Galaxy Homeo Clinic

Galaxy Homeo Clinic Homoeopathic treatment for All type of Chronic Diseases
- Alopecia
- Thyroid Disorder
- Sterlity
- Infertility
- Bronchial Asthma
- Chronic Headache

16 YRS EXPERIENCED IN HOMEOPATHY FIELD

ஓமியோபதி’ எனும் `ஒல்லியல்’ மருத்துவம்விவரங்கள்எழுத்தாளர்: எ.செம்மலர்தாய்ப் பிரிவு: சிந்தனையாளன்பிரிவு: சிந்தனையாளன் - பி...
08/05/2017

ஓமியோபதி’ எனும் `ஒல்லியல்’ மருத்துவம்

விவரங்கள்
எழுத்தாளர்: எ.செம்மலர்
தாய்ப் பிரிவு: சிந்தனையாளன்
பிரிவு: சிந்தனையாளன் - பிப்ரவரி 2016
வெளியிடப்பட்டது: 30 மே 2016

ஒத்த நோய்க் குறிகளை உருவாக்கக் கூடிய மருந் தாற்றலைக் கொண்டு நோயை சரிசெய்தல் அல்லது 'ஒத்தது ஒத்ததைக் குணமாக்கும்’ என்பதே ஓமியோ பதியின் அடிப்படைத் தத்துவம் ஆகும். மனிதன் என்பவன் கை, கால், தலை, முகம் போன்ற உறுப்புகள் இணைந்த கூடு எனக் கூறினால் அது தவறு. அந்தக் கூட்டிற்குள் உயிர் என்ற ஒரு ஆற்றல் இருந்தால்தான் அது மனிதன்.

அதாவது உறுப்புகளின் சேர்க்கையை மனிதன் என்று கூறிவிட முடியாது. அதனுள்ளே உள்ள சக்திதான், ஆற்றல்தான் மனிதனை முழுமையடையச் செய்கிறது. அதைத்தான் உயிராற்றல் என்கிறார் ஓமியோபதியின் தந்தை சாமுவேல் ஹனிமன். மனித உடலை இயக்கும் ஆற்றல் இது. நோயை ஏற்கும் திறனும், நோயை எதிர்க்கும் திறனும் அதனிடம் உண்டு. உருவம் இல்லாத, கண்ணுக்குப் புலப்படாத அந்த ஆற்றல்தான் உயிராற்றல் ஆகும்.

ஒவ்வொரு பொருளும் அதற்கே உரிய தனித் தன்மையோடு இருக்கிறது. அத்தன்மையை மையமாக வைத்துதான் ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு நிகழ் வும், ஒவ்வொரு உயிரும் அது அதுவாகவே இருக் கின்றன. எனவே அந்த மையத்தில் மாற்றம் ஏற் படாமல் ஒருபோதும் அந்த உயிரியில் மாற்றம் ஏற் படாது. ஒன்றன் மையப் பாதிப்புதான் புறச்சுற்றில் வெளிப்படுமேயொழிய புறச்சுற்றில் தனித்து எந்த மாற்றமும் நிகழாது.

அகமுரண்பாடே முதன்மையான முரண்பாடு. எனவே உயிராற்றலில் ஏற்படும் பாதிப்பே பின் நோயாக வெளியுறுப்புகளில் வெளிப்படுகிறது. இதனை, மருத்துவர் கென்ட், ““symptoms are the outward expression of the internal sickness” என்று கூறுகிறார். அதாவது, உயிராற்றல் பாதிக்கப்பட்டுள்ளதன் வெளிப் பாடே, வெளியுறுப்புகளில் ஏற்படும் நோய் பாதிப் பாகும். மேலும், ““Every individual is susceptible to certain things; is susceptible to sickness and equally susceptible to cure” என்றும் கூறுகிறார். அதாவது, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட பொருளை ஏற்கும் திறன் உண்டு. அது நோய்க்கும் நலனுக்கும் சமமாகப் பொருந்தும் என்பதாகும்.

கிருமிக் கொள்கையை உலகுக்கு எடுத்துரைத்தவர் லூயி பாஸ்டர் என்பவராவார். நோய்க்கான காரணம் நுண்ணுயிரி கள் தான் என்றும் அவற்றை அழிப்பதுதான் நோயிலிருந்து மனிதனைக் காக்கும் ஒரே வழி என்றும் அறிவித்தார். அதே மனிதர் மரணப்படுக்கையில் இருக்கும்போது, நோய்க்கான காரணம் நுண்ணுயிரிகள் மட்டுமல்ல அதற்கு முன்னே அவனுள், அவன் மையத்தில் மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாகவே கிருமிகள் அவனைத் தாக்குகின்றது என்பதைத் தெளிவாக உலகுக்கு எடுத்துரைத்தார். கிருமிகள் மட்டுமே நோய்க்குக் காரணமல்ல; நோய் எதிர்ப்புத் திறனுள்ள உடல் அமைப்பும் (மையம்) தான் காரணம் என்பதை ஆய்வு முடிவுகளின் மூலம் வெளிப்படுத்தினார்.

எனவே, எவ்வளவுதான் வீரியம் மிக்க மருந்து களைக் கொண்டு கிருமிகளை அழித்தாலும், அவ னுடைய நோய் எதிர்புத்திறனுள்ள உடல் அமைப்பு, அதாவது, அவனுடைய மையம் (உயிராற்றல்) சரியா காத வரையில் அவன் புதிது புதிதான நோய்க்கு ஆட்பட்டுக் கொண்டேதான் இருப்பான். ஆக, கிருமி களைக் கொல்லும் மருந்துகளைக் கொண்டு மட்டுமே நோய்களை முழுமையாகக் குணமாக்க இயலாது என்பது திண்ணம். இந்தக் கிருமிக் கொல்லும் மருந்து கள் (antibiotic) மனிதர்களுக்கு இயற்கையிலேயே அமைந்துள்ள நோய் எதிர்ப்பாற்றலைப் பாழடித்து மேலும் பல புதிய நோய்கள் தோன்றுவதற்குக் காரண மாக அமைந்துவிடுகின்றன.

இந்நிலையில் கிருமிக் கொல்லும் மருந்துகளை அளிப்பதைவிட, உடலின் மையத்தை, உயிராற்றலை, சரிசெய்யும் மருந்தே மனிதன் எல்லாப் பிணிகளிலிருந்தும் விடுபடத் தேவைப் படுகிறது என்பதைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். உயிராற்றலுக்கு மருந்தளிப்பதன் மூலம், நோய் ஏற்புத்திறனுள்ள உடல் அமைப்பு, நோய் எதிர்க்கும் திறனுள்ள உடல் அமைப்பாகப் பலப்படுகிறது. இத்தகைய சிறப்பான செயலைத்தான் ஓமியோபதி எனும் ஒல்லியல் மருந்துகள் செய்கின்றன.

அதவாவது, இவை மனிதனுடைய உயிராற்றல் நிலையில் வினைபுரிந்து `சுயநலமாக்கல் ((self healing process)’ செயலைத் தூண்டிவிடுவதால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் அதன் வேர் வரை அழிக்கப்பட்டுக் உடல் குணமாக்கப்படுவதுடன் அவ் உடலின் இயக்கமும் சீரடைகிறது.

தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் இம் மருத்துவத்தின் மருந்துகள் ஆற்றல் வடிவில் இருப்பதால், ஆற்றல் வடிவிலுள்ள நோயை, அதாவது, பாதிப்படைந்த உயிராற்றலை ((Immunity power) நேரடியாகத் தொடமுடிகிறது; நோயைக் குணமாக்க முடிகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு மனிதன் எவ்வகையான நோய்க்கு ஆட்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் பாதிக்கப்பட்ட உயிராற்றலின் வெளிப்பாடே.

ஒரு ஆற்றலைச் சரி செய்ய வேண்டுமெனில், அது இன்னொரு ஆற்றலால்தான் முடியும். எனவே மருந்தின் பருப்பொருளில் இருந்து ஆற்றலை வெளிக் கொணரத்தான் மருந்தை வீரியப்படுத்துதல் என்கிற முறையை ஓமியோபதி மருந்து தயாரிப்பில் கொண்டு வந்தார் சாமூவேல் ஹானிமன் அவர்கள்.

அணு பிளவுபடும்போது எவ்வாறு ஆற்றல் வெளிப்படுகிறதோ அதுபோலவே மருந்தின் பருப்பொருளை ஆல்க ஹாலில் கலந்து குலுக்கக் குலுக்க ஆற்றல் வெளிப்படுகிறது. கரையாத பருப்பொருளாயின் அதைப் பால் சர்க்கரை மாவில் கடையக் கடைய ஆற்றல் வெளிப்படுகிறது. இதைத்தான் வீரியப்படுத்தும் முறை என்கிறோம். ஒல்லியல் மருத்துவத்தில் முதல் சிறப்பம்ச மாகக் கருதப்படுவது இந்த வீரியப்படுத்தும் முறைதான்.

இரண்டாவது சிறப்பம்சம் என்னவெனில் குறைந்த அளவு மருந்து (minimum dose). அதாவது, மிக நுண்ணிய அளவு மருந்துப் பொருளைக் கொடுப் பதுடன், அம் மருந்தின் பருப்பொருள் ((crude substance) என்பதே அதில் இல்லாத அளவுக்கு வீரியப்படுத்தப்பட்டு ஆற்றலாக மாற்றப்பட்டு விடுவதால் பக்க விளைவுகள் என்பதே இல்லாமல் போய் விடுகிறது.

மூன்றாவது சிறப்பம்சம் (single remedy) ஒரே மருந்து என்பதுதான்.

இது சர்க்கரை நோய்க்கான மருந்து, இது தூக்கம் வருவதற்கான மருந்து, இது வயிற்றுப்புண்ணுக்கான மருந்து என்று ஒரு மனிதன் தனக்கு இருக்ககூடிய பல நோய்களுக்கு ஒரே நேரத்தில் பல மருந்துகள் எடுத் துக் கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஓமியோபதியில் நோய்க்கு மருந்தில்லை, நோயுற்ற மனிதனுக்கே மருந்து என்பதால் அவனுக்குப் பல நோய்கள் இருந்தபோதும் அவனுக்குரிய ஒரு மருந்தில் அத்தனை நோய்களும் குணமாகிறது.

நோய்க்கு மருந்து என்றால் சர்க்கரை வியாதிக்கு ஒரு மருந்து, இரத்த அழுத்தத்திற்கு ஒரு மருந்து, தைராய்டு சுரப்பி வீக்கத்திற்குத் தனி மருந்து எனப் பல மருந்து கள் தேவை. ஆனால், ஓமியோபதியில் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருந்து என்பது அறவே இல்லை. நோயுற்ற மனிதனின் உடல் மையத்திற்கு (உயிராற்றலுக்கு)தான் மருந்து. மனிதன் எப்போதும் தன்னை அறியாமலேயே, தன் மரபணுவில் உள்ள எண்ணங்களோடு, இப்போதிருக்கும் சுற்றுப்புறச் சூழ் நிலையால் உருவாகும் மாற்றங்களையும் ஒன் றிணைத்து அதற்கேற்ற தனித்தன்மை உடையவ னாகத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறான். ஒவ்வொரு மனிதனும் தோற்றத்தில் மட்டுமின்றி பேசும் முறைகளிலும் எண்ணங்களிலும் உணர்வு களிலும் கூட மற்றவரிடமிருந்து மாறுபடுகிறான்.

மேலும் நாம் ஒரு நிகழ்வை எதிர்கொள்ளும் முறையி லும் இந்த உலகத்தை நாம் பார்க்கும் பார்வையிலும் நமது இயல்பான பண்பிலும் நாம் உண்ண விரும்பும் உணவிலும்கூட வேறுபடுகிறோம். அத்தோடு இந் நாள்வரை நாம் அனுபவித்து வந்துள்ள நோய்களிலும் கூட மற்றவர்களிடமிருந்து மாறுபடுகிறோம். இவ்வாறு ஒவ்வொருவருக்கும் தனித்துவம் இருக்க, சர்க்கரை நோயுள்ள 10 நபருக்கும் ஒரே மருந்து என்பது முறையானது அல்லவே! சர்க்கரை நோயுள்ள ராமசாமிக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கும், அதே நோயுள்ள சுப்பிரமணிக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கும். சர்க்கரை நோயுள்ள அனைவருக்குமே ஒரேவித எண்ணப்போக்கு இருக்கும் என்பது சாத் தியப் படாத ஒன்று.

எனவே, இராமசாமியின் தனித் துவம் என்னவென்று கண்டறிந்து அவரின் தனித் துவமான அந்த உடல் மையத்திற்கு ஒரு மருந்தும். சுப்ரமணியின் உடல் மையத்திற்கு ஏற்றாற்போல் தனிமருந்தும் தேவைப்படுகிறது. எனவேதான் சர்க் கரை நோய் என்ற நோய்க்கு மருந்தில்லை, இராம சாமி என்கிற தனித்துவமான மனிதனின், சுப்பிரமணி என்கிற தனித்துவமான மனிதனின் உடல் மையங் களுக்கே மருந்து என்று ஒல்லியல் மருத்துவம் கூறு கிறது. இதைத்தான் `நோய்க்கு மருந்தில்லை; நோயுற்ற மனிதனுக்கே மருந்து (Homeopathy treats the patients not disease)’ என்கிறோம். அதுபோலவே இராமசாமி யின் எண்ண ஓட்டமும், சுப்பிரமணியின் எண்ண ஓட்டமும் ஒத்திசைவாக இருந்து, இருவரின் தனித் துவமும் ஒரே இருந்தால் இருவருக்கும் ஒரே நோய்தான் வர வேண்டும். என்கிற அவசியமில்லை.

இராமசாமிக்குச் சர்க்கரை நோயும், சுப்பிரமணிக்குப் புற்றுநோயும் வரலாம். ஆனால், இங்கே மருந்து என்பது ஒரே மாதிரியான தனித்துவம் கொண்ட இருவருக்கும், நோய் வேறுபட்டு இருப்பினும் மருந்து ஒன்று தான். எனவேதான், ஒரே மருந்து வெவ்வேறு நோய்களுக்குக் கொடுக்கப்படுவதும், ஒரே நோய்க்கு வெவ்வேறு மருந்து கொடுக்கப்படுவதும் ஆன விந்தை இங்கே நிகழ்கிறது. இதை அறிந்துதான் நவீன மருத்துவத்தின் தந்தையான சர்.

வில்லியம் ஆசுலர் என்பவர்,`நல்ல மருத்துவன் நோயைக் குணப் படுத்துகிறான்; உயர்ந்த மருத்துவன் என்பவன், அந்நோய் பெற்றிருக்கும் மனிதனைக் குணப்படுத்து கிறான் (The good physician treats the disease the great physician treats the patient who has the disease)’’ என்று கூறினார். ஆங்கில மருத்துவத்தின் தந்தையான ஆசுலர், ஓமியோபதி மருத்துவத்தின் தந்தையான ஹானிமனைப் பற்றி கூறுகையில், `மருத்துவ உலகிற்கு ஹானிமனை விட அதிகமாக வேறுயாரும் நன்மை செய்து விடவில்லை’’ என்று கூறுகிறார்.

ஓமியோபதியின் நான்காவது சிறப்பம்சம், ``துயரர் ஆய்வு’’. அதாவது, தனித்துவ மனிதனின் மையத்தை கண்டறியும் ஆய்வு.

ஓமியோபதியில் துயரர் ஆய்வு என்பது ஒரு கலை. அவருடைய கனவு, பொழுதுபோக்கு, சிறு வயது கால கட்டம், சந்தோசத்தில் அவரது வெளிப்பாடு, துயரத்தில் அவரது வெளிப்பாடு, நோயால் அவரின் மனதில் ஏற்பட்ட பாதிப்பு, வாழ்வில் ஏற்பட்ட பாதிப்பு, நோயுற்ற தால் எதைச் செய்யமுடியாமல் தவிக்கிறார் என்பது போன்ற பல நுணுக்கமான கேள்விகளைக் கேட்டு அவரை முழுமையாக ஆய்வு செய்கிறோம். அதாவது, மற்றவரிடமிருந்து இவரை வேறுபடுத்தியது எது? இவரை இந் நோய்க்கு உரியவராய் மாற்றிய தனித்துவ அம்சம் என்ன? எத்தகைய ஆழமான உணர்ச்சிகளும், உணர்வுகளும், ஏமாற்றங்களும் அவரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்தின என்பதைக் கண்டறிகிறோம். ஓமியோபதி மனித உடலை, மனித உள்ளத்தின் வெளிப்பாடாகப் பார்க்கிறது. அதாவது ஒருவருடைய உணர்ச்சிகள், எண்ணங்கள், அச்சங் கள், கருத்துகள், உள்ளக் கிளர்ச்சிகள், மேலும் இவற் றின் எதிர் விளைவான செயல்பாடுகள் இவற்றோடு கூடவே நலம் நாடுவோரின் ஏற்புத் தன்மை உள்ளிட்ட அனைத்தையும் ஓமியோபதி ஆய்வு செய்யும். உள்ளக் கிளர்ச்சிகள் எப்போதும் வெளி மனதால் ((conscious mind) மறைத்து வைக்கப்படுகின்றன.

அத்தகைய நிகழ்வுகளை முழுமையாக வெளிப்படுத்தும் அம்சங்கள் என்னவெனில், அவரை மிகவும் பாதிக்கும் அம்சங்கள், கனவுகள், ஆர்வங்கள், பொழுதுபோக்கு கள், குழந்தைப் பருவ இயல்புகள், ஆசைகள், கற்பனைகள், குறைபாடுகள் ஆகியவையே ஆகும். ஓமியோபதி மருத்துவர் இவை தொடர்பான கேள்விகளை எல்லாம் கேட்பதற்கு இதுவே காரணமாகும்.

ஓமியோபதியில் சொல்லப்படும் முழுமையான அணுகுமுறை என்பது நலம் நாடுவோரின் உடல், உள்ளம் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கல்களை இவ் விரண்டுக்கும் அப்பால் சென்று ஆற்றல் மட்டத்தில் ஏற்படும் உணர்ச்சி நிலைகளை வைத்து ஆய்வு செய்வதாகும்.

ஒரு மனிதனை முழுமையாகக் குணப்படுத்த வேண்டுமாயின் இந்த ஒன்றுபட்ட அணுகுமுறை ஒரு கட்டாயமாகும். ஓமியோபதியின் பிரதான நோக்கம் நோயுற்ற உடலுக்கு மட்டுமே மருத்துவம் செய்வதன்று; மாறாக நோய்க்கு அடிப்படையான காரணத்தை நீக்குவதாகும். அதாவது, நோய்க்கு உள்ளாகியுள்ள உயிராற்றலை குணப்படுத்து வதே ஆகும். இது உடல் அளவில் நலத்தை ஏற் படுத்துவது மட்டுமின்றி பாதிப்புக்குள்ளாயிருக்கும் உடல் மற்றும் உள்ளம் இரண்டுக்கும் இடையே ஓர் ஒத்திசைத்த அமைதிச் சமநிலையை உருவாக்குவ தாகும்.

பின்னர் இது உடலுக்குள்ளும் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி விடுகிறது. இவற்றோடு நலம் நாடுவோரின் தூக்கம், பசி, தாகம் ஆகியவற்றிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மன அளவில் அச்சம், கவலை, பதற்றம், முதலிய உணர்ச்சி நிலைகளில் மேம்பாடு ஏற்படும். நலம் நாடுவோர் தம் அன்றாட வாழ்வில் எதிர்ப்படும் மன அழுத்தங்களை எதிர் கொள்ளும் துணிவு வந்துவிடும்.

அத்தோடு அறிவு, உணர்ச்சி ஆகியவற்றில் இருக்கக்கூடிய பொருந்தா நிலைகளை உணர்ந்து கொள்ளும் விழிப்பு நிலை உருவாக்கிவிடும். இதுபோன்ற விழிப்புணர்ச்சி வாழ் வின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் பார்க்கும் சுதந்தரப் பண்பை வழங்கும். இதுவே உண்மையான நோய் தீர்க்கும் தத்துவமாகும்.

இந்த மிக உயர்ந்த இலக்கினை அடைவதற்கு மனிதனின் ஒவ்வொரு அம்சத்தையும் அறிந்து கொள்வது ஓர் ஓமியோபதி மருத்துவருக்கு அவசிய மாகும். இதற்காக அவர் செலவிடும் நேரம் ஆளுக்கு ஆள் மாறுபடும். அதாவது ஒருவர் எந்த அளவுக்குத் தன்னைப் புரிந்து கொண்டு விழிப்போடு இருக்கிறார் என்பதைப் பொறுத்து மாறுபடும். அதாவது முதல் முறை பார்க்கும்போது மட்டும் ஒரு மணி நேரமோ அல்லது 2 மணி நேரமோ கூட ஆகலாம். இத்தகைய முழு ஆய்வினை மேற்கொள்வதற்காக, ஓமியோபதி யின் ஐந்தாவது சிறப்பம்சம் (proved on human beings) அனைத்து மருந்துகளும், ஆரோக்கிமான மனம், மற்றும் உடல்நிலை கொண்ட மனிதர்களிடத்தில் கொடுத்து நிரூபணம் செய்யப்பட்டவை ஆகும்.

ஒரு ஓமியோபதி மருந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும் மனிதரிடத்தில் அதிக அளவு கொடுக்கும் போது அந்த மருந்துக்குரிய அறிகுறிகள், அதாவது அந்த மருந்து என்னென்ன நோய்களை குணப் படுத்துமோ அந்த நோய்கான அறிகுறிகள் அனைத் தும் அம் மனிதரிடத்தில் உருவாகும். அதே மருந்தை நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களிடம் கொடுத்து, அதே அறிகுறிகள் அனைவரிடமும் தோன்றியதை ஆய்வின் மூலம் நிரூபித்துக் காட்டினார் ஹானிமன். அனைத்து அறிகுறிகளையும் (symptoms) தொகுத்து வைத்துக் கொண்டார்.

அந்த மருந்துக்குரிய தனித்துவமான அறிகுறிகள் இவை எனக் குறித்து வைத்துக் கொண்டார். அந்த அறிகுறிகளுடன் வரும் நோயாளர் களுக்கு அந்த மருந்தைக் கொடுத்தபோது நோய் முற்றிலும் நீங்கியத்தைக் கண்டறிந்தார். அதையும் நூற்றுக்கும் மேற்பட்டோர்களிடம் கொடுத்துப் பார்த்து நிரூபணம் செய்த பின்னரே உலகுக்கு அறிவித்தார். இவ்வாறு ஒவ்வொரு மருந்துகளுமே நல்ல உணர்வு நிலையிலுள்ள மனிதர்களிடம் பலமுறை கொடுத்து நிரூபணம் செய்யப்பட்டவைகளே ஆகும்.

`ஒரு மருந்து எதை உருவாக்குகிறதோ, அதை முழுமையாக போக்கக்கூடிய நீக்கக் கூடிய தன்மை யையும் அதனுள்ளே கொண்டுள்ளது’’ என்பதே ஓமியோபதி மருத்துவம் ஆகும். இதுதான் ஓமியோ பதியின் தத்துவமான, ``ஒத்தது ஒத்ததைக் குணப் படுத்தும்’’ என்பதாகும்.

மேலும், ஓமியோபதியைப் பற்றி ஒரு தவறான கண்ணோட்டம் பரவலாக இருந்து வருகிறது. என்ன வென்றால் `ஓமியோபதி மருந்து மெதுவாக வேலை செய்யும்’ என்பதுதான் அது. உழைக்கும் மக்கள் விடிவுக்கான இம்மருத்துவத்தைப் புறக்கணிப்பதற்காக மற்றவர்களால் உருவாக்கப்பட்ட கருத்துதான் இது. அவர்களே ள்கூட ஓமியோபதி இவ்வளவு வேகமாக வேலை செய்கிறது என்பதை கண்கூடாக பார்த்த பின் இப்போது ஓமியோபதி மருந்துகளில் ஊக்க மருந்து (ஸ்டிராய்டு) கலக்கிறார்கள். அதனால்தான் உடலில் வேகமாக மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று புறங்கூற ஆரம்பித்து விட்டார்கள். நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தும் ஓமியோபதி முறையை, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் ஸ்டிராய்டு மருந்துகளோடு ஒப்பிடுவது மிகத் தவறானதாகும்.

அறுவைசிகிச்சை

முதலில், அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர் யார் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். செயற்கை யான நோய்களுக்குத்தான் அறுவை தேவைப்படும். செயற்கையான நோய் என்றால், திடீரென்று ஏற்படும் விபத்து, அதனால் ஏற்படும் எலும்பு முறிவு, கால், கைகள் இழப்பு முதலானவைகளே. இதில், நோய்க்கான காரணி புறவயமானது. இதில், அகக் காரணி இல்லை. மனிதனின் மனம் பாதிப்புக்கு ஆளாகி அதனால் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுகின்றது என்றால் ஓமியோ பதியில் மருத்துவம் உண்டு.

துயரர் ஆய்வுக் கலை யின் மூலம் நோயுற்றவரை முழுமையாகப் புரிந்து கொண்டு அவருக்கே உரிய தனிப்பட்ட மருந்தைத் தேர்வு செய்து கொடுக்கும்போது, அவர் நோயிலிருந்து முழுமையாக விடுபடுகிறார். அதைவிடுத்து நோய்க்கான காரணம் எதையும் கண்டறியாமல், அந்த உறுப் பினால் உனக்குத் தொல்லையா, சரி வா வெட்டி எடுத்து விடலாம் என்பது சரியான தீர்வு அல்ல. திரு. ஆப்ரகாம் மாஸ்லோ அவர்கள் கூறிய கருத்து இங்கே நினைவுகூறத் தக்கது. அது என்னவெனில்,`யார் ஒருவரிடம் சுத்தியல் மட்டும் இருக்கிறதோ அவர் அனைத்துப் பிரச்சனைகளையும் ஆணியாகவே பார்ப்பதற்கு பழக்கப்பட்டுவிடுவார்’’ என்பதாகும்.

அதாவது, மனிதனை உறுப்புகள் இணைந்த ஒரு பொருளாக மட்டுமே பார்ப்பவர்களின் கண்களுக்குத் தான், செயல்படாத அல்லது தொல்லை கொடுக்கின்ற உறுப்பைக் கழட்டி எறியத் தோன்றும். எனவே, காரணத்தை கண்டறிந்து களைவதை விட்டுவிட்டு உறுப்பை வெட்டி எடுப்பது சரியான தீர்வும் அல்ல; இயற்கையான நோயைக் கொண்ட அவர்களெல்லாம் அறுவை தேவைப்படும் மனிதர்களும் அல்ல. முன்பு கூறியதுபோல புறக்காரணிகள் நோயை உண்டாக்கி யிருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை தேவை.

ஒரு சிறந்த மருத்துவ முறை என்பது எப்படி இருக்க வேண்டுமென்றால்,

1. துயரரை எந்தவிதச் சிறு பலகீனத்திற்கும் ஆளா காமல் காப்பதாக இருக்க வேண்டும்.

2. அவரை முழுவதுமாக நலப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

3. அந்த நலமாக்கல் விரைவாகவும், இதமாகவும், முழுமையாகவும் நடைபெற வேண்டும்.

4. அது எளிய முறையில் எந்த வித ஊறும் விளை விக்காத வகையில் எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய தத்துவத்தின் அடிப்படையில் நடைபெற வேண்டும்.

5. துயரரை நலமாக்குவது மட்டுமன்றி அவருடைய எதிர்ப்பாற்றலைக் கூட்டி அவரைப் பல நோய்களிலிருந்து தன்னைத்தானே பாதுகாத்துக் கொள் ளும் ஆற்றல் உள்ளவராக மாற்றுவதற்கு உதவு வதாக இருக்கவேண்டும்.

6. ஒரு சிறந்த மருத்துவ முறை என்பது மனித சமூகத் தின் சாரத்தை அறிந்திருக்க வேண்டும்.

7. மனிதன் சமூகம் சார்ந்தவன் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நலமுள்ள நிலை, நோயுற்ற நிலை என்ன என்பது பற்றிய ஆழமான புரித லோடு அணுகுவதாக இருக்க வேண்டும்.

8. மனிதனைச் சாதாரண நிலையிலிருந்து உன்னத நிலைக்கு மாற்றுவதாக இருக்க வேண்டும்.

9. ஏழை எளிய மக்கள் அனைவராலும் எளிதில் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

10. மனிதனைப் பொருளாகப் பார்க்காமல் முழுமையான ஆற்றலாகப் பார்க்கின்ற அணுகுமுறை வேண்டும்.

மேற்கூறிய அனைத்து தன்மைகளையும் கொண் டுள்ளதாக இருக்கும் ஒரே மருத்துவம் ஓமியோபதி எனும் ஒல்லியல் மருத்துவமே ஆகும்.

17/04/2017

Zumba Sexy workout for better s*x life :

Zumba is a dance form merged with a fitness routine that touches on nearly every muscle and joint. Hips and abs are prime areas of focus, and flexibility is quite important too.

Each Zumba class starts and ends with the standard warming and cooling own breathing and motion exercises.

It will also help you to burn your extra calorie and fat.

17/04/2017

Broccoli helps you get pregnant faster :

It increases fertility by cleansing the body from hormone metabolites such as an excess of oestrogen metabolites in the body, which disrupt the normal pregnancy hormones.

Thus, you must eat broccoli in your salad, or have it steamed or add it in soups to clear the toxins from the body, and thus helping you in getting pregnant faster.

09/04/2017

நில்… கவனி… சாப்பிடு! –

*இயற்கை தந்த அருமருந்து இளநீர்*


“இளநீர்…” என்ற வார்த்தை யாருக்குத்தான் பிடிக்காது?! எவ்வளவு இதம், என்னவொரு குளுமை! ஆனால் இளநீர் உடலுக்கு குளுமை தருவதைத் தாண்டி, இன்னும் எண்ணற்ற பலன்களை வழங்கக் கூடியது. அவற்றை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம்! கோடை காலம் வந்துவிட்டது. தகிக்கும் வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க, இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை. பழரசங்கள் தொண்டைக்கு இதமாக இருந்தாலும், சிரமமின்றி, செலவின்றி மிகவும் தூய்மையாகக் கிடைக்கக் கூடியது இளநீரே. கோடை காலத்தில் இதைத் தேடிப் போக வேண்டிய அவசியமில்லாமல், எல்லா ஊர்களிலும் ஆங்காங்கே சாலையோரங்களில் குவிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. மருந்து, மாத்திரைகள் சாப்பிட நேரும்போது, கூட இளநீர் சாப்பிட்டால் உடலில் மருந்து பிடிபட பெரிதும் உதவுகிறது. இயற்கை தந்துள்ள வரப்பிரசாதமான இளநீர், ஒரு முழுமையான சத்துள்ள நீராகும். தேங்காய் என்பது பழமெனவும் கருதப்படுகிறது. பழங்களில் நடுவே உள்ள ‘எண்டோஸ்பெர்ம்’ என்ற பகுதியே, பழம் பெரிதாகி சதைப் பற்றுடன் உருவாகக் காரணம். இந்த ‘எண்டோஸ் பெர்ம்’ தேங்காயில் திரவ வடிவில் உள்ளது. வெப்பம் அதிகமாக உள்ள இடங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் பெரிதளவில் வளரும் தென்னை மரங்கள், இந்தியாவில் அதிக அளவில் கேரளாவில் காணப்படுகிறது. உஷ்ணம் அதிகமுள்ள பகுதியில் வாழும் மக்களுக்கு இயற்கையே தந்த அருமருந்து இளநீர் என ஆயுர்வேதம் எடுத்துரைக்கிறது. ஆயுர்வேத மருத்துவ சாஸ்திரத்தின்படி இளநீர், உடலின் முக்கிய செயல்கள் பலவற்றை எளிதாக்க மிகவும் உதவும் ஒரு மருந்து. நோய் தடுக்கும் இளநீர்! உடல் உஷ்ணத்தை பெரிதளவில் தணிக்கும் இளநீர், ஜீரண உறுப்புகள் சரியாக இயங்கத் தேவையான சூட்டை மட்டும் உடலில் தங்க வைக்கிறது. இதனால் கோடைக்காலத்தில் உடல் சூடு அதிகமாவதால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளை இளநீர் பருகுவதால் தடுக்கலாம். கோடை வெயிலில் பல தொற்று நோய்கள் உடலின் உள்உறுப்புகளையும், சருமத்தையும் பாதிக்கக் கூடும். அம்மை நோய், வயிற்றுப் போக்கு, காலரா போன்றவை ஏற்படும்போது உடலில் உள்ள சலைன் சத்தும், ஆல்பமின் சத்தும் குறையக் கூடும். இதனை சீராக்க தினமும் இளநீரை பருகுவது நல்லது. உடல் சூடு அதிகமாவதால் உடலில் உள்ள நீர் சுண்டிப்போய், சிறுநீர் கழிக்க சிலர் சிரமப்படுவர். இப்பருவத்தில்தான் சிறுநீர் தொற்றுநோய்களும் அதிகம் பரவுகிறது. இவர்கள் இளநீரைப் பருக சிறுநீர் தாராளமாகப் பிரியும். வளரும் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் இளநீர் சிறந்த டானிக். இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் சோர்வை இளநீரில் உள்ள இனிப்புத் தன்மை நீக்குகிறது. ‘உயிர் தரும் திரவம்’ இளநீர் ‘உயிர் தரும் திரவம்’ என மருத்துவர்களால் போற்றப்படுகிறது. காலரா, வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோர்க்கு, அவசர காலங்களில் ஊசி மூலம் இரத்தத்தில் கலக்க ‘டிரிப்ஸ்’ போல் ஏற்றப்படுகிறது. இதில் உள்ள தாதுப் பொருட்கள் உடலில் விரைந்து சென்று கலந்து, மயக்கமுற்ற நிலையிலிருப்போர்க்கு உயிர் தரும் மருந்தாகிறது. அதோடு நிறைய மருந்து, மாத்திரைகள் சாப்பிட நேரும்போது, கூட இளநீர் சாப்பிட்டால் உடலில் மருந்து பிடிபட பெரிதும் உதவுகிறது. இளநீரில் உள்ள சத்துக்கள் இளநீரிலேயே, இளசாக உள்ள காய்களின் நீர் அதிக இனிப்பு சுவையுடனும், முற்றின காய்கள் இனிப்பு குறைவாக இருப்பதையும் காணலாம். இதற்கு அதில் உள்ள ‘சுக்ரோஸி’ன் அனவே காரணம். இளசாக உள்ள போது இதில் ‘சுக்ரோஸ்’ அதிக அளவு இருக்கும். இதைத் தவிர இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் கணக்கிலடங்காது அடங்கியுள்ளது. தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. தாதுப் பொருட்கள், குறிப்பாகப் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் இளநீரைப் பருகக் கூடாது. அதேபோல் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் அல்லது தினமும் இளநீர் பருகக்கூடாது. முற்றின தேய்காயில் உள்ள இளநீரே இவர்கள் பருக உகந்தது. இளநீரைப் பருகுவதோடு, அதில் உள்ள இளசான தேய்காய்ப் பகுதிகளையும் சாப்பிடுவது நல்லது. அதோடு சதைப் பகுதி புரதச்சத்தும் நிறைந்ததாகும். சரும பாதுகாப்பிற்கு… இளநீர் பருக மட்டுமல்ல, வெப்பம் அதிகமாகும்போது சருமத்தில் ஏற்படும் வியர்குரு போன்றவற்றின் மீது தடவவும் நல்ல மருந்தாகும். முகத்தின் சரும பாதுகாப்பிற்கும் இளநீர் தடவிக் கொள்வது நல்லது. இத்தனை நல்ல குணங்களை கொண்டிருக்கும் இளநீரை நமக்களித்ததற்கு இயற்கைக்கு நன்றி கூறி பாராட்டுவோம்

*வெறும் வயிற்றில் இளநீர் வேண்டாம்*

மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர்.
சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.
எல்லா வகை இளநீரிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு, இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக, காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம். இளநீர் மிக மிகச் சுத்தமானது.
ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு, சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற, இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் ஜெல் என்ற பொருள், கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன.
பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

09/04/2017

கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

9 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

10. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

11. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

12. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

13. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

14. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

15. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

16. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

17. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

08/04/2017

Chickenpox :

Also known as varicella, chickenpox is a virus that often affects children. It is characterized by itchy red blisters that appear all over the body. Chickenpox was once so common it was considered a childhood rite of passage. It is well known that once you have chickenpox, you (almost) never have it again.

Since the chickenpox vaccine was introduced in the mid-1990s, cases have declined.

What Causes Chickenpox?

The varicella-zoster virus causes chickenpox. Most cases occur through contact with an infected person. The virus may be contagious several days before blisters appear, and it remains contagious until all blisters have crusted over. It is spread through saliva, coughing, sneezing, and contact with blisters.

Who Is at Risk?

Exposure to the virus through previous infection, vaccination, or immunity passed from mother to newborn (immunity lasts about three months from birth) reduces risk. Anyone who has not been exposed may contract the virus. Risk increases under any of these conditions:

You have had recent contact with an infected individual.
You are under 12 years of age.
You are an adult residing with children.
You have spent time in a school or childcare facility.
Your immune system is compromised due to illness or medications.
Relieving Symptoms

Most individuals diagnosed with chickenpox will be advised to control comfort while waiting for the virus to pass through the system. Parents will be told to keep children out of school and daycare to prevent spread of the virus. Infected adults will also be told to stay home.

Antihistamine medications or topical ointments may be prescribed or purchased over the counter to relieve itching. If you or your child is uncomfortable, any of these may soothe the skin:

lukewarm baths
regular application of unscented lotion
wearing lightweight, soft clothing
High-Risk Patients

Antiviral drugs may be prescribed to those who experience complications from the virus, or who are at risk for adverse effects. High-risk patients are usually young, elderly, or have underlying medical issues. These antiviral drugs do not cure chickenpox. Instead, they make the symptoms less severe, and make your body more likely to heal faster.

Possible complications of chickenpox include pneumonia and skin infections. These can be treated at home with antibiotics. Hospitalization may be needed in severe cases.

06/04/2017

Effects of Negative thoughts

The moment negative thought enters in your mind,

1 - Your body releases acid.
2 - Your aura decreases.
3 - Your resistance power decreases.
4 - Your system's functions are affected.
5 - Your heart beat increases.
6 - Your blood pressure increases.
7 - Unwanted hormones are released.

With that negative thought you may or may not harm others...but you definitely harm yourself!!!

Think positive remain healthy.

Seven Amazing Benefits of Clapping :

👏“Clapping” a Simple Striking of Hands but it’s much more than you Think.

👏Normally People clap to Appreciate others for their Good works and achievements or when they are in mood of Joy.

👏People also Clap while Singing songs, Bhajans, and Prayers at Holy places.

👏It is Scientifically proved that Clapping is very effective Exercise to cure many Human Diseases.

👏Clapping activates the Receptors in the Palms and cause activation of the large area of the Brain which leads the improvement in Health.

👏There are 39 different Acupressure points for almost all Organs on our Palm which are activated by Clapping and this action improves Your Health slowly but effectively.

👏Daily 10-20 minutes of Clapping in morning keeps You Fit and Active.

1. Clapping is an effective Medicine for the Person who suffers from Digestive Disorder.

2. Best Cure for Back pain, Neck pain and Joint pain.

3. Gout is a common problem with Old age People and can be easily cured by Clapping.

4. Helpful for Patient of Low Blood Pressure.

5. If someone is suffering from any Heart and Lung related disease then Clapping plays important role in curing these diseases also.

Clapping removes the obstacles from the Main and Collateral Channels and keeps You Fit and Healthy.

6. Children that practice clapping exercise daily make only few Spelling mistake and are Hard worker than others.
It improves their Handwriting.
The whole abstract of above given points is, Clapping sharpen the Brain of the Children.

7. Clapping increase the Immunity of the Person which provides the Strength to the Human body to fight against Diseases.

11/03/2017
01/03/2017

Health Benefits of Sunflower Seeds:

They control cell damage, thus playing a role in preventing cancer. This is because sunflower seeds are a good source of selenium, which is a proven enemy of cancer.

They contain bone-healthy minerals. Besides calcium, your bones need magnesium and copper to stay strong. Sunflower seeds have both these minerals. As a bonus, they also contain Vitamin E, which helps ease arthritic pain.

They keep you calm. Yes! The magnesium in sunflower seeds is reputed for soothing the nerves, thus easing away stress, migraines and helping you relax.

They bring a glow to your skin. The star in this role: Vitamin E again, which combats UV rays and keeps skin youthful.

They ease every condition that’s inflammatory in nature, such as joint pain, gastric ulcers, skin eruptions, asthma and such. That’s because sunflower seeds are loaded with antioxidants.

Just ¼ cup of sunflower seeds a day can keep heart troubles away. These small seeds disallow ‘bad’ cholesterol from sticking to the walls of your arteries, thus preventing heart attacks.

Address

NSK Nagar
Chennai

Telephone

9941063113

Website

Alerts

Be the first to know and let us send you an email when Galaxy Homeo Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Galaxy Homeo Clinic:

Share

Category