29/05/2021
வைரஸ் காய்ச்சல்: அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு!!
காலநிலை மாறும் போது பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். அதில் ஒன்று தான் வைரஸ் காய்ச்சல். வைரஸ் காய்ச்சல் வந்தால், கடுமையான உடல் வலி, அரிப்புக்கள் மற்றும் தலைவலியை உணரக்கூடும். மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதற்கு சரியான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் சீக்கிரம் குணப்படுத்திவிடலாம்.
அறிகுறிகள்:-
*காய்ச்சல்
*மிகுந்த சோர்வு
* கடுமையான உடல் வலி
* இருமல், தொண்டைப்புண்
* கடுமையான தலை வலி
* வயிற்றில் வலி
* மூக்கடைப்பு
* தோல் தடித்தல்
சிகிச்சை:-
வைரஸ் காய்ச்சல் வந்தால், அவற்றை உண்டாக்கும் வைரஸ் செல்களை தாக்கும். குறிப்பாக சுவாச மண்டலத்தை தான் வைரஸ் காய்ச்சல் வெகுவாக பாதிக்கும். ஒருவேளை வைரஸ் மிகவும் சக்தி வாய்ந்ததெனில், அதனால் நரம்பு மண்டலம் கூட பாதிக்கப்பட்டு, அதனால் தீவிரமான பிரச்சனையையும் சந்திக்கக்கூடும். இதனை சரிசெய்ய, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் வைரஸ் காய்ச்சல்கள் பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். காய்ச்சலின் அறிகுறிகளை அறிந்த உடனே சிகிச்சை எடுத்து கொள்வது சிறப்பாகும்.
தடுப்பு:-
வைரஸ் காய்ச்சல் தடுப்பது எளிதல்ல, அனால் அதன் மூலம் ஏற்படும் தொற்று நோயை தவிர்க்கலாம். கைகளை சோப்பால் நன்கு கழுவவும், நெரிசலான இடங்களுக்கு செல்வது தவிர்க்கவும், கை கழுவாமல் முகம், வாய், கண்களை தொடாதீர்கள் மேலும் சூடான தண்ணீர் குடிக்கவும்.
இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும் மருந்து பெற்றுச் செல்லுங்கள்.
மேலும் விபரங்களுக்கு:
DR அய்யாசாமி குமாரபிரபு
மகா கிளினிக்- மதுரை
மொபைல்: 8189909451(வாட்சப்)
இது விளம்பரம் அல்ல, ஆலோசனை, மருத்துவம் மற்றும் மருந்து அனைத்தும் இலவசம். நோய் தொற்று ஏற்பட்ட நபர் வர தேவையில்லை, குடும்பத்தினர் அல்லது நன்பர்கள் வந்து மருந்து பெற்று செல்லலாம்.
ஏழை எளிய மக்களுக்கு பயன்பெற இதை செய்கிறேன், உங்களுக்கு இது சரியென தோன்றினால் சேர் செய்யுங்கள். நன்றி.