Aromaa health tips

Aromaa health tips Promotes harmony and balance in your bodies systems.clearing blockages in a persons energy path is t

Promotes harmony and balance in your bodies systems.clearing blockages in a persons energy path is to maintain good health and prevent illness.

 #குக்கர்_என்கின்ற_விஷம்!.🔴 சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்.🔴 "எந்த ...
05/06/2018

#குக்கர்_என்கின்ற_விஷம்!.

🔴 சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்.

🔴 "எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.
சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்".

🔴 இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதைத்தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம்.

🔴 இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.

🔴 உதாரணம் – ப்ரஷர் குக்கர்
இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது
எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது.

🔴 இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில். இது மிகவும் ஆபத்தானது.

🔴 இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய கலவரக்காரர்களை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரப்பட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

🔴 ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது.
பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.

🔴 உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும்.

🔴 அதனால்தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் சமைக்கப்பட வேண்டும்.
மிருதுவானால் போதாது.

🔴 சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள். அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.
மண்பாண்டம் – 100%
வெண்கலம் – 97%
பித்தளை – 95%
சில்வர் - 90%

🔴 இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% - 13% தான் இருக்கும்.

🔴 இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம்
சர்க்கரை வியாதி,
முழங்கால் வலி,
விரைவில் முதுமை,
மற்றும் இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.

🔴 எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.

🔴 இதைப் போன்றே ரெஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் ஓவன் போன்ற காற்று, ஒளிபடாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே.

🔴 Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

#பழமைக்கு_மாறுவோம்!
#ஆரோக்கியமாக_வாழ்வோம்!!
#நோய்கள்_இல்லாத..
#அடுத்த_தலைமுறைக்கு..
#வித்திடுவோம்!!.👍

படித்தேன்!
பகிர்ந்தேன்!!

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தையை கேட்டு அதற்கு தவறுதலான அர்த்தம்கொண்டு பலர் வீடுகள...
05/06/2018

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!
இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தையை கேட்டு அதற்கு தவறுதலான அர்த்தம்கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.
ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின்,ஆகியவை கிடைக்கிறது.இவைகள் அனைத்தும் உடலை இளமையோடும்
ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகைப் பொருள்கள் இவைகளை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதையே முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லி வைத்தார்கள் ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா?.....

*குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில்  #மருதாணி # வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்...
10/05/2018

*குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் #மருதாணி # வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்*.

*பூண்டை உபயோகப்படுத்தும் முறை*1.   பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.2.   நாட்டுப்பூண்டையே அத...
05/05/2018

*பூண்டை உபயோகப்படுத்தும் முறை*

1. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

2. நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுதுங்கள், சைனா பூண்டை விட நாட்டுப்பூண்டிலேயே அதிக சத்து உள்ளது.

3. பூண்டை மறைமுகமான விதத்தில் பூண்டு ஊறுகாய், பூண்டு மாத்திரை போன்ற வடிவில் சாப்பிடுவதை விட நேரடியாக சாப்பிடுவதே நல்லது.

4. பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

5. பூண்டின் காரம் போக சிறிது மோர் அருந்தலாம் இல்லை என்றாலும் ஒன்றும் பாதிப்பில்லை.அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல நிறைய அதிகமாக சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

6. தினசரி ஒரு நபருக்கு ஆறு பல்லு விதம் கணக்கிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

7. பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.

8. பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும்.

9. காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக் கொதிப்பு அடங்கும்.

10.பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.

11. பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும்.

Best remedies...
02/05/2018

Best remedies...

01/05/2018

More simple and very effective try it ....

தினசரி 2 அத்தி பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.மலச்சிக்கலை...
01/05/2018

தினசரி 2 அத்தி பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு
பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.
இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்‌‌
29/04/2018

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்‌‌

*தைராய்டு நோய் கட்டுப்படுத்தும் பனை நுங்கு பாயசம்**தேவையான பொருட்கள்*தோல் நீக்கிய நுங்கு – ¼ கிலோவறுத்த சேமியா – 50 கிரா...
27/04/2018

*தைராய்டு நோய் கட்டுப்படுத்தும் பனை நுங்கு பாயசம்*

*தேவையான பொருட்கள்*

தோல் நீக்கிய நுங்கு – ¼ கிலோ
வறுத்த சேமியா – 50 கிராம்
முந்திருப்பருப்பு – 50 கிராம்
திரட்சை – 50 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
சர்க்கரை – 100 கிராம்

*செய்முறை *

முதலில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை நெய்யில் வறுத்துச் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். சிறிதளவு சுடவைத்து ஆற வைத்த பாலையும் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்னர் சேமியா சேர்த்து சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி பாயசம் போல் செய்யவும் தேவைக்கு நீர் அல்லது பால் சேர்த்து கொள்ளவும்.

இந்த பாயசத்தை தினசரி சாப்பிட்டு பாருங்கள், தைராய்டு நோய் கட்டுப்படுத்தும். இரத்த சோகை தீரும். உடல் பலம் பெறும்.

27/04/2018
*மூட்டு வீக்கம் குணமாக்கும் முள்ளங்கித் துவையல்**தேவையான பொருட்கள்*முள்ளங்கி       - ¼ கிலோபுளி             - 20 கிராம்ம...
13/04/2018

*மூட்டு வீக்கம் குணமாக்கும் முள்ளங்கித் துவையல்*

*தேவையான பொருட்கள்*

முள்ளங்கி - ¼ கிலோ

புளி - 20 கிராம்

மிளகாய் வற்றல் – 5 எண்ணிக்கை

உளுத்தம் பருப்பு – 10 கிராம்

புளி, உப்பு, எண்ணெய்,
பெருங்காயம் - தேவையான அளவு

*செய்முறை*

முள்ளங்கியை சுத்தம் செய்து, சிறிதாக அரிந்து வேகவைக்கவும். வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் சேர்த்து வறுத்து, முள்ளங்கியுடன் சேர்த்து அரைத்து பின்னர் சிறிது எண்ணெய் சேர்த்து தாளிக்கவும்.

*பயன்கள்*

நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, மூத்திர வியாதிகள் உள்ளபொழுது சாபிடலாம். உஷ்ண வியாதிகள் தீரும். மூட்டு வீக்கம் குணமாகும்.

Natural Painkillers will heal you without side-effects. Go for Drugs free health life
12/04/2018

Natural Painkillers will heal you without side-effects. Go for Drugs free health life

நிம்மதியான தூக்கம்:நல்ல வெதுவெதுப்பான நீரில் புதினாவைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சை ச...
11/04/2018

நிம்மதியான தூக்கம்:

நல்ல வெதுவெதுப்பான நீரில் புதினாவைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து தேன் கலந்து குடித்தால், இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

19/03/2018

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

பாதங்களில் ஏற்படும்வெடிப்பை போக்க சிலஎளிய வழிகள் உண்டு.அதைப் பற்றி பார்க்கலாம்.பப்பாளி:பப்பாளி பழத்தை அரைத்துபாதங்களில் ...
19/03/2018

பாதங்களில் ஏற்படும்வெடிப்பை போக்க சிலஎளிய வழிகள் உண்டு.அதைப் பற்றி பார்க்கலாம்.

பப்பாளி:
பப்பாளி பழத்தை அரைத்துபாதங்களில் வெடிப்பு பகுதியில்தேய்த்து வர வெடிப்பு மறைந்துவிடும்.

வாழைப்பழம்:
வாழைப்பழத்தை நசுக்கி,பாதங்களில் தடவி பத்துநிமிடம் வைத்து நீரில் கழுவிவர குதிகால் வெடிப்புகொஞ்சம் கொஞ்சமாகமறைய துவங்கும்.

மருதாணி:
மருதாணி இலைகளைஅரைத்து வெடிப்புபகுதிகளில் தேய்த்துவந்தால் வெடிப்பு குணமாகும்.

எலுமிச்சை சாறு:
வெதுவெதுப்பான சுடு நீரில்எலுமிச்சை சாற்றை கலந்துபாதங்களை வாரம்ஒருமுறை கழுவி வந்தால்பாதங்கள் மென்மையாகஇருக்கும்

கடுகு எண்ணெய்:
கடுகு எண்ணெய் தினமும்கால் பாதத்தில் தேய்த்துகழுவினால் சொரசொரப்புதன்மை நீங்கும்.

*வல்லாரை கஞ்சி* !!வல்லாரை கீரை ஒரு மருத்துவ மூலிகையாகும். வல்லாரை கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. காலை நே...
16/03/2018

*வல்லாரை கஞ்சி* !!

வல்லாரை கீரை ஒரு மருத்துவ மூலிகையாகும். வல்லாரை கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. காலை நேரத்திற்கு ஏற்ற உணவு வல்லாரை கஞ்சி. இப்போது வல்லாரை கீரையைப் பயன்படுத்தி வல்லாரை கஞ்சி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

வல்லாரை கீரை - 2 கப்

பச்சரிசி - 2 கப்

தேங்காய்த்துருவல் - 1 கப்

பூண்டு - 15 பல்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

🍀 வல்லாரை கஞ்சி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் வல்லாரை கீரையைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாக சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

🍀 அடுத்து பச்சரிசியை மிக்சியில் போட்டு ரவை போல் பொடித்து எடுத்துக்கொள்ளவும்.

🍀 பின்பு குக்கரில் பொடித்து வைத்துள்ள பச்சரிசி, வல்லாரை கீரை, பு ண்டு, தேங்காய்த்துருவல், தேவையான அளவு உப்பு, 6 கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து குக்கரை மூடி, 4 விசில் விட்டு இறக்கினால் வல்லாரை கஞ்சி ரெடி.

*வல்லாரை கீரையின் மருத்துவப் பயன்கள்* :

🍀 வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ , வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

🍀 தினந்தோறும் காலையில் வல்லாரை கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால், மூளை நரம்புகள் பலம் பெறும் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

🍀 வல்லாரை கீரையை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கினால் குடல் புண் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

🍀 தினந்தோறும் வல்லாரை கீரையைக் கொண்டு பல்துலக்கினால், பற்களில் உள்ள மஞ்சள் கரை நீங்கும்.

🍀 தினந்தோறும் வல்லாரை கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு அரைத்து, வாயில் போட்டு, பசும்பால் குடித்து வந்தால் படிப்படியாக மாலைக்கண் நோய் சரியாகும்.

01/03/2018

WE THANK EVERYONE FOR GIVING US MOTIVATION.

Promotes harmony and balance in your bodies systems.clearing blockages in a persons energy path is t

Address

Chennai

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when Aromaa health tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aromaa health tips:

Share

Category