07/08/2025
வர்மம் தலைகாக்கும்.,.....
உச்சி வர்ம ரகசியம்..,..
தலையின் மேற்பரப்பில் உள்ள மிக முக்கியமான வர்மபுள்ளி vital point உச்சி வர்மம் ஆகும். இதனை கொண்டைக் கொல்லி வர்மம் crown killer என்றும் வர்ம மருத்துவத்தில் கூறுவார்கள்.
அதே நேரத்தில் யோகா விஞ்ஞானத்தில் இந்த பகுதியை ஒரு முக்கிய சக்கரமாக வைத்துள்ளனர் இதனை சகஸ்ரநாமம் என்று கூறுவார்கள் ஆக இது ஏழாவது சக்கரமாகும்
வர்ம புள்ளியான உச்சி வர்மத்தின் ரகசியங்களும் யோகாவில் கூறப்படும் சகஸ்ரநாமம் குறித்தும் பல்வேறு உடல்நல விஞ்ஞான siddhar ragasiyam உள்ளன அதைப் பற்றி விவரிப்பது என்றால் பல பக்கங்கள் தேவைப்படும்.
இங்கு நமது உடல் நலத்திற்கு தேவையான உச்சி வர்மம் தொடர்பான மருத்துவ செய்திகளை எளிமையான முறையில் அனைவருக்கும் பயன்படும் விதத்தில் சுருக்கமாக அனைவரும் கடைபிடிக்க விதத்தில் தெளிவுபடுத்துகிறோம்.
அகத்தியர் வர்ம சூத்திரம் என்ற சுவடி நூலில்... பாரப்பா உச்சி நடு மையத் தன்னில் பகர வே.... என்ற பாடல் மூலம் விரிவாக விளக்கியுள்ளார் . அதில் உச்சி வர்ம புள்ளியில் காயம் ஏற்பட்டால் அல்லது அடிபட்டாலோ அதற்கான தீர்வும் முறைகளையும் அதற்கான மருத்துவ முறைகளையும் அந்த பாடலில் கூறப்பட்டுள்ளது.
இங்கு நாம் சித்தர்களின் நல்லாசியுடன் அந்த உச்சி வர்ம புள்ளியை ஒரு எளிய ஆராய்ச்சியின் மூலமாக வேறுவிதமாக இங்கு விளக்க முற்படுகிறோம்.
மனிதர்களுக்கு அடிக்கடி சளி பிடிப்பது ஏன் ?
இதுதொடர்பாக அனைவருக்கும் பயன்படும் விதத்தில் ஒரு மருந்தில்லா மருத்துவ முறையையும் வருமுன் காக்கும் முறையையும் இங்கே பார்க்கலாம்.,,
ஒவ்வொரு மனிதனுக்கும் உச்சி வர்ம புள்ளி அவரவர் கைகளில் உள்ள எட்டு விரல்களைத் தனது நெற்றியில் வைக்கும் போது சிரசின் நடுப்பகுதி வந்துவிடும் அந்த பகுதியே உச்சி வர்மம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த வர்மப்புள்ளி குழந்தைகள் பிறக்கும்போது அதன் தலை பகுதியில் சற்று பள்ளமாக கணப்படும்.
அத்துடன் அந்த பகுதியில்
சிறுதுவரமும் காணப்படும்.
இதனையே உச்சி வர்மம் என்றும் சகஸ்ர சக்கரம் என்றும் கூறுகின்றனர்
இந்த வர்ம புள்ளியில் குளிக்கும்போதோ அல்லது மழையில் நனையும் போது அல்லது வியர்வையின் காரணமாக தலையில் ஏற்படுகின்ற நீர் இந்த வர்ம புள்ளிகள் துவரம் வழியாக தலையின் உள் பகுதிக்கு சென்று விடுகிறது.
இதன் காரணமாக பெரும்பான்மையான மக்களுக்கு சளி தொல்லை சைனஸ் பிரச்சனை., மூக்கில் நீர் வடிதல் ..கண் சிவத்தல் பார்வை குறைபாடு., காது இரைச்சல் நுரையீரல் பிரச்சனை ...கழுத்தில் உள்ள தைராய்டு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறுவிதமான உடல்நல இடர்பாடுகள் ஏற்படுகிறது.
மேற்படி ஏற்படுகின்ற பிரச்சினை அல்லது வியாதிகள் மருத்துவர்களால் கூட கண்டறிய முடியாது. ஏன் சளி ஏற்பட்டது எதனால்இவர்களுக்கு மூக்கில் நீர் வடிகிறது. ஏன் காது இரைச்சல் ஏற்படுகிறது அது ஏன் மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்படுகிறது ஏன் தொண்டை கரகரப்பாக உள்ளது அல்லது தொண்டை வலி ஏற்படுகிறது எதனால் கண் சிவக்கிறது என்ற பிரச்சனைகளை முறையாக கண்டறிய முடியாமல் பொதுவான சிகிச்சை வழங்கி விடுவார்கள்.
நம்மவர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று கொண்டே இருப்பார்கள் இவர்களுக்கு ஒரு நாளும் சளித்தொல்லையிலிருந்து சைனஸ் பிரச்சினையில் இருந்து மூக்கில் நீர் வடிதல் இருந்து
கண்சிவப்ப திலிருந்து மூச்சு விடுவதில் சிரமத்திலிருந்து... விடுதலை கிடைக்காமல் வாழ்நாள் நோயாளிகளாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்..?
இதற்கான தீர்வுதான் என்ன..,?
இதற்கான தீர்வுதான் சித்தர்கள் கூறியுள்ள பரமரகசியம் அல்லது வர்ம ரகசியம்.
அந்த ரகசியம் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது... இது எமது ஆய்வின் விஞ்ஞான வெளிப்பாடு....
இது அனைவருக்கும் பயன்படவேண்டும்..,
இது ஒரு சின்ன ரகசியம் தான்...
குளிக்கும்போது வாயை மூடி குளித்தால் தலையிலுள்ள உச்சி வர்மம் மூடிவிடும். அப்போது நாம் குளிக்கும்போது தலையில் விடுகின்ற தண்ணீர் தலையின் உள் பகுதிக்கு செல்லாது.... நமக்கு சளியும் பிடிக்காது .இது ஒரு சின்ன ரகசியம் தான்...... நீங்களே கேட்பீர்கள் இவ்வளவு தானா என்று.....
தினந்தோறும் குளிக்கும்போது வாய்மூடி குளியுங்கள்......
வெளியில் ஆட்களிடம் பேசும்போது வாய் திறந்து பேசுங்கள்.....
உங்கள் தலையில் ஏற்படுகின்ற ENT பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு காணலாம்
#வர்மம்