27/09/2022
🔥இலக்கை நோக்கி அரசு மருத்துவர்கள்🔥
27 . 9. .2022
👍வெல்வோம் விரைவில் 👍
நாளை குடும்பத்துடன் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்
👍கேள்வி- பதில்:
கேள்வி:
கோரிக்கையை இன்னமும் நிறைவேற்றாததால், அரசு மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அடுத்த மாதம் நடக்க இருக்கும் தேர்தலுக்காக போராடுவதாக, சம்பந்தமே இல்லாமல் அமைச்சர் தெரிவித்தது, மருத்துவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதே?
பதில்:
1) ஆம். ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது குறித்து, மாண்புமிகு தமிழக சுகாதாரத் துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் இது பற்றி பல தடவை சொல்லியாச்சு.
2) தமிழ்நாட்டில் மருத்துவர் சங்கங்கள் பல உள்ளன. இவற்றில் ஒரு பிரிவினர் அரசாணை 354 தான் வேண்டும் என்கின்றனர். இன்னொரு பிரிவினரோ அரசாணை 293 வேண்டும் என்கின்றனர்.
3) இவர்களுடன் 17, 18 முறை பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம். இப்போது ஒரு வழியாக கிட்டத்தட்ட ஒருமித்த கருத்துக்கு வந்து விட்டனர். இறுதி வடிவத்துக்கே வந்து விட்டனர் என்று கூட சொல்லலாம்.
4) இதற்கிடையே இந்த மருத்துவர் சங்கங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 14 ம் தேதி நடைபெறுகிறது. அப்போது தாங்கள் போராடி பெற்ற உரிமை என்று அந்த சங்கங்கள் காட்ட வேண்டும் என்பதற்காக தான் போராட்டம் நடத்துகிறார்கள்.
5) ஆனால் அடுத்த மாதம் 14 ம் தேதி நடக்கும் மருத்துவர் சங்க தேர்தலுக்கு பிறகு, போராட்டம் எதுவும் இருக்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார்கள்.
6) நம்மை பொறுத்தவரை, புதிய ஆட்சி அமைந்த பிறகு கலைஞரின் அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டி இதுவரை சட்டப்போராட்டக் குழு மட்டுமே போராடி வந்தது. மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற துறை அமைச்சர் சிறிதும் அக்கறை காட்டாததால், பொறுமைக்கும் எல்லை உண்டு என்ற வகையில் தற்போது அனைத்து மருத்துவர் சங்கங்களுமே போராட்டக் களத்திற்கு வந்து விட்டனர்.
7) மருத்துவர்கள் அனைவருமே அரசாணை 354 ஐ நிறைவேற்ற கோரி வந்த நிலையில், தன்னுடைய அரசியல் ஆசான் கலைஞரின் அரசாணையை நிறைவேற்ற தனக்கு கிடைத்த பாக்கியத்தை, தன் கடமையை நம் துறை அமைச்சர் செய்ய மறுத்துள்ளார்கள். அத்துடன் வேண்டுமென்றே யாருக்கும் பலன் தராத அரசாணை 293 ஐ மருத்துவர்களிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் கொண்டு வந்ததும் நம் துறை அமைச்சர் பதவி ஏற்ற பிறகு தான் நடந்துள்ளது.
8) அதுவும் தற்போது ஊதியக் கோரிக்கை விசயத்தில் அரசாணை 354 ஐ நிறைவேற்ற வேண்டும் என்பதில் அனைத்து மருத்துவர் சங்கங்களும் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளதாக நம் அமைச்சர் தெரிவிக்கிறார்கள். அப்படியிருக்க கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதை விடுத்து, மருத்துவர்களை தொடர்ந்து போராட வைத்து, வேடிக்கை பார்ப்பதும், வேதனைப்பட வைப்பதும் எந்த வகையில் நியாயம் என்பதை அமைச்சர் நினைத்து பார்க்க வேண்டும்.
9) மருத்துவர்களின் போராட்டம் குறித்து அமைச்சரிடம் கேட்ட கேள்விக்கு, அடுத்த மாதம் நடக்கும் தேர்தலை மனதில் வைத்து போராட்டம் நடத்துவதாக, இல்லாத தேர்தலை கூறியுள்ளார்கள். அதாவது கடந்த 5 வருடங்களாக தங்களை வருத்திக் கொண்டு காந்திய வழியில் போராடி வரும் மருத்துவர்களின் உணர்வுகளை இவ்வாறு கொச்சைப்படுத்தியும், காயப்படுத்தும் வகையிலும் அமைச்சர் பேசியுள்ளதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
10) எனவே 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு மற்றும் கலந்தாய்வில் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நீதி வேண்டி, நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசே!
டாக்டர் கலைஞரின் அரசாணையை உடனே நிறைவேற்றவும்.
'மக்கள் நலனும், மருத்துவர் நலனும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்'
வேண்டும்!
வேண்டும்!
DACP PAY with PAY BAND 4 @ 12 yrs வேண்டும்!
💪போராடுவோம்
வெற்றி பெறுவோம்💪