06/11/2023
✅கோழிமுட்டையைப் பற்றி தெரிந்து கொள்வோம்
🟪முட்டை உலகின் மிகச் சிறந்த உணவு
🟪 சித்தர்களும் முட்டையை பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வந்துள்ளனர்
🟪 சித்தர்கள் கண்டறிந்த அண்டத்தைலம்
🟪ஜப்பானின் கறுப்பு நிற முட்டை
✅Dr.சுப.ச.இளமாறன்BSMS
✅Dr.E.Elakiyen BAMS
✅Dr.Arthika BAMS
புதுக்கோட்டை- அறந்தாங்கி தஞ்சாவூர்-சென்னையில் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற,
மேலும் விபரம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள போன் எண்ணில் பேசுங்கள்.
👁️📞தொடர்புக்கு
ph:9443475684
🟨🟨🟨07-11-23🟨🟨🟨
உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற உணவுகளில் கோழிமுட்டையும் ஒன்று என்று சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அப்படி என்னதான் முட்டையில் இருக்கு.
🟥 முட்டையில் புரோட்டீன் கொழுப்பு, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மேலும் விட்டமின்கள் ஏ. டி, ஈ இவைகளோடு முட்டையின் மஞ்சள் கருவில் பி காம்ப்ளக்சும் B vitamin உள்ளது.
நாம் சாப்பிடும் சாதாரண கோழி முட்டையில் நமக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் நிறைந்திருக்கின்றன. அதனால்தான் 'உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் முட்டைக்கு முதலிடம் கிடைத்துள்ளது . 40 முதல் 50 கிராம் முட்டையில், 187 மில்லிகிராம் கொழுப்புச்சத்தும் .
(சராசரி மனிதருக்கு ஒரு நாளைக்குத் தேவையான கொழுப்புச்சத்தின் அளவே 300 மில்லிகிராம்)ஒரு முட்டையில் 75 கலோரியும் உள்ளன.
பொதுவாக 100 கிராம் கோழி முட்டையில் தன்ணீர் 75 கிராம். கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம், புரதச்சத்து 12.6 கிராம் வைட்டமின் ஏ, வைட்டமின் டி உள்ளிட்ட பத்து வகை வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட ஏழு வகை தாதுச்சத்துகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் எனப் பல சத்துகள் உள்ளடங்கியுள்ளன.
நாட்டுக்கோழி முட்டையில் B2,B6,B12, A, D, ரிபோஃப்ளேவின்,
பயோடின் வைட்டமின்களும் . இரும்பு, காப்பர், அயோடின்,செலினியம், துத்தநாகம், போன்ற கனிமச்சத்துகளும் அடங்கியுள்ளன.
முட்டையில் சியாக்ஸாந்தின் (Zeaxanthin), கோலின் (Choline) லூட்டீன் (Lutein) சத்துகளும் உள்ளதால்.
கண்களில் ஏற்படும் கண்புரை, விழித்திரை பாதிப்பையும் தடுக்கும். கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்ற சத்துகள் இருப்பதால். உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதுடன்.எலும்பு களுக்கு வலுவூட்டும்.
முட்டையில் உள்ள லியூசின் (Leucine) என்ற அமினோ அமிலம், தசைகளில் புரதத்தை (Muscle Protein Synthesis) மேம்படுத்த உதவும்.
🟥45 கிராம் எடையுள்ள முட்டையில் 6 கிராம் அளவில் உயர்தர புரோட்டின் கிடைத்துவிடுகிறது.
🟥உடல் எடை குறைவானவர்கள், கொலஸ்ட்ரால் இல்லாதவர்கள் ,மெலிதானவர்கள் தினமும் ஒரு முட்டையை உட்கொள்ளலாம். தினமும் உட்கொள்ளும் போது உடல்சூடு அதிகரித்தால், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முட்டைகள் போதுமானது.
காய்கறி, இறைச்சிகளில் இருக்கும் புரோட்டினைவிட முட்டையில் புரோட்டின் அதிகம் கிடைக்கிறது.
🟥 பண்ணைகளில் தயாராகும் முட்டைகளை காட்டிலும் . கிராமங்களில், வீட்டில் வளர்க்கும் நாட்டுக்கோழியின் முட்டை சத்துமிகுந்தது. நாட்டுக்கோழி முட்டை நிறம் சற்று மாறி இருக்கும்.
🟥சிலர் முட்டையை சமைத்து உண்பதைக் காட்டிலும் சமைக்காமல் பச்சையாக உண்பதை பார்த்திருக்கலாம். இதனால் முட்டையின் அனைத்து பயனும் உடம்பிற்கு சேரும் என்று நினைக்கிறார்கள்.இது உண்மையில்லை.
முட்டையை எப்போதும் ஏழு முதல் பத்து நிமிடம்(அதிக நேரமும் கொதிக்க வைக்க கூடாது)வரையில் மஞ்சள் வெண்கருக்கள் திட நிலையை அடையும் வரை வேகவைக்க வேண்டும்.
இதனால் கண்ணுக்கு தெரியாத தீயகிருமிகள் வேகவைப்பதால் நீங்குவதோடு, அவித்த முட்டையை சில மணிநேரங்களில் உட்கொண்டால் நமக்கு கெடுதல் தராது. அதேவேளை காலையில் வேகவைத்த முட்டையை இரவு உட்கொள்வதும் கெடுதல் ஏற்படும்.
🟥முட்டையின் வெண் கருவை 7மாதங்களுக்கு பிறகு கொடுத்து வரலாம்.ஒருவருடத்திற்கு பிறகு மஞ்சள் கருவையும் சேர்த்து வரலாம். சிலருக்கு முட்டை உட்கொண்டால் அலர்ஜி ஏற்படவாய்ப்புண்டு அவர்கள் தவிர்க்க வேண்டும்.
🟥கர்ப்பிணிகள் கண்டிப்பாக முட்டையை பச்சையாக உண்ணவே கூடாது. ஏனென்றால் சால்மெனெல்லா என்ற பாக்டீரியா இருப்பதால் முட்டையின் மஞ்சள் கருவை பச்சையாக திரவ நிலையில் சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கையும் உண்டு.
முட்டையில் கோலின் (Choline) என்ற சத்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடிய தாகும். அதனால் கருவுற்ற தாய்மார்கள் முட்டை சாப்பிடுவதால், கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை சீராகவைத்திருக்கும். மூளை தொடர்பான எந்தக் குறைபாடும் இல்லாமல் குழந்தையும் பிறக்கும். முட்டையிலிருக்கும் ஃபோலிக் அமிலம், கருவில் வளரும் குழந்தையின் நரம்புகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் உதவும் .
🟥முட்டையை பச்சையாக உண்ணக் கூடாது என்று சொல்லப்படுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. முட்டையின் வெண் கருவில் ஆவிடின்(avidin) என்கின்ற ஒரு புரோட்டின் உள்ளது. இது பயோட்டின் என்கின்ற விட்டமின் பி-யுடன் சேர்ந்து கொண்டு மனித குடலில் உட்கிரகிக்க இயலாத நிலையை உருவாக்குகின்றது. அதேநேரத்தில் முட்டையை வேகவைத்துவிட்டால், அந்த வெப்பத்தில் அவிடின் நீங்கிவிடும். அதன் பலனாக, முட்டையில் உள்ள ப்யாட்டின் முழுமையாக உடலில் கிரகிக்கப்படும்.
🟥ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் முட்டையை மிதக்க போட்டால் பழைய முட்டையாக இருந்தால் பந்து போல மிதக்கும். புதியதாக இருந்தால், தண்ணீர்க்கடியில் போய் நிற்கும். இதன் மூலம் நல்ல புதிய முட்டையை கண்டறிவது நமக்கு எளி தாகும்.
பாலும் முட்டையையும் ஒன்றாக சாப்பிடலாமா?
ஒரே நேரத்தில் பாலும் முட்டையையும் உட்கொள்வதால் செரிமானத்தை பாதிக்கலாம் மற்றும் வீக்கம், அசௌகரியம், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை உருவாக்கலாம்.
பாடி பில்டர்கள், தசையை வளர்ப்பதற்கும், அவர்களின் உடலில் புரத அளவை மேம்படுத்துவதற்கும் பாலில் நான்கு முதல் ஐந்து பச்சை முட்டைகளை தினமும் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், இதயப் பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால், இந்த உணவு அபாயகரமானதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
🟥அதேநேரத்தில் நன்கு உடற்பயிற்சி செய்பவர்கள். 200 மில்லி சூடான பாலில் ஒரு முட்டையை, மில்க்சேக் முறையில் உட்கொண்டு வரலாம் என்ற அறிவுரையும் சில உணவுநிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
🟥தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலில் அதிகளவில் கொழுப்புச்சத்து சேர்ந்துவிடும் என்கிற பயம் பலருக்கும் இருக்கிறது. அப்படிச் சாப்பிட விரும்புகிறவர்கள், முதலில்
உடலில் இருக்கும் கொழுப்புச்சத்து அளவைப்
பரிசோதித்துக்கொள்ள
வேண்டும். சாதாரணமாக ஒருவருக்குக் கொழுப்புச்சத்து,
200 mg/dl வரை இருக்கலாம்.
200-230 இருப்பதும் ஆபத்து. 250க்குமேல் இருக்கிறது
என்றால், அதிகளவில் முட்டை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
🟥சித்தமருத்துவத்தில் முட்டையை அண்டம் என்று குறிப்பிட்டு பல பலன்களை சித்தர் குறிப்பிட்டுள்ளனர்.
🟥முட்டையின் அண்டத்தைலம்
நாட்டுக்கோழி முட்டையை அவித்து, மஞ்சள் கருவை மட்டும் சேகரித்து அனலில் வாட்டும்போது ஒரு வகை எண்ணெய் வரும். இதை, அண்டத்தைலம் என்போம். இந்தத் தைலம் திக்குவாய் பிரச்னையைச் சரிசெய்யவும். பக்கவாதத்தினால் பேசமுடியாதவர்களுக்கும் நாக்கில் தடவி விட்டால் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
குழந்தைகளுக்கு தாய்ப்பாலிலும், பெரியவர்களுக்கு சர்க்கரையிலும் சில துளிகள் விட்டு உட்கொள்ளலாம்.
இரண்டு வேளைகள் உணவிற்கு பின்பு கொடுக்கலாம் . இதனால் தீரும் நோய்கள் : மாந்தம், சன்னி, பாரிசவாயு, குழந்தைகளின் வலி, நாவுபிடிப்பு, பக்கவாதம் முதலியன தீரும் என அறியலாம். இதனை தகுந்த சித்தமருத்துவரின் மேற்பார்வையில் தயாரித்து பயனடையலாம். இதன் ஆயுட்காலம் ஒருவருடம் ஆகும்.
🟥சித்தர்கள் தாது ஜீவ வர்கத்தில் உபரசம் 120 வகையாக பிரித்து , அதில் பஞ்சபூத அடிப்படையில் நீர்பூத வகைபாட்டில் முட்டையை சேர்த்துள்ளனர். மேலும் இதனை சிற்றண்டம் என பெயரிட்டும் கோழிமுட்டையின் பயன்களை விபரமாக விளக்கியுள்ளனர். இதற்கு உள்ளழலாற்றி, மலமிளக்கி,உடல்தேற்றி போன்ற செய்கை கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
🟥முட்டை ஓட்டில் சுண்ணாம்பு சத்து இருக்கிறது. இதனை பயன்படுத்த சித்தர்கள் , முள்ளங்கி சாறு விட்டு அரைத்து ,புடமிட்டு,
மூட்டை ஓட்டுப் பற்பம் தயாரித்து வழங்கி வந்துள்ளனர். இப்பற்பம் அத்திசுரம் எனப்படும் எலும்புருக்கிச் சுர நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது. சித்தமருத்துவத்தில் சில மருந்துகள் தயாரிப்பிலும் முட்டை சேருகிறது.
🟥மயில்துத்தம், பால்துத்தம் இவைகளை எதாவது ஒன்றை விடமிக்கும்படி தின்றவர்களுக்கு,
மூட்டையின் வெள்ளை கொடுத்தால் முரிந்துவிடும். விசத்தை முரிக்கும் மருந்தாக முட்டையின் வெள்ளைக் கரு பயன்படுகிறது.
🟥அதேபோல இன்று தலைக்கு தேய்த்து குளிக்க பயன்படுத்தும் சாம்புகளுடன் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து தலைக்கு தேய்த்து குளிக்க நமக்கு சிறந்த கன்டிசனர் கிடைத்தது விடுகிறது.
🟥மூட்டைஒட்டில் சிறு
துவாரங்களிருப்பதால், அவைகளின் வழியே காற்றுப் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருக்கும். அதனால், முட்டைகள் சிலநாட்களில் கெட்டுப் போகின்றன. ஆகையால் முட்டைகளின் கொழுப்பு படலம் அல்லது வாசிலின் பூசி, ஒரு முட்டையின் மேல்
மற்றொரு முட்டைபடாதவாறு வைத்திருந்தால், முட்டை பல
நாட்கள் வரையிலும் கெடாது பக்குவமாக இருக்கும். அந்த காலத்தில் முட்டைகளை சுண்ணாம்பு நீரில், கல்லுப்பில் அமிழ்த்தி நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாத்தும் வந்தனர்.
🟥முட்டையின் வெள்ளைக் கருவுடன், களர்சிக்காயின் உள்பருப்பும் சேர்த்து உட்கொள்ள, உடலில் ஏற்படும் பல வீக்கங்களுக்கு நிவாரணம் தருகிறது. குறிப்பாக விரைவீக்கத்திற்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. முட்டையில் வெள்ளைக் கருவை விரையில் ஏற்படும் வலி வீக்கத்திற்கும் வெளிஉபயோகமாக பற்றிடலாம்.
🟥முட்டையின் வெள்ளைக்கருவிற்கு எண்ணெய் பிசுபிசுப்பை நீங்கும் தன்மை உண்டு. முதலில் வெது வெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவை தடவி மசாஜ் செய்ய வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். பின்பு மென்மையான துண்டு கொண்டு முகத்தை துடைக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்துவந்தால் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு ,முககருப்பு நீங்கும்.இதனுடன் எலுமிச்சைச்சாறு, தயிர்,தேன், அரிசிமாவு,கடலைமாவு ஏதாவது ஒன்றை கலந்து, ஸ்பேஸ்பேக் முறையில் பயன் படுத்தி பயன்பெறலாம்.
🟥ஐப்பானில் எரிமலை அருகில் உள்ள வெந்நீர் ஊற்றில் முட்டையை வேகவைக்கும் போது கருப்பு நிறத்தில் மாறுவதால், இவ்வாறு வேகவைத்த முட்டையை உட்கொண்டால் வாழ்நாள் அதிகரிப்பதாகவும் அறியமுடிகிறது. முட்டையை இந்த வெந்நீர் ஊற்றில் 15நிமிடஙகள் வேகும் போது இத்தண்ணீரில் உள்ள சில வேதிப்பொருள்(sulphur ) முட்டையின் நிறத்தை மாற்றுகிறது .
Block egg in Japan
Owakudani is an active volcanic valley in the famed Hakone region west of Tokyo. It’s known to locals as "Jigokudani" (the Valley of Hell) and is famous for its black eggs, which are boiled in the sulfurous waters to give the egg shells a distinctive color.
🟩🟩🟩🟩 நன்றி 🟩🟩🟩🟩
✅Dr.சுப.ச.இளமாறன்BSMS
✅Dr.E.Elakiyen BAMS
✅Dr.Arthika BAMS
புதுக்கோட்டை- அறந்தாங்கி தஞ்சாவூர்-சென்னையில் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற,
மேலும் விபரம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள போன் எண்ணில் பேசுங்கள்.
👁️📞தொடர்புக்கு
ph:9443475684
🟪🟪🟪🟪🟪🟪