Hari Krishna Ayurveda & Siddha Country Drugs

Hari Krishna Ayurveda & Siddha Country Drugs all siddha ayurvedha organic product's available

Jai Sri Ram
22/01/2024

Jai Sri Ram

21/06/2021

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..

*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி*
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கரா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி*
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி*
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரும்புச் சத்து உண்டு.

*வேப்பிலை பொடி*
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி*
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி*
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி*
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி*
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியா நங்கை பொடி*
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,*
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி*
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி*
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் இரண்டு மண்டலம் சாப்பிடவும்.

available
Hari krishna country drugs
Railway station road Pallavaram
Mobile no 9080203556
நன்றி...!

கரோனா வைரஸ் தொற்று தற்போது 2-ம் அலையாக உருவெடுத்து, உலகெங்கும் வீரியமாகவும், வேகமாகவும் பரவி வருகிறது. கரோனாவின் முதல் அ...
27/04/2021

கரோனா வைரஸ் தொற்று தற்போது 2-ம் அலையாக உருவெடுத்து, உலகெங்கும் வீரியமாகவும், வேகமாகவும் பரவி வருகிறது. கரோனாவின் முதல் அலையில், இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் பாதிப்பு குறைவு. இதற்கு சித்த மருந்தான'கபசுரக் குடிநீர்' பங்கு என்ன என்பதை உலகுக்கு தெரியப்படுத்தியதுடன், கபசுரக் குடிநீரை தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்தனர் சித்த மருத்துவர்கள்.

தமிழகத்தில் கபசுர குடிநீரால் மட்டுமே கரோனா கட்டுக்குள் வந்தது என அநேக ஆட்சியர்கள் சான்றளித்தனர். ஆனால் காலப்போக்கில் அலட்சியமும், அரசின் வழிகாட்டுதல்களைக் கடைபிடிப்பதில் காட்டிய கவனக்குறைவுமே தற்போது கரோனா தொற்று அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
இந்நிலையில், கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க மிகவும் பயன்படும் கடுக்காய் ஊறல் நீர், சீந்தில் பால், ஆயுஷ் குடிநீர், நெல்
லிக்காய் தேனூறல், இஞ்சி கற்பம்,துளசி நீர் ஆகிய 6 சித்த மருந்துகள் பற்றியும் அதன் செய்முறைகள் குறித்தும் விளக்குகிறார் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த நிறுவனத்தின் (மருத்துவமனை) குணபாடம் துறை இணை பேராசிரியர் மருத்துவர் ச.சிவகுமார்.

கடுக்காய் ஊறல் நீர்

கடுக்காயின் கொட்டையை நீக்கிவிட்டு ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டும். 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் கடுக்காய் தூளைச் சேர்த்து 24 மணி நேரம் ஊறிய பிறகு அதைப் பயன்படுத்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் நோய் தற்காப்புக்கு உதவும். மேலும் கடுக்காயானது நுண்ணுயிர் நோய் கிருமிகளுக்கு எதிராக நன்கு செயல்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

சீந்தில் பால்

சித்த மருத்துவத்தில் சீந்தில் மூலிகையானது அநேக நோய் எதிர்ப்பு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. 50 கிராம் சீந்தில் தண்டை ஒன்றிரண்டாக சிதைத்து 500 மி.லி பாலில்கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம். இவ்வாறு தினமும் பருகுவதன் மூலம் நமது நோய் எதிர்ப்புதிறனை அதிகப்படுத்திக் கொள்வதுடன் கரோனாவிலிருந்தும் தற்காத்துக் கொள்ள முடியும்.

ஆயுஷ் குடிநீர்

கரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கவும் அவர்களின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கவும் ஆயுஷ் அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துதான் இந்த ஆயுஷ் குடிநீர். இது தமிழர்கள் காலம்காலமாக பயன்படுத்தி வரும் சுக்குமல்லி காப்பியின் மாற்று வடிவமே. சுக்கு 100 கிராம், மிளகு 50 கிராம், லவங்கப்பட்டை 100 கிராம், துளசி இலை 200 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொள்ளவும். இதில் 50 கிராம் எடுத்து அதனுடன்200 மி.லி நீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். 4-ல் 1 பங்காக வற்றியதும் வடிகட்டிக் குடிக்கவும். தேவையெனில் சுவைக்காக சிறிதளவு பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்க்கலாம். இதை காலை - மாலை பருகலாம்.

இதில் உள்ள மருந்துச் சரக்குகள் அனைத்து வகையான நோய்க் கிருமிகளுக்கும் எதிராக நன்கு செயல்படுகின்றன. குறிப்பாக, நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் கிருமிகளை கொல்லக் கூடியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நெல்லிக்காய் தேனூறல்

சித்த மருத்துவத்தில் நெல்லிக்காயை தேனூறலாக செய்து சாப்பிட்டால் நோயின்றி இளமையாக நீண்ட நாட்கள் வாழ முடியுமென்று கூறப்பட்டுள்ளது. 500 கிராம் நெல்லிக்காயை கொட்டையை நீக்கிவிட்டு கீற்று கீற்றாக நறுக்கி 500 கிராம் சுத்தமான தேனிலிட்டு வெள்ளைத்துணியால் வேடுகட்டி தினமும் வெயிலில் ஊறவைத்து எடுக்க வேண்டும். நன்றாக ஊறியவுடன், அதனுடன் புதிதாக தேன் சேர்த்து சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தவும். இதில் 1 - 2 கீற்றை தேனுடன் சேர்த்து காலை - மாலை சாப்பிட்டு வந்தால் நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் - சி மற்றும் தேனிலுள்ள துத்தநாகச் சத்து கரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

இஞ்சி கற்பம்

'காலையிஞ்சி கடும்பகல் சுக்கு' என்பது சித்த மருத்துவத்தில் இஞ்சியைக் காலையில் கற்பமாக உண்ண வேண்டும் என்பதாகும். இஞ்சியை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது நெய் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அதை நன்றாக அரைத்து அதனுடன் வெல்லம் அல்லது பனைவெல்லம் சேர்த்துதினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா
வதுடன் நோயிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் முடியும். பலவகையான வைரஸ் நோய் கிருமிகளுக்கு எதிராக இஞ்சி செயல்படுகிறது.

துளசி நீர்

100 கிராம் துளசி இலை எடுத்து அதை 2 லிட்டர் தண்ணீரில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்தத் தண்ணீரை துளசி இலையு
டன் சேர்த்து பருகி வருவதன் மூலம்கரோனா தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

இதுபோன்ற சித்தவைத்திய மருந்துகளுடன், அரசின் வழிகாட்டுதலான முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைக் கடை
பிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல், மூச்சுப் பயிற்சி செய்தல், ஆவி- வேது பிடித்தல், மஞ்சள் - உப்பு கலந்த நீரில் கொப்பளித்து வாய், தொண்டையை சுத்தம் செய்தல், சத்தான உணவுகளை உண்ணுதல், கபசுரக் குடிநீர் பருகுதல் போன்ற வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் கரோனாவில் இருந்துகாப்பாற்ற முடியும். இவ்வாறு மருத்துவர் சிவகுமார் தெரிவித்தார்

15/04/2021

உடலில் உள்ள பல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக அமையும் நாயுருவியின் அற்புத மருத்துவ பயன்கள்.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி செந்நாயுருவி அதிக மருத்துவ பயன்கள் கொண்டது. இதில் பெண் தன்மை மற்றும் தெய்வத்தன்மை இரண்டும் உண்டு. இது தெய்வீக ஆற்றல் கொண்டது. இதன் விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமன்றி சிறுநீர் பெருக்குதல், நோய் நீக்கி உடல் தேற்றுதல், சதை நரம்பு ஆகியவை சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ குணங்களாக உள்ளது.
கதிர் விடாத இதன் இலைகளை இடித்து சாறு பிழிந்து அதில் நீர் கலந்து காட்சி தினமும் மூன்று வேளை 3 மில்லி அளவு ஐந்து முதல் ஆறு நாட்கள் சாப்பிட்டு பால் அருந்த வேண்டும். அவ்வாறு செய்தால் தடைபட்ட சிறுநீர் கழியும். சிறுநீரகம் நன்றாக செயல்படும்.

சிறுநீர்த் தாரை எரிச்சல் இருக்காது. மாதவிலக்கு தடைபடுவது நீங்கும். பித்தம், உடலில் நீர் கோர்த்தல், ஊது காமாலை மற்றும் குருதி மூலம் ஆகியன மிக விரைவில் குணமாகும். இதன் இலைகளை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் விரைவில் குணமாகும். மேகநோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு மற்றும் பேதி குணமாகும். இதன் இலைகளைப் பருப்புடன் சேர்த்து சமைத்து வாரத்தில் 2 முறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் சளி மற்றும் இருமல் குணமாகும்.

14/11/2020
அல்சர் குணமாக இயற்கை வீட்டு வைத்திய மருத்துவ குறிப்புகள்:◆மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்று...
05/11/2020

அல்சர் குணமாக இயற்கை வீட்டு வைத்திய மருத்துவ குறிப்புகள்:

◆மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில் சரியாகும்.

◆மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல்சருக்கு மிகவும் நல்லது.
எனவே அந்த கீரையை சூப்செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை உட்கொண்டு வர விரைவில் அல்சர் சரியாகும்.

◆அல்சர் இருப்பவர்கள், தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர, விரைவில் வயிற்றில்உள்ள புண் குணமாகும். மேலும் கொப்பரை தேங்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அல்சர் காணாமல் போகும்.

◆பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத்தோல்களை விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றும்.

◆தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் அல்சரால் ஏற்படும் கடுமையான வலியைக் சரியாகும்.

◆பாகற்காயை விட பாகற்பழம் மிகவும் சிறந்தது. இதனை சமைத்து உண்ண வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் குடல் பலம் பெறுகிறது.

◆மலத்தை இளக்கி வெளிப்படுத்துவதுடன் பித்தத்தை தணிக்கிறது.

◆வேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வர, அல்சர் மட்டுமின்றி, வயிற்று பிரச்சனைகளும் நீங்கிவிடும்.

◆தண்டுக் கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளதால் உடல் குளிர்ச்சியடைந்து மூலநோய் மற்றும் குடல்புண் ஆற்றி விடும்.

◆அல்சர் உள்ளவர்கள், தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால், விரைவில் அல்சரை குணமாக்கிவிடும்.

◆புழுங்கள் அரிசி சோற்றின் வடிகஞ்சியை வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் பெறலாம்.

◆அல்சருக்கு அகத்திக்கீரை நல்லது. தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டு வர அல்சர்சீக்கிரம் நீங்கிவிடும்.

◆அகத்திக்கீரை சூப் செய்தும் குடிக்கலாம்.
துளசி இலை சாற்றில் மாசிக்காயை, வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் பெறலாம்.

◆வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய். அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்துகலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

◆அத்தி மரப்பட்டை சாற்றுடன் சம அளவு பசும்பால் சேர்த்து சிறிதளவு கற்கண்டும் கூட்டி 100மிலி அளவுகுடித்துவர வயிற்றுப் புண் மற்றும் வாய் புண் குணமாகும்.

◆அத்தி இலையுடன் சம அளவு வேப்பிலை சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வரலாம்.

◆சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சைஅளவு எடுத்துப் பாலில் கலந்து பருகி வரலாம்.

07/03/2020

பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

15/07/2019

நண்பர்களுக்கு ஒரு டிப்ஸ்

என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சுமார் 6 வருடங்களாக சக்கரை நோய்யினாள் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்த மருந்து எடுத்தும் 250 கிழ் வந்தது இல்லை.அவர் நண்பர் ஒருவர் அறிவுறத்தளின் படி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பண்ணிர் பூ .விலையும் மிகமிக குறைவு.இரவில் பத்து பூ ஒரு கப் தண்ணிரில் ஊர வைத்து காலையில் வெரும் வயிற்றில் வடி கட்டி பருக வேன்டும்.அவர் அப்படியே 20நாட்கள் செய்ததின் விளைவாக அவருக்கு 150கீழ் குறைந்து விட்டது. .மற்றவர் பயன் பெற தகவல் பறிமாறவும்.
🌷 அகத்தியர் 🌷

09/05/2019

All country durgs 10% discount sale in summer sales

Address

Chennai
600043

Telephone

+919080203556

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hari Krishna Ayurveda & Siddha Country Drugs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hari Krishna Ayurveda & Siddha Country Drugs:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram