Arokiya Vazhvu

Arokiya Vazhvu Prevention is better than cure in a nature's way. We are designed to offer and meet the nutritional needs for anyone at any phase of life.

We offer a wide variety of herbal products in top notch quality in order to satisfy and meet all the requirements of our eminent clients. Offering best products is the ultimate goal of our firm and we offer it with the fullest of dedication and sincerity. To lead a healthy life, we provide the best of supplements. Are your suffering from any kind of disease or ailment? Then visit Almaa; we assure to completely cure or prevent the occurence of any kind of diseases / condition using highly beneficial herbal medicines. We are engaged in the following areas :

Herbal Products - Almaa Noni, Aloevin Health Drink
Herbal Medicines
Herbal Cosmetics

31/12/2018

நோய்கள் உருவாகும் இடங்கள் !
-------------------------------------------
நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.

இதோ

1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்

2 - டீ

3 - காபி

4 - வெள்ளை சர்க்கரை

5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.

6 - பாக்கெட் பால்.

7 - பாக்கெட் தயிர்

8 - பாட்டில் நெய்

9 - சீமை மாட்டு பால்

10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.

11 - பொடி உப்பு

12 - ஐயோடின் உப்பு

13 - அனைத்து ரீபையின்டு ஆயில்

14 - பிராய்லர் கோழி

15 - பிராய்லர் கோழி முட்டை

16 - பட்டை தீட்டிய அரிசி

17 - குக்கர் சோறு

18 - பில்டர் தண்ணீர்

19 - கொதிக்க வைத்த தண்ணீர்

20 - மினரல் வாட்டர்

21 - RO தண்ணீர்

22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்

23 - Non Stick பாத்திரங்கள்

24 - மைக்ரோ ஓவன் அடுப்பு

25 - மின் அடுப்பு

26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்

27 - சோப்பு

28 - ஷாம்பு

29 - பற்பசை

30 - Foam படுக்கை மற்றும் இருக்கை

31 - குளிர்பானங்கள்

32 - ஜஸ் கீரீம்கள்

33 - அனைத்து மைதா பொருட்கள்

34 - பேக்கரி பொருட்கள்

35 - சாக்லேட்

36 - Branded மசாலா பொருட்கள்

37 - இரசாயன கொசு விரட்டி

38 - Ac

39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.

40 - பிஸ்கட்டுகள்

41 - பன்னாட்டு சிப்ஸ்

42 - புகைப்பழக்கம்

43 - மதுப்பழக்கம்

44 - சுடு நீரில் குளிப்பது

45 - தலைக்கு டை

46 - துரித உணவுகள்

47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்

48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.

49 - ஆங்கில மருந்துகள்

50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்

51 - உடல் உழைப்பு இல்லாமை

52 - பசிக்காமல் உண்பது

53 - அவசரமாக உண்பது

54 - மெல்லாமல் உண்பது

55 - இடையில் தண்ணீர் குடிப்பது

56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.

57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்

58 - அறியாமை

59 - சுற்றுச்சூழல் மாசுபாடு

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்

அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.

உயிர் பிழைக்க ஒரே வழி

இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.

குணமாகும் இடங்கள் !
---------------------------------------------
நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.

இதோ

1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.

2 - மூலிகை தேனீர்

3 - சுக்கு மல்லி காபி

4 - பனங்கருப்பட்டி

5 - பனங்கற்கண்டு

6 - வெல்லம்

7 - கரும்பு சர்க்கரை

8 - இதில் செய்த இனிப்புகள்

9 - நாட்டு பசும் பால்

10 - நாட்டு பசு தயிர்

11 - நாட்டு பசு நெய்

12 - நாட்டு பசும்பால் பொருட்கள்

13 - இந்துப்பு

14 - கல் உப்பு

15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்

16 - நாட்டு கோழி

17 - நாட்டு கோழி முட்டை

18 - பட்டை தீட்டப்படாத அரிசி

19 - வடித்த சோறு

20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்

21 - பச்சை தண்ணீர்

22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்

23 - மழை நீர்

24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்

25 - இரும்பு பாத்திரங்கள்

26 - விறகு அடுப்பு

27 - பயோ கேஸ் அடுப்பு

28 - சத்துமாவு கலவை

29 - குளியல் பொடி

30 - சிகைக்காய் பொடி

31 - இயற்கை பற்பொடி

32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை

33 - கோரைப்பாய்

34 - பழச்சாறுகள்

35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்

36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்

37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்

38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்

39 - இயற்கை கொசு விரட்டி

40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்

41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு

42 - நம் நாட்டு சிப்ஸ்கள்

43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்

44 - குளிர்ந்த நீரில் குளிப்பது

45 - இயற்கை ஹேர் டை

46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்

47 - மண் பானை குளிரூட்டி

48 - பச்சை கொட்டை பாக்கு

49 - மரபு மருத்துவங்கள்

50 - உடல் உழைப்பு

51 - பசித்து உண்பது

52 - மெதுவாக சுவைத்து உண்பது

53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது

54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்

55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது

56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்

57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்

58 - புத்திகூர்மை

59 - சுற்றுச்சூழல் தூய்மை

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது

*உங்களின் உணவுமுறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
- மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
- கிரைண்டர் வந்தது;

உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
- குக்கர் வந்தது;

விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
- கேஸ் அடுப்பு வந்தது;

வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
- மசாலா பொடி வந்தது;

பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
- பிரிட்ஜ் வந்தது;

மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
- வீடியோ கேம் வந்தது;

பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
- டி.வி. வந்தது;

இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

ஓட்டுக்கு 2000 ரூபாய்? வீட்டுக்கு வந்தது.

கெட்டவர்களின் ஆட்சி நாட்டுக்கு வந்தது .

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???

படித்து பகிர வேண்டிய தகவல்...

30/07/2018

Sweet potato is staple food for diabetes

It is naturally sweet and these fibrous roots have long been considered as suitable diabetics food as their natural sugars are slowly released into the bloodstream, ensuring the balanced and regular source of energy, regulating blood sugar, and helping stabilize and lower insulin resistance. ✊✊✊

Goodnight dear all!

23/07/2018
11/05/2018

Do your children spend more time on mobile phones? Turn away them to a world of nature.

Today’s children are growing up in a radio-frequency environment that never existed in human history before. The radiation emitted by mobile phones and mobile phone masts can have adverse effects on children.

The possible health hazards of mobile phones for children are as follows:

A. Non-Malignant Tumors:
The study has shown that children who use mobile phones have a possibility of developing non-malignant tumor in the brain and ear.

B. Cancer:
The WHO has classified cell phone radiation as ‘possibly carcinogenic to humans’. Children absorb more than 60 percent of the radiation into the brain than adults. Their brain’s thinner skin, tissues, and bones allow them to absorb the radiation twice than the grown-ups. Their developing nervous system makes them more vulnerable to this ‘carcinogen’.

C. Effects On The Brain:
Scientists have discovered that just 2 minutes of the phone call can alter the electoral activity of the kid’s brain for up to an hour. The radio waves from the mobile pe*****te deep into the brain, not just around the ear. The disturbed brain activity could impair children’s learning ability and other behavioral problems. It could even affect their mood and ability to learn in the classroom if they have used the phone during the break time.

Please engage them in the eco-activities.

20/04/2018

சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனாலேயே ‘கிராமத்தின் மருந்தகம்” என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது. வேப்பமரம் ஆதிசக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது.

இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை.

அவ்வகையில் வேப்பம் பூவின் மருத்துவ பயன்களை சிறிது காண்போம்!

வாயுத்தொல்லை,​ ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்பார்கள்.

5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும்.

கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும்.

நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.

வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க உடல் பித்தம் தீரும்.

காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.

வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.

வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.

நன்றி விவசாயத்தை காப்போம்.

28/03/2018
நாட்டுரக காய்கறி விதைகள் -(country seeds) Each : Rs.12/-Location - Ram nagar, MadipakkamCity - ChennaiMobile/WhatsApp - ...
28/02/2018

நாட்டுரக காய்கறி விதைகள் -
(country seeds)

Each : Rs.12/-

Location - Ram nagar, Madipakkam
City - Chennai

Mobile/WhatsApp - 9840721194

1. தக்காளி-tomato
2. வெண்டை-ladies finger
3. மிளகாய்-Chilly
4. கத்தரி-brinjal
5. பீர்க்கங்காய்-ridge gourd.
6. புடலங்காய்-snake gourd
7. பாகற்காய்- bitter gourd
8.மிதி பாகல்- small bittergourd
9. சுரைக்காய்- bottle gourd
10.வெள்ளரிக்காய்-cucumber
11. பீன்ஸ்-beans
12.செடி அவரை -Broad Beans
13.முள்ளங்கி-radish
14. கொத்தவரை-clusterbeans
15. பீட்ரூட்-Beetroot
16..சிறுகீரை-Amaranthus tricolor /Tropical Amarnath
17.சிவப்பு தண்டுக்கீரை-(red stem)-Amaranthus Caudatus
18.பச்சைதண்டுக்கீரை-(green stem)-Amaranthus Caudatus
19.கொத்தமல்லி-coriander
20.அரைக்கீரை-Marsilea quadrifolia
21.பாலக்கீரை -Spinach
22.புளிச்சக்கீரை -Gongura
23.அகத்தி -Sesbania

செல் : 9840721194

10/12/2017

* #உண்மையான கருப்பட்டி அறிவது எப்படி?

பனைவெல்லம், கருப்பட்டி, கருப்புக்கட்டி, பனைஅட்டு, பானாட்டு, பனங்கருப்பட்டி எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

#கருப்பட்டி ரத்தத்தைச் சுத்திகரித்து, உடலைச் சுறுசுறுப்பாக்குவதோடு, மேனியைப் பளபளக்கவும் ஆக்கும்.

#பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த இதனைக் கொடுத்தால், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பப்பை வலுப்பெறும்.

#காபியில் சர்க்கரைக்குப் பதிலாக, இதைப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும் என்பது பழங்கால வைத்தியம். அதனால்தான் கிராமங்களில் கருப்பட்டிக்காபி குடிக்கும் பழக்கும் புழக்கத்தில் உள்ளது. இதனால்தான் #சர்க்கரை நோயாளிகளும் கருப்பட்டிக் காபி குடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

கருப்பட்டி, பனங்கற்கண்டு, சில்லுக் கருப்பட்டிகளின் தேவை வருசம் முழுக்க இருந்துக்கிட்டே இருக்கு. தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துலயும், வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கத்துலயும் கருப்பட்டி தொழிலில் போலிகள் அதிகம் உருவாகிவிட்டது. பனை மரங்களின் அழிவு போலிகளின் வரவுக்கு ஒரு முக்கியமான காரணம்.

#கருப்பட்டி காய்ச்சப் பயன்படும் தாச்சுவில் 15 லிட்டர் பதநீரை ஊற்றி, ஒன்றரை முதல் ரெண்டு மணி நேரம் வரை கிளறி இறக்கி மண் சட்டி, சிரட்டைகளில் ஊற்றினால் 3 கிலோ கருப்பட்டிதான் கிடைக்கும். பதநீர் மூலம் தயாரிக்கப்படும் உண்மையான கருப்பட்டி பொதுவாக ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. அதேநேரத்தில் கலப்பட கருப்பட்டி கிலோ ரூ.150 முதல் 200க்கு விற்கப்படுகிறது. இதனால் விலை குறைவாக கிடைக்கிறது என மக்கள் நினைத்து வாங்கி ஏமாந்து விடுகின்றனர்.

#கருப்பட்டியின் நிறம் கிடைப்பதற்காக சீனிப்பாகுடன் சல்பேட் வேதிப்பொருள் மற்றும் இஞ்சிச் சாற்றை சேர்த்து விடுகின்றனர். இதனால் உண்மையான கருப்பட்டிக்கும், கலப்பட கருப்பட்டிக்கும் வேறுபாடு தெரியாமல் உள்ளது.

உண்மைக்கும், போலிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இப்போது தோட்டத்தின் உள்ளேயே வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் கருப்பட்டி செய்ய ஆரம்பித்து விட்டனர். அதனால் போலிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

1. கருப்பட்டியை அல்லது கருப்பட்டித் துண்டைக் கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத்தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவையாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி. அதே நேரத்தில் கருப்பட்டியை மெல்லும் போது, வாசனையில்லாமல், சர்க்கரையின் இனிப்புச்சுவை மட்டும் உணர முடிந்தால் அது போலி கருப்பட்டி.

2. முழுக்கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும்.

3. கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் கருப்பட்டி சில நாட்களில், சில வாரங்களில் அதனுடைய கெட்டித்தன்மையில் இருந்து இளக ஆரம்பித்தால் அது போலி. கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருந்தால், அது ஒரிஜினல் கருப்பட்டி.

4. கருப்பட்டியை கையில் எடுத்து உற்றுப்பார்த்தால் பளபளப்பில்லாமல் இருந்தால் அது ஒரிஜினல். அதுவே, கருப்பட்டியின் மேல் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டினால் அது போலி.

5. தேங்காயைத் தட்டிப்பார்ப்பது போல, கருப்பட்டியின் அடிப்பாகத்தை தரையில் தட்டிப் பார்க்கவும். சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக் கேட்டால் அது போலி கருப்பட்டி.

6. ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டிதுண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.

7. நாள்பட்ட கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.

நன்றி - சுடர் .

Address

Chennai
600091

Alerts

Be the first to know and let us send you an email when Arokiya Vazhvu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Arokiya Vazhvu:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram