22/09/2024
சிக்குன் குன்யா வைரஸ் (CHIKUN GUNYA VIRUS )
-------------------------------------------------------------
தென் ஆஃப்ரிக்க மற்றும் இந்தியாவில் மேலும் சில ஆசிய நாடுகளில் அவ்வப்போது இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த வைரஸ் ஏடீஸ் எகிப்தி எனும் கொசுவின் மூலம் பரவுகின்றது.எனவே கொசுக்களை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
2006 ஆம் ஆண்டு 14 லட்சம் பேரை இந்தியாவில் இந்த நோய் தாக்கியது .ஆந்திராவில் முதலில் இந்த வைரஸ் தாக்கி பின்னர் தென்னிந்தியாவில் பரவி தொடங்கியது அதன் பின் வட இந்தியாவிற்கும் பரவியது.
2015 ஆம் ஆண்டு சுமார் 24,997 பேரை தாக்கியது.
கிருமிகள் உடலுக்குள் சென்று 4-7 நாட்களுக்குள் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.
அறிகுறிகள் :
• திடீரென காய்ச்சல் மற்றும் குளிர் ஏற்படும் ,தலைவலிக்கும் ,உடல் வலி இருக்கும் ,முதுகு வலிக்கும் ,கண்களில் அழற்சி ஏற்படும் (conjunctivitis).பசியில்லை.நிணநீர் முடிச்சுவீக்கம் இருக்கும்.
• வியற்கூறு போன்ற தோல் பாதிப்பு ஏற்படும்.
• இரத்த கசிவு, இரத்த வாந்தி, மூக்கில் இருந்து இரத்தம் கசிவதெல்லாம் இருக்கும்.
• காய்ச்சல் ஆரம்பித்து 3 வது நாள் அல்லது 5 வது நாளில் மூட்டு வலி ஆரம்பிக்கிறது. மூட்டு வலிதான் இந்த நோயின் முக்கிய அறிகுறி. கைவிரல்,கால் விரல் மணிக்கட்டு , முழங்கை மூட்டு ,தோள்பட்டை மூட்டு கணுக்கால் மூட்டு என எல்லா மூட்டுக்களையும் இந்த நோய் பாதிக்கும்.இந்த வலி சில மாதங்கள் முதல் வருடம் வரை கூட இருக்கும்.
• இந்த நோய் தாக்கி யாரும் இறந்து போகவில்லை.
எப்படி கண்டுபிடிப்பது ? :
• எலிசா பரிசோதனை (ELISA) மற்றும்
• RT - PCR பரிசோதனைகள் இந்த நோயே உறுதிப்படுத்த உதவும்.
நோய் தடுப்பு :
நோய் தடுப்பை பற்றி படிப்பதற்கு முன் சில கேள்விகள்
2005 ஆம் ஆண்டு சிக்குன் குன்யா நோய் தாக்கியது சரி இது கொசுக்களால் பரவுகின்றது என்பது எத்தனை சதவிகிதம் மக்களுக்கு தெரியும் ?
எவ்வளவு பேர் அடுத்த வருடம் இந்த நோய் வராமல் தடுத்து விட முடியும் என்பதை தெரிந்து வைத்திருக்கின்றனர் ?
எத்தனை பேர் முன்னெச்சரிக்கையாக கொசு ஒழிப்பில் அல்லது கொசுக்களால் இந்த நோய் பரவுகின்றது என்பதால் கொசுக்களிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தனர் ( யாருமில்லை ) பாதிக்கப்பட்டவரும் அவரது குடும்பத்தாருக்குமே கூட இது கொசுக்களால் பரவுகின்றது எனவே கொசுவை ஒழிக்க வேண்டும் என்று நோய் தடுப்பில் ஆர்வம் காட்டாமல் நல்ல சிறந்த மருத்துவரை தேடுவதில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் .
அவர்களுக்கு மருத்துவர்கள் இது பற்றி போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை.
நோயின் ஆரம்ப அறிகுறிகள் ப்ளூ காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றே இருக்கிறது. எனினும் மிக நீண்ட நாளைக்கு ஏற்படும் உடல்வலிதான் இந்த காய்ச்சலை பிற வைரஸ் தொற்றுகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.
இந்த நோயை நாம் சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளலாம் ஆனால் இரத்தக்கசிவு என்றொரு பகுதி இதே நோயில் இருக்கிறது இதுவரை வந்த பதிப்புகளில் அவ்வளவு மோசமாக இரத்த சேதம் இல்லையென்பதால் நாம் சற்று அமைதியடையளாம் ஆனால் இதுவும் ஒரு கொள்ளை நோய்தான் எனவே இது ஆபத்தான கொள்ளை நோயாக கடுமையான உயிர்சேதத்தை ஏற்படுத்தும் நோயாக மாறவும் வாய்ப்பிருக்கிறது .கொசு மருந்து அடித்து நமது மக்களின் உயிர்களை காப்பாற்றவேண்டியது அரசின் கடமை.
சிகிச்சை முறைகள் :
அலோபதி மருத்துவரிடம் இந்த வைரஸை கொல்ல மருந்தில்லை, இதற்க்கு தடுப்பூசி இல்லை. ஹோமியோபதி மருத்துவத்தில் இதற்க்கு மருந்து இருக்கிறது.
இந்த வைரஸை கொல்ல மருந்தில்லை, இதற்க்கு தடுப்பூசி இல்லை. அப்படியென்றால் இந்த வைரஸை எப்படி கையாள்வது.வலி வந்தால் வலி மாத்திரை எடுத்துக்கொள்ளவும் ,மூக்கு ஒழுகினால் அதற்க்கு மாத்திரை ,இருமல் வந்தால் அதற்க்கு மாத்திரை என்று எடுக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்கிறது.
இப்படி சொல்ல காரணம் உலக சுகாதார நிறுவனம் இந்த நோயால் இறப்பு ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துகொண்டது மேலும் இந்த நோய் மிகப்பெரும் நோயென்று எதையும் கொடுக்கவில்லை எனவே WHO இந்த நோயை எளிதாக எடுத்துக்கொள்கிறது அதனால் பரசிட்டமோல் அல்லது டைக்லோபினாக் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என பரிந்துரைக்கிறது. ஆனாலும் இந்த மாத்திரைகளால்தான் மிக பெரும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.ஆகவே உலக சுகாதார நிறுவனம் அலோபதியின் தவறான வழிகாட்டுதல்களை புறக்கணித்து சரியான நெறிமுறைகளை மக்களுக்கு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .மேலும் ஒவ்வொரு நோயும் சிதிலமடைந்த அழற்சி மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மீட்க ஒரு வாய்ப்பு.
தமிழக மக்கள் அதிக அளவில் ஹோமியோபதி மருந்தை இந்த நோய்க்காக எடுத்துக்கொண்டார்கள்.இந்த காலகட்டம் என்பது வைரஸ் எபிடெமிக்ஸ் /பண்டமிக்ஸ் (உலகம் முழுக்க பரவல் ) பற்றிய ஞாநோதாயத்தை மக்கள் உணர துவங்குகின்றனர்.அலோபதி மருத்துவரை தாண்டி வேறு மருத்துவர்களின் தேவையே மக்கள் வேறு வழியின்றி தேடிக்கொண்டிருந்த நேரம்.கிட்டத்தட்ட சிக்கன்குன்யா வந்து போனபின்னும் 1 அல்லது 2 வருடத்திற்கு அந்த நோயாளிகள் வந்து கொண்டிருந்தனர்.
பெரும்பான்மையான மக்கள் ஹோமியோபதி சிக்குன் குன்யாவிற்கு தீர்வை தருகிறேதென்பதை உணர்ந்து ஓடி வந்தார்கள் . ரஸ் டாக்ஸ் ,ஆர்னிகா ,பிரயோனியா ,லேடம் பால் போன்ற மருந்துகள் மிக எளிமையாக பிரச்சனையே தீர்த்து வைத்தது.
கைகால் மூட்டுவலி என்று கூறப்பட்டிருந்தாலும் வலி என்பது நடக்கவே முடியாதளவிற்கு மிக மோசமானதாக இருந்தது தங்கள் இப்படியே கிடந்த கிடப்பாக இருந்துவிடுவோமோ என்கிற பயம்கொள்ளும் அளவிற்கு மோசமானதாக இருந்தது.
நான் ஒரு சிலரைத்தான் நோய் ஏற்படும்போதே பார்த்தேன் மற்றவரெல்லாம் எனக்கு 6 மாதத்திற்க்கு முன் மூட்டு வலி வந்தது அதிலிருந்து மூட்டுவலி நிரந்தரமாக இருக்கிறதென்றனர்
இரத்த வாந்தி ,மூக்கில் இருந்து இரத்தம் கசிதல் மற்றும் உடலில் அங்கங்கே இரத்த புள்ளிகள் ,கடுமையான உடல் வலி மற்றும் தலைவலி அப்படியே டெங்குவின் அறி குறிகளை நினைவூட்டுகிறது.என்றாலும் வலி என்பதே நான் பார்த்த நோயளிகளின் அல்லது என்னை பார்க்க வந்த நோயாளிகளின் முதன்மை பிரச்சனையாக இருந்தது.
எனக்கென்னவோ முதல் (2006, 2015) என இரண்டு எபிசோடுமே மக்கள் ஹோமியோபதிக்கு ஆதரவளித்தாக நம்புகிறேன்.ஹோமியியோபதியினர் மக்களின் நம்பிக்கையே வென்றனர் என்றுதான் சொல்லணும்.good result .இதெற்கென பிரத்யோக மருந்துகள் அல்லோபதியில் இல்லை காய்ச்சல் மற்றும் வலி மருந்துகள் மட்டுமே கொடுத்து தற்காலிகமாக பிரச்னை தீர்த்து வைக்கபடுகிறது.