Adhishivaa Yoga Cure and Mind Care

Adhishivaa Yoga Cure and Mind Care We offer Yoga training/ Therapy for individual , group classes, Therapy sessions,Stress Management ec

06/04/2025
26/02/2025

"மஹா சிவராத்திரி"

இந்து மக்களின் பிரதான ஒரு பண்டிகையான மஹா சிவராத்திரி.

99.99% . மக்கள் மஹா சிவராத்திரியை கொண்டாடுகிறார்கள்.

ஆனால்.
மஹா சிவராத்திரி. என்பது ஒரு SCIENCE. ஆன்மீகம் கிடையாது

99.99%. மக்கள் ஏற்றுக்கொள்ளாத காரணங்களால் ஆன்மீகத்தில் சேர்த்து விட்டார்கள் நமது முன்னோர்களான. சித்தர்கள்.

மஹா சிவராத்திரி என்பது ஒரு SCIENCE.

உதாரணமாக....
ஒரு MOBILE PHONE தொடர்ந்து வேலை செய்வதற்கு கட்டாயமாக BATTERY . CHARGE செய்துகொண்டே இருக்க வேண்டும்.

அதே FORMULA தான் நமது உடம்பு உள்ளே BATTERY கள் இருக்கிறது நமது உயிர் , உடம்பு இயங்குவதற்கு ஒரு சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தி தான் பிரபஞ்ச சக்தி. COSMIC ENERGY.

நமது உடம்பிற்கு தேவையான சக்தி.

01. FOOD - 10%.
02. BREATHING - 20%
03. COSMIC ENERGY - 70%

நாம் எவ்வளவு உணவுகள் சாப்பிட்டாலும் பெற்றுக் கொள்ளப்படும் சக்தி. 10% மட்டுமே.

COSMIC ENERGY.
எப்படி உருவாகிறது.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில். 3.20.AM to 3.40.AM and 4.27.AM to 5.27.AM
மாலையில். 6.59.PM. to 7.27.PM கிடைக்கிறது.

வருடத்தில் ஒரு தடவை மட்டுமே COSMIC ENERGY அதிகமாகவும் ஒளி வேகத்தில் பிரபஞ்ச சுழல்களில் இருந்து கிடைக்கின்ற. நாள் தான் . மஹா சிவராத்திரி அன்று. 6.57.PM to .2.35.AM வரை. அதிகமாக கிடைக்கும் COSMIC ENERGY.

அதனால் தான். மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் உறக்கம். உறங்க வேண்டாம் என்று சொல்லப்படுகிறது.

அப்படியே உறக்கம் உறங்கினாலும் உங்களது உடம்பிற்கு COSMIC ENERGY பெற்றுக்கொள்ளாது.

அதே FORMULA தான் அதிகாலையில் எழுந்திருப்பதும்.

காலையில். 6.00.AM பிறகு எழுந்திருப்பவர்கள் கட்டாயமாக கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

கோவில் என்பது ஒரு ENERGY CENTRE.

அடுத்த பதிவில் பார்ப்போம்.

கடவுளை அடைய ஒரு SCIENCE இருக்கிறது. அதை கற்றுக்கொண்டால் மட்டுமே கடவுளை அடைய முடியும்.

48.நாட்கள் விரதங்கள் , தினந்தோறும் கோவில்களுக்கு செல்வது , பூசைகள் மற்றும் யாகங்கள் பல சம்பிரிதாயங்கள் செய்தாலும் கடவுளை அடைய முடியாது.

இது இந்து மதம் மட்டும் அல்ல உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும் சாரும்.

16/02/2025

🍑🍈🍎🍉🍐🍒🍊🍓🥭
*எண்ணங்களும் பொருட்களே*

ஒரு பரிசோதனையில்.. தண்ணீரில் 1 PH அளவு மாறும்படியாக மின்னணு சாதனத்தில் எண்ணங்கள் பதிவேற்றப்பட்டது. இரசாயன கலப்பில்லாமல் PH அளவு மாறுபடாது என்பது நீச்சல் குளம் வைத்திருப்பவர்களுக்குத் தெரியும். 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்திற்கு இந்த பதிவேற்றப்ப்பட்ட மின்னணு சாதனம் மற்றும் பதிவேற்றப்படாத மின்னணு சாதகங்களும் அனுப்பப்பட்டன. சாதனங்களைப் பெற்று ஆராய்ச்சி செய்பவர் ஒருதலைப் பட்சமான முடிவுகூட சோதனையின் போக்கை மாற்றி விடக்கூடும் என்பதற்காக ஆராய்ச்சியாளருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை. ஆராய்ச்சியின் முடிவு தெளிவாக இருந்தது. மின்னணு சாதனத்தின் அருகில் பாத்திரத்தில் PH அளவு எதிர்பார்க்கப்பட்ட அளவு மாறி இருந்தது. 150 அடி தொலைவில் உள்ள பாத்திரங்களில், மாறுதல் எதிர்பார்க்கப்படாவிட்டாலும் ஏற்பட்டது.

சில நேரங்களில் எண்ணங்களை உணர முடியும். உதாரணமாக யாரோ நம்மை பின்புறத்தில் இருந்து பார்க்கும் போது உணர முடியும். நம் அன்புக்குரியவர்கள் உடல்நிலை சரியில்லாதபோது நாம் அவர் உடனடியாக குணமடைய பிரார்த்திக்கும்போது உணர முடியும். அல்லது அன்புக்குரியவர் உடல்நிலை சரியில்லாத போது பிரார்த்தனை செய்து அவருக்கு எண்ணங்களை அனுப்பி அவர் குணமடைய தொடங்கும்போதும் உணரலாம்.

🙏

16/02/2025

யோகி பரமஹம்ச யோகானந்தா தன் உடலை விட்டு நீங்கும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர்.

அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார்.

தான் உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர்.

வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, தன் உடலை நீத்தார்.

மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது.

ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொறுத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது.

இதயமோ, நுரையீரலோ, வேறு எதோ ஒன்று கெட்டுப்போனால் உயிர் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை.

அதுமட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, "'33 நாட்களுக்கு பிறகுதான் இவ்வுடலை அடக்கம் செய்ய வேண்டும், அழிந்து போகாத இவ்வுடலை அப்படியே வைத்துக் கொள்ளலாம்’" என்று சொல்லிவிட்டு உடலை நீத்தார்.

உடலில் தேவையான அளவிற்கு வியானப் பிராணா வை அவர் தக்கவைத்துச் சென்றதால், இத்தனை நாட்களுக்கு பிறகும் உடல் நன்றாக இருக்கும்.

இதைச் செய்வதற்கு அவருக்கு எவ்வித அவசியமும் இல்லை.

ஆனால், அவர் உயிரோடு இருக்கும்போது, காரண அறிவை மட்டுமே பயன்படுத்தும் விஞ்ஞானிகள்/மனிதர்கள் பலர், அவருக்கு அதிகளவில் தொல்லைகள் தந்தனர்.

அதனால் போகும்போது, அவர்களுக்கு கொஞ்சம் விளையாட்டுக் காட்டிவிட்டுச் செல்லலாம் என்று அவர் முடிவு செய்தார்.

காரண அறிவை மட்டுமே பயன்படுத்தி அவரைப் பற்றி இல்லாததை எல்லாம் பேசிய விஞ்ஞானிகளுக்கு, புரியவைத்துப் போகலாம் என்றெண்ணி, 30 நாட்கள் உடல் அப்படியே இருக்கும், அனைத்து சோதனைகளையும் நன்றாக செய்து கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் என்று சொல்லி, உடலை விட்டுப் போனார் அவர்.

அவர் உடல் (U.S.A) லாஸ் ஏஞ்சல்ஸில்

இன்றும் அழிவில்லாமல் அப்படியே இருக்கிறது.

இவரது குரு யுக்தேஸ்வரகிரியும் இவரை போலவே தன் உடலை துறக்க போவதை முன்கூட்டியே அறிவித்தார். மேலும் அவர் உடலை துறந்த மறுநாளே பரமஹம்ஸ யோகானந்தருக்கு தன் உடலோடு காட்சி கொடுத்தார்.

ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை விடும் நிலை தனித்துவமானது. *மகா சமாதி* என்றழைக்கப்படும்.

தன் உடலை ஒரு சட்டையை கழற்றுவது போல நீக்கிவிட்டு சென்றுவிடுவர். அது மரணமல்ல-சாகாநிலை-மரணமில்லா பெருவாழ்வு*. அவர்கள் காரியப்படுவதற்கு இந்த உடல் தேவையில்லை.

அவ்வளவுதான்.

கபீர் தாசர் மறைந்த இடத்தில வெறும் ரோஜா பூக்களே இருந்தன.

ரமணர் மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி திருவண்ணாமலையில் மறைந்தது.

பட்டினத்தார் பிரம்பு கூடைக்குள் புகுந்து திருவொற்றியூர் கடற்கரையோர சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டி அந்த கூடைக்குள்ளிருந்தே மறைந்து போனார்.

தன் அடையாளம் அழித்து பூரணமான அவரின் அடையாளமாக, அவர் மறைந்த இடத்தில ஒரு சிவலிங்கம் இருந்தது.

மாணிக்கவாசகர் சிதம்பரம் நடராஜர் சன்னதி கருவறையில் வெட்டவெளியில் ( வான் பொருள்-ஆகாயம் ) பலர் முன்னிலையில் கலந்து விட்டார்.

150 ஆண்டுகளுக்கு முன்பு இராமலிங்கசுவாமிகள் வடலூரில் ஒருதனி அறையில் ஒளிஉடலோடு மறைந்து விட்டார்.

பரமஹம்ஸயோகனந்தரின் யோகா உடல் 33 நாட்கள் பொதுமக்கள்பார்வைக்கு வைக்கப்பட்டது.

ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிர். அதை ஒவ்வொருவரும் சுய அனுபவ வாயிலாகதான் உணர முடியும்.

Address

Chennai
600053

Opening Hours

Monday 6am - 7:30am
Tuesday 6am - 7:15am
Wednesday 6am - 7am
Thursday 6:30am - 7:30am
Friday 6am - 6:30am
Saturday 6am - 6:15pm
Sunday 6am - 3:30am

Alerts

Be the first to know and let us send you an email when Adhishivaa Yoga Cure and Mind Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Adhishivaa Yoga Cure and Mind Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram