Kothandapani Medical Foundation - KMF

Kothandapani Medical Foundation - KMF To develop and discuss about the Medical Field in our country. To provide Health for all with nomin

To provide Health for all with nominal wealth in all medical system in single roof.

17/07/2024

இன்று *17.07.2024*
என் தந்தையும் KMF மற்றும் ஸ்ரீ வைஷ்ணவி ஹோமியோ நர்சிங் ஹோம்-ன் நிறுவனருமான

*Dr.A.கோதண்டபானி* அவர்கள் சிவபதம் அடைந்த தினம்.

" *எங்களை பிரிந்தும் வாழ்கிறாய் எங்கள் நினைவுகளில்− சிவமாக...!! நாங்கள் வாழ்ந்தும் இறக்கிறோம் உன் நினைவுகளால்−சவமாக...*!!

கோதண்டபானி மருத்துவ நிறுவனத்தின் நிறுவனரும் என் தந்தையுமான *Dr.A.கோதண்டபானி* அவர்களின் *எட்டாம் ஆண்டு* நினைவு நாள்.

*உள் மூலம் குணமாக*==========================மலத் துளையின் உட்பகுதியில் சவ்வு படர்ந்து, மலம் கழிக்கும்போது மலக் குழாயின் ...
21/05/2023

*உள் மூலம் குணமாக*
==========================

மலத் துளையின் உட்பகுதியில் சவ்வு படர்ந்து, மலம் கழிக்கும்போது மலக் குழாயின் உட்புறம் உள்ள தசைகள் உப்பி வெளிப்புறம் நீண்டு வரும். இதனால் மலம் வெளிப்படுதல் சிக்கலாகி இரத்தம் வெளியேறும்.

*தேவையான பொருட்கள்*

▶ கற்றாழை வேர் – 10 கிராம்

▶ முள்ளிவேர் – 10 கிராம்

எடுத்து வெய்யிலில் காயவைத்து பொடியாக்கி வைக்கவும்.

▶ கடுக்காய் – 5 கிராம்

▶ மிளகு – 5 கிராம்

▶ சுக்கு – 5 கிராம்

▶ பிரண்டை – 5 கிராம்

▶ தோல் உரித்த பூண்டு – 5 கிராம்

ஆகியவற்றை எடுத்து மை போல அரைத்து ஆழாக்குப் பசும்பாலில் கலந்து, ஒரு பாத்திரத்தில் வைத்து கொண்டு, வாணலியை அடுப்பில் வைத்து அரை ஆழாக்கு நெய்யை விட்டு நெய் உருகியவுடன் 25 கிராம் பனை வெல்லம் போட்டு பாகாகும் சமயம் கலவைப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து லேகியம் போல கிண்டி எடுத்து வைத்துக்கொண்டு அதிகாலை மற்றும் மாலையில் கொட்டைப் பாக்களவு சாப்பிட உள் மூலம் குணமாகும்.

🉐 நோய் குணமாகும் வரை சாப்பிடவும்.

13/05/2023
இரவு உறக்கம் ஒரு எச்சரிக்கைப்பதிவு...!!==========================எனில் இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!!பினியல்_சுரப்பிநம...
13/05/2023

இரவு உறக்கம் ஒரு எச்சரிக்கைப்பதிவு...!!
==========================

எனில் இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!!

பினியல்_சுரப்பி

நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!...

அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological_Clock_System)!!!

இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல்சுரப்பி!

கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது!!

இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!

அதுதான் மெலடோனின் ( )!!

இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.

மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை.
இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

இரவின்_இருளில்_மட்டும்தான்_பினியல்சுரப்பி_மெலடோனினை_சுரக்கும்!!

அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!

நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!

பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும்!!.

இரவு நீண்ட நேரம் கண்_விழித்திருந்தால் நாம் புற்றுநோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்!!!!.

எனவே இரவு முன்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இயற்கை மருத்துவ உலக சித்தர்கள் நூல் கூறுகிறது!!

அதே போன்று, அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.

ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால், இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்....!!!

இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

இரவு முன்கூட்டியே உறங்குவதால், மெலடோனின் கிடைக்கிறது...!!!!

அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால், ஓஸோன் கிடைக்கிறது!!

நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது...

அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!

அதிகாலையில் எழும் போது, நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!

அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

எனவே

முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப பெற்று பயனடைவோம்.....!!!!!

சைனஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் உணவுகள்!==================================நம்மில் பலருக்கு குளிர் காலம் தொடங்கிவிட்ட...
06/05/2023

சைனஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் உணவுகள்!
==================================

நம்மில் பலருக்கு குளிர் காலம் தொடங்கிவிட்டால், சளி,ஜலதோஷம், ஆஸ்துமா போன்ற பல்வேறு பிரச்சினைகள் வந்துவிடும்.

சளி தொந்திரவை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்சினையாக மாறி மிகவும் நம்மை சிரமபடுத்தும்.

சைனஸ் பாதிப்புகளுக்கு ஆரோக்கிய குறைவு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை இந்த மூன்றும் முக்கிய காரணிகளாகும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது, சைனஸ் அதிக தொல்லை கொடுக்கிறது.

சைனஸ் பிரச்சினைக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் உட்கொண்டாலும், சில உணவுகளின் மூலம் சைனஸ் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். எனவே எந்த வகையான உணவுகளை சைனஸ் தொந்திரவு இருப்பவர்கள் எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.

முதலில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நல்ல சுத்தமான காய்ச்சி வடிகட்டிய நீரை குடிப்பதால் சைனஸ் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து பாக்டீரியா தொற்றை எதிர்த்து போராடுகிறது. காய்ச்சிய நீரை அருந்துவதால் சுவாச பாதையில் உள்ள தொற்றுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.

அன்னாசி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் சளி சவ்வுகளில் ஏற்படும் சேதத்தை தடுக்கிறது. அன்னாசியில் உள்ள நொதிகள் சைனசால் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, சுவாச பாதை அழற்ச்சியை போக்குகிறது.

மிளகு பல மருத்துவ குணங்களை கொண்டது. நல்ல காரமான மிளகை எடுத்துக் கொண்டால் , அது சளியை இளக செய்து வெளியேற்றும். மிளகில் உள்ள கேப்சைசின் நோயெதிர்ப்பு
மண்டலத்தை தூண்டி, வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

குதிரைவாலி நிறைய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டி, வீக்கத்தை குறைக்கிறது. இதில் ஆன்டி பயாடிக் உள்ளது.

பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு, மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சுவாச தொற்றுக்கு காரணமான வைரஸை போக்குகிறது. இதய நோய் மற்றும் ஜலதோஷத்திற்கு எதிராகவும் பூண்டு செயல்படுகிறது.

ஆன்டி ஆக்சிடன்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் சளி சவ்வுகளை சேதத்திலிருந்து காத்து கொள்ளலாம். எனவே சிட்ரஸ், கிவி, கீரை, பெர்ரி, பூசணி, இனிப்பு உருளைக்கிழங்கு, பழங்கள் மற்றும்
காய்கறிகள் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.

இஞ்சி இது உடல் அழற்சி மற்றும் சுவாச தொற்றுக்களை போக்குகிறது. ஒவ்வாமை, சைனஸ், சளித்தொல்லை, வாந்தி மற்றும் வலியை போக்கி ஜீரணத்திற்கு உதவுகிறது.

வெந்நீருடன் சிறிது மஞ்சள் கலந்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால் சைனஸ் குணமாகும்.

தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்வதால், பருவகால ஒவ்வாமை மற்றும் நோய்த்தொற்றுகளை போக்குகிறது.

ஆவி பிடிப்பதால்
மூக்கடைப்பு மற்றும் தலைவலியை குறைக்கலாம்.

சமையலில் பேக்கிங் சோடா பயன்படுத்துபவரா=========================பேக்கிங் சோடா பெரும்பாலும் கேக்குகள், ரொட்டிகள் மற்றும் ப...
03/05/2023

சமையலில் பேக்கிங் சோடா பயன்படுத்துபவரா
=========================

பேக்கிங் சோடா பெரும்பாலும் கேக்குகள், ரொட்டிகள் மற்றும் பிஸ்கட்கள் போன்ற பேக்கிங் பொருட்களிலும், தோசை, இட்லி போன்றவற்றில் மாவை புளிக்கவைக்கும் பொருளாகவும் பயன்படுத்தப் படுகிறது.

பேக்கிங் சோடா மிக விரைவாக மாவை புளிக்க வைப்பதால், அவை ஹோட்டல் மற்றும் வீட்டு சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

உங்கள் சமையல் குறிப்புகளில் அவற்றை அடிக்கடி பயன்படுத்துவது ஆரோக்கியமானதா? பேக்கிங் சோடா அல்லது ஈனோவை மாவுகளில் அதிகமாகப் பயன்படுத்துவது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிமதுரைத்துள்ளனர், ஏனெனில் அதன் நீண்ட கால மற்றும் அதிகப்படியான பயன்பாடு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

சோடா பைகார்ப் இயற்கையில் காரமானது மற்றும் இரத்தத்தின் காரத்தன்மையை மாற்றுகிறது., ஆனால் இந்த pH-ல் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், உடல் கடுமையான நோய்களுக்கு ஆளாகலாம். காரத்தன்மை

அதிகரிப்பதால் வளர்சிதை மாற்ற அல்கலோசிஸ் ஏற்படலாம். இந்த நிலையானது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம் மற்றும் உடலில் அதிகளவு திரவம் தக்கவைத்துக்கொள்ளும் நிலையைத் தூண்டலாம்.

இதனை நீண்ட காலமாக பயன்படுத்துவது சிறுநீரக செயலிழப்பு மற்றும் பிற நாட்பட்ட நோய்களை ஏற்படுத்தும். மேலும், சோடியம் பைகார்பனேட் உடல் வளர்சிதை மாற்றம் மற்றும் தசை உடலியல் ஆகியவற்றையும் பாதிக்கலாம்.

பேக்கிங் சோடாவைப் பொறுத்தவரை அது சோடியம் பைகார்பனேட் என்று அழைக்கப்படுகிறது. WHO பரிந்துரையின் படி இதனை மிகக்குறைந்த அளவில் மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக இதனை உட்கொள்வது தீங்கு
விளைவிக்கும். இதனை தொடர்ச்சியாக உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

1. பேக்கிங் சோடாவை தொடர்ந்து உட்கொள்வதால் ஏற்படும் மிகவும் பொதுவான பக்க விளைவு உயர் இரத்த அழுத்தம் ஆகும். இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சோடியம் பைகார்பனேட் இதில் அதிகளவில் உள்ளது.

2. அனைத்து ஆன்டாக்சிட்களும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை பலவீனப்படுத்துகின்றன. அவை பாக்டீரியா தொற்று மற்றும் ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன.

3. சில அரிதான நிலைகளில், பேக்கிங் சோடா போன்ற வழக்கமான ஆன்டாக்சிட்களை உட்கொள்வது சிறுநீரக
செயலிழப்பு மற்றும் பிற நாட்பட்ட ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தும்.

4. பேக்கிங் சோடாவுக்கு என்று தனிப்பட்ட ஊட்டச்சத்து மதிப்பு இல்லை. மேலும், இதில் பாஸ்போரிக் அமிலம் உள்ளது, இது வயிற்றில் உள்ள அமிலத்துடன் தொடர்பு கொள்கிறது, இது செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கிறது. நாம் உணவை ஒழுங்காக ஜீரணிக்க முடியாமல் போனால், அது கடுமையான பலவீனம் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கிறது.

5. பேக்கிங் சோடா நுகர்வு கணையத்தில் இன்சுலின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இதனால் 15 முதல் 20 நிமிடங்களுக்குள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது மற்றும் கல்லீரல் சர்க்கரையை கொழுப்பாக மாற்றுகிறது.

6. பேக்கிங் சோடாவில் உள்ள பாஸ்போரிக் அமிலம் எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சோடா நுகர்வு கால்சியத்தை உறிஞ்சும் உடலின் திறனில் தலையிடுகிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.

பேக்கிங் சோடா சேர்த்து உணவை புளிக்க வைப்பதற்குப் பதிலாக ஒரு நாள் முன்பே மாவை அரைத்து வைத்துக்கொள்வது நல்லது.

காது வலியை குணமாக்கும் பூண்டுதேவையான பொருள்பூண்டு(பற்கள்) 3 எண்ணிக்கைதேங்காய் எண்ணெய் 10 மி.லி. செய்முறை: முதலில் கொடுக்...
01/05/2023

காது வலியை குணமாக்கும் பூண்டு

தேவையான பொருள்
பூண்டு(பற்கள்) 3 எண்ணிக்கை
தேங்காய் எண்ணெய் 10 மி.லி.

செய்முறை:

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு பூண்டை நன்கு இடித்துக்கொள்ளவும்.

பிறகு பூண்டு உடன் 10 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு இந்த எண்ணெய்யை வெண்மையான துணியால் மூடி சூரிய ஒளியில் காய வைக்கவும்.
மேலும் எண்ணெய்யை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

இப்போது இந்த எண்ணெய்யை பஞ்சியால் தொட்டு இரண்டு துளி காதுவலி உள்ள இடத்தில் விட்டால் காதுவலி முழுமையாக குணமாகும்.

பாரம்பரிய அரிசிகளை பயன்படுத்த ஆரம்பிப்பொம், உருவாகும் நோய்களுக்கு முடிவு கட்டுவோம்... அரிசியை அதிகம் பயன்படுத்துபவர்களுக...
04/03/2023

பாரம்பரிய அரிசிகளை பயன்படுத்த ஆரம்பிப்பொம், உருவாகும் நோய்களுக்கு முடிவு கட்டுவோம்...

அரிசியை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாத்திரை பயன்படுத்தும் நிலை வராது.

அதனால்தான்

அரிசி உணவை பயன்படுத்துவதை குறைக்கிறார்கள் மருத்துவர்கள்...

தேன் வில்வம் பயன்கள்:1.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.,2.நமது உடலில் கால்சியம் அதிகரிக்கும்.,3.எலும்புகள் உறுதியடைய...
04/03/2023

தேன் வில்வம் பயன்கள்:

1.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.,

2.நமது உடலில் கால்சியம் அதிகரிக்கும்.,

3.எலும்புகள் உறுதியடையும்.,

4.மூட்டுவலி குணமாகும்.,

5.நாள்பட்ட வியாதிகள் தீரும்.,

6.உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும்.,

7.தேவையற்ற ஊளைச்சதை உடல் எடை குறையும்.,

8.இரத்த சோகை குணமாகும்.,

9.முடி வளர்ச்சி அதிகரிக்கும் முடி கொட்டுதல் குறையும்.,

10.குறைந்த வயதில் வயதுக்கு வருவது நிற்கும்.,

11.மனம் செம்மையடையும்.,

12.அதிக வைட்டமின் நிறைந்தது.,

13.அதிக Fibre நிறைந்தது.,

14.அதிக பொட்டாசியம் சக்தி நிறைந்தது.,

15.அதிக இரும்பு சத்து நிறைந்தது.,

16.இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.,

17.கீல்வாதம் குணமாகும்.,

18.எலும்புபுரை குணமாகும்.,

19.நரம்புகள் வலுப்பெறும்.,

20.பெருங்குடல் அழற்சி நீங்கும்.,

21.மனச்சோர்வை நீக்கும்

21/01/2023

டையாலிஸிஸ் எச்சரிக்கை செய்தி...

உணவே மருந்து,
நீர் இன்றி அமையாது உலகு...

ஏறக்குறைய சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா?மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்ட...
08/01/2023

ஏறக்குறைய சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா?

மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes) தான் அது.

நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா? ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்.!

அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals எனும் கேன்சரை உண்டாக்கும் நஞ்சு!

அத்தகைய நஞ்சு நமது வாகனங்களில் நீண்ட தூரம் அதிக நாட்கள் பயணித்த பிறகு சைலன்சரில் படிந்திருக்கும் கரிக்கழிவு போன்றது தான் அந்த Free Radicals.

எப்படி வண்டியை சர்வீஸ் விட்டு சைலன்சரை சுத்தம் செய்கிறோமோ அதற்கு இணையானது தான் நாம் உண்ணும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes).

அது நமது உடலில் தேங்கும் கேன்சரை உண்டாக்கும் கழிவுகளை சுத்தமாக துடைத்து எடுத்து ஒழிக்கிறது.

நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க கேன்சர் பற்றிய பயமே இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தால் சீசனில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கை தேவையான அளவு சாப்பிடுங்கள்.

Address

Chennai

Opening Hours

Monday 10:30am - 1pm
5:30pm - 8:30pm
Tuesday 10:30am - 1pm
5:30pm - 8:30pm
Wednesday 10:30am - 1pm
5:30pm - 8:30pm
Thursday 10:30am - 1pm
5:30pm - 8:30pm
Friday 10:30am - 1pm
5:30pm - 8:30pm
Saturday 10:30am - 1pm
5:30pm - 8:30pm
Sunday 10:30am - 1pm

Telephone

+917200116439

Alerts

Be the first to know and let us send you an email when Kothandapani Medical Foundation - KMF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kothandapani Medical Foundation - KMF:

Share