01/02/2025                                                                            
                                    
                                                                            
                                            அன்பு உள்ளங்களுக்கு !
                  உலக மக்கள் எத்தனையோ விதங்களில் எத்தனையோ தெய்வங்களை வணங்கி வழிபட்டு வருகிறோம். ஆனால் கிரகங்கள் சரியில்லாதபோதும், தெய்வ வழிபாடுகள் பலனளிக்காதபோதும் அவரவர்களின் கன்னி தெய்வங்களை வணங்கி வழிபடுவார்களானால் உண்மையிலேயே அவர்களின் துன்பங்கள் நீங்கி நிம்மதி அடைவார்கள் . 
  அதாவது,  ஒரு மனிதன் உதவிடுவோர் யாருமில்லாது நிற்கதியாக நிற்கும் ஆபத்துக் காலங்களில் அவர்களுடைய கன்னி தெய்வங்கள் வந்து பேசும் என்பதை மனதார புரிந்து கொள்ளுங்கள்.
     இதில் ஒரு விசயம் என்னவென்றால்., எந்த ஒரு வீட்டில் அபார்ஷன் நடந்திருந்தாலும் சரி.  குழந்தைகள் பிறந்து இறந்திருந்தாலும் சரி. அம்மை போட்டு இறந்திருந்தாலும் சரி. சர்ப்பம் தீண்டி இறந்திருந்தாலும் சரி. அகோர மரணமடைந்திருந்தாலும் சரி அல்லது சீலைக்காரி அம்மன், அக்னியில் மாண்ட பெண்களை வைத்து கன்னிதெய்வமாக வழிபாடு செய்தாலும் சரி, வீட்டில் தலைச்சன் பிள்ளை பிறந்து இறந்துவிட்டால் வீட்டிற்குள்ளேயே நடுவாசலில் புதைப்பது அல்லது வீட்டிற்குள் அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்ற பகுதிகளில் புதைத்து வைத்து வழிபடுவது, வீட்டிற்குள் அந்தக் குழந்தையே தெய்வமாக இருப்பது,  இப்படி பல விசயங்கள் இதில் எடுத்துக் கொள்ளலாம்.
        இதற்குள்ளே உள்ள விசயம் என்னவென்றால், இதுபோன்ற குழந்தைகள் கன்னி தெய்வ வழிபாடுகளை செய்வதை நிறுத்திவிடுவோமானால் கண்டிப்பாக அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு மனநிலை பாதிப்பு, குழந்தை பிறப்பு இல்லாது போவது, திருமண பாக்கியம் கிடைக்காமல் போவது, திருமணமுறிவு, கடன்சுமை அதிகமாகிப்போவது, காரணமே இல்லாமல் திடீர் உடல்நலக்குறைவுகளினால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பது என்று பல கஷ்டங்களுக்கு ஆளாகி நிலைகுலைந்து வாழவேண்டியிருக்கும்.
     ஜோதிடர்களைக் கேட்டால், ஜாதகத்தில் எந்தக்குறையும் இல்லை என்றே சொல்வார்கள்.  ஆனால் இதிலொரு விசயத்தை கண்டிப்பாக உணர வேண்டும்.
     விசாகம் நட்சத்திரத்தின் 4 பாதங்கள், புனர்பூசத்தின் 4 பாதங்கள், ஆயில்யம், சுவாதி, மூலம் நட்சத்திரங்களின் 4 பாதங்கள், ஹஸ்தம், ரோகிணியில் 4 பாதங்களில் மாந்தி அடைபட்டிருந்தால் கண்டிப்பாக உங்கள் வீட்டில் ஒரு கன்னி தெய்வ வழிபாடு காத்திருக்கிறது . அதை நீங்கள் சரியாகச் செய்வதில்லை என்று அரிதியிட்டுச் சொல்லலாம்.  
    இப்படியான சம்பங்கள் நடந்து அதற்கு ஒன்றுமே செய்யாமல் விட்டுவிடுவதால் அந்தக் குடும்பம் எவ்வளவு  பெரிய நல்லதாக இருந்தாலும் பெருத்த அவமானங்களையும், நஷ்டங்களையும், தீராத வியாதிகளையும் சந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை அறிவுப் பூர்வமாக உணர்ந்து கொள்ளுங்கள். 
     இதற்கு என்னதான் பரிகாரம் என்று கேட்டால், ஒரு புதிய சமையல் பாத்திரம் வாங்கி அதில் உணவு சமைத்து அந்த சாப்பாட்டை அப்படியே எடுத்துச் சென்று உங்கள் பூஜையறையில் வைத்து சாப்பாடு பாத்திரத்தைத் திறக்க வேண்டும். அப்படித்திறக்கின்றபோது அந்த சாப்பாடு பாத்திரத்திலிருந்து வெளிப்படும் ஆவியை உங்கள் வீட்டில் உள்ள கன்னி தெய்வங்கள் வாங்கி சாப்பிடும். அதற்கு சிறிது நீர் விட்டு ஊதுபத்தி, கற்பூர ஹாரத்தி காண்பித்து வணங்கிவிட்டு அதன்பிறகு அந்த சாப்பாட்டை குடும்பத்திலுள்ள அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும்.  இப்படிச் செய்து கொண்டு வருவதால் கடன், நோய், பகை, பாதிப்புகள் விலகி சுபிட்சம் ஏற்படும்.  
    இப்படிச் செய்துவரும் சமயத்தில் ஏகாதசி திதியை மிகவும் கவனத்தில் வைத்து ஆயில்யம், சுவாதி, மூலம் நட்சத்திர தினங்களையும் மனதில் கொண்டு காக்கைக்கு சிறிதளவு சாப்பாடு எடுத்து வைக்க வேண்டும்.  மற்ற நாட்களில் கண்டிப்பாக காக்கைக்கு சாதம் வைக்கக்கூடாது. இப்படியாக காகத்திற்கு வைத்த சாதத்தை இரண்டு காகங்கள் வந்து சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால், உங்கள் தாய், தகப்பன், முன்னோர்களின் ஆசீர்வாதத்தோடு அந்த கன்னி தெய்வத்தின் உதவியும் கிடைப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  மாறாக ஒற்றைக்காகம் வந்து சாப்பிட்டால் உங்கள் பிதுர் கோபித்திருப்பதாக அறிந்து அதற்குரிய முறையில் சாந்தப்படுத்தி, மேற்படியான பரிகாரத்தை தொடர்ச்சியாக கடைபித்து வரவேண்டும்.
  இப்படியான வழிபாடு செய்யும் குடும்பம் கண்டிப்பாக ஆயில்யம், சுவாதி, மூலம், ஏகாதசி முதலான திதிகளில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளக்கூடாது.
    அதேபோல் அசைவ உணவும் உண்ணக்கூடாது.  இந்த நான்கு நாட்கள் மட்டும் கட்டுப்பாடு செய்துவிட்டீர்களானால் மீதி நாட்களில் அசைவ, சைவ எந்த உணவு உண்டாலும் இறைவனுக்கு வெறும் சாதத்தை மட்டும் நைவேத்தியம் செய்தால் அதை அந்தக் கன்னி தெய்வம் ஏற்றுக்கொள்ளும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
      இதில் இன்னொரு விசயம் என்னவென்றால், நைவேத்தியமாக செய்யும் அந்த சாப்பாடு பாத்திரத்தை முழுமையாகத் திறந்து வைக்கும்போது அந்த கன்னி தெய்வமே உங்களுடன் பேசுவதையும், குலதெய்வத்தை அறியாதவர்களுக்கு குலதேவதையைக் காட்டிக் கொடுக்கும் என்பதையும் கண்டிப்பாக உணர்ந்து கொள்ளலாம்! Kaalagnanam Ravishashthry  // 8124524165 //