03/09/2020
இன்னும் ஒரு மாதத்தில் உலக மனநல வாரம்.
தொடர்ந்து தினமும் மனநலத்தை பற்றிய குட்டி தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள முயல்கிறேன்.
இன்று
மனநலம் எனும் கூட்டு முயற்சி பற்றி பேசுவோம்.
மனநல மருத்துவர்கள் நிறைய ஊடக வெளிச்சம் பெறுவதால் மனநலம் வெறும் மருத்துவர் சம்பந்தமான சமாச்சாரம் என்றே பலரும் நினைக்க்கூடும்.
ஆனால் உண்மையில் மனநல மேலாண்மை என்பது ஒரு டீம் ஒர்க் தான்.
ஒரு பக்கம்: psychiatric Social worker, nurse, physician assistant என்கிற முக்கியமான டீம். அவர்களுடன் சைகாலஜிஸ்ட், சைக்கோதெரபிஸ்ட், சைக்கியாட்டிரிஸ்ட் என்று ஒரு mental health professionals டீம் A
இன்னொரு பக்கம், கிளையண்ட், அவரை கவனித்துக்கொள்ளும் caregivers என்கிற டீம் B
இந்தியா போன்ற நாடுகளில் டீம் A அவ்வளவு வலுவாக இல்லை, காரணம் நமது அரசுகள் மனநலத்திற்காக ஒதுக்கும் resources சற்று குறைவு. அதுவும் போக, நமது ஊரில் இவை எல்லாம் புதுசு தான், அதனால் இன்னமும் இங்கிலாந்து மாதிரியோ, கேனடா மாதிரியோ நாம் டெவலப் ஆகவில்லை.
ஆனால் இந்த டீம் B நம் நாட்டில் தான் இன்னும் பெட்டராக இருக்கிறது. ஒருவருக்கு மனதில் ஏதும் பிரச்சனை என்றால், அவருக்காக மெனக்கெட்டு எல்லாம் செய்யும் பெற்றோரும், சகோதர்களும், மாமன் மாரும் நம்மூரில் அதிகம்.
அரசு மருத்துவமனை மனநல பிரிவுகளில் பதிவு செய்த நபர்களுக்கு, ஒரு மாதத்திற்கு உண்டான மருந்துகளை தருவார்கள். அதற்கென்று ஒரு ஓ பி நோட்டுபுத்தகம் இருக்கும். அதை நோயாளியே தான் கொண்டு வர வேண்டும் என்கிற நிர்பந்தம் இல்லை. யார் அந்த நோட்டை கொண்டு வந்து கொடுத்து, விவரம் சொன்னாலும், மருந்தை தரும் ஒரு informal ஏற்பாடு உண்டு.
மூளை வளர்ச்சி குறைந்தவர், வலிப்பு நோய், மனசிதைவு, மிக தீவிரமான ஓ சீ டி, அல்லது டெமென்ஷியா என்றால், பிரத்தியேகமாய் வண்டியை வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்து போக வேண்டி வரும், ரொம்பவும் சிரமம்+ செலவு....
அதனால் மருத்துவமனையை சுற்றியுள்ள எத்தனையோ கிராமங்களில் இருந்து,
அப்பா,
அம்மா,
மாமா,
சித்தப்பா,
பெரியப்பா,
அண்ணன்,
தம்பி,
அக்காள்,
மருமகன்,
மருமகள்,
கனவன்,
மனைவி,
மகள்
மகன்.....
என்று எத்தனையோ விதத்தில் உறவு முறையான மனிதர்கள், “மாச மாத்திரை” வாங்க நோட்டும் கையுமாய் ஓ பிகளில் வரிசைக்கட்டி நிற்பார்கள்.
சில சமயம், நோயாளியின் அம்மா எங்களுக்கு லெட்டர் எழுதி அனுப்பி இருப்பார்கள். இப்போதெல்லாம் வாட்ஸப்பில் பேசியே அனுப்புவார்கள்!!
அந்த அளவிற்கு நம்மூரில் டீம் B ரொம்பவே வலுவாக வேலை செய்யும்!! அதனால் தான் வெளிநாடுகளை போல, நம்மூரில் மனநல பாதிப்பு காரணமாய் யாரும் பொது இடங்களில் பத்து பேரை தாக்கியதாக சம்பவங்கள் அதிகம் இல்லை.
எல்லா புகழும் டீம் B க்குத் தான்!!
இருந்தும் டீம் A வையும் அருள் கூர்ந்து அரசு நல்லபடியாக வளர்த்தெடுத்தால், மனநலத்தில் நாம் இன்னும் அதிகமாய் சாதிக்கலாம்!!