Health for all

Health for all I wish to share the successful health secrets in this page, and I would like the people who have used our health supplements and got benefited.

23/02/2019

சிறுநீரகக் கற்களை கரைக்கும் வாழை நீர் வைத்தியம் பெரும்பாலான கிராமங்களில் இது தான் நீர் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்🐝

கிபி 1794..மூன்றாம் மைசூர் போர் திப்பு சுல்தானுக்கும், ப்ரிட்டிஷாருக்கும் இடையே நடைபெறுகிறது. அதில் ப்ரிட்டிஷ் ராணுவத்து...
23/02/2019

கிபி 1794..மூன்றாம் மைசூர் போர் திப்பு சுல்தானுக்கும், ப்ரிட்டிஷாருக்கும் இடையே நடைபெறுகிறது. அதில் ப்ரிட்டிஷ் ராணுவத்துக்கு உணவுப்பொருளை ஏற்றிசென்ற வண்டி ஒன்றை மறித்து பிடிக்கிறார்கள் மைசூர் படையினர்.
அதை ஓட்டி வந்தது கொசாஜி எனும் எளிய மராத்திய வண்டிக்காரர். சரி என அவரது மூக்கை அரிய உத்தரவிடுகிறார் திப்பு. மூக்கு அறுபட்ட கொசாஜி போர் முடிந்ததும் விடுதலை செய்யபடுகிறார்.
அவருக்கு சிகிச்சை அளிக்க ஒரு ப்ரிட்டிஷ் மருத்துவர் முன்வருகிறார். ஆனால் உங்கள் சிகிச்சை எல்லாம் வேண்டாம் என்னை குமார் வைத்தியரிடம் கூட்டி செல்லுங்கள் என்கிறார் கொசாஜி."
இது என்ன நவீன மருத்துவத்தை விட்டுவிட்டு நாட்டு வைத்தியம்" என திட்டுகிறார்கள் ப்ரிட்டிஷார்.
"குமார் வைத்தியர் என் அறுந்த மூக்கை மீண்டும் பொருத்துவார்" என்றதும் அவர்கள் மேலும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஆனால் சரி என கூட்டிபோகிறார்கள். அந்த குமார் வைத்தியர் செங்கல் சூளை வைத்து நடத்தி வருபவர். அந்த சூளைக்காரர் கோசாஜியின் நெற்றியில் இருந்து ஒரு பட்டை தோலை உரித்து எடுத்து மூக்கில் வைத்து புதியதாக மூக்கை வளரவைத்து விடுகிறார். நெற்றித்தோலும் வளர்ந்து விடுகிறது.
இதை அருகே இருந்து பார்த்த ப்ரிட்டிஷ் டாக்டருக்கு அதிசயம் தாங்காமல் நடந்த சம்பவத்தை ஓவியமாக தீட்டி ப்ரிட்டனுக்கு அனுப்புகிறார். அதை பார்த்த ஜோசப் காண்டான்டைன் கார்பே எனும் ஆங்கில மருத்துவர் லண்டனிலிருந்து கிளம்பி வந்து குமார் வைத்தியரை சந்தித்து பல ஆண்டுகள் தங்கி இருந்து இந்த சிகிச்சை முறையை கற்றுக்கொண்டு திரும்புகிறார்.
லண்டன் சென்று மேலை உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரியை 1816ம் ஆண்டு செய்கிறார். அது கார்பே ஆபரேஷன் என அப்போது அழைக்கப்படுகிறது.
குமார் வைத்தியருக்கு எப்படி பிளாச்டிக் சர்ஜரி தெரியும்?
சுஷ்ருதர் எனும் செங்கல் சூளை வைத்திருந்த எளியவர் ஒருவர் இதை 2500 ஆண்டுகளுக்கு முன்பே மிக தெளிவாக எப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது என எழுதி வைத்திருந்திருக்கிறார். சுஷ்ருத சம்ஹிதா எனும் இந்த நூல் இன்றும் அந்த விவரங்களை கொண்டுள்ளது (பிளாச்டிக் சர்ஜரி என அழைக்காப்பட்டாலும் பிலாஸ்டிக்கை ஒட்டி செய்யபடும் சர்ஜரி அல்ல இது ).
ஆனால் அதை பாரம்பரியமாக செய்துவந்தவர்கள் செங்கல் சூளை வைத்திருந்தவர்கள் எனத்தான் தெரிகிறது.
ப்ரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள கொசாஜி புகைப்படம்.

21/02/2019

சால்மன் மீனை விட 8 மடங்கு இந்த விதை ஒரு கிராம் உடலை சுத்தகரிக்க.
நமது உடலை (ரீவைடலிஸ்) சுத்தகரிக்க பயன்படுத்தப்படும் ஐந்து பொருட்களையும் அவற்றின் நன்மைகளை காண்போம்.
ஊட்டச்சத்துகள் மூலமாக உடலை புத்துணர்ச்சி அடைய விரும்பினால் நீங்கள் கண்டிப்பாக சியா விதைகளை எடுத்து கொள்ளலாம்.
1 கிராம் சியா விதைகளில், சால்மன் மீனை விட 8 மடங்கு அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உண்டு.
பாலை விட 6 மடங்கு அதிக கால்சியம் உண்டு .
கீரைகளை விட 3 மடங்கு இரும்பு சத்து உண்டு.
ப்ரோக்கோலியை விட 15 மடங்கு அதிகமான மெக்னீசியம் உண்டு.
புரத சத்தின் ஒரு மிக பெரிய ஆதாரம் இந்த சியா விதைகள் ஆகும்.
உடல், முடி, நகம், தசைகள், சிவப்பு அணுக்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இந்த புரத சத்து இன்றியமையாதது.
அமினோ அமிலங்கள்,
நார்ச்சத்து
போன்றவை சிறந்த இரத்த ஓட்டத்திற்கும் ஆரோக்கியமான இதயத்திற்கும்,
உடலை சம நிலையில் வைக்கவும் உதவுகின்றன.
இரத்த சர்க்கரை அளவை சியா விதைகள் கட்டுக்குள் வைக்கிறது.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல செய்தியாகும்.
சியா விதைகளில் உள்ள ஒமேகா – 3 கொழுப்பு ஆசிட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உங்கள் உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகப்படுத்தி
உங்கள் வயிற்றில் படிந்துள்ள அதிக கொழுப்பை எரித்து தொப்பையை குறைக்கிறது
†*÷*÷********
எலுமிச்சை:
மனித உடலுக்கு எலுமிச்சை பல விதமான நன்மைகளை செய்கிறது. குளிர்ந்த அல்லது சூடான நீரில் இந்த எலுமிச்சை சாறை கலந்து பருகும் போது நமது உடலில் உள்ள இரத்தம் புத்துணர்ச்சி அடைகிறது .
உடலும் சீராக இயங்குகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மற்றும் பயோபிளாவனாய்டுகள் ஆகியவை உள்ளன.
அவை நுண்ணுயிர் எதிர்ப்பிகள், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. கல்லீரலும் சிறுநீரையும் சுத்திகரிப்பதற்கு எலுமிச்சை சிறந்த தீர்வாகும். .

**************
தேங்காய் நீர்:
நீர்சத்துக்கு ஒரு மிக பெரிய ஆதாரம் தேங்காய் நீர் அல்லது இளநீர். இது பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் எலெக்ட்ரோலைட் ஆகியவற்றை கொண்டதாகும்.
பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் ஹைப்பர் டென்ஷன் குறைகிறது.
தசை வலிகளை குணமாக்குகிறது. பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றில் இருந்து நரம்பு மண்டலத்தை அமைதி படுத்துவது வைட்டமின் பியின் பணியாகும்.
தேங்காய் நீரில் இருக்கும் எலெக்ட்ரோலைட்கள் உடலின் ஆற்றலை மீட்டெடுக்க உதவுகிறது அதன்மூலம் மனமும் மூளையும் புத்துணர்ச்சி அடைகிறது.
***********
கொம்புச்சா :
கொம்புச்சா என்பது இயற்கை முறையில் புளிக்க வைத்த ஒரு தேநீர் வகையாகும். உடலை புத்துணர்ச்சி அடைய செய்யும் அற்புதமான செயல்பாடு இந்த பானத்திற்கு உண்டு. பல நூற்றாண்டுகளாக இதன் பயன்பாடு உலக அளவில் இருந்து வருகிறது.
கொம்புச்சா சிறிது புளிப்பு சிறிது கசப்பு கலந்த ஒரு பானமாகும் . இதில் அதிக அளவிலான ப்ரோ பையோட்டிக்குகள் உள்ளன. ஆகையால் செரிமானத்தை அதிகரிக்கிறது. இதன்மூலம் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.
பதற்றம் மற்றும் அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் பி சத்து இதில் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆற்றலை அதிகரிக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் இந்த தேநீரில் அதிகம் உள்ளது.
******
தர்பூசணி:
தர்பூசணி உடல் புத்துணர்ச்சிக்கு ஏற்ற உணவு பொருள். இது முழுவதும் தண்ணீரால் நிரப்பப்பட்டது மட்டுமல்ல,
பல்லூட்டச்சத்துகள் ,
வைட்டமின் ஏ ,
வைட்டமின் சி,
வைட்டமின் பியில் சில, ஆன்டிஆக்ஸிடன்ட், பீட்டா கரோடின் ,அமினோ அமிலங்கள் ஆகியவையும் தர்பூசணியில் அதிகம் உள்ளன.
தர்பூசணியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இயற்கையாகவே மன அழுத்தத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாட்டுக்கு பொட்டாசியம் துணை புரிகிறது. பதற்றத்தை குறைக்கிறது.
இளநீரை போல் தர்பூசணியும் நீர்சத்து நிறைந்த உணவு பொருள். இதனை உண்ணும் போது உடல் மற்றும் மனம் இரண்டுமே புத்துணர்ச்சி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இயற்கையான முறையில் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்போம்!

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்த்தும் அறிகுறிகள் இதுதான்!***ஒருவரது உட...
21/02/2019

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்த்தும் அறிகுறிகள் இதுதான்!
***
ஒருவரது உடல் நச்சுமிக்கதாக உள்ளது என்பதை எப்படி அறிவது எனத் தெரியுமா?
இக்கட்டுரையில் ஒருவரது உடலை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.***
குறைவான ஆற்றல்
ஒரு வேலையில் ஈடுபடும் போது, அந்த வேலையை முடிக்கும் வரையில் உடலில் ஆற்றல் இல்லாமல் போகிறதா? என்ன தான் காப்ஃபைன் நிறைந்த காபி அல்லது டீயைக் குடித்தாலும், சற்று நேரம் நன்கு சுறுசுறுப்பாக செயல்பட்ட பின்பு மீண்டும் உடல் சோர்வை உணர்கிறீர்களா?
அப்படியெனில் உங்கள் உடலை டாக்ஸின்கள் ஆக்கிரமித்து, உடலுறுப்புக்களின் செயல்பாட்டை மோசமாக்குகிறது என்று அர்த்தம்.******
தலைவலி
உடலில் டாக்ஸின்களின் சேர்க்கை அதிகம் இருந்தால், நீங்கள் எந்நேரமும் தலைவலியை சந்திப்பீர்கள். அதிலும் உங்களுக்கு தலைவலியானது நேரம் ஆக ஆக அதிகரித்துக் கொண்டே போனால்,
அது உங்கள் உடலை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதற்கு உடல் வெளிப்படுத்தும் அறிகுறியாகும்.
எனவே தலைவலி பிரச்சனைகளை அடிக்கடி சந்தித்தால், உடலை சுத்தம் செய்யும் டயட்டை மேற்கொள்ள முயலுங்கள்.***(*
கவனச்சிதறல்
உங்களால் எந்த ஒரு வேலையிலும் சரியாக கவனத்தை செலுத்த முடியவில்லையா?
மிகவும் சலிப்பாக இருக்கிறீர்களா அல்லது சற்று வேடிக்கையாக செய்ய நினைக்கிறீர்களா?
இருப்பினும், எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல் போகிறதா?
அப்படியெனில் உங்கள் உடலில் டாக்ஸின்கள் நிரம்பியுள்ளது மற்றும் இதனால் உங்கள் மூளையின் செயல்பாடு பெரிதும் பாதிக்கப்பட்டு, கவனம் செலுத்த முடியாத நிலையை உண்டாக்குகிறது.
********
மோசமான சருமம்
உங்கள் தோற்றம் பொலிவிழந்து, முகப்பருக்கள் நிறைந்து மோசமாக காணப்படுகிறதா?
அப்படியென்றால் இது உங்கள் உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
உடலிலேயே சருமம் தான் மிகப்பெரிய உறுப்பு.
அதேப் போல் முதலில் உடலைத் தாக்கும் பல்வேறு டாக்ஸின்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதும் இது தான்.
அதோடு உடலில் டாக்ஸின்களின் அளவு அதிகமானால் முதலில் பாதிக்கப்படுவதும் இதுவே.
********
புகை மற்றும் மது
பொதுவாக புகை மற்றும் மது உடல் ஆரோக்கியத்தை சீரழிக்கும் ஆரோக்கியமற்ற பழக்கங்களுள் ஒன்று.
எவர் ஒருவர் வழக்கத்திற்கு மாறாக அளவுக்கு அதிகமாக மது அருந்தினாலோ அல்லது புகைப் பிடித்தாலோ, உடனே உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.
இல்லாவிட்டால், அவற்றால் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை பாதிக்கப்பட்டு, நோய்களின் தாக்கம் அதிகரித்து, புற்றுநோய் வரும் அபாயத்தையும் அதிகரிக்கும்.
********
உடல் பருமன்
உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, உடல் எடை குறையாமல் அதிகரிக்கிறதா?
அப்படியனால் உங்கள் உடலில் டாக்ஸின்கள் அதிகம் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.
இந்நிலையில் என்ன தான் எடையைக் குறைக்க முயற்சித்தாலும் முடியாது.
எனவே எடையைக் குறைக்க முயற்சிக்கும் முன், டாக்ஸின்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
அதற்கு நச்சுக்களை வெளியேற்றும் பானங்களைப் பருகுவது மிகச்சிறந்த வழியாகும்.
**************
தூக்க பிரச்சனை
உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால், அது தூங்குவதில் இடையூறை உண்டாக்கும்.
அளவுக்கு அதிகமாக டாக்ஸின்கள் சேரும் போது, அது இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் செய்துவிடும்.
எப்படியெனில் டாக்ஸின்கள் அதிகம் இருக்கும் போது, மெலடோனின் என்னும் பொருளின் அளவு குறையும். ஆகவே கண்ட மருந்து மாத்திரைகளை எடுக்கும் முன், உடலை சுத்தம் செய்யும் டயட்டை மேற்கொள்ளுங்கள்.
***********
அடிக்கடி மலச்சிக்கல்
மலச்சிக்கல் பல பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் இது உடலில் உள்ள அதிகப்படியான டாக்ஸின் தேக்கத்தின் அறிகுறிகளுள் ஒன்றும் கூட. உடல் சுத்தமாக இல்லாமல் இருந்தால், குடலில் நச்சுக்களின் தேக்கம் அதிகரித்து, கழிவுகள் முறையாக நகர்ந்து செல்லாமல் இறுக ஆரம்பித்து, மலச்சிக்கலை உண்டாக்கும்.
எனவே இந்நிலையில் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள் அல்லது டயட்டில் சிறிது மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்.
*************
உடல் வலி
உங்கள் உடல் காரணமின்றி வலியுடனும், ஏதோ ஒன்று குத்துவது போன்றும் உணர்ந்தால்,
அதற்கு காரணம் அதிகமான டாக்ஸின்களின் தேக்கம் தான்.
மோசமான உணவுகள் மற்றும் பானங்களில் உள்ள டாக்ஸின்கள் உடலினுள்ளே காயங்களை ஏற்பட்டு, விவரிக்க முடியாத அளவில் காயங்களை உண்டாக்கி, உடல் வலியை சந்திக்கச் செய்யும்.

திப்பிலி அப்புடின்னா என்னான்னு தெரியுமா..? விஷேசம் என்னன்னா பொண்ணுங்களுக்கே பாதி பேருக்கு தெரியாது..! திரிகடுகம் : -சுக்...
21/02/2019

திப்பிலி அப்புடின்னா என்னான்னு தெரியுமா..? விஷேசம் என்னன்னா பொண்ணுங்களுக்கே பாதி பேருக்கு தெரியாது..!
திரிகடுகம் : -
சுக்கு, மிளகு, திப்பிலி.
🌱🌱சுக்கு 🌱🌱 :
உலர்ந்த இஞ்சியே “சுக்கு” (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை “சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்ற பழமொழியின் மூலம் அறியலாம்.
சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.
இது ஓராண்டுப் பயிராகும்.
மருத்துவப் பயன்கள்:
சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர,
கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
பயன்கள்:
பயன்படுத்தும் முறைகள்:
பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.
பழமொழி :
சுக்குக்குமிஞ்சிய வைத்தியமில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்பது தொன்று தொட்டு வழங்கும் பழமொழியாகும்.
மூலிகையின் பெயர்:
🎋🎋🎋🎋மிளகு🎋🎋🎋🎋
மிளகு: (பைப்பர் நிக்ரம்) என்பது ‘பைப்பரேசியே’ என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. ‘மிளகு’ என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
மிளகில், அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப
கரு மிளகு,
வெண் மிளகு,
சிவப்பு மிளகு, பச்சை மிளகு
எனப் பலவகை உண்டு.
மிளகுக் கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது.
மிளகின் வேறு பெயர்கள்- மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம். தென்னிந்திய மொழிகளில் இத்தாவரம் தமிழில் மிளகு எனவும், அழைக்கப்படுகிறது.
மிளகின் காரத்தன்மை அதிலுள்ள பெப்பரைன் என்ற வேதிப்பொருளால் எற்படுவதாகும். பொடியாக்கப்பட்ட மிளகை உலகின் பெரும்பான்மையான நாடுகளில், சமையலறைகளிலும், உணவு உண்ணும் மேசைகளிலும் காணலாம். மிளகின் கொடி, இலை மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்களாகும்.
மருத்துவப் பயன்கள்:
கல்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன.
மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது.
மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.
உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது
பயன்கள்: பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்க்காது. மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.
மூலிகையின் பெயர்:
🌾🌾🌾திப்பிலி)🌾🌾🌾
திப்பிலி: இத்தாவரம் ஒரு பூக்கும் கொடி ஆகும்.இது ஒரு மூலிகைத் தாவரமாகும். அதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும். கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை மிளகு பெறப்படும், தனது நெருங்கிய இனமான கரும்மிளகை ஒத்த சுவையோடும், அதைக்காட்டிலும் மேலும் காரமாவும் இருக்கும்.
திப்பிலி மிகச்சிறிய பழங்களை கொண்டது. அவை கூர்முனைக் கொம்பு போன்ற ஒரு பூவின் மேற்பரப்பில் நெருக்கமாக பதிக்கப்பட்டிருக்கும். கரும்மிளகை போல், பலமான காரம் கொண்ட பழங்களில், காரமூட்டும் நைட்ரோஜென் அணுக்கள் கொண்ட முலக்கூறான காரப்போலியை கொண்டிருக்கும். திப்பிலி ஜாவா, இந்தோனேஷியாவை தாயகமாகக் கொண்டது.
மருத்துவப் பயன்கள்:
திப்பிலி இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும், குடல் வாயுவைப் போக்கும் சத்து மருந்தாகும். மூக்குப்பொடி தயாரிக்கவும் பயன்படுகின்றது.
திப்பிலி வாத நோய்களைக் குணப்படுத்தும். வயிற்று உப்புசத்திற்கான மருந்தாக, செரியாமை மருத்துவத்திலும் பயன்படுகின்றது. திப்பிலி இலைகள், பழங்கள் ஆகியவற்றின் நோய் எதிர்ப்புத் திறன் பரிசோதனைகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பயன்கள்: இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் மிளகு கொல்கத்தாவிலிருந்து ஏற்றுமதியாகிறது. திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘கண்ட திப்பிலி’ என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.
கனிகள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி ‘அரிசித் திப்பிலி’ என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய், தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களைக் குணமாக்கப் பயன்படும் மருந்தாகும்.
சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் என்னும் மருந்தாகும்

கரப்பான் பூச்சியை கூண்டோடு ஒழிக்க நேச்சுரல் ஸ்ப்ரே தயாரிக்கும் முறை!பெரும்பாலானோரில் வீட்டில் தொல்லை கொடுத்துக் கொண்டிரு...
18/02/2019

கரப்பான் பூச்சியை கூண்டோடு ஒழிக்க நேச்சுரல் ஸ்ப்ரே தயாரிக்கும் முறை!
பெரும்பாலானோரில் வீட்டில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒன்று தான் கரப்பான் பூச்சி. இது வீட்டின் சமையலறை, குளியலறையில் தான் அதிகம் குடிக்கொண்டிருக்கும். இதற்கு அடுத்தப்படியாக நம் தூக்கத்தைக் கெடுக்க வருவது தான் கொசு. இந்த இரண்டும் ஒரு வீட்டில் அதிகம் இருந்தால், அவ்வீட்டில் இருக்கவே முடியாது.

இவ்விரண்டுமே ஒன்றிற்கு ஒன்று போட்டிப் போட்டு நம்மை தொல்லை செய்ய வருபவைகளாகும். இவைகளை ஒழித்துக்கட்ட ஓர் அற்புத வழி உள்ளது. சரி, இப்போது அந்த வழி என்னவென்று காண்போம்.
நேச்சுரல் ஸ்ப்ரே
கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளை அழிப்பதற்கு கடைகளில் கெமிக்கல் கலந்த ஸ்ப்ரேக்கள் விற்கப்படலாம்.
ஆனால் அவற்றில் உள்ள கெமிக்கல் தெரிந்தோ தெரியாமலோ நம் உடலினுள் சென்றுவிட்டால், அதனால் பேராபத்தை சந்திக்க நேரிடும்.
HOMEBEAUTYHEALTHINTERNATIONALDISCLAIMERPRIVACY POLICY
CONNECT WITH US
SEARCH
Daily one tips Tamil
Daily one tips Tamil
கரப்பான் பூச்சியை கூண்டோடு ஒழிக்க நேச்சுரல் ஸ்ப்ரே தயாரிக்கும் முறை!
HOMEBEAUTYHEALTHINTERNATIONALDISCLAIMERPRIVACY POLICY
TIPSகரப்பான் பூச்சியை கூண்டோடு ஒழிக்க நேச்சுரல் ஸ்ப்ரே தயாரிக்கும் முறை!


பெரும்பாலானோரில் வீட்டில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒன்று தான் கரப்பான் பூச்சி. இது வீட்டின் சமையலறை, குளியலறையில் தான் அதிகம் குடிக்கொண்டிருக்கும். இதற்கு அடுத்தப்படியாக நம் தூக்கத்தைக் கெடுக்க வருவது தான் கொசு. இந்த இரண்டும் ஒரு வீட்டில் அதிகம் இருந்தால், அவ்வீட்டில் இருக்கவே முடியாது.

இவ்விரண்டுமே ஒன்றிற்கு ஒன்று போட்டிப் போட்டு நம்மை தொல்லை செய்ய வருபவைகளாகும். இவைகளை ஒழித்துக்கட்ட ஓர் அற்புத வழி உள்ளது. சரி, இப்போது அந்த வழி என்னவென்று காண்போம்.

நேச்சுரல் ஸ்ப்ரே
கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளை அழிப்பதற்கு கடைகளில் கெமிக்கல் கலந்த ஸ்ப்ரேக்கள் விற்கப்படலாம். ஆனால் அவற்றில் உள்ள கெமிக்கல் தெரிந்தோ தெரியாமலோ நம் உடலினுள் சென்றுவிட்டால், அதனால் பேராபத்தை சந்திக்க நேரிடும்.
தேவையான பொருட்கள்:
ஷாம்பு – 1/2 கப்
வினிகர் – 1/2 கப்
வெஜிடேபிள் ஆயில் – 1/2 கப்
தயாரிக்கும் முறை:
முதலில் ஸ்ப்ரே பாட்டிலில் அனைத்து பொருட்களையும் ஊற்றி நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளை அழிக்கும் நேச்சுரல் ஸ்ப்ரே தயார்.
பயன்படுத்தும் முறை:
இந்த நேச்சுரல் ஸ்ப்ரேவை கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வரும் இடத்தில் தெளித்துவிட்டால், அப்பூச்சிகள் வருவது தடுக்கப்படும்.
மேலும் இந்த கலவையை கை, கால்களில் கூட தடவிக் கொள்ளலாம். இதனால் கொசுக்கள் நம்மை அண்டாது

17/02/2019

நெய் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

உயிருக்கு உலை வைக்கும் பிராய்லர் மீன்கள்! தமிழகத்தை குறி வைப்பது ஏன்? இதன் பின்னணி என்ன?இந்த தலைப்பை பார்த்த எல்லோருக்கு...
13/02/2019

உயிருக்கு உலை வைக்கும் பிராய்லர் மீன்கள்! தமிழகத்தை குறி வைப்பது ஏன்?
இதன் பின்னணி என்ன?
இந்த தலைப்பை பார்த்த எல்லோருக்குமே நடுங்கிடும் அளவிற்கு பயம் நிச்சயம் உண்டாகும். ஆனால், இதுதான் உண்மை மக்களே!
சாப்பிட கூடிய உணவுகள் அனைத்துமே விஷ தன்மை வாய்ந்ததாக இப்போது மாறி வருகிறது. முன்பெல்லாம் விஷத்தன்மை கொண்ட உணவுகள் மிக குறைவு. ஆனால், இன்று உணவு முழுவதுமே விஷயமாக மாறியுள்ளது. சைவ உணவுகளை விட அசைவ உணவுகளையே பெரும்பாலானோர் விரும்பி உண்ணுகின்றனர்.
இந்நிலையில் இவர்களை குறி வைத்தே மிக பெரிய வியாபார சந்தை மறைமுகமான நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. கோழிக்கறி, ஆட்டுக்கறி முதலியவற்றில் நடந்த அதே அபாயம் இப்பொது மீன்களின் பக்கம் திரும்பி உள்ளது. நாய்கறி பற்றிய சர்ச்சை இப்போது தான் ஓய்ந்த நிலையில், புதிதாக பிராய்லர் மீன் சர்ச்சை கிளம்பி உள்ளது.
இதை ஆராய்ச்சியாளர்களும் நிரூபணம் செய்துள்ளனர். பெரும்பாலும் இது போன்ற விஷ தன்மையுள்ள மீன், கறி, போன்றவற்றை விற்க ஏன் தமிழ்நாட்டை குறி வைக்கின்றனர்..? இதன் பின் மறைந்துள்ள மேலும் பல உண்மைகளை இந்த தொகுப்பில் அறியலாம்.
விஷமே உணவு!
இன்றைய கால கட்டத்தில் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிட கூடாது என்கிற குழப்பத்திலே நம்மை அலைய விடுகின்றனர். காரணம், எங்கும் விஷம்! எதிலும் விஷம்! என்கிற சூழல் தான். சமீபத்திய காலங்களில் நாய்கறி பற்றிய சர்ச்சை கிளம்பி பலரையும் பீதி அடைய வைத்தது. ஆனால், இப்போது பிராய்லர் மீன் என்கிற சர்ச்சை புதிதாக எழுந்துள்ளது.
பிராய்லர் மீனா?
இது வரை பிராய்லர் சிக்கனை தான் நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால், இப்போது மீனிலும் பிராய்லர் மீன் வந்துள்ளதாம். பிராய்லர் சிக்கனை சாப்பிட்டால் எப்படிப்பட்ட ஆபத்துகள் மனித உடலுக்கு உண்டாகும் என்பதை நாம் நன்கு அறிவோம். இதே வீரியம் இந்த பிராய்லர் மீன்களிலும் உள்ளது.
வித்தியாசம் என்ன?
சாதாரணமாக நாம் சாப்பிடும் மீன்களுக்கும் இந்த வகை பிராய்லர் மீன்களுக்கும் பலவித வித்தியாசங்கள் உண்டு. இந்த வகை மீன்கள் பலவித இராசயன முறைகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டு மீன்களை போன்று இல்லாமல் இவை ஏற்றுமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
பெயர் என்ன?
நாட்டு மீன்களான கெளுத்தி, அயிரை, உழுவை, கெண்டை போன்ற மீன் இனங்கள் அழிவின் விளிம்பில் இருக்க இந்த புதுவித மீன்கள் இப்போது படையெடுக்க தொடங்கியுள்ளன. இவற்றை பாஷா மீன், நெய் மீன், பங்கசியஸ் போன்ற பெயர்களில் சந்தையில் விற்பனை செய்கின்றனர்.
எங்கிருந்து?
வியட்னாம் நாட்டில் தான் இந்த வகை மீன்கள் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின் இதை உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இந்த வகை மீன்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்க இவை ஏன் நம்மை குறி வைத்து வருகின்றன? என்பதை சற்று யோசியுங்கள்.
மக்கள்! நம் மக்களுக்கு எப்போதுமே ஒரு மனோபாவம் உள்ளது. எதை எளிதில் அடைய முடியும், எது மலிவான விலையில் கிடைக்கும், இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் நம்மை ஆபத்தான நிலைக்கு தள்ளியுள்ளது.
இந்த வகை மீன்களில் முட்கள் மிக குறைவு, அவ்வளவு சீக்கிரத்தில் கெட்டும் போகாது, துர்நாற்றமும் மிக குறைவு, இதில் எந்த வகை உணவுகளை சமைத்தாலும் பிரமாதமான ருசியை தரும். இங்கு தான் அவர்கள் விரித்த வலையில் நாம் மாட்டி கொண்டுள்ளோம்.
பண பேய்கள்!
இந்த வகை மீன்கள் எல்லா கால சூழலிலும் தாக்கு பிடித்து வாழ இயலும் என்பதற்காகவே இதை அதிகஅளவில் பண்ணை உரிமையாளர்களும் உற்பத்தி செய்கின்றனர்.
யார் எப்படி போனால் என்ன..?
எனக்கு என் லாபம் தான் முக்கியம் என்கிற நோக்கில் செயல்பட இன்று பலர் தயாராக உள்ளனர். இந்த வகை மீன்கள் விரைவாக வளர ஹார்மோன் ஊசிகள் இவற்றிற்கு செலுத்தப்படுகிறது. இதனால், உற்பத்தியாளருக்கு மட்டுமே பயன் அதிகம்.
விஷம்!
மீன்கள் அதிக எடையுடன் வளர வேண்டும் என்பதற்காகவும், மிக சீக்கிரத்திலே உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பதற்காகவும் இவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றனர்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யும் போது ஹைட்ரஜன் பெராக்ஸைட், STPP, சிட்ரிக் அமிலம் போன்ற விஷ வேதிகளை கொண்டு இவை சுத்தம் செய்யப்படுகின்றன.
இவற்றை சாப்பிடும் நமக்கு என்னென்ன அபாயங்கள் உண்டாகும் என்பதை நீங்களே யூகியுங்கள்.
பேராபத்து!
இது போன்ற பிராய்லர் மீன்களை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
இந்த மீன்களை சாப்பிடுவதால் புற்றுநோய், விந்தணு குறைபாடு, கருமுட்டை வளர்ச்சியின்மை, எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பேராபத்துகள் மனித இனத்தை சூழும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடவே கெட்ட கொழுப்புகள் அதிகரித்து இதய நோய்களும் உண்டாக கூடும்..
அழிவு!
இந்த பிராய்லர் மீன்கள் நாட்டு மீன்களையே சாப்பிட கூடிய தன்மை கொண்டவை.
ஆதலால், சுற்றுசூழல் சமநிலை பாதிக்கப்படும். முன்பு வரை கடல் மீன்கள், நாட்டு மீன்கள் போன்றவை சுமார் 3035 வகைகள் இருந்தன.
ஆனால், இப்போது நமக்கு இவற்றில் தெரிந்த மீன்களும், சந்தையில் விற்கப்படும் மீன்களும் வெறும் 5 முதல் 10 வகைகள் மட்டுமே.
இதிலிருந்தே மீன் இனத்தின் அழிவை நாம் உணரலாம்.
உணவகங்கள்! இன்று வீடுகளில் சாப்பிடுவதை விட வெளியில் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் அதிகரித்துள்ளது.
இதை பயன்படுத்தி கோடிக்கணக்கில் சில உணவகங்கள் இப்படிப்பட்ட மீன்கள், இறைச்சிகளின் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர்.
குறிப்பாக உயர்தர உணவகங்களில் தான் இந்த முறைகேடுகள் அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தீர்வு!
"ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்"
என்கிற வாய்மொழிக்கு ஏற்ப நாம் விழிப்புணர்வுடன் இருக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் நடந்து கொண்டே இருக்கும்.
விலை மலிவு, அதிக சுவை, விரைவான உற்பத்தி போன்ற காரணிகளால் இந்த வகை உணவுகளை சாப்பிட்டால் பாதிக்கப்படுவது நாம் தான்.

Read more at: https://tamil.boldsky.com/health/food/2019/what-is-broiler-fish-and-its-side-effects/articlecontent-pf176791-024391.html?fbclid=IwAR1RjK0b1EgaGJxSd7uiwGQxCpClyID2lxpw0NZ95cv_9-W_HKTBo-N5yuQ

Your brain will become faster than the computer, just do these 3 thingsDue to the effects of environment and change in t...
08/02/2019

Your brain will become faster than the computer, just do these 3 things
Due to the effects of environment and change in the food habits in today’s era, it also has adverse effects on our body. Sometime you have noticed that performance of the peoples is different in the same circumstances.
This clear that some people have sharp mind and some have weak weak. Today, we will tell you about some remedies to make your brain more faster than computer.
1. Basil
The Basil plant in your courtyard is considered to be the best medicine for the brain. The antioxidant present in it accelerates blood circulation in our brain and heart, so that it can work properly. Friends, eat 3 leaves of Basil plant in morning.
2. Cinnamon
Cinnamon is always found in your home kitchen as it is a spices but it also has a lot of Ayurvedic properties. Grind the cinnamon and make powder. After that store it in an air-locked compartment. Now take a pinch of cinnamon powder with a spoon of honey before sleeping at night. This will reduce your mental stress and increase the powers of the mind.
3. Better Sleep
It is very important to have enough rest to make the brain work properly. If you take 8 hours of sleep every day, then your brain gets faster and memory increases. By taking adequate sleep, your mind remains calm, which helps in increasing memory.

*இரவு பணியின் பரிசு மரணம் ☠*----------------------------------------------------*உள்ளூர் மாடு விலை போகாது என்பார்கள்.**இ...
08/02/2019

*இரவு பணியின் பரிசு மரணம் ☠*
----------------------------------------------------
*உள்ளூர் மாடு விலை போகாது என்பார்கள்.*
*இரவு பணிக்கு செல்வோர் கோடி கோடியாய் வந்து கொட்டினாலும் அவர்களுக்கு வைத்தியம் பார்க்க மாட்டேன் என்று ஏற்கனவே பல முறை எனது Whats app குழுக்கள் மற்றும் முகநூலில் சொல்லி இருக்கிறேன். என்னிடம் சிகிச்சைக்கு வருவோர் அனைவரிடமும் இதை சொல்வது வழக்கம்.*
*அப்படி இரவு பணிக்கு செல்வோர் ஒருவர் என்னிடம் சிகிச்சைக்கு வந்து நடந்த சுவாரஸ்யமான விடையத்தை பிறகு பார்ப்போம்.*
*அதற்கு முன்*
*Hong Kong ல் இரவு பணிக்கு செல்வோரை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் திடுக்கிடும் பல அதிர்ச்சி முடிவுகள் வெளியானது.*
*இவை Anesthesia Academic Journal ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.*
*இச்செய்தியை முதலில் நேற்று முன்தினம் Indo Asian News Service 27.01.2019 ல் வெளியிட்டது.*
*அதன் பின் Press Trust Of India என்னும் News Agency அனைத்து ஆங்கில இணைய செய்தி தளத்திலும் இச்செய்தியை வெளியிட்டது.*
*இதோ அதன் link 👇🏽*
https://m.timesofindia.com/home/science/night-shifts-may-cause-dna-damage-study/articleshow/67710439.cms
*Indo Asian News Service வெளியிட்ட செய்தியின் link 👇🏽*
https://in.news.yahoo.com/night-shift-damage-dna-study-095803070.html
*கண் விழித்து இரவு வேலை பார்ப்பவர்களுக்கும் !*
*இரவு நேரம் கழித்து உறங்குபவர்களுக்கும் !*
*இரவு தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கும் !*
*ஏற்படும் பேராபத்துக்கள் !*
*இதை எதுவும் நான் சொல்லவில்லை சீன நாட்டில் The University of Hong Kong என்னும் பல்கலைக்கழகத்தில் Research Associate ஆக பணிபுரியும் S. W. Choi என்னும் ஆய்வாளர் சொல்கிறார்.*
*இதோ ஆய்வு முடிவுகள் 👇🏽*
*Lack of proper sleep and night-time wakefulness can cause damage to the structure of the human DNA.*
*இரவு கண் விழிப்பதும், இரவு தூக்கமின்மையும் மனித மரபணு வடிவத்தையே சிதைக்கும்.*
*௧ - மரபணு சிதைவு (DNA damage)*
*௨ - புற்று நோய் (Cancer)*
*௩ - இருதய கோளாறுகள் (Cardiovascular disease)*
*௪ - நீரிழிவு (Diabetes)*
*௫ - வளர் சிதை மாற்றம் (Metabolic disorders)*
*௬ - நரம்பியல் நோய்கள் (Neurological disease)*
*௭ - நுரையீரல் நோய்கள் (pulmonary diseases)*
*௮ - மரபணு உறுதியற்ற தன்மை (Genomic instability)*
*௯ - செல் இறப்பு (Cell death)*
*இது மட்டுமா, இவர் குறிப்பிடும் முக்கிய வரிகள் இதோ 👇🏽*
*Although this work is very preliminary, it is clear form the results that even a single night of sleep deprivation can trigger events that may contribute to the developments of Chronic disease, said Siu-Wai Choi, of The University Of Hong Kong.*
*இது ஆரம்ப கட்ட ஆய்வாக இருந்தாலும், ஒரு நாள் இரவு தூக்கமின்மை கூட, நோய் காரணிகளை தூண்டிவிட்டு நாட்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை ஆய்வு முடிவு தெளிவாகக்காட்டுகிறது என சொல்கிறார், The University of Hong Kong பல்கலைக்கழகத்தை சேர்ந்த Siu-Wai Choi என்னும் ஆய்வாளர்.*
*சரி வாருங்கள் ஏன் இரவு கண் விழிப்பது ஆபத்து என்று நான் சொல்கிறேன்.*
*பொதுவாக அனைத்து உறுப்புகளும் அனைத்து நேரத்திலும் இயங்கிக்கொண்டு இருந்தாலும், 2 மணி நேரங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட உறுப்பு அதிகமாக பிரபஞ்ச சக்தி பெற்று இயங்கும். எந்த எந்த உறுப்பு எந்த எந்த நேரத்தில் அதிகமாக இயங்குகிறது என்று அதிகாலை 3 மணி முதல் பார்ப்போம்.*
*உறுப்புகளின் நேரம் !*
*நுரையீரல் : 3 Am - 5 Am*
*பெருங்குடல் : 5 Am - 7 Am*
*இரைப்பை : 7 Am - 9 Am*
*மண்ணீரல் : 9 Am - 11 Am*
*இருதயம் : 11 Am - 1 Pm*
*சிறுகுடல் : 1 Pm - 3 Pm*
*சிறுநீர்பை : 3 Pm - 5 Pm*
*சிறுநீரகம் : 5 Pm - 7 Pm*
*இருதய மேலுறை : 7 Pm - 9 Pm*
*மூவெப்ப மண்டலம் : 9 Pm - 11 Pm*
*பித்தப்பை : 11 Pm - 1 Am*
*கல்லீரல் : 1 Am - 3 Am*
*இதில் மூவெப்ப மண்டலம், பித்தப்பை மற்றும் கல்லீரல் நேரத்தை யாரேனும் கவனித்தீர்களா ? இரவு 9 மணி முதல் 3 மணி வரை.*
*இந்த நேரங்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.*
*இரவு 9 மணி முதல் 11 மணி வரை மூவெப்ப மண்டலம் இரத்தத்தை தூய்மை செய்ய உடலில் எங்கு எங்கு, எந்த அளவு வெப்பம் இருக்க வேண்டுமோ, அந்த அளவுகளை பொருத்தி வைப்பான். கழிவுகள் அதிகம் உள்ள இடத்தில் அதிகமாகவும், குறைவாக உள்ள இடத்தில் குறைவாகவும் வெப்பத்தை பொருத்தி வைப்பான் இவன்.*
*நீங்கள் இந்த நேரத்தில் ஓய்வில் இருந்தால் மட்டுமே வெப்பத்தை சீர் செய்யும் இந்த வேலை நடைபெறும். வேறு என்ன செய்துகொண்டிருந்தாலும், இந்த வேலை சரியாக நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.*
*பின் மனித உடலின் பெரிய உறுப்பு என பெயர் பெற்ற புஜபலபராக்கிரமனான கல்லீரல் உடலை தன் கட்டுப்பாட்டிற்குள் எடுப்பான்.*
*இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பித்தப்பை மற்றும் கல்லீரல் நேரம். இது இரத்தத்தை தூய்மைப்படுத்தும் நேரம்.*
*இந்த நேரத்தில் கல்லீரல் உச்சி முதல் பாதம் வரையில் உள்ள இரத்தங்களை தன்னிடம் வரவழைத்து அதில் உள்ள நச்சுக்களை முறிக்கும் வேலையை செய்வான்.*
*முறிக்கப்பட்ட நச்சுக்களை ஒரு மில்லியன் வடிப்பான்களை(Nephrons) தன்னகத்தே கொண்ட சிறுநீரகம் நச்சுக்களை வடித்து சிறுநீர்ப்பைக்குள் தள்ளிவிடுவான்.*
*பின் காலை சிறுநீர் செல்லும் வேளையில், விடிய விடிய இரத்தத்தை தூய்மை செய்யும் போது பிரிக்கப்பட்ட நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர்பை வெளியேற்றிவிடுவான். அதனால் தான், காலை போகும் முதல் சிறுநீர் பழுப்பு நிறம் மற்றும் நாற்றம் நிறைந்ததாக உள்ளது.*
*அது அனைத்தும் கல்லீரலால் முறிக்கப்பட்ட நச்சுக்கள். புடுங்கும் ஆணி அனைத்தும் தேவை இல்லாத ஆணி தான். எனவே இதை பிடித்து பரிசோதனை செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.*
*பாருங்கள் உறுப்புகள் எப்படி ஒற்றுமையாக இயங்குகிறது என்று. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உடல் உறுப்புகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.*
*கல்லீரல் உங்கள் இரத்தத்தை தூய்மை செய்யும் இந்த வேளையில்*
*நீங்கள்*
*இரவுப் பணியில் இருந்தாலோ !*
*உணவை அமுக்கிக்கொண்டு இருந்தாலோ !*
*கண் விழித்திருந்தாலோ !*
*தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாலோ !*
*கைப்பேசி நோண்டிக்கொண்டிருந்தாலோ !*
*கதை பேசிக்கொண்டிருந்தாலோ !*
*ஏதேனும் யோசனை செய்து கொண்டிருந்தாலோ !*
*போர்வை இழுத்து தலையுடன் போத்தி, யார் யார் என்ன என்ன Status வைத்திருக்கிறார்கள் என பார்த்துக்கொண்டிருந்தாலோ !*
*கல்லீரல் இரத்தத்தை துய்மை செய்யும் வேலை ஸ்தம்பித்துவிடும். இந்த வேலை நடக்காது.*
*முட்டி முட்டி முடிந்தவரை இரத்தத்தை தூய்மை செய்ய முயற்சிப்பான், அவன் நேரத்தை நீங்கள் அபகரித்து அவனுக்கு நேரம் தர மாட்டீர்கள், பின் மீண்டும் அடுத்த நாள் அவன் நேரத்திற்காக காத்திருப்பான்.*
*நீங்கள் அடுத்த நாளும் கல்லீரல் நேரத்தில் தூங்குவதை தவிர அனைத்து சேட்டைகளும் செய்து கொண்டிருப்பீர்கள்.*
*மீண்டும் முட்டி முட்டி முடிந்தவரை இரத்தத்தை தூய்மை செய்ய முயற்சிப்பான். அவன் நேரத்தை நீங்கள் அபகரித்து அவனுக்கு நேரம் தர மாட்டீர்கள், பின் மீண்டும் அடுத்த நாள் அவன் நேரத்திற்காக காத்திருப்பான்.*
*மீண்டும் உங்களின் சேட்டைகள் தொடரும்.*
*இப்படி தொடர்ந்து நடக்கும் போது என்ன ஆகும் தெரியுமா ?*
*கல்லீரல் இரத்தத்தை தூய்மை செய்யும் வேலையில், நீங்கள் தூங்காமல் வேறு ஏதேனும் செய்து கொண்டிருந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் இரத்தத்திலேயே தங்கிவிடுகிறது.*
*ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஏதாவது ஒரு பொடி போட்டு கலந்துகொண்டே இருந்தால் அந்த நீரின் அடர்த்தி அதிகரித்து திடமாகுமா ? அல்லது திரவமாகவே இருக்குமா ?*
*திடமாகும் அல்லவா. அதேப்போல் தான்.*
*நீங்கள் இரவு தூங்காமல், கல்லீரலுக்கு அதன் நேரத்தை கொடுக்காததால், நச்சை முறிக்க நேரம் இல்லாமல், நச்சுக்கள் அனைத்தும் இரத்தத்திலேயோ தங்கி, இரத்தம் சாக்கடை போல் கெட்டியாக மாறிவிடுகிறது.*
*கெட்டியான இந்த இரத்தத்தை இதயம் Pump செய்ய சிரமப்பட்டு வேகம் குறையும். இந்த நேரத்தில் நீங்கள் ECG எடுத்து பார்த்தால் இதயம் Low pump rate காட்டும். உடனே உங்களுக்கு இதயக்கோளாறு என்று சொல்லிவிடும் ஆங்கில மருத்துவம்.*
*பிரச்சனை இதயத்திலா ? அல்லவே அல்ல*
*Low pump rate ற்கு காரணம் கெட்டியான இரத்தம்.*
*கெட்டியான இரத்தத்திற்கு காரணம் நீங்கள் தூங்காமல் இருந்தது.*
*இப்பொழுது பிரச்சனை எங்கு என்று பாமரன் கூட அறிவான்.*
*இரவு தூங்காமல், இப்படி இரத்தம் கெட்டியாகி கழிவுகள் இரத்தத்திலேயே தங்கிவிடுவதால் நச்சு வெளியேறாத இந்த இரத்தம் செல்லும் இடமெல்லாம் பல்வேறு விதமான நோய்களை உருவாக்கிவிடுகிறது.*
*என்ன நோய் என்று கேட்கிறீர்களா ? ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் உலகில் உள்ள அனைத்து நோய்களும் என்று சொல்லலாம். ஆம் இது தான் நோய்களுக்கு மிக முக்கிய காரணம்.*
*நீங்கள் என்ன தான் இயற்கையில் விளைந்த உணவுகளை எடுத்தாலும். இரவு நேரம் கழித்து உறங்கினால் உங்களுக்கும் இதே நிலை தான்.*
*உணவில் மட்டும் அல்ல, வாழ்க்கை முறையிலும் வர வேண்டும் மாற்றம்.*
*சிலர் சிரித்துக்கொண்டே சொல்வார்கள் பகலில் தூங்கி சமன் செய்து விடுவேன் என்று நீங்கள் சமன் செய்யவில்லை உங்களுக்கு நீங்களே சமாதி கட்டிக்கொள்கிறீர்கள்.*
*இரவு தூங்கினால் மட்டுமே இரத்தம் தூய்மை பெறும் உடல் உஷ்ணம் குறையும் பகலில் தூங்கினால் நோய் தான் வரும். பகலில் அரை மணி நேரம் ஓய்வு எடுக்கலாமே தவிர தூங்க கூடாது.*
*பகல் தூக்கம் ஆகாது என்பார்கள்.*
*ஜப்பான் நாட்டின் டோக்கியோவிலுள்ள யமடா டோமாஹைட் என்ற பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களை ஆய்வு செய்ததில் 40 நிமிடத்திற்கு மேல் பகலில் தூங்குபவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பல்வேறு நோயினால் தாக்கப்பட்டதை கண்டுபிடித்துள்ளார்கள்.*
*இதோ அதன் link 👇🏽*
http://daily1tips.com/doc-1st/archives/7244
*சரி கட்டுரையின் ஆரம்ப பகுதியில் சுவாரஸ்யமான விடையம் ஒன்று உள்ளது என்று சொன்னேன் அல்லவா அதை பார்க்கலாம் வாருங்கள்.*
*எனது சிகிச்சை மையத்திற்கு 11.02.2018 அன்று 33 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சிகிச்சைக்காக குடும்பத்துடன் 7 பேர் ஒரு வாகனத்தில் வந்து இறங்கினார்கள்.*
*அனைவரும் ஒரு பதட்டத்துடன் வேர்க்க விறுவிறுக்க வந்து என் முன் அமர்ந்தார்கள். வணக்கம் ங்க, மருத்துவர் எனக்கு இதயக்கோளாறு என்று சொல்லிவிட்டார் எனக்கு பயமாக உள்ளது, இதை உங்கள் மருத்துவத்தில் சரி செய்ய முடியுங்களா என்று கேட்டார் பாதிக்கப்பட்ட நபர்.*
*நானும் நாடி பிடித்த அடுத்த கணமே அவரிடம் சொன்னேன், உங்களுக்கு பிரச்சனை இதயத்தில் அல்ல கல்லீரலில் என்று.*
*என்ன சொல்றீங்க மருத்துவர் ECG எடுத்து பார்த்து உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது என்றும் ஒரு நாளைக்கு நீங்கள் 14 மாத்திரை சாப்பிட வேண்டும் என்றும் எழுதி கொடுத்துள்ளார் பாருங்கள் என்றார்.*
*மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை இல்லை, நீங்கள் இரவு பணிக்கு செல்கிறீர்கள், சரியா என்று கேட்டேன்.*
*உடனே அவர் ஆச்சர்யத்துடன் ஆமாங்க, நான் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளேன், பெரும்பாலும் இரவு தூங்க முடியாது என்றார்.*
*பின் நான் வழக்கமாக சொல்வதை சொன்னேன். இரவு பணி செல்வோருக்கு நான் வைத்தியம் பார்ப்பதில்லை நீங்கள் செல்லலாம் என்றேன்.*
*முடிந்தால் அந்த பணியை விட்டு விட்டு வாருங்கள் பிறகு பார்க்கிறேன் என்றேன். குடும்பத்துடன் ஆலோசித்து, எனக்கு குணமானால் போதும் ங்க, இனி நான் இரவு பணிக்கு செல்ல மாட்டேன் என்றார்.*
*சரி என்று, நீங்கள் இரவு பணிக்கு செல்வதால் இரத்தம் தூய்மை பெறாமல் கெட்டியாகி இருப்பதால் இதயம் pump செய்ய சிரமப்படுகிறது என்று சொல்லி பிரச்சனை இதயத்தில் அல்ல உங்கள் தூக்கமின்மையில் என்பதை அவருக்கு புரிய வைத்து மரபு வைத்தியம் கொடுத்து அனுப்பி வைத்தேன்.*
*அலோபதி கொடுத்த 14 மாத்திரைகளும் அவருக்கு தேவைப்படாததாய் இருந்ததால் அனைத்தையும் அன்றே நிறுத்திவிட்டேன்.*
*மூன்று வாரம் கழித்து அதே ஆங்கில மருத்துவரிடம் சென்று பரிசோதித்து பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக முகத்தில் ஒரு புன்முறுவலுடன் என்னிடம் வந்தார், வணக்கம் ங்க மருத்துவர் ECG எடுத்து பார்த்து விட்டு உங்கள் இதயம் நன்றாகிவிட்டது, பரவாயில்லை நான் கொடுத்த மாத்திரைகள் அனைத்தையும் சரியாக எடுத்துள்ளீர்கள் என்றாராம் அந்த ஆங்கில மருத்துவர். இதை சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார்.*
*பிரச்சனையைத்தான் இவர்கள் சம்மந்தமே இல்லாமல் சொல்கிறார்கள் என்று பார்த்தால் குணமானதையும் சம்மந்தமே இல்லாமல் சொல்கிறார்களே என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டேன். அப்படியாவது அவர்கள் சந்தோசப்பட்டுக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன்.*
*இந்த மூன்று வாரங்கள் பாதிக்கப்பட்ட நபர் இரவு சரியாக தூங்கியதால் கல்லீரல் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தம் தூய்மை பெற்று, இதன் அடர்த்தி சீராகியதால், இதயத்தில் Pumping rate normal ஆகி உள்ளது.*
*இது எதுவுமே தெரியாத ஆங்கில மருத்துவம் ஒரு Machine ஐ நம்பி அவருக்கு இதயத்தில் பிரச்சனை என்று சொல்லிவிட்டது. இதேப்போல் தான் இவர்களின் அனைத்து நோய் கண்டறிதல் முறையும் உள்ளது என்பது கேலிக்குரிய விடையம்.*
*ஒரு நோயை குணமாக்க வேண்டும் என்றால் அதன் மூல காரணத்தை கண்டுபிடிப்பதே ஒரு மருத்துவரின் வெற்றிக்கான முதல் படி.*
*தவறாக கணித்து முதல் படியிலேயே சறுக்கி விளையாடுகிறது ஆங்கில மருத்துவம்.
நோய் கண்டறிதலே தவறாக உள்ள பட்சத்தில் நோய்களை எப்படி இவர்கள் குணப்படுத்துவார்கள் ?*
*உண்மையில் பிரச்சனை ஒரு இடத்தில் இருக்க, Machine ஐ நம்பி, வேறு இடத்தில் வைத்தியம் பார்த்து மேலும் பிரச்சனைகளை அதிகப்படுத்தும் வேலையை மட்டுமே செய்கிறது ஆங்கில மருத்துவம். அனுபவப்பட்டோர் இதை நன்கு அறிவர்.*
*ஒரு மனிதனுக்கு மூச்சு காற்று எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல் தான் தூக்கமும் முக்கியம். எனவே தான் எனது சிகிச்சை படிவத்தில் இரவு உணவு உண்ணும் நேரம் மற்றும் இரவு தூங்கும் நேரம் கேட்டிருப்பேன்.*
*இரவு கண் விழித்து வேலை பார்த்து சாம்பாதிப்பது என்பது கண்ணை விற்று கண்ணாடி வாங்கும் செயல்.*
*பெட்டி பெட்டியாய் பணம், ஒரு மருத்துவரிடம் நீங்கள் கொடுத்தால் உங்கள் உயிரை அவரால் காப்பாற்றி விட முடியுமா ? முடியவே முடியாது.*
*உதாரணம் பல கோடி சொத்து இருந்தும் 75 நாள் ஒரு உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையில் தங்கி வைத்தியம் பார்த்த ஒரு அம்மாவின் உயிரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.*
*இழந்த பிறகு தான் தெரியும்*
*ஆரோக்கியத்தின் அருமை.*
*ஒரு இருபது வருடங்களுக்கு முன் எல்லோரும் எத்தனை மணிக்கு உறங்கச்சென்றார்கள் ?*
*நினைத்தாலே பட்டாம்பூச்சி சிறகடித்து மனதில் மகிழ்ச்சி பிறக்கும் அளவிற்கு அழகான நாட்கள் அவைகள், இரவு நேரத்தில் உணவு எடுத்து 8 மணிக்கெல்லாம் ஊரே அடங்கிவிடும்.
குடும்பமே ஒரே இடத்தில் ஒன்றாகத்தான் உறங்குவார்கள். காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தங்களது பணியை தொடங்குவார்கள்.*
*அப்பொழுது அனைவரும் ஆரோக்கியத்தில் திளைத்து இருந்தார்கள். ஆரோக்கியத்தின் அதிபதியாய் இருந்தார்கள்.*
*ஆனால் இப்பொழுது அனைவரும் எத்தனை மணிக்கு உறங்கச் செல்கிறார்கள் ? இதோ என்னிடம் சிகிச்சை பெற்ற 21 பேர் குறிப்பிட்ட நேரத்தையே உதாரணமாக காட்டுகிறேன்.
சிகிச்சையாளர் பூர்த்தி செய்த படிவத்தின் படத்தை இதில் இணைத்துள்ளேன் நீங்களே பாருங்கள்.*
*இப்பொழுதெல்லாம் உணவு எடுப்பதே 10 மணியாக உள்ளது. சிலர் அதற்கும் மேல். உறங்க செல்வது பெரும்பாலும் 12 மணியாக உள்ளது. சிலர் அதற்கும் மேல்.*
*இச்சமூகத்தை பீடித்திருக்கும் 90% சதவீதமான நோய்களுக்கு, இரவு நேரம் கழித்து உறங்குவது தான் முக்கிய காரணம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?*
*இரவு உணவு எடுக்க சரியான நேரம் : 7Pm*
*இரவு உறங்க சரியான நேரம் : 9Pm*
*மிக அதிகபட்சம் 10 மணி வரை நீளலாம். Dead End Time 10Pm. இதற்கு மேல் தூக்கம் வராவிட்டாலும் ஒரு வினாடி கூட கண் விழித்திருக்க கூடாது, கண் மூடி படுத்து விட வேண்டும்.*
*இரவு எளிய உணவை மட்டுமே எடுக்க வேண்டும்.
இரவு 8 மணிக்கு மேல் உணவு எடுப்பது உங்கள் கல்லீரலை கசாப்பு கடைக்கு அனுப்புவதற்கு சமம்.
தூங்கும் முன் வயிற்றில் எதுவும் இருக்கக்கூடாது.*
*வயிற்றை நிறைத்து உறங்குபவரா நீங்கள் ? இப்பழக்கத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது மறைக்கப்படுவீர்கள் இயற்கையால்.*
*இரவு நீங்கள் கண் விழிக்கும் ஒவ்வொரு வினாடியும், உங்களின் இறுதி நாள் குறிக்கப்பட்டு வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.*
*தூக்கத்தில் கனவு வந்தால் அது கெட்ட தூக்கம். கனவு இல்லை என்றால் தான் அது நல்ல ஆழ்ந்த தூக்கம். பெரும்பாலானோருக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை.*
*காரணம் மூன்று*

*1 - தேனீர்*
*2 - மனதிற்கு அதிக வேலை*
*3 - உடல் உழைப்பு இன்மை*
*இம்மூன்றையும் சரி செய்தால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வரும். அதாவது டீயை தவிர்த்து மனதின் வேலையை குறைத்து உடலின் வேலை அதிகப்படுத்தினால் ஆழ்ந்த தூக்கம் வரும்.*
*இப்படி ஆழ்ந்த தூக்கம் தூங்கினால், காலையில் உடல் பட்டாம்பூச்சி சிறகு போல் லேசாக இருந்து, புத்துணர்வுடன் உங்களை எழுப்பிவிடும், இல்லை என்றால் நீங்கள் சிரமப்பட்டு கனமான சோம்பல் உடலை தூக்க வேண்டியதாய் இருக்கும்.*
*இரவு 9 மணிக்கு மேல் கண் விழித்தால் உடல் கோளாறுகள் ஏற்படும் என்று உலகவல்லாதிக்க தீய சக்திக்கு நன்கு தெரிந்ததால் தான், இரவு 9 மணிக்கு மேல் மக்களை கவரும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாடகங்கள் ஒளி பரப்பப்படுகிறது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?*
*இரவு 9 மணிக்கு மேல் கண் விழித்தால் உடல் கோளாறுகள் ஏற்படும் என்று நன்கு தெரிந்ததால் தான் நம் நாட்டு இளைஞர்களை உலகவல்லாதிக்க நிறுவனங்கள் இரவு வேளையில் பணிக்கு அமர்த்துகிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?*
*நம்மிடம் இருந்த அறிவுப் பேழையை உலகவல்லாதிக்க தீய சக்தி திருடிச்சென்று இப்பொழுது, அதை நம் மீதே ஆயுதமாக பயன்படுத்தி வருகிறான்.*
*இதேப்போல் இன்னும் இன்னும் பல சதித்திட்டங்கள் அழகாக அரங்கேற்றம் பெற்று வருகின்றன.*
*இளைய சமூகமே, சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை நீ அறியாமல் உன் உயிரை விற்று இரவு பணிக்கு செல்கிறாய் என்பதை எப்பொழுது உணரப்போகிறாய் ?*
*இரவு கண் விழித்திருப்பவரா நீங்கள் ? நீங்கள் காண்பது கடைசி காட்சியாக கூட இருக்கலாம் கவனம் !*
*இரவு விழிக்கும் கண் !*
*நாளை விழிக்காமல் போகலாம் !*
*உயிர் வாழ உறங்கிடு !*
*நன்றி*
*கட்டுரை எண் : 52*
*வெளியான தேதி : 30.01.2019*
*நீங்கள் அனைத்து கட்டுரைகளையும் எனது Blog ல் படிக்கலாம்.*
😴😴😴😴😴😴😴😴😴😴😴😴
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Science News: Researchers found that on-call doctors who were required to work overnight on-site had lower DNA repair gene expression and more DNA breaks than those

Address

Chennai
600060

Telephone

+917667707024

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health for all posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health for all:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram