29/10/2023                                                                            
                                    
                                                                            
                                            பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
இன்றைய  காலகட்டத்தில் உணவுகளில் மருத்துவ குணம் நிறைத்த உணவுகள் ஏராளம் உண்டு.  அதன் பயன்பாட்டினை முழுமையாகத் தெரிந்து  வாழ்ந்தாலே  ஆரோக்கியத்தை நம் வசம் வைத்து வாழ்ந்திட முடியும். எல்லா காலங்களிலும் கிடைத்திடும்  பப்பாளி ( Papaya ) என்பது வெளிநாடுகளில் உயர்வாக உண்ணக்கூடிய மருத்துவம் நிறைத்த பப்பாளி, இதற்கு பத்து  விதமான பயன்கள்  உண்டு.
1)     அதிக உடல் பருமனால் அவதிப்படுபவர்களின் எடையினை குறைப்பதற்குப் பப்பாளி உதவுகிறது.
2)     சரும பிரச்சினைகள், முறையாகப் பப்பாளியை நாள்தோறும் எடுத்துக் கொண்டாலே தோலின் இளமை தோற்றம் மாறாமல் இருக்க உதவுகின்றது.
3)     "கேன்சர்" புற்றுநோய்   Free  Radicals மூலக்கூறுகள் அதிகமாவதால் புற்று  நோய்  ஏற்படுகின்றது. தினமும் 100 கிராம் பப்பாளியைச் சாப்பிட்டு வருவதால் புற்றுநோயை உருவாக்கும்  மூலக்கூறுகளைக் குறைத்து நோய்  வருவதைத் தடுக்கின்றது என்பது ஆய்வின் மூலம் 
நிரூபிக்கப்பட்டுள்ளது.
4)     தலைமுடி  வளர்வதற்கான எட்டு வகையான மூலக்கூறுகளை உள்ளடக்கி இருப்பதால் முடிகள் எளிதில் வளர்வதற்குப் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
5)   பெண்களுக்கு உற்பத்தியாகும் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கத் தினமும் பப்பாளி முறையாகச் சாப்பிட்டு  வருவதால் அதன் பலனை அடையமுடியும்.
6)    சிறுநீரக கற்கள் உற்பத்தியாவதைத் தடுக்கவும், சிறுநீரகம் செயலிழப்பு இருப்பவர்கள் பப்பாளியை உணவாக சாப்பிட்டு அதன் பயனை அடைந்து கொள்வதற்கும் பயன் படுகிறது.
7)   மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் பப்பாளியை உண்பதால் , இதிலிருந்து விடுபட்டு உடல் ஆரோக்கியம் அடைவதைக் காணலாம்.
8)   உடல்  சோர்வாகச் சுறுசுறுப்பு இன்றி இருப்பவர்கள் வாரம் மூன்று தினம் பப்பாளியைச் சாப்பிட்டு வர நிவாரணம் அடைவதைக் காணலாம்.
9)   இன்று மனஅழுத்தம் தவிர்க்கமுடியாத ஒரு  பிரச்சினையாகவே உள்ளது, பப்பாளி சாப்பிடுவதால் மனஅழுத்தம் காரணமாக ஏற்படும் சிரமங்களை போக்குகின்றது.
10)  ஆயுளை அதிகப்படுத்திடப்  பப்பாளி ஓர் சிறந்த மருந்து, life style disorder அதாவது, இதயம்,மூளை,சிறுநீரகம், நுரையீரல், மேலும் நீரிழிவு சம்மந்தப்பட்ட நோய்கள் வருவதிலிருந்து பாதுகாக்கிறது.
உணவு உண்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பப்பாளியைச் சாப்பிடலாம். பப்பாளியின் முழு பயனையும் அடைந்து மேலே கூறிய முறைகளை முழுமையாகப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழ முடியும்
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Phone: 044 46094900, 9500946633 / 9952666359 
For additional inquiries and product details, Visit our website: www.shreevarma.online / www.drgowthaman.com