
24/05/2025
துவித நாகபந்தம்
================
பாம்பன் சுவாமிகளின் ஜென்ம நட்சத்திரம் பூராடம் ஆகும். பூராட நட்சத்திரத்தின் மித்ர தாரைகள் கேட்டை ஆயில்யம் மற்றும் ரேவதி ஆகும். ஆயில்யம் என்பதன் வடிவம் நாகம் ஆகும்.
பாம்பன் சுவாமிகள் ராகு கேதுவின் பிடியில் இருந்து மனிதர்களை பாதுகாக்க ஒரு மந்திரத்தை உபதேசித்தார். அந்த மந்திரத்தின் பெயர் துவித நாகபந்தம் என்பதாகும்.
தனது மித்ர தாரை வடிவமான நாகத்தின் உட்பொருள் கொண்டு இயற்றிய இம்மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
இம்மந்திரத்தை மூலம் மகம் மற்றும் அஸ்வினி ஆகிய நட்சத்திர காரர்களும், ஆயில்யம் கேட்டை மற்றும் ரேவதி நட்சத்திர காரர்களும் தினமும் சொல்லி வழிபட்டு வர ராகு மற்றும் கேதுவினால் ஏற்படும் தீமைகள் குறையும்.
திருவோணம் ரோகிணி மற்றும் அஸ்தம் நட்சத்திர நண்பர்கள் இந்த மந்திரத்தை சொல்லி வர மகப்பேறு பிரச்சினைகள் தீர்ந்து நன்மை நடக்கும்.
மேலும் ராகுவின் தோஷம் பெற்ற சதயம் பூசம் மற்றும் விசாக நட்சத்திரக்காரர்கள் இம்மந்திரத்தை சொல்லி வருவது உடல் உபாதைகள் மற்றும் கடன் தொல்லைகள் அமானுஷ்ய சக்திகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.