10/04/2026
இன்று உலக ஹோமியோபதி தினம்! 🌍🩺
ஒரு ஹோமியோபதி மருத்துவராகவும், பேராசிரியராகவும் எனது 20 ஆண்டுகால மருத்துவப் பயணத்தில் நான் உணர்ந்த ஒரு மிகப்பெரிய உண்மை — "Medical service is both Science and Humanity." வெறும் மருந்துகளை மட்டும் வழங்குவது மருத்துவம் அல்ல; நோயாளியின் வலியை உணர்ந்து, அறிவியலோடு மனிதநேயத்தையும் கலந்து சிகிச்சை அளிப்பதே உண்மையான மருத்துவம். 🤝✨
இன்று நாம் பேசும் Mental Health, Lifestyle changes, Habits மற்றும் Auto-immunity போன்ற நவீன மருத்துவக் கருத்துக்களைப் பற்றி 200 ஆண்டுகளுக்கு முன்பே பேசிய முன்னோடி ஹோமியோபதி.
வள்ளுவர் சொன்னது போல:
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்."
அறிகுறிகளை மட்டும் குணப்படுத்தாமல், நோய்க்கான மூலகாரணத்தை அறிந்து அதை வேரோடு நீக்குவதே (Annihilation) இந்த மருத்துவ முறையின் சிறப்பு.
சில நேரங்களில் உண்மைக்காக நாம் தனித்து நிற்க வேண்டியிருக்கும். ஆனால், அந்த உண்மை அறிவியலாகவும் மனிதநேயமாகவும் இருக்கும்போது, நாம் தயக்கமின்றிச் சொல்லலாம் — Dare to be Wise! 💡
இனிய உலக ஹோமியோபதி தின வாழ்த்துகள்! 🌿