NHm பணியாளர்கள் கூட்டமைப்பு - தமிழ்நாடு

  • Home
  • India
  • Aundipatti
  • NHm பணியாளர்கள் கூட்டமைப்பு - தமிழ்நாடு

NHm பணியாளர்கள் கூட்டமைப்பு - தமிழ்நாடு NHM பணியாளர்கள் கூட்டமைப்பு - தமிழ்நாடு

26/03/2024

*நமக்கு எதிராக நிர்வாகம் முன்னெடுக்கும் செயல்களை நமக்கானதாக மாற்றுவோம்*.

எனது மதிப்பிற்கும், பாசத்திற்கும் உரிய NHM தோழமைகளே வணக்கம்.

நமக்கு எதிராக நிர்வாகம் முன்னெடுக்கின்ற செயல்களை நாம் தான் நமக்கானதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

வருகின்ற 01.04.2024 அன்று பணியாளர்களை ஒரு நாள் தற்காலிக பணிவிடுவிப்பு செய்து மறுநாள் பணிக்கு சேர்த்துக்கொள்ள கூறி NHM அலுவலகத்திலிருந்து கடிதம் வரப்பெற்றதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

நமது ஒற்றுமையையும், நமது முக்கியத்துவத்தையும், இந்த நிர்வாகத்திற்கு காட்டுவதற்கு நமக்கான ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்துவோம் தோழமைகளே.

*எனது அருமை தோழமைகளே 01.04.2024 அன்று பணிக்கு செல்வதை முழுமையாக தவிருங்கள்*.

கண்காணிப்பாளர் சொன்னார், BMO சொன்னாங்க, Doctor சொன்னாங்க, Assistant சொன்னாங்க என்று பணிக்கு செல்லாமல் அன்று (01.04.2024) ஒரு நாள் வீட்டில் இருங்கள்.

எது ஒன்றையும் இழக்காமல் பிறதொன்றை நாம் பெற முடியாது.

நமது ஒற்றுமையையும், முக்கியத்துவத்தையும் உணர்த்தாமல் இந்த நிர்வாகத்திடம் நமது உரிமையை நாம் பெற முடியாது.

நன்றி தோழமைகளே.

NTR
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு NHM பணியாளர்கள் கூட்டமைப்பு.

06/12/2023
05/11/2023

As no action has been taken on our fundamental rights demands, we are soon re-announcing the Non Violence Struggle which we have already temporarily suspended without any other option.

Tamilnadu National Health Mission Employees Federation

05/11/2023

தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும பணியாளர்கள் கூட்டமைப்பின் தோழமை சங்கங்களின் மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து தோழமைகளுக்கும் வணக்கம்.

பல நியாயமான உரிமைகளை வழங்கிட கோரி 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் "அறவழி போராட்டம்" அறிவிக்கப்பட்டது. பின்னர் TN NHM நிர்வாகத்தின் சார்பில் பேச்சு வார்த்தை அழைப்பு கடிதம் கூட்டமைப்பின் தலைமைக்கு வரப்பெற்றதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட அறவழி போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பேச்சு வார்த்தையின் போது TN NHM நிர்வாகத்தின் சார்பில் பல கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பேச்சு வார்த்தைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. நாமும் நடைமுறைப்படுத்துவார்கள் என பல மாதங்கள் காத்திருந்துவிட்டோம். கோரிக்கைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டது போல தெரியவில்லை.

ஆகையால் வேறு வழியின்றி தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட "அறவழி போராட்டம்" மீண்டும் நடத்தப்பட உள்ளது என்பதை இந்நேரத்தில் அனைத்து தோழமைகளுக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

தீபாவளி பண்டிக்கை முடிந்த பிறகு நாள் மற்றும் இடம் முறைப்படி அறிவிக்கப்படும் தோழமைகளே.

அனைத்து தோழமைகளும் தயாராகுங்கள். தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும பணியாளர்கள் கூட்டமைப்பின் அனைத்து தகவல்களையும் அனைத்து NHM தோழமைகளுக்கும் கொண்டு சேருங்கள். எவ்வித அறிவிப்பும் யாருக்கும் தெரியவில்லை என யாரும் சொல்லக்கூடாது.

நாம்
சலுகைக்காக போராடப்போவது இல்லை
நமது உரிமைக்காக போராடப்போகிறோம்.

N.ராஜதுரை BA., MSW
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும பணியாளர்கள் கூட்டமைப்பு.

04/11/2023

அனைத்து தோழமைகளுக்கும் வணக்கம்.

நாளை (05.11.2023) விருதுநகரில் நமது கூட்டமைப்பின் பெயரில் சிறிய மாற்றம் செய்து NHM திட்டத்திற்கு தொடர்பில்லாத ஒரு சிலர் NHM பெயரில் கூட்டம் நடத்துகின்றனர்.

நமது TNNHM கூட்டமைப்பின் கூட்டம் என நினைத்து யாரும் சென்றுவிட வேண்டாம்.
நாளை நடைபெறும் கூட்டத்தை நாம் நடத்தவில்லை.

NHM திட்டத்திற்கு தொடர்பில்லாதவர்கள் NHM பெயரில் கூட்டம் நடத்துகிறார்கள்.

நன்றி

N.ராஜதுரை BA., MSW
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும பணியாளர்கள் கூட்டமைப்பு.

03/11/2023

அனைத்து தோழமைகளுக்கும் வணக்கம்.

நேரமின்றி, ஓய்வின்றி பணியாற்றும் நமக்கான உரிமையை தர மறுக்கும் இந்த அரசுகளுக்கும், நிர்வாகத்திற்கும்
நமது ஒற்றுமையையும், இத்துறைக்கு நமது தேவையையும் புரிய வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

மாயைகள் நிறைந்த பேச்சுகளால் நாம் மயங்குவோம் என நினைத்தால் அது அவர்கள் தவறு.

எண்ணிக்கைக்கு நம்மை கைகூலிகளாக மாற்ற நினைத்தால் அது இங்கு நடக்காது.

நாம் ஒன்றுபடுவோம்

களம் நம்முடையது

காலத்தையும், காட்சிகளையும் மாற்றி அமைப்போம்

உரிமைகளை மீட்டெடுப்போம்.

அனைத்து அறிவிப்புகளும் விரைவில்.....

எப்போதும் தயாராக இருங்கள் தோழமைகளே

உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள.....

N.ராஜதுரை BA., MSW
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும பணியாளர்கள் கூட்டமைப்பு.

26/10/2023

அனைத்து NHM தோழமைகளுக்கும் வணக்கம்.

தமிழ்நாட்டில் பணியாற்றக்கூடிய அனைத்து NHM பணியாளர்களையும் ஒன்றிணைத்து "தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும பணியாளர்கள் கூட்டமைப்பினை" உருவாக்கி நடத்தி வருகிறோம்.

ஆனால் நம்மில் ஒரு சிலர் தேவையற்ற குழப்பத்தினை உருவாக்கும் நோக்கில் " தேசிய நல குழுமம் (NHM - தமிழ்நாடு) ஊழியர்கள் கூட்டமைப்பு" என்ற பெயரில் தனி அமைப்பை ஏற்படுத்தி NHM பணியாளர்களை பிரிவு படுத்தும் செயலை செய்வது போன்ற தகவல் நமக்கு கிடைக்கிறது.

ஆகவே மேற்காணும் அமைப்பிற்கும் நமது அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

ஒரு சில நிரந்தர பணியாளர்களின் சங்கங்களின் உதவியோடு இத்தகைய செயல்கள் நடைபெறுவதாகவும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

தற்போது நம்மிடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் இவர்கள் "தேசிய நல குழுமம் (NHM - தமிழ்நாடு) ஊழியர்கள் கூட்டமைப்பு" என்ற பெயரில் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

ஆகவே பொய்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.

நமது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேறிட, நமக்கு எப்போதும் துணை நிற்க தயாராக இருக்கும் நிரந்தர பணியாளர்கள் சங்கங்களோடு கைகோர்த்து பயணிக்க நாம் எப்போதும் தயாராக தான் இருக்கிறோம்.

நம்மை எண்ணிக்கைகாக பயன்படுத்த நினைப்பவர்களோடு நாம் எப்போதும் கைகோர்ப்பது இல்லை.

பொய்களை நம்பி ஏமாந்து வாழ்வதை விட, தனியாக நின்று போராடி வீழ்வது மேல்

ஒன்றாக பயணிப்போம்!

ஒற்றுமையோடு பயணிப்போம்!

உரிமைகளை வென்றெடுப்போம்!

N.ராஜதுரை BA., MSW,
மாநிலத்தலைவர்,
தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும பணியாளர்கள் கூட்டமைப்பு.

06/06/2023

"உயிருடன் இருக்கும் மனிதனை பிணம் திண்ணி கழுகுகள் கொத்தி திண்று தனது பசியை தீர்த்துக்கொண்டது போல உள்ளது". தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்றும் NHM பணியாளர்களின் மே மாத ஊதியத்தில் தொழிலாளர் தின ஊதியத்தை பிடித்தம் செய்த தமிழக NHM இயக்குநர் அலுவலக அதிகாரிகளின் செயல்.

19/05/2023

அனைத்து தோழமைகளுக்கும் வணக்கம்.

நமது NHM கூட்டமைப்பின் சார்பில் "தினந்தோறும் ஓர் முயற்சி" என்ற அடிப்படையில் நமது உறவுகளின் பிரச்சனைகள் மற்றும் உரிமை மீட்பு தொடர்பாக தினந்தோறும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். அதனடிப்படையில்

17.05.2023 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றக்கூடிய MMU Cleaner பணியாளர்கள் ஊதிய பிரச்சனையை சரி செய்வது தொடர்பான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

18.05.2023ல் மேதகு தமிழக ஆளுநர் அவர்களை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. (குறிப்பு: 2018ல் ஏப்ரலில் அப்போதைய மேதகு ஆளுநர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நமது பிரச்சனைகள் குறித்து சந்தித்து விளக்கப்பட்டது).

19.05.2023 இன்று NUHM Account Assiatant மற்றும் DEO பணியாளர்களுக்கு 2017க்கு முன்பு வழங்கப்பட்ட வருடாந்திர ஊதிய உயர்வை தற்போதைய ஊதியத்துடன் சேர்த்து வழங்கிட SPM NUHM அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

30% அடிப்படை ஊதிய உயர்வின் போது பழைய அடிப்படை ஊதியம் குறைத்து எடுக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு எண் பெறப்பட்டுள்ளது.

நான் மேற்கொண்டுள்ள உரிமை மீட்பு பயணம் தொடரும்
எம் தோழமைகள் பணியிடங்களில் மரியாதையாக நடத்தப்படும் வரையில்.

NTR
மாநிலத்தலைவர்
TNNHMEF

Address

MAIN Road RAJADHANI
Aundipatti
625512

Telephone

+918883454035

Website

Alerts

Be the first to know and let us send you an email when NHm பணியாளர்கள் கூட்டமைப்பு - தமிழ்நாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NHm பணியாளர்கள் கூட்டமைப்பு - தமிழ்நாடு:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram