20/10/2025
நவராத்திரி முடிந்து, மகிஷாசுரனை வதம் செய்த பிறகு, அம்பிகை அதாவது பார்வதி தேவி ஈசனின் உடலில் சரிபாதியை பெறுவதற்காக, சிவபெருமானுக்காக 21 நாட்கள் விரதம் இருந்த நாட்கள் தான் கேதார கௌரி நோன்பாகும்.
நவராத்திரியின் பத்தாவது நாள் தசமி என்று துவங்கிய இந்த நோன்பு தீபாவளி அன்று நிறைவடையும். தீபாவளிக்கு அடுத்த நாள், பார்வதி தேவி தனது விரதத்தை நிறைவேற்றி ஈசனிடம் இடப்பாகம் பெற்ற நாள். பேச்சு வழக்கில் இந்த விரதம் கெளரி நோம்பு என்று சொல்லப்படும்.
இந்த வருடம் தீபாவளி நோன்பு எடுக்க சரியான நேரம்:
அமாவாசை திதி அக்டோபர் 20 ஆம் தேதி பிற்பகல் 4.15மணிக்குத் தொடங்கி, அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 5:48 மணிக்கு முடிவடைகிறது.
நோன்பு எடுக்கும் பெண்கள், அக்டோபர் 20 ஆம் தேதி மாலை அல்லது அக்டோபர் 21 ஆம் தேதி அதிகாலையில் இருந்து விரதத்தைத் தொடங்கலாம் என்று நாம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம். அதன்படி இன்று நிறைய குடும்பத்தில் உள்ள பெண்கள் நோன்பு எடுத்து விட்டார்கள்.
நாளை மாலை வரை அமாவாசை திதி இருப்பதால் நாளைக்கு எந்த நேரத்தில் நோன்பு எடுக்க வேண்டும் என்கின்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 20ஆம் தேதி அமாவாசை திதி பிற்பகல் 4.15 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 5.48 மணிக்கு முடிகிறது. எனவே தீபாவளி நோன்பு எடுப்பவர்கள் இந்த நேரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
21.10.2025 அன்று நோன்பு எடுக்க நினைப்பவர்கள் அக்டோபர் 21 ஆம் தேதி அதிகாலை எடுக்கலாம். அந்த சமயத்தில் எடுக்க முடியாதவர்கள் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் நோன்பு எடுக்கலாம். அந்த சமயத்திலும் எடுக்க முடியாதவர்கள் அமாவாசை திதி முடிவதற்கு முன்பாக வரும் நல்ல நேரமான மாலை 4.45 - 5:45 மணிக்குள் எடுக்கலாம்.
.......
ஜோதிடப் பணியில்..
வேத ஜோதிடர் ஸ்ரவன் நங்கநல்லூர்&விருகம்பாக்கம்
சென்னை
8531903131
www.viyasarastrology.in
https://share.google/FRvGuvVFNw5zlhGJk
#கேதாரகௌரிவிரதம்
#நோம்பு
#தீபாவளிநோன்பு