10/12/2019
சர்க்கரையும் நானும் நீங்களும் - 2
அன்பு நெஞ்சங்களே நேற்று ஆரவாரம் இல்லாமல் அமைதியான முறையில் இந்த மனித இனத்தை பாதித்து வரும் நீரிழிவு என்றழைக்கப்படும் சர்க்கரை நோய் இந்திய மற்றும் உலகளவில் எவ்வாறு பாதித்து வருகிறது என்ற புள்ளிவிவரங்களை பார்த்தோம். இன்று சர்க்கரை நோய் என்றால் என்ன என்பதை பாப்போம்.
நான் புதிதாக ஒன்றும் சொல்ல போவது இல்லை ஏனெனில் நீங்கள் அனைவரும் வலைத்தளத்தில் தேடி நன்கு அறிந்து வைத்திடுப்பீர்கள். இருந்தபோதிலும் மீண்டும் ஒருமுறை நாம் படித்ததை தொடர்பு படுத்தி நமது புரிதலை விசாலமாக்கி கொள்வதில் எந்த தவறும் இல்லைதானே நண்பர்களே.
நாம் சிலசமயங்களில் கேள்விப்பட்டிருப்போம் அதாவது ஒருசிலர் சொல்ல கேட்டிருப்போம் இந்த உடல் பல்வேறு உயிர் -வேதி வினைகளுக்கு உட்பட்டது எனவே எல்லோர்க்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூற நீங்கள் கேள்வி பட்டு இருக்கலாம். ஒரு சிலருக்கு சில பரிசோதனை முடிவுகள் (உதாரணம் இரத்த அழுத்தம்) அப்நார்மலே நார்மலாக இருக்கும்( for some people abnormal is normal but those are exceptional cases), அவர்கள் விதிவிலக்கு அவர்களை நாம் கணக்கில் எடுத்து கொள்ள கூடாது. எனவே இந்த உடலில் ஒருசில உயிர் வேதி பொருற்களின் அளவு அதிகமாக இருந்தால் தப்பு ஒன்றும் இல்லை என்பது சரியான சிந்தனை இல்லை. அது என்னை பொறுத்தவரை ஒரு முட்டாள் தனமான சிந்தனையே ஆகும். எனவே சர்க்கரை நோயையும் அவ்வாறு கருதி அதை குறைக்க முறையான சிகிச்சை எடுக்க விட்டால் காலன் வந்து நமது கதையை முடிப்பான் என்பதை என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும்.
சரி, இரத்தத்தில் எந்த அளவு சர்க்கரை இருந்தால் நாம் அதை சர்க்கரை நோய் என்று கூறலாம் ?
1. இந்திய மருத்துவ கழகம் வெளியிட்ட வழிகாட்டலின் படி ஒருவருக்கு காலை உணவு அருந்துவதற்கு முன் அவர் இரத்த சர்க்கரை அளவு 110 mg /dl க்கு குறைவாய் இருந்தால் அவர் சர்க்கரை நோய் இல்லாதவர் எனவும், காலை ஆகாரத்திற்கு பிறகு இரண்டு மணி நேரம் சென்று பரிசோதனை செய்தால், அந்த நபரின் இரத்த அளவு 140 mg /dl க்கு குறைவாய் இருந்தால் அவர் சர்க்கரை நோய் இல்லாதவர் என்று கூறுகிறது.
2. ஒருவரின் காலை உணவு அருந்துவதற்கு முன் அவர் இரத்த சர்க்கரை அளவு 126 mg /dl க்கு அதிகமாக இருந்தாலும் , காலை ஆகாரத்திற்கு பிறகு இரண்டு மணி நேரம் சென்று பரிசோதனை செய்தால், அந்த நபரின் இரத்த அளவு 200 mg /dl க்கு அதிகமாக இருந்தாலும் அவர் சர்க்கரை நோயின் பாதிப்பிற்கு உள்ளானவர் என்று கொள்ளலாம்.
சரி, இப்போது இந்த இரண்டு அளவீட்டிற்கும் மத்தியில் இருப்பவர்கள் உதாரணமாக காலை உணவு அருந்துவதற்கு முன் அவர் இரத்த சர்க்கரை அளவு 110 mg /dl அதிகமாகவும் 126 mg /dl க்கு குறைவாகவும் காலை ஆகாரத்திற்கு பிறகு இரண்டு மணி நேரம் சென்று பரிசோதனை செய்தால், அந்த நபரின் இரத்த அளவு 140 mg /dl க்கு அதிகமாகவும் 200 mg /dl குறைவாகவும் இருந்தால் அவர்களை சர்க்கரை நோயின் விளிம்பில் உள்ளவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
அமெரிக்கன் டயாபடீஸ் அஸோஸியேஷன் என்ற அமைப்பும் இதே அளவீடுகளைதான் சர்க்கரை நோயாளிகளை கண்டறிய இரத்த சர்க்கரை அளவை நிர்ணயித்துள்ளது. பொதுவாக நாம் மேற்கத்திய நாடுகளின் வழிகாட்டலையே பின் பற்றி வருகிறோம்.
நாம் சர்க்கரை நோயாளிகள் என்று கண்டறிவதற்கான அளவீடுகளை பார்த்தோம். ஒருவர் பரிசோதனை செய்யும் பொது மேற்கண்ட அளவீடுகளை ஒப்பிட்டு அவர் சர்க்கரை நோயின் ஏணியில் எங்கு இருக்கிறார் அதாவது ஆரம்பக்கட்டமா இல்லை சர்க்கரை நோயாளியா என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த இரண்டு நிலைகள் அதாவது சர்க்கரையின் நோயின் விளிம்பு நிலை மற்றும் சர்க்கரை நோயின் நிலை ஆகிய இரண்டையும் பற்றி விரிவாக பார்க்கும் முன், எந்த காரணங்களால் சர்க்கரைநோய் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வோம்.
இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வியாதியை பெரும்பாலோனர் மரபு ரீதியாக பெற்று வந்தனர் அதாவது பெற்றோர்களுக்கு இருந்தால் தங்கள் குழந்தைகளுக்கு வருவதற்கான சாத்திய கூறுகள் இருக்கும். ஆனால் இன்று சர்க்கரை நோய்க்கான மிகப்பெரும் காரணமாக நமது பழக்கவழக்கங்களே என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பரபரப்பான வாழ்க்கை முறை, உடல் பருமன் மற்றும் மரபு ரீதியாக பெற்றோர்களிடம் இருந்து தங்கள் புள்ளைகளுக்கு வருவது ஆகிய மூன்று காரணங்களே 90 சதவீத சர்க்கரை நோயிற்கான காரணம். இது தவிர மன அழுத்தம், சுற்றுப்புற சீர்கேடு, நவீன தொல்லை மன்னிக்கவும் தொலை தொடர்பு சாதனங்களின் ஆதிக்கமும் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் போன்ற தொற்று அல்ல நோய்களுக்கு காரணமாக அமைகின்றன.
நீங்கள் கேற்பது எனக்கு புரிகிறது, நகரத்தில் இருப்பவர்கள்தான் உடல் உழைப்பு அற்றவர்கள், சோம்பேறிகள், செல்போன் காதலர்கள் ஆனால் இந்த கிராம வாசிகளுக்கு ஏன் இந்நோய் தாக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது என்பது.
ஒரு பெரிய காரணம் முதுமையை தொடும் வயது, இரண்டாவது காரணம் உணவு பழக்க வழக்கம் மற்றும் முந்தைய காலம் போன்ற உடல் உழைப்பு இல்லாமை,. மேலும் கிராமப்புற இளைஞர்கள் அல்லது நடுத்தர வயதுடையவர்கள் விவசாயம் சாரா உடல் உழைப்பு குறைவான தொழில்களில் ஈடுபடுவதும் முக்கிய காரணம் ஆகும். இவை தவிர மது, புகை பழக்கம் மற்றும் உணவு முறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உப்பு மற்றும் கார்போஹைட்ரெட் அதிகமுள்ள உணவுகளும் இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த கொழுப்பு போன்ற நோய்களுக்கு காரணமாக விளங்குகின்றது.
உண்மையில் நன்கு ஆராய்ந்து பார்த்தல் உடல் பருமன், பரபரப்பான வாழ்கை முறை, மாறுபட்ட உணவு பழக்க முறை , மன அழுத்தம், இதர பிற நோய்களின் தூண்டல் மற்றும் மரபு போன்ற ஏதாவுது ஒரு காரணத்தால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. இருந்தபோதிலும் உணவு பழக்க மாறுதல், சீரற்ற தூக்கம் , உணவு மற்றும் சூழல் மாசுபாடே அதிகரித்து வரும் சர்க்கரை நோய்க்கான காரணம் என நான் கருதுகிறேன். தெரிந்தோ தெரியாமலோ பல்வேறு காரணங்களால் நமக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
சரி நாம் என்ன செய்ய வேண்டும்?, யார் யார் எல்லாம் இந்த நோய்க்கு இரையாக வாய்ப்பு உள்ளது? என் இரத்த சர்க்கரை அளவு இந்திய மருத்துவ அமைப்பு சர்க்கரை நோய்க்கான பரிந்துரை செய்த வரம்பிற்குள் இருக்கிறது, எனவே எனக்கு சர்க்கரை வராது என்றுதானே அர்த்தம் ? யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல் சர்க்கரை வருவதற்கு முன் ஏதாவது அறிகுறிகள் தெரியுமா ? நீரிழிவு நோயின் விளிம்பில் உள்ளவர்கள் அந்த நோயின் தாக்கத்தில் இருந்து மீள முடியுமா போன்ற கேள்விகளுக்கு வரும் நாட்களில் விரிவான மற்றும் தெளிவான ஒரு புரிதலை ஏற்படுத்தி கொள்ள முயற்சிப்போம்.
யாருக்காவது ஏதாவது சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தால் எந்தவித தயக்கமும் இல்லாமல் தெரிவிக்கலாம்.
தொடரும்…………………