02/11/2023
#முகப்புத்தகத்தில்இருந்து ...
சிறுவயதில் பிரமிப்பை ஏற்படுத்தியதெல்லாம்
இப்போது போரடிக்கிறது..
திருவிழாக்கள்,
புதுத்துணிகள்,
பண்டிகைகள்,
சில நேரங்களில் சினிமா கூட..
ஏன் இந்த மாற்றம் ??
கடந்து வந்த கடினமான தருணங்களா,
நிராசையாகிப் போன பேராசைகளா,
நிறைவேறாமல் போன சிறு சிறு கனவுகளா,
வேலை இல்லாமல் பசியுடன் சுற்றித் திரிந்த நாட்களா,
அவமானங்களின் போது அழுகையை அடக்கியதன் விளைவுகளா,
செக்கு மாட்டைப் போல ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் வாழ்வா?!
Maturity aa,
எதுவென சரியாய் சொல்லி விட முடியவில்லை..
மாறாக,
தனிமை கொஞ்சம் ஆறுதல் தருகிறது..
தலைகோதி தேற்றுகிறது,
இசை கொஞ்சம் இளைப்பாறுதல் தருகிறது..
பயணங்கள் உயிரோடிருப்பதை அவ்வப்போது நினைவூட்டுகிறது..
சினிமா எப்போதும் கட்டி அணைத்துக் கொள்கிறது..
ஆனால்,
ஏன்??இந்த இனம் புரியாத வெறுமை
நடுக்கடலில் தனித்து விடப் பட்டதை போன்ற தனிமை??
காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை..
ஆனால்,இப்போதெல்லாம் ஏதும் பிரமிப்பை ஏற்படுத்துவதில்லை..
எதன் மீதும் தீராத காதல் தோன்றுவதில்லை..