02/03/2018
நீங்கள் வேலை செய்தால் சிறைக்கு செல்வீர்கள் எனில் வேலை செய்வீர்களா?
லேப்ரோஸ்கோபி கருத்தடையின் (LAP STERILISATION) போது ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தில் 3 மருத்துவர்கள் மற்றும் 3 செவிலியர்களுக்கு கேரள கொல்லம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 18 மாத சிறைத்தண்டனையை IPC 304 ன் கீழ் வழங்கியுள்ளது.
இதுவரை மருத்துவ தவறுகள்(medical negligence) என குற்றம் சாட்டப்பட வழக்குகளில் மருத்துவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் அளவிற்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது முதன்முறையாக சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பினை கேட்ட 58 வயது பெண் மருத்துவர் நீதி மன்றத்திலேயே 'தான் எந்த தவறும் செய்ய வில்லை' என கதறி அழுதார். இந்த மூத்த மருத்துவர் கதறி அழுதது போல நாமும் என்றாவது ஒரு நாள் கதறி அழ வேண்டி இருக்கலாம்.
நீங்கள் கொடுத்த பாரசிட்டாமல் மருந்தினால் ஒரு நோயாளிக்கு லேசான அரிப்பு ஏற்பட்டால் நீதிமன்றம் உங்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை வழங்கலாம்.குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அடிப்பட்ட ஒருவர் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தால் உங்களுக்கு IPC 304 ன் கீழ் பத்து ஆண்டுகள் கூட சிறை தண்டனை வழங்கப்படலாம்.
சட்டத்தின் படி குற்ற நடவக்கைகளில், குற்றவாளிக்கு குற்றம் செய்யும் ‘உள் நோக்கம்’ (motive) இருந்திருக்க வேண்டும், அவ்வாறு நோக்கம் ஏதும் இல்லாமல் ஒரு மரணம் நிகழ்ந்திருக்குமாயின் சட்டம் அதற்கு தண்டனை வழங்குவதில்லை, மாறாக இழப்பீடு (compensation) தான் வழங்குகிறது.
எடுத்துக்காட்டாக வாகன விபத்துகளில் எத்தனை பேர் உயிரிழந்தாலும் வாகன ஓட்டிக்கு அவர் குடி போதையில் இல்லையெனில் சிறை தண்டனை வழங்கப்படுவதில்லை. ஆனால் பாதிக்கப்படவர்களுக்கு இழப்பீடு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மூலம் வழங்கப்படுவதை சட்டம் உறுதி செய்கிறது.
இதேபோலமருத்துவ தவறுகள் என்று குற்றம் சாட்டபடுபவைகளும் ஒரு விபத்தே ஆகும்,இந்த விபத்துகளுக்கு இழப்பீடு தான் வழங்கவேண்டும், அதை விடுத்து சிறை தண்டனை வழங்குவது நியாயமற்றது,கொடுமையானது.
சிறைதண்டனை வழங்கப்பட்ட அந்த 3 மருத்துவர்கள் மற்றும் 3 நர்சுகளுக்கும் அந்த நோயாளியை கொல்ல வேண்டுமென எந்த நோக்கமும் இல்லாதவர்கள்.
இதுவரை அந்த மருத்துவர்கள் எத்தனை பேர் உயிரை காப்பாற்றி இருப்பார்கள் ?, எத்தனை நாள் வேலை மற்றும் படிப்பிற்காக குழந்தைகளை பிரிந்திருப்பார்கள் ?, எத்தனை இரவு நோயாளிகளுக்காக கண் விழித்திருப்பார்கள் ?, ஊர் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடி கொண்டு இருக்கும் போது எத்தனை பண்டிகை நாட்களில் வேலை செய்திருப்பார்கள் ? இதற்கெல்லாம் இந்த சமூகம் என்ன அவருக்கு என்ன வழங்கியது ? மிகவும் மனமுடைந்து கூறுகிறேன் அவர்களுக்கு கொடுமையான 18 மாத சிறை தண்டனை தான் வழங்கியுள்ளது.
கருத்தடை அறுவை சிகிச்சை என்பது அற்புதமான ஒரு மருத்துவ கண்டுபிடிப்பாகும், இதுவே பெண் விடுதலைக்கு வழி வகை செய்துள்ளது. கருத்தடை முறைகள் இல்லையெனில் நம் நாடு மக்கள் தொகை பெருக்கத்தால் நாசமாக போயிருக்கும், கோடிக்கணக்கான பெண்கள் கருத்தடை செய்து நலமாக வாழ்கின்றனர், இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் ஒரே ஒரு பெண் மருத்துவ விபத்தில்(medical accidents) உயிரிழந்ததற்கு சிறை தண்டனை வழங்கினால் நாம் நீதி தேடி எங்கே செல்வது?
எதற்காக spinal anesthesia கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள் ?
எந்த வகை மயக்கம் கொடுக்க வேண்டும் என்று வழக்கறிஞசர்களின் வாத பிரதி வாதம் மூலம் முடிவு செய்ய முடியுமா? 62 வயது மயக்கவியல் நிபுணர் முடிவை விட வழக்கறிஞ்சர் முடிவு சரியாக இருக்க முடியுமா?
ஒவ்வொரு நோயாளியும் தனித்தன்மை வாய்ந்தவர்(unique) , கோடிக்கணக்கான மக்களுக்கு பயன் தரும் மருந்து ஒரு சிலருக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்கிற போது, 100 % விபத்துகளற்ற மருத்துவத்தை யாரும் வழங்க இயலாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் இனி ஒவ்வொரு சிகிச்சைக்கு முன்பும் நீதி மன்றத்தின் முன் அனுமதியை நாம் பெறவேண்டி இருக்கும், இதனால் மருத்துவர்களுக்கு பாதிப்பு இல்லை, எனினும் நோயாளிகளுக்கு தான் பாதிப்பு.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை தண்டிக்க பயன்படும் IPC 304 சட்ட பிரிவினை மருத்துவ விபத்துகளுக்கு மருத்துவர்களை தண்டிக்க பயன்படுத்துவது மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது. எனவே மருத்துவ விபத்துகளுக்கு டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை பொறுப்பாக்கி தண்டனை வழங்குவதை தடுக்கவும் இழப்பீடுகள் வழங்குவதை ஒழுங்கு படுத்தவும் ‘மருத்துவ விபத்து ஒழுங்கு முறை சட்டத்தை’ (medical accidents regulation act) அரசு கொண்டு வர வேண்டும்.
இது குறித்து எந்த கவலையும் இல்லாமல் CME (seminar) நடத்தி கொண்டிருக்கும் IMA ,TNGDA உட்பட அனைத்து மருத்துவ சங்கங்களும் மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்ல வேண்டும்.
அல்லது சிறை செல்ல அனைவரும் தயாராக இருக்க vendum