16/07/2023                                                                            
                                    
                                    
                                                                        
                                        அக்குபஞ்சர் சிகிச்சை ஆங்கில மருத்துவத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது?
ஒரு நோயாளிக்கு ஏற்படும் தொந்தரவு நோயின் அறிகுறியாகும். இந்த அறிகுறியையே நவீன மருத்துவம் நோயாக கருதி சிகிச்சை அளிக்கிறது. ஆனால் அக்குபஞ்சர் சிகிச்சை நோயின் மூல காரணத்தை கண்டறிந்த சீராக்குவதன் மூலம் நோயையும் - அதன் அறிகுறிகளையும் வேரோடு களைகிறது.
உதாரணத்திற்கு ஒருவருக்கு தலைவலி ஏற்படுகிறது. இதற்கு ஆங்கில மருத்துவம் முதலில் வலி நிவாரணிகளை கொடுத்துப் பார்க்கிறது. சரியாக போது தலையை ஸ்கேன் செய்து, பரிசோதித்து தலைவலி என்னும் அறிகுறியின் காரணத்தை தலையிலேயே தேடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் உண்மை நிலை என்ன? தலைவலி ஏற்படுவதற்கு தலை காரணம் அல்ல. மண்ணீரல் அல்லது இரைப்பை கோளாறுகளால் தலைவலி ஏற்படலாம். கல்லீரல், பித்தப்பை தொந்தரவுகளால் தலைவலி ஏற்படலாம். இதயம், இதயமேலுறையால் வெப்பம் சீரற்று கடத்தப்படும் போது தலைவலி ஏற்படலாம். சிறுநீரகம், சிறுநீர்ப்பையின் இயக்க குறைவால் தலைவலி ஏற்படலாம். நுரையீரலில் கழிவு தேங்கும் போது தலைவலி ஏற்படலாம். இன்னும் சொல்வதானால் தூக்கம் குறைவதாலும் மலம் கழிக்காவிட்டாலும், அதிகப்பசியின் போது உணவறிந்தாவிட்டாலும், பசிக்கு மீறிய உணவை உண்டாலும் தலைவலி ஏற்படலாம்.
மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தால் தோன்றுகின்ற தலைவலியை - தலையை பரிசோதப்பதன் மூலம் அறியவோ, நீக்கவோ முடியாது. உடலின் உள்ளுறுப்புக்களின் தேக்கம் கொள்கிற கழிவுகள், உடலின் வெளிப்புறத்தில் சில மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இந்த மாறுதல்கள் வெறும் அறிகுறிகளே. இதில் ஒன்றிரண்டு அறிகுறிகளை நீக்குவதன் மூலம் நோய் எக்காலத்திலும் குணமாகாது.
ஆங்கில மருத்துவம் நோய்க்கான காரணங்களை உடலிற்கு வெளியே தேடுகிறது. அக்குபங்சர் உடலிற்கு உள்ளேயே தேடி, தீர்வு காண்கிறது.