஆண்டுகால நம்பிக்கை.. இப்போது புதிய பரிணாமத்தில்!

கடந்த 8 ஆண்டுகளாக அம்பாசமுத்திரத்தில் தரமான சித்த மற்றும் ஆயுர்வேத நாட்டு மருந்துகளை வழங்கி வரும் உங்கள் தமிழ் நாட்டுமருந்து கடை, இப்போது அருண் நேச்சுரோ கிளினிக்காக பரிணமித்துள்ளது

எங்களின் நேச்சுரோ கிளினிக் மூலம் .
வழங்கப்படும் சிறப்பான சிகிச்சைகள்:

✅ வர்மம் & பிசியோதெரபி: தீராத வலிக்கும் பக்கவிளைவுகள் இல்லாத தீர்வு.

✅ நேச்சுரோபதி: இயற்கை வழி உடல் நலம்.

📦 வீடு தேடி வரும் மருந்துகள்:
லேகியம், அரிஷ்டம், தைலம் மற்றும் அனைத்து பிராண்டட் மருந்துகளும் எங்களின் பார்மசியில் கிடைக்கும்.

நீங்கள் இருக்கும் இடத்திற்கே டோர் டெலிவரி (Door Delivery) செய்கிறோம்.

👇 ஆலோசனை பெற அல்லது மருந்துகளை ஆர்டர் செய்ய அழையுங்கள்:
📞 9360496181
04634357106

📍 அருண் நேச்சுரோ கிளினிக் & தமிழ் நாட்டுமருந்து கடை 54,55 மெயின் ரோடு பாரஸ்ட் ஆபீஸ் எதிர்புறம் அம்பாசமுத்திரம்.

Address

Arun Naturo Clinic, 54 Main Road, Forest Office Opposite
Ambasamudram
627401

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 10am - 9pm

Website

https://chat.whatsapp.com/1R99JwP4Fn08yLL20vBV24?mode=hqrt3

Alerts

Be the first to know and let us send you an email when Arun Healthcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram