10/07/2024
திங்கிறது , தூங்கிறது . எப்போது வந்தாலும் நோயாளிகளை பார்ப்பது
என்று இருந்தவரை நான் நல்ல நிலையில் இருந்தேன் . அதாவது ஒவ்வொரு நாளும் நோயாளிகளை மட்டும் சந்திக்கின்ற நாளாகவே இருந்தது மற்ற எந்த வேலைகளையும் நான் செய்ததில்லை, அப்போது மருத்துவ பணியில் மணம் நிறைவடைந்து இருந்தது.
ஆனால் இப்போதுள்ள நிலை வேறு.எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் நோயாளிகளையும் சந்திக்கிறேன்.
நம் நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் ஒரு மருத்துவரே உள் நோயாளி ,வெளி நோயாளி மற்றும் அவசர சிகிச்சை என அனைத்து நோயாளிகளையும் சிகிச்சை செய்கிறார். அவசர சிகிச்சைக்கு 24 மணி நேரமும் ஒரு மருத்துவர் இருப்பது கட்டாயம் .
2. எக்காரணம் கொண்டும் பயிற்சி மருத்துவர்கள் (INTERNY ) அவசர சிகிச்சை செய்ய அனுமதிக்க கூடாது. மருத்துவரின் உதவியாளராகவும் மற்றொரு படிப்பை முடித்த மருத்துவரே இருக்க வேண்டும்.
3.ஒவ்வொரு 10 நோயாளிகளுக்கு ஒரு அவசர சிகிச்சை மருத்துவர் அவசியம் .
4. அவசர சிகிச்சை பிரிவில் கட்டாயம் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி செவிலியர் மட்டுமே பணியமர்த்த படவேண்டும்.
5.மருந்துகள் , வெண்டிலேட்டர்,ஆக்சிஜென் சிலிண்டர் , அனைத்துவித அவசர சிகிச்சை உபகரணங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் .
மலை மற்றும் காடுகள் உள்ள இடங்களில் விச முறிவு மற்றும் விலங்கு தக்குதல்களை சமாளிக்க மருத்துவ .வசதி.
6. பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவர்கள் தன்னார்வலராக தாமே முன்வந்து அவசர சிகிச்சை தேவைப்படும் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை காப்பாற்ற உதவியாய் இருக்கவேண்டும்.இல்லையேல் குறைந்த பட்சம் மருத்துவர்கள் ஆன்லைனில் அவசர சிகிச்சை மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கவேண்டும் . இது நோயாளிகள் அலைவதை தவிர்க்க உதவும். (சேலம் /சென்னை /பாண்டிச்சேரி )
7. (PANEL OF DOCTORS ) சிக்கலான நோய்களை பற்றி விவாதிக்க ஆன்லைனில் மருத்துவர்கள் ஒன்றுகூடி விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.
DR .K .தெய்வமணி ,BHMS .