’நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்’
நோய் என்பது எனது புரிதலின் படி, ---
இறை தான் படைத்தவற்றை காக்க, தனது ஆற்றலை தொடர்ந்து தனது படைப்புகளுக்கு வழங்கி வருகிறது. அவ்வாறே மனிதனுக்கும் இறையாற்றலின் தொடர்பு - வழிகாட்டுதல் மனிதனுடைய நன்மைக்காக உள்ளது.
தனது மேம்பட்ட படைப்பான மனிதனுக்கான தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய வல்லதாக இறைவன்
இயற்கையை - பஞ்ச பூதங்களை படைத்துள்ளான்.
முறைப்படி இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கு மனிதன் அறிவுறுத்தப்பட்டுள்ளான். பிற மனிதர்களுடனும் அன்புடன் வாழ இறைவன் மனிதனை அறிவுறுத்தியுள்ளான்.
ஆணவத்தால் வந்த தற்பெருமை, காரணமாக மனிதன் இறையின் அறிவுறுத்தல்களை மீறி, பயம், கவலை, வெறுப்பு, கோபம், கண்டுகொள்ளாமை, அறியாமை, சுயநலம் போன்ற மனதின் கேடுகளால் இயற்கையையும், பிற மனிதரையும், தன்னையும் அழித்துக் கொள்கிறான் அதனால் இந்த மனித பிறவியை வீணாக்குகிறான்.
இந்த ஒழுக்க கேட்டிலிருந்து மனிதனைக் காக்கவும், சரியான பாதையில் வாழ வைக்கவும் உதவிடவே, இறை மனிதனுக்கு நோய்களை - துன்பங்களை உருவாக்குகிறது.
அவன் தனது தற்பெருமையிலிருந்து விடுபட்டு நலவாழ்வு வாழ விழிப்பை தரவே இறையாற்றல் விளைகிறது.
தொடர்ந்து தவறுகள் செய்பவர்களுக்கு கடுமையாகிறது. வழிகாட்டுதலையும், புரிதலையும் இல்லாததாக்குகிறது.
இயற்கையுடனான உறவில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி, மனதின் கேடுகளை விளக்கி, பிற மனிதர்களையும், உயிர்களையும் மதித்து நடப்பதன் தேவையை உணர்த்தி, இறையாற்றலுடன் உள்ள தொடர்பை மீட்டமைத்துக்கொள்ள உதவுவதே மருத்துவம்.
எனது புரிதலின் உதவியால் நான்பெற்ற - இறை வழிகாட்டுதல்கள் இறைஞானங்களின் அடிப்படையில் எனது மருத்துவ முறைகள் உருவாகியுள்ளது.
எந்த நோய்களாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட இறையாற்றலும், இறைவழிகாட்டலும் தேவை. அதை மீட்டுக் கொள்ள உதவுவதே எனது மருத்துவமாக இருக்கும்.
என்னிடம் மருத்துவம் பெற நேரில் வருக அல்லது தொலைபேசியில், அல்லது மின்னஞ்சல் என ஏதேனும் ஓர் வழியை பயன்படுத்திக் கொள்க.
எனது அன்பின் ஆற்றலால் உங்கள் மனதின் துன்பங்களில் இருந்து உங்கள் ஆன்மாவை விடுவித்து இறையின் கருணையை திரும்ப பெற உதவுகிறேன்.
உங்கள் நோய்களும் ,துன்பங்களும் நீங்கி இறைவன் அருளால் விரைவில் சுகமடைவீர்கள்.
கைபேசி எண்- 9345812080,9444776208
7010560588
மின்னஞ்சல்- siddhahealer@gmail.com, thamizhavel.n@gmail.com