25/04/2023
அம்மா! நீ எப்போது நினைத்தாலும், அது பகலாக இருக்கட்டும், இரவாக இருக்கட்டும், இரண்டுக்கும் நடுவில் எப்போதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நீ பிரக்ஞையுடன் இருந்தாலும், பிரக்ஞை இழந்த நிலையில் இருப்பினும், அல்லது துயருற்ற நிலையில் இருப்பினும், என்னை நீ நினைத்த மாத்திரத்தில் மற்ற எல்லா பணிகளையும் விட்டுவிட்டு உன்னிடம் வருவேன். நீ உயிர்நீத்தால் உன் இறுதிக் கடன்களை நானே செய்வேன். நீ என்னை நம்பலாம்.” எனக் கூறிய ஸ்ரீசங்கரர் தன் தாயார் மறைந்த பொழுது தன் மஹிமையால் தேவலோக விமானத்தில், வேத வாக்யங்கள் ஒலிக்க, தன் தாயைப் புண்ய லோகத்திற்கு, மோக்ஷபதத்திற்கு அனுப்பிய பிறகு ஸ்ரீசங்கரர் தன் தாயின் பூத உடலுக்கு, உறவினரின் எதிர்ப்புக் கிடையே, தனது வீட்டுப் பின்புறம் வாழை மட்டைகளை அடுக்கித் தன் யோகத் தீயினால் ஸம்ஸ்காரம் செய்தார். பிறகு தன் தாய் தனக்குச் செய்தவற்றையெல்லாம் நினைத்து அடங்காத் துயருற்றவராக பின்வரும் ஐந்து ஸ்லோகங்களான ‘மாத்ரு பஞ்சக’த்தினைப் பாடுகிரார்