Anumuk Optovision

Anumuk Optovision Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anumuk Optovision, #1/1, Krishnapillai Garden 1st Street, (East Jones Road 1st Left) Saidapet, Chennai.

Anumuk Optovision

OUR SERVICES
• Vision Theraphy Centre
• Contact lens Clinic
• Eye Refraction Clinic
• Spectacle frames & lenses dispensary
• Cooling glasses, protective glasses
• Low vision aid, Progressive glasses

29/04/2021
Anumuk Optovision
29/04/2021

Anumuk Optovision

வியப்பூட்டும் லேசர் சிகிச்சை!இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் விளைந்த பார்வைத்திறன் மேம்பாட்டு அறுவை மற்றும் லேசர் ஒளிக்கற்றை...
28/04/2021

வியப்பூட்டும் லேசர் சிகிச்சை!

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் விளைந்த பார்வைத்திறன் மேம்பாட்டு அறுவை மற்றும் லேசர் ஒளிக்கற்றை சிகிச்சை பற்றி காண்போம்.

கண்ணாடி அணிய பிடிக்கவில்லை, விழி ஒட்டுவில்லை அணிய பயம், பராமரிப்பு செய்வதில் சிரமம் இப்படி பல்வேறு காரணங்களால் மாற்று வழி தேடியவர்களுக்கு பார்வைத்திறன் மேம்பாட்டு சிகிச்சையின் வகைகளும், பலன்களும் வெளிச்சத்திற்கான விடியல் என்று கூறினால் மிகையாகாது.

மேலும் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
https://anumukoptovision.blogspot.com/2021/04/blog-post_22.html

Anumuk Optovision
28/04/2021

Anumuk Optovision

Anumuk Optovision
28/04/2021

Anumuk Optovision

ANUMUK OPTOVISION
28/04/2021

ANUMUK OPTOVISION

வெள்ளெழுத்து ஏன்?கண்களின் விழி ஊடக வில்லையை மீட்சிவிசை கொண்ட தசைநார் போன்ற ஓர் அமைப்பு சிலியரிபாடி என்ற அமைப்புடன் இணைத்...
26/04/2021

வெள்ளெழுத்து ஏன்?

கண்களின் விழி ஊடக வில்லையை மீட்சிவிசை கொண்ட தசைநார் போன்ற ஓர் அமைப்பு சிலியரிபாடி என்ற அமைப்புடன் இணைத்து உள்ளது. நாம் பார்க்கும் தூரத்திற்கு தகுந்தாற்போல் நமது கண்ணின் தகவமைப்புத்திறன் இந்த மீட்சிவிசை தசைநார் மூலம், கண்ணின் விழி ஊடக வில்லையின் குவியத்தூரத்தை மாற்றி எந்த தூரத்தில் உள்ளவற்றையும் பார்க்கும், குவியத்திறன் மாற்றம் தானியங்கி குவியத்தன்மையை பெறுகிறது .

ஆனால், தூரப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு 36 வயதிற்கு பிறகும், சராசரி நல்லப் பார்வைத்திறன் கொண்டவர்களுக்கு 40 வயதிலும் இந்த குவியத்திறன் மாற்றத் தன்மையின் குறைபாடு காரணமாக மிக அருகில் உள்ளவைகளை சரிவர படிக்க இயலாத தன்மை ஏற்படுகிறது. இதை வெள்ளெழுத்து (அ) சாளேஸ்வரம் எனக் கூறுவர். இவர்களின் குவியத்திறன் மாற்ற திறன் தன்மையை ஆராய்ந்து தகுந்த குவி ஊடக வில்லை கொண்ட கண் கண்ணாடியை பரிந்துரை செய்வதன் மூலம் அவர்களின் பார்வைத் திறனை அதிகரித்து பயன் பெறச் செய்யலாம் .

மேலும், மக்களுக்கு அவரவர் வேலையின் தன்மைகளை பொருத்தும் குவியத்திறனை விழிஒளி பரிசோதகர்கள் சோதித்து தகுந்த கண்ணாடியை பரிந்துரை செய்வர். கணிணி வேலை செய்வோருக்கும், புத்தக எழுத்தர், கடிகாரம் பழுது பார்ப்பவர், நகை வேலை செய்வோர், துணி நெய்வோர் என பல்வேறு பணியில் உள்ளவர்களின் பணியின் தன்மை, கண்ணிற்கும் பொருளுக்கும் உள்ள தூரம், பணியிடத்தின் வெளிச்சம் பணியின் வேகம் பணியின் தரத்தின் அத்தியாவசியம் பணியில் கூர்ந்து பார்க்க வேண்டிய, கூர்ந்து செய்ய வேண்டிய தரத்தின் துல்லியமான அளவுகள் இவைகள் மனிதருக்கு மனிதர் மாறுபடக் கூடியது ஆகும். எனவே அனைவருக்கும் ஒரே மாதிரியான புத்தக கோட்பாடுகளோ விதிமுறைகளோ, பரிந்துரைக்கும் அளவுகளோ பயன் தராது. அப்படியே பயனளித்தாலும் மன நிறைவுத் தன்மையோ அல்லது முழுமையான பயன்பாட்டு தன்மையையோ தர இயலாது எனவே சம்பந்தப்பட்டவர்களின் தேவையை உணர்ந்து - பணியிடம், இடத்தின் ஒளி, பொருள், பொருளின் அளவு, பார்க்க (அ) வேலை செய்ய பொருள் தூரம் போன்றவைகளை ஆராய்ந்து எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் விதமாக கண் கண்ணாடியை பரிந்துரை செய்வது மிக நன்று.

கிட்டப் பார்வை, தூரப்பார்வை ஒருதள அச்சுப் பார்வை, வெள்ளெழுத்து என எவ்விதமான பார்வை கோளாறு உடையவர்களாக இருப்பினும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் முறையாக கண் மருத்துவர்கள் (அ) விழி ஒளி பரிசோதகர்களிடம் கண் பார்வை பரிசோதனை செய்து அவர்கள் பரிந்துரைக்கும் கண் கண்ணாடி அல்லது வழி ஒட்டுவில்லை (அ) பார்வைத் திறன் மேம்படையசிகிச்சை செய்து துல்லியமான பார்வையை பெறவும்.

V.முகுந்தன்,
விழிஒளி பரிசோதகர்
Call: +919381051009

கண் பாதுகாப்புக்கு என்ன சாப்பிடலாம்?என்ன சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது?கேரட், கீரைகள், பப்பாளி, விட்டமின் ஏ என்ற இந்த ப...
26/04/2021

கண் பாதுகாப்புக்கு என்ன சாப்பிடலாம்?

என்ன சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது?

கேரட், கீரைகள், பப்பாளி, விட்டமின் ஏ என்ற இந்த பதில் அனைவருக்கும் தெரிந்ததுதான். பொதுவாக நாம் எதை சாப்பிட்டாலும், நமது உடல் உட்கிரகித்து, உள் உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை கொடுத்துவிடும். ஆனால், சில நுண்ணூட்டச் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் சில செயல்பாடுகளில் குறை ஏற்படுகிறது. அதன்படி கண்களில் ஏற்படும் சில நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகளை பற்றியும் அவை எந்த உணவுகளில் கிடைக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம்.

கண் புரைக்கு பல காரணங்கள் என பார்த்தோம். அதில் ஒரு காரணம் ஆன்டாக்ஸிடன்ட் மற்றும் சில சில நுண்ணூட்டச் சத்துக் குறைபாடும் ஆகும். கண் பார்வை இழப்புக்கு காரணமான ' மேகுலர் டிஜெனரேஷன் ' பிரச்னைக்கும் இதுவே காரணம் . இவைகளுக்கு ' ஒமேகா ' எனப்படும் ' பேட்டி ஆசிட் ' தேவை . இது மீன் எண்ணெயில் (சாலமன் மீன் வகை) உள்ளது. சைவம்தான் வேண்டும் என்போர் பிளாக்ஸ் ஸீட் ' எனப்படும் ஆளிவிதை ஆயிலை பயன்படுத்தலாம். இவை தவிர லியூட்டின், ஸெக்ஸான்தின், விட்டமின் ஏ, பி , சி , இ இவைகளும் தேவை. இது போலவே கண்களின் பார்வையை மெல்லச் சாகடிக்கும் கண் அழுத்த நோயினை தடுக்கும் ஆற்றல் விட்டமின் சிக்கு உண்டு. இன்று கணினி மற்றும் கைப்பேசி அதிகம் பயன்படுத்துவதால் பலருக்கு ஏற்படும் உலர்கண் பிரச்னைக்கு ஒமேகா 3 ' அவசியம் தேவை.

பொதுவான ஊட்டச் சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் என்ன? அவை எதில் உள்ளது? அவற்றை சப்ளிமென்ட் அல்லது மாத்திரை வடிவத்தில் சாப்பிடலாமா என பல கேள்விகள் எழலாம். என் பதில் என்னவென்றால் கண்கள் மட்டுமல்ல ... உடல் உறுப்புகள் அனைத்திற்கும் இயற்கையாக அந்தந்த நிலப்பரப்பில் விளையும் பலவண்ணக் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் மற்றும் இதனுடன் சில கொட்டைப் பருப்புகள் என உட்கொண்டாலே போதும். ஆனால், நடைமுறையில் கார்போஹைட்ரேட் நிறைந்த சாதம், சப்பாத்தி போன்றவைகளை மட்டும் தேவையைவிட அதிகம் சாப்பிடுகின்றனர். மக்களின் வாழ்க்கை முறை உணவுப் பழக்கம் மிகவும் மாறிவிட்டது. பீட்சா, பர்கர், பப்ஸ், பரோட்டா, நூடுல்ஸ் பாஸ்தா என கலோரி மிகுந்த நார்ச்சத்தே இல்லாத உணவை உட்கொள்கின்றனர். மேலும் , மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் குளிர்பானங்கள், துரித உணவுகள் அதுவும் இரவு 11, 12 மணிக்கு உட்கொள்கின்றனர் . இந்த உணவு முறைகள் நிச்சயமாக நுண்ணூட்டச் சத்துக்கு வாய்ப்பே தருவதில்லை. விலை மலிவாக கிடைக்கும் கொய்யா, பப்பாளி, நெல்லிக்கனி, முருங்கை கறிவேப்பிலை இவைகளை எல்லாம் இளைய தலைமுறை கண்டு கொள்வதே இல்லை. எனவே உணவுமுறையிலும், வாழ்வியல் முறையிலும் புரட்சியும், விழிப்புணர்வும் வந்தால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும்.

பழக்கங்களை மாற்றுவது கடினம். இதற்கு ஒரு பயிற்சி தேவை. அதற்கான வழிமுறைகளையும், உணவு முறைகளையும் குறைந்தபட்சம் 21 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டும். 48 நாட்கள் கடைப்பிடித்தால் அது புதுப்பழக்கமாக உருவாகி விடும். மருத்துவர் உட்பட யாரும் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிவிட முடியாது . அதை உங்களால் தான் மாற்ற முடியும். நீங்கள் மாறிய பிறகு உங்கள் குடும்பத்தினர் மாற்றும் சூழ்நிலையை உருவாக்குங்கள். அதாவது சத்து மிகுந்த, ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகளை சுவைபட செய்து அதை அலங்கரித்து பரிமாறுங்கள். அதை சாப்பிடும் ஈர்ப்பு மற்றவர்களுக்கும் ஏற்படும்.

தொடர்புக்கு: +919381051009
Anumuk Optovision

Anumuk Optovision
26/04/2021

Anumuk Optovision

Anumuk Optovision
24/04/2021

Anumuk Optovision

கண் கண்ணாடி மிக அவசியமா?உணவுக் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து மிக்க உணவு, உடற்பயிற்சிகள் கண் பயிற்சிகள் கண்களுக்கு மிக மிக இன்...
23/04/2021

கண் கண்ணாடி மிக அவசியமா?

உணவுக் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து மிக்க உணவு, உடற்பயிற்சிகள் கண் பயிற்சிகள் கண்களுக்கு மிக மிக இன்றியமையாததாகும். ஆனால், அதே நேரத்தில் இவைகள் பார்வைத் திறனை மேம்படுத்தினாலும், பார்வைக் குறைபாடுகளை சரிசெய்யும் என நினைத்து கண்ணாடி அணிவதை தவிர்ப்பது தவறாகும் என்பது என் தனிப்பட்ட கருத்தாகும்.


கண் கண்ணாடியை தவிர்ப்பது எதனால்?

தனக்கு பார்வைத் திறன் குறைவு என்பது மற்றவர்களுக்கு தெரிந்துவிடும், கண்ணாடி அணிவதால் வயதான தோற்றம் ஏற்படும், கண்ணாடி அணிவதால் முகத்தில் தழும்புகள் ஏற்படும்.... என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், இவையாவும் அவரவர்களின் மனநிலையை பொருத்ததாகும். ஒரு சிலர், கண்ணாடி போட்டால் பழக்கமாகி விடும், கண்ணாடியின் திறன் , பருமன் ஏறிக்கொண்டே வரும் , கண்ணாடி இல்லாத தருணங்களில் சிரமப்பட வேண்டி வரும் என நினைக்கலாம். மேலும் சிலர், கண்ணாடி தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளலாம். இது ஒரு சில காரணங்களுக்கு சரியானதுதான், மறதியாய் வைத்து விட்டேன், கண்ணாடி வாங்க பணம் இல்லை கண் பரிசோதணை செய்ய நேரம் இல்லை என்று பல காரணங்கள் சொல்லலாம். இந்த சாக்குப் போக்குகள் எதுவும் நல்லதல்ல.


கண் கண்ணாடியை தவிர்ப்பதனால் பல்வேறு நிரந்தர பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். உதாரணமாக, கிட்டப்பார்வை குறைபாடு , தூரப்பார்வை குறைபாடு , ஒருதள அச்சுப்பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு பார்வைத் திறன் குறைவு காரணமாக அவர்களின் சில மேற்படிப்புகளுக்கும் . சில வேலைவாய்ப்புகளுக்கும் தகுதித் தன்மையை இழக்க நேரிடலாம் . அவர்கள் பார்வைத்திறன் குறைவு காரணமாக கண்ணாடி அணியாமல் கூர்ந்து பார்ப்பதன் மூலம் தலைவலி , கண் வலி , மயக்கம் , கண் சோர்வு, தூக்கம் போன்ற உடல் உபாதைகளை சந்திக்க நேரிடலாம் கண்ணாடியை அலட்சியம் செய்வதால் அவர்களின் வேலை நேரம் அதிகரிக்கலாம். வேலையின் படைப்புத்திறன் குறைவு மற்றும் படைப்பின் தரக்குறைவு, அதனால் ஏற்படும் நேர விரயம், பண விரயம், தர நிராகரிப்பு போன்றவை நேரிடலாம்.

மேலும் கண் கண்ணாடியை தவிர்ப்பதனால், அலட்சியமாய் போடாமல் விடுவதனால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன், அறிவை மேம்படுத்தும் திறன் குறையலாம். பிறகு படிக்கலாம் ; பிறகு செய்யலாம் என மெத்தனப் போக்கு உருவாகலாம். வெள்ளெழுத்து குறைபாடு உள்ளவர்கள், மற்றவர்கள் செய்தித் தாளை படிக்கும்போது, இவர்கள் தலைப்புகளை மட்டும் படிப்பவர்களாக இருப்பார்கள். எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள் தனக்கு வயதாகி விட்டது. முன்பு போல் என்னால் படைப்பின் திறனையோ அல்லது வேகத்தையோ கொடுக்க முடியவில்லை என்று தனக்குத்தானே ஒரு வளையத்தை போட்டுக் கொள்ளும் தன்மை கூட பார்வை திறன் குறைபாட்டுக்கு கண்ணாடியை தவிர்க்கும் நிலையில் ஏற்படலாம் என்றால் அது மிகையாகாது.

கண் கண்ணாடியை தவிர்ப்பதனால் சிலருக்கு மாறுகண் ஏற்பட வாய்ப்புள்ளது இதனால் அவர்களுக்கு இரு கண் பார்வை மூலம் கிடைக்கும் பொருளின் பரிமாணம், பருமன், அளவு, தூரம் போன்றவற்றை மிகத் துல்லியமாக கணிப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் வாகன விபத்து ஏற்படலாம். பந்து விளையாட்டுகளில் பரிசை இழக்கலாம்.

கண் கண்ணாடியை தவிர்ப்பதனால் சிலருக்கு ஒவ்வொரு கண்ணின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள ஏற்றுக் கொள்ள சிலநேரம் மூளையின் பார்வை அறிவு மறுக்கிறது. அதன் பார்வையை மறைக்கிறது. வலது மற்றும் இடது கண்களில் ஒரு பார்வைத் திறன் மற்றொரு பார்வைத் திறனில் இருந்து மிக வேறுபாடு இருந்தால் இரண்டு கண்களும் ஒத்து வேலை செய்வதில் ஏற்படும் சிரமம் கண்ணிருந்தும் கண் பார்வையை செயலற்றதாக்கும் தன்மையைத் தரும்.

கண் கண்ணாடி அணிவதோ அல்லது விழிஒட்டுவில்லை அணிவதோ இயற்கைக்கு மாறானது என்ற எண்ணம் , செயல்பாடு தவறானது . கண் , கண்ணின் அமைவிடம் , கண்ணின் அமைப்பு இவைகளே கண் பார்வைக் குறைபாடுகள் பலவற்றிற்கு காரணிகள் . மேலும் கருப்பு வெள்ளை திரைப்படக் காலத்திலேயே பயன்பாட்டில் முழு சதவீதமாய் இருந்த கண் கண்ணாடிகளின் மூலப்பொருளும் , மண்ணில் இருக்கும் மூலப்பொருளும் ஒன்றே . இதனால் மருத்துவர்களும் , மாற்றுமுறை மருத்துவர்களும் , இயற்கை ஆர்வலர்களும் , கண் பார்வை கோளாறுக்கு கண் கண்ணாடியை பரிந்துரை செய்யலாம் .

தகவல் தொடர்புக்கு 93810 51009

கண்கள் பாதுகாப்புகுழந்தை முதல் முதியவர் வரைமூளையின் சாளரம் கண்கள் ஐம்புலன் அறிவில் முதன்மையானது . கற்பனை அறிவிற்கு காட்ச...
19/04/2021

கண்கள் பாதுகாப்பு
குழந்தை முதல் முதியவர் வரை

மூளையின் சாளரம் கண்கள் ஐம்புலன் அறிவில் முதன்மையானது . கற்பனை அறிவிற்கு காட்சி புலனறிவிற்கும் உகந்த வலது மூளையின் வசந்தம்.

கண்கள் கண்களின் அமைப்பு :

செயல்பாடுகள் நோய் தன்மைகள் ; குறைபாடுகள் ; தீர்வுகள் ; குணப்படுத்தும் முறைகள் ; உணவு முறைகள், பாதுகாக்கும் முறைகள் என பலவற்றை கடந்த இதழ்களில் கண்டோம் . விடுபட்ட சில முக்கிய விவரங்களை கண்களின் கதம்பமாய்காண்போம் ...
அழகியலும் கண்களும் :
கண்கள் பேச வேண்டும் மன எண்ணங்களை வெளிப்படுத்தும் உடல் அசைவு மொழிகளில் இன்றியமையாதது கண்கள். கோபம், வருத்தம், பயம், கவலை, ஆனந்தம், கருணை என பல்வகை உணர்ச்சிகளை வெளிக்காட்டும் வாசல் நமது கண்கள். அழகுக்கலை நிலையத்தில் கண்கள் மிக முக்கியமான நிலையில் உள்ளது கண்களை சுற்றி கருவளையம், சற்று வீக்கமான நிலை இவைகளுக்கு முக்கிய காரணம் உணவில் உப்பு அதிகம் சேர்ப்பது, கவலை, தூக்கமின்மை, ஒவ்வாமை, மூக்கு அழற்சி என பல காரணங்கள் உண்டு. அவற்றை கருத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டும். பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம், போதுமான தூக்கம் மிகவும் நல்லது. அழகு கூட்ட உதவும் விழி ஓட்டு வில்லைகளும் பயன்படுத்தலாம்.

விளையாட்டுத்துறையும் கண்களும் :

விளையாட்டுத் துறையில் பார்வையின் பங்கு என்ன? பார்வைத்திறன், வண்ணம் பிரித்துணரும் திறன், பார்வைக்களம் திறன், எவ்வளவு தூரத்தில் ஒரு பொருள் உள்ளது அதன் உயரம், பருமன் அளவு எல்லாவற்றையும் கணக்கிடும் திறன் படைத்த கண்களை முறையாக பரிசோதித்து தகுதி சான்று பெற வேண்டும். மேலும் பல்வேறு விளையாட்டு துறைகளுக்கான சிறப்பு கண் பயிற்சிகளை செய்து தகுதி திறனை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறை விளையாட்டுக்களுக்கானசிறப்பு கண் கண்ணாடிகள் மற்றும் பாதுகாப்பு கண் கண்ணாடிகள் என தேவையை அறிந்து ஆலோசனைப் பெற்று அணிதல் வேண்டும், மேலும் ஒருசில விளையாட்டுகளுக்கு கண்ணாடிகள் நழுவி தொந்தரவு செய்யாவண்ணம் ரப்பரினால் ஆன பட்டை அணிய வேண்டும்.
கண்களும், பாதுகாப்பும்
தொழிலகம், உற்பத்தி சேவை சார்ந்த பல தொழிலகங்களில் பணிபுரிவோர், இல்லத்தரசிகள், பள்ளி மாணவ, மாணவியர் என அனைத்து தரப்பினரும் கண்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் பயிற்சி பெற வேண்டும். உலோகத் தூள், கண்ணாடித் தூள், மரத்தூள், மண் துகள் தூசிகள் என கண்களில் விழ வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பு கண்ணாடி அணிய வேண்டும். அதையும் மீறி கண்களில் பட்டுவிட்டால் கண்களை கசக்காது அருகில் உள்ள கண் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். இவ்வகைப்பட்ட தொழில்சார் தொழிலாளர்கள் பார்வையை பாசோதித்து தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகளை தகுந்த திறன் பொருந்திய வில்லைகனை பொருத்தி பயனுற வேண்டும் . கதிர் வீச்சு அபாயம் உள்ள தொழில்களில் உள்ளோரும் இதனை பின்பற்ற வேண்டும்,
பார்வையும் பயிற்சிகளும்

பல்வேறு பயிற்சிகள் பார்வைத் திறனை மேம்படுத்தவும், பாதுகாப்பு வழங்கவும் தரப்படுகிறது. சிறு வயதில் ஏற்படும் கண் சோம்பல் குறைபாடு, மாறுகண் குறைபாடு, குவியத்திறன் குறைபாடு, மேலும் பல குறைபாடுகளுக்கும், பார்வைத்திறன் உயர்த்தும் பயிற்சிகள் உள்ளன. அவற்றை போதுமான நேரத்தில் கண் மருத்துவர் மற்றும் விழி ஒளி பரிசோதகரிடம் சென்று ஆலோசனை பெற்று ஒளி படைத்த கண்களை பெற்று சிறப்பான பார்வையை பெறவும், தகுதிச் சான்று பெறவும் விளையாட்டு, விஞ்ஞானம் என அனைத்து துறையிலும் சாதிக்கவும் இன்றே பயிற்சியில் ஈடுபட பரிந்துரை செய்கிறேன்.
குழந்தைகளும் கண்களும் :

பிறந்த குழந்தை முதல் 12 வயதுள்ள குழந்தைகள் வரை கண்களை முறையே பரிசோதித்து கொள்ளுதல் அவசியம். பார்வைத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கண்ணாடி மட்டுமின்றி அவர்களுடைய கண்களையும், கண்காணிக்க வேண்டும். முறையான பயிற்சிகள் அவர்களுடைய பல்வேறு கண் பிரச்னை, குறைபாடுகளுக்கு தீர்வாய் அமையலாம். அதேபோன்று குழந்தை பருவத்திலேயே உணவும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வும் அதன் பழக்கவழக்கங்களையும் கற்றுத் தர வேண்டும். தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்பவர்கள், தனிக்குடித்தனம் இருப்பவர்கள் முன்பே தயாரித்து பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை தாமும் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்திவிட்டு பிறகு இது குறை .. அது குறை என கவலைப்படுவதில் பயனில்லை.
பதின்ம பருவமும் கண்களும் :
பதிமூன்று முதல் 20 வயது வரை உள்ள இளம்பருவத்தில் கண்களின் முக்கியத்துவம் உணர்ந்து கண் பரிசோதனை, கண்களுக்கு நலம் பயக்கும் ஊட்டச் சத்து உண்ணுதல், சிலவகை பயிற்சிகளை மேற்கொண்டு கண்களின் பார்வைத் தகுதி திறனை அதிகப்படுத்துதல் அவசியம். மிக மிக அவசியமான ஒன்று என்னவென்றால், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் நோக்கம் வாழ்வில் பிடித்த துறை, சாதிக்க வேண்டிய இலக்கு இவைகளில் கண்களின் பங்கையும்தகுதி சான்றும் உணர்ந்து ஆரம்ப நிலையிலேயே துறை தேர்ந்தெடுத்தலில் கவனம் செலுத்த வேண்டும் . இல்லையெனில் காலம் கடந்த பின்புதான் இத்தொழிலுக்கு, வேலைக்கு தகுதியில்லை என நிராகரிக்கப்படும் நிலை வரலாம்.
20வயது முதல் 40 வயது வரை :
இவ்வயதிற்கு உட்பட்டவர்களில் கண்ணாடி அணிவோர் வருடம் ஒருமுறையும், எவ்விதமான பிரச்னையும் இல்லாதவர்கள் மூன்று வருடத்திற்கு ஒருமுறையும் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டும். கணினி, கைபேசிகளை அளவுடன் பயன்படுத்த வேண்டும். மேலும் தவிர்க்க முடியாதவர்கள் அதற்காக பரிந்துரைக்கப்படும் கதிர் தடுப்பு பிரதிபலிக்கும் வில்லைகளை அணியலாம். மேலும் பரிந்துரைக்கும் பயிற்சிகளையும் உணவுகளையும் பின்பற்றலாம்.

40 வயது முதல் 60 வயது வரை :

இவ்வயதுக்கு உட்பட்டவர்கள் கண் பார்வை பரிசோதனை, கண் அழுத்த பரிசோதனை, வெள்ளெழுத்து திறன் பரிசோதனை, நீரிழிவு , ரத்த அழுத்தம் சார்ந்த விழித்திரை பரிசோதனை இவைகளை வருடம் ஒருமுறையேனும் பரிசோதித்து பரிந்துரைக்கும் கண்ணாடிகள் மற்றும் அவரவர் தொழிலுக்கு ஏற்ற வகையில் வகைப்படுத்தப்பட்ட கண்ணாடிகளை அணிந்து பயன் பெறவும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இவர்கள் மேலும் கவனமாக வருடம் ஒருமுறையேனும் பரிசோதித்து வயது சார்ந்த கண்புரை, பார்வைக்குவிய மைய பரிசோதனை வயது சார்ந்த நரம்புசார் பிரச்னைகள், ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் ஏற்படும் விழித்திரை பார்வைத் திறன் குறைபாடு இவைகளை முறையே பரிசோதித்து தகுந்த ஆலோசனை மற்றும் கண் கண்ணாடிகள் , அறுவை சிகிச்சை பெற கண் மருத்துவர்கள் மற்றும் விழி ஒளி பரிசோதகர்களை அணுகவும்.

மிகு குறை பார்வையும் தீர்வும் :

உலக பொது சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் அளவுப்படிபார்வை திறன் இருக்க வேண்டும் திறன் குறைபாடு உள்ளோர் திறன் நிறை வில்லை கொண்டு பார்வைத் திறனை மேம்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். கண் கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சை, மருத்துவம் என பல முயன்றும் பார்வைத் திறன் சரிவர இல்லாதோர் மிகு குறை பார்வையும் தீர்வும் பெற தகுந்த உதவி உப கண்ணாடிகளையும் பயிற்சிகளையும் சரிவர பயன்படுத்தி மற்றவர்கள் உதவியின்றி வாழ வழிவகை செய்து கொள்ளும் அளவிற்காவது முயற்சிக்க வேண்டும் மேலும் சிலருக்கு மன அளவிற்கு ஆலோசனையும், அவர்கள் எதிர்கால தேவைகளையும், வாழ்வியல் பொருளாதார தேவைகளையும் சுயமாக பெற்றிடும் அளவிற்காவது அவர்களை தயார்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் அவரவர்களின் சுய உணவு, சுய கடமைகள் நிறைவேற்றும் அளவிற்காவது தயார்படுத்த வேண்டும் . தேசிய பார்வை குறை தடுப்பு இயக்ககம் இதற்கான ஆலோசனைகளையும் தீர்வுகளையும் இலவசமாக வழங்குகிறது .
கண்களும் காப்பீடும்
இன்று காப்பீடு திட்டத்தின் கீழ் உடல் உறுப்புகள் அனைத்தும் காப்பீடு செய்யப்படுகிறது பல சிறப்பு காப்பீடுகளும் உள்ளன. மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கண்புரை அறுவை சிகிச்சை, கண் அழுத்த அறுவை சிகிச்சை என பல்வேறு கண் சிகிச்சைகளுக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவம் செய்யப்படுகிறது. அரசு மருத்துவ காப்பீடும் தன் பங்கிற்கு உதவிகளை செய்கிறது. சில அழகியல் கண் அறுவைக்கும் கண் கண்ணாடிகளுக்கும் சில காப்பீடு திட்டங்களே உலகில் உள்ளன. அவரவர் வசதிக்கும், தேவைக்கும் ஏற்ப காப்பீடு செய்தும் கண்களை காப்பீர்.

தொழிலகம், உற்பத்தி சேவை சார்ந்த பல தொழிலகங்களில் பணிபுரிவோர், இல்லத்தரசிகள், மாணவ, மாணவியர் என அனைத்து தரப்பினரும் கண்களை பாதுகாக்கவும் பராமரிக்கவும் பயிற்சி பெற வேண்டும். உலோகத் தூள் கண்ணாடித் தூள், மரத்தூள், மண் துகள், தூசிகள் என கண்களில் விழ வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பு கண்ணாடி அணிய வேண்டும். அதையும் மீறி கண்களில் பட்டுவிட்டால் கண்களை கசக்காது கண் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்

தொடர்புக்கு: +919381051009
Anumuk Optovision

Address

#1/1, Krishnapillai Garden 1st Street, (East Jones Road 1st Left) Saidapet
Chennai
600015

Opening Hours

Monday 9:30am - 9pm
Tuesday 9:30am - 9pm
Wednesday 9:30am - 9pm
Thursday 9:30am - 9pm
Friday 9:30am - 9pm
Saturday 9:30am - 9pm

Telephone

+914449521009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anumuk Optovision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram