
05/05/2025
தான்சானியாவின் கிளிமாஞ்சாரோவில் இருந்து அப்போல்லோ ப்ரோட்டான் செண்டருக்கு கேன்சர் டிரீட்மெண்ட்டிற்கு வந்தவர்களுக்கு, அரசு நிதி அனுப்புவதில் எதோ குழப்பம், திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு தாயை அழைத்து வந்த ஒமாலின் கண்ணீர் இன்னமும் நினைவிருக்கிறது.
அவரது தாயார் உடல்நலம் தேறி சூழல்கள் சரியாகும் வரை பார்த்து பார்த்து கவனித்துக்கொண்டார் நமது மருத்துவர் . என் கைகளை பிடித்துக்கொண்டு ஓமல் சொன்னார்,”you’ve a great wife. Me and my generation is so greatful you family”. என்னை நேரில் யாரும் இப்படி நெகிழச்செய்ததில்லை.
நமது கிளினிக் வரும் Medical repகளிடம், Sample
மருந்துகளை உரிமையுடன் கேட்டு வாங்குவார் அப்ரின். அந்த மருந்துகள் எப்போதும் மருந்து வாங்க வசதியில்லாதவர்களையே சென்றடையும் அப்படி இப்போது அந்த மருந்துகள் தான்சானியா பறக்கிறது.
நாடு திரும்புவற்கு முன் நமது ஹெல்த்கேருக்கு வந்த ஓமல் இங்கு பணியாற்றும் செவிலியர்களுடன் படம் எடுத்துக்கொண்டு இந்தியர்களின் உதவும் குணத்தை தான்சியாவில் சென்று சொல்வோம், என சொன்ன போது நெகிழ்ச்சியாக இருந்தது.
என் தேசத்தை பெருமைக்கொள்ள செய்ய உணர்வு செம்மையா இருக்கு…