DHANVANTHRI NADI JOTHIDAM

DHANVANTHRI NADI JOTHIDAM VAASTHU EXPERT~NUMEROLOGY~PRASANNA NADI ASTROLOGER TAROTASTROLOGY

01/08/2022
14/02/2021

*ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம்*

*ஜீவ நாடி என்றால் என்ன?*

ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும்.

ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும்.
மேலும் இதனைக் காண மற்ற நாடிகளைப் போன்று விரல் ரேகையையோ, பிற விவரங்களையோ அளிக்கத் தேவையில்லை. நாம் ஜோதிடரிடம் போய் அமர்ந்து கொண்டால் போதும். கேள்விகள் கூட கேட்காமல், தாமே நமக்குத் தேவையான விவரங்களைத் தரும் நாடிகளும் இருந்திருக்கின்றன.

“இந்த ஜீவ நாடியைக் கைவசம் வைத்திர்ப்பவர்கள் மிகவும் ஒழுக்கசீலர்களாகவும், தினமும் இறைவழிபாடு செய்கிறவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், மிகுந்த சுத்தத்துடன் நடந்து கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். பொன், பொருள், புகழ், பணம் போன்றவற்றிற்கு ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
சேவை மனப்பான்மையுடன் தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது. அவ்வாறு அவர்கள் முறை தவறி நடந்து கொண்டால் நாடி பலிக்காது, நாளடைவில் பலன்கள் தவறாகிச் செயலிழந்து விடும்” என்பது நாடி ஜோதிடர்களின் கூற்று.

தனக்குக் கிடைத்த அகத்தியர் ஜீவ நாடியின் மூலம் லட்சக் கணக்கானோருக்கு ஏடு படித்து, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றக் காரணமாக இருந்தவர் ஹநுமத்தாஸன். சாதாரண மனிதர் முதல், அன்றைய, இன்றைய பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் ஹநுமத்தாஸனின் ஜீவநாடி மூலம் பலன் பெற்றனர்.தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏன், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அவரிடம் ஜீவ நாடி படித்துப் பலன் பெற்றனர் பலர்.

ஜோதிடத்தை ஒரு சேவையாக எண்ணிச் செய்து வருபவர் அகத்தியர் ஜீவநாடிதான். பல ஆண்டுகளாக இவர் தன்னிடம் இருக்கும் ஜீவநாடி மூலம் பலன் சொல்லி வருகிறார். உலகெங்கிலுமிருந்தும் பலர் இவரிடம் நாடி பார்க்க வருகின்றனர். பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் இவரிடம் வந்து ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளனர்.

இதற்காக இவர் ”கட்டணம் இவ்வளவு கொடு” என்று கேட்டு வாங்குவதில்லை. கொடுப்பதைப் பெற்றுக் கொள்கிறார். அவ்வாறு வரும் பணத்தையும் நாடியில் வரும் கட்டளைப்படி அன்னதானத்திற்கும், தீப வழிபாட்டிற்கும், யாகங்கள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தி வருகிறார். ஒரு ஆன்மீக சேவையாகவே எண்ணி இதைச் செய்து வருகிறார்.

இதில் முக்கியமான விஷயம். இது சாதாரண நாடிகளைப் போன்றதல்ல. ஜீவநாடி. ஆகவே ஆன்மீகம், ஞானம், சித்த யோகம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு மிகத் தெளிவான பதில்கள் கிடைக்கும். வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் தகுந்த ஆலோசனைகள் கூறப்படுகின்றன.

*நாடி பார்க்கும் முறை*

இங்கு மற்ற நாடிகளைப் போல் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. விரல் ரேகை எடுக்கப்படுவதில்லை. பெயர் போன்ற விவரங்கள் கேட்கப்படுவதில்லை. அனைவரையும் உட்கார வைத்துப் பொதுவில் நாடி படிக்கப்படுகின்றது.

*தன்வந்தரி நாடிஜோதிடம்.சென்னை*
*ஜோதிடர்,க,கனால் மேகநாதன்.*
*9677118146.9042332046*

15/08/2019

பிரசன்ன ஜீவநாடி

தன்வந்திரி நாடிஜோதிடர்;கனால் மேகநாதன்.பரதேசி ஐீவ நாடிஜோதிடர்.

ஜீவநாடியில் குறிப்பிடத்தகுந்ததாக விளங்குவது பிரசன்ன ஜீவநாடி. இந்த நாடி மூலம் நாடி பார்த்துப் பலன்கள் கூறி வருபவர் கனால் மேகநாதன்.பரதேசி ஐீவ நாடிஜோதிடர்.தன்வந்திரிநாடிஜோதிடம் என்ற பெயரில் இயங்கி வரும் சென்னை கிண்டி அருகில் உள்ள போரூரில், மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.

நாடி பார்க்கும் முறை

இங்கு மற்ற நாடிகளைப் போல் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.தங்கள் விறுப்பாக கொடுக்கும் காணிக்கையை மனம்மகிழ்து எற்றுகொள்கிறர். விரல் ரேகை எடுக்கப்படும் இடது மற்றும் வலது பெயர் போன்ற விவரங்கள் கேட்கப்படுவதில்லை. உட்கார வைத்துப் பொதுவில் நாடி படிக்கப்படுகின்றது. பலன்கள் அனைத்தும் ஓலைச்சுவடியிலிருந்து பாடலாகவே படிக்கப்படுவதில்லை பதினேட்டு கண்டங்களிலும் போது கண்டமாகவே பலன்கள் கூறுகிறார் கிரகங்களின் அடிப்படை முற்றிலும் இல்லை.சப்தரிஷிகள் சப்தமாதர்கள் பஞ்யாந்திரஙகள் பஞ்சபூதங்களில் அடிப்படையில் பலன்கள் கூறுகிறார்.தினமும், இறை வழிபாட்டை முடித்து விட்டுப் பலன் கூறத் தொடங்குகிறார்.

குறிப்பாக ஒவ்வொரு நாளிலும் நள்ளிரவில் தியாந்த்தில் அமர்ந்து அன்று வந்தவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை தமது தியானம் முலமாகவும் பிறார்த்தணை முலமாகவும்.இறைவணிடம் சமர்ப்பணம் செய்வார்.அவர்அவர் கர்மவினைகளுக்கு எற்றவாறு பரிகாரங்கள்.கூறுகிறார்.
தொடர்புகள்;9677118146.9042332046

சமயம் குறிப்பிடும் சாபங்கள் சாபங்கள் நீங்க வேண்டுமா?சாபங்கள் நீங்க வேண்டுமா?*ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திலும் கிரகங்களின் ப...
11/08/2019

சமயம் குறிப்பிடும் சாபங்கள்

சாபங்கள் நீங்க வேண்டுமா?

சாபங்கள் நீங்க வேண்டுமா?
*ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திலும் கிரகங்களின் பலன் என்பது அவனது முன்ஜென்ம வினை, அவனது முன்னோர்களின் வினை பொறுத்தே அமைகிறது. முற்காலத்தில் முனிவர்கள் கோபத்தினால் சாபம் கொடுத்தனர். ஆனால் இக்காலத்தில் மனிதர்களே சாபம் கொடுக்கின்றனர். ஒவ்வொருசாபத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு உண்டு.

*ஒரு சாதாரண மனிதன் இன்னொரு மனிதனால் தேவையற்ற முறையில் அல்லது அதர்ம வழியில் தாக்கப்படும் போது தன்னையும் மீறிய சோகத்திற்கு ஆட்படுகிறான். அந்த நேரம் அவன் மனது நிகழ்ந்த நிகழ்ச்சியிலேயே நிலைத்து விடுகிறது. சுற்றுப் புறச் சூழல்கள் அனைத்தும் மறந்து தனக்கு ஏற்பட்டஅநியாயத்தை மட்டுமே நினைத்து நினைத்து மனம் உருகி ஒருநிலைப் பட்டுவிடுகிறது. அப்போது அவனிடமிருந்து வருகின்ற வார்த்தை அடிவயிற்றில் இருந்து ஒரு ஓநாயின் ஓலம் போல வெளிப்பட்டு எதிராளியை தாக்குகிறது. எதிரியை மட்டும் அல்ல எதிரியின் வம்சத்தை கூட தாக்குகின்ற அளவிற்கு அந்த வார்த்தை சக்தி மிகுந்த சாபமாகி விடுகிறது. இதனால் பல தலைமுறைகள் காரணமே இல்லாதசோதனைகளைச் சந்தித்து வாழ்வில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது.

*ஒரு சிலருக்கு வயது அதிகமாகியும் திருமணம் கைகூடி வந்திருக்காது. அவர்களுக்கு முன்னோர்கள்சாபத்தினால் தடை ஏற்படுகிறது என்று சொல்வர். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் ஆரோக்கியப் பாதிப்புகள் வந்து கொண்டேயிருக்கும். யாருடைய சாபமோ என்று சொல்வர். ஒரு சிலருக்கு கோபம் வந்தால் உடனே சாபம் விடுவர்.

*கற்றறிந்த பெரியவர்கள், வயோதிகர்கள் விடும் சாபம் சிலரை பாதிக்கலாம். எனவே தான் பிறர் கோபப்படும்படி நாம் நடந்து கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள். அங்ஙனம் ஏற்படும் சாபங்கள் விலக இறை வழிபாடுதான் தீர்வு. தந்தையின் சாபம் விலக, பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு சாந்திப் பரிகாரம் செய்யவேண்டும்.

*தாயின் சாபம் விலக, ஏகாதசி திதியில் ஏகாம்பரேஸ்வரரை முறையாக வழிபாடு செய்ய வேண்டும். சகோதர சாபம் விலக, அஷ்டமி திதியில் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும். சுமங்கலி பெண்களின் சாபம் விலக, அதிகார நந்தியை திருதியை திதியில் வழிபாடு செய்ய வேண்டும். ஆசிரியர் சாபம் விலக சப்தமி திதியில் துவார பாலகர்களை வணங்க வேண்டும்மனிதனுக்கு உண்டாகும் 5 விதமான தோஷங்கள்
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதிவைத்துள்ளனர்.
ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள்
1.வஞ்சித தோஷம்,
2.பந்த தோஷம்,
3.கல்பித தோஷம்
4.வந்தூலக தோஷம்
5.ப்ரணகால தோஷம் எனப்படும்.

வஞ்சித தோஷம்:- பார்க்கக் கூடாத படங்கள், வெறியூட்டும் காட்சிகள் காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும்.

பந்த தோஷம்:- நம்மை நம்பி பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழிவாங்குதல் பந்த தோஷமாகும். இந்த தோஷத்துக்கு தந்தை, தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.

கல்பித தோஷம்:- பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால்இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.
வந்தூலக தோஷம்:- ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம் நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ரவிக்கைத் துணிஆகியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலைத் தலத்திற்குச் சென்று முருகனைத் தரிசித்துப் பின் ஏழைத் தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.

ப்ரணகால தோஷம்:- திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவிஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் ப்ரணகால தோஷங்கள் நிவர்த்தியாகும்…

சாபம் பலிக்குமா, சாபம் தீரக்கும் வழிமுறைகள். தமிழர் நம்பிக்கையும் அறிவியலும்.சாபம் பலிக்குமா என்ற கேள்வியை அறிவியல் ரீதி...
11/08/2019

சாபம் பலிக்குமா, சாபம் தீரக்கும் வழிமுறைகள்.

தமிழர் நம்பிக்கையும் அறிவியலும்.
சாபம் பலிக்குமா என்ற கேள்வியை அறிவியல் ரீதியாக பார்க்கையில் ஆய்வாளர்களின் கூற்றும், சாபம் 80% பாதிக்கும் என்று கூறுகின்றனர். சாபவார்தைகள் ஒருவர் சொன்னால் கேட்கும் நபரின் மனநிலை உடனடியாகவோ அல்லது பின் நாளிலோ பாதிக்க தொடங்கி உறுதியற்ற தன்மையை உருவாக்கும். அந்த நபரின் மனதை உறுத்தி கொண்டே இருக்கும், இது படி படியாக வளர்ந்து மிகுந்த வேதனைக்கு ஆளாக்கும் என்று கூறுகின்றனர். தமிழ் சாப வார்த்தைகளுக்கு, இவர்களின் ஆய்வு கூற்றுக்கு மீறி வலுமையாக தாக்கும் சக்தி உண்டு. இதை உறுதி படுத்தி கொள்ள சித்தர்கள் எழுதிய நூல்களில் உள்ள மந்திர சொற்களை கவனித்து உறுதி படுத்தி கொள்ளலாம். எனவே போசும் போது எதிர்மறை வார்த்தைகள் தவிர்த்து போசுங்கள்.
மாமியார் கொடுமைக்கு கருடபுராணம் கூறும் தண்டனைகள்அமெரிக்காவை ஆட்டி வைத்த இந்துக்களின் ஸ்ரீசக்கரம்

சாபம் பலிக்குமா? சாபம் விட்டால் பலிக்குமா? அப்படியே சாபம் விட்டாலும் அவர்கள் என்ன முனிவர்களா? ரிஷிகளா? அப்படியே பலிப்பதற...
11/08/2019

சாபம் பலிக்குமா?

சாபம் விட்டால் பலிக்குமா? அப்படியே சாபம் விட்டாலும் அவர்கள் என்ன முனிவர்களா? ரிஷிகளா? அப்படியே பலிப்பதற்கு? அதுவும் 21 ஆம் நூற்றாண்டில் அதிவேக விஞ்ஞான வளர்ச்சியில் வானத்தையே தொட்டுவிடுகிறோம்… இப்படியெல்லாம் சிலர் அலட்சியமாக பேசுவார்கள் தான். ஆனால் மனம் நொந்து போனவர்கள் தங்கள் மனதை நோகச்செய்பவர்களை நோக்கி அவர் கண்களை நேருக்கு நேராக பார்த்து சபிக்கும் சொல் நிச்சயம் பலித்துவிடும் என்பது நூறுசதவீத உண்மை.

முன்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், யோகிகள் தங்களைக் கோபம் கொள்ள வைத்தவர்களை சபித்து விடுவார்கள். மனிதனாக இருந்த நீ மாடாக கடப்பது… மரமாக வளர்வது… இப்படி அவர்கள் சபித்து, அவை பலித்தும் இருக்கின்றன. இதுபோல் கணக்கிலடங்கா கதைகளை கேட்டிருக்கிறோம்.அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை என்கிறார் தெய்வப்புலவர். இதிலிருந்து சாபத்துக்கு வலிமை உண்டு என்பதை அறியலாம். அதனால் தான் முன்னோர்கள் யாருக்கும் உதவி செய்ய முடியவில்லையென்றாலும் பரவாயில்லை,உபத்திரவம் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். கண் முன்னால் நன்றாக வாழ்ந்த ஒருவன் வீழும்போது நிச்சயம் அவன் விமர்சிக்கப்படுவான். “எத்தனை பேரை ஏமாற்றி யாருடைய சாபத்தைப் பெற்றானோ இன்று இத்தகைய நிலைக்கு ஆளாகியிருக்கிறான் ” மிகவும் சகஜமாக வரும் வார்த்தைகள் இவை. அன்றாடம் நம் காதால் கேட்கக் கூடிய வார்த்தைகள் தான். ஆனால் ஆழ்ந்து யோசித்தால் சாபம் வாங்குவது சாவின் விளிம்புக்கு சென்று திரும்புவதற்கு சமம் என்று கூட சொல்லலாம். ஓம் என்னும் வார்த்தை எப்படி நேர்மறை சக்தி மிகுந்த ஆற்றலான வார்த்தையாக கருதப்படுகிறதோ அதுபோல் சாப வார்த்தைகள் எதிர்மறை ஆற்றல் அதிகம் மிகுந்த வார்த்தைகள்.

வீட்டிலும், உறவினர்களிடமும், சுற்றத்திலும் ஒருவர் மற்றொருவர் மனம் நோகும்படி வார்த்தைகளாலோ செயல்களாலோ அதீத துன்புறுத்தலுக்கு உள்ளாகும் போது பொறுக்க முடியாத அவரால்,தன்னை துன்புறுத்துபவர்களை தண்டிக்கவும் இயலாத நிலையில் உள்ளம் நொறுங்க, கண்களில் கண்ணீர் பெருக, தொண்டையில் வார்த்தைகள் வராமல் தவிக்கும்போது பாதிப்புக்குள்ளாக்கியவர்களை ”எனக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போல் உனக்கும் நேரும் என்று அவர்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கேற்ப ஏதேனும் ஒரு சாபத்தை சபிப்பார்கள். ஆனால் எல்லா நேரங்களிலும் சாபம் இடுவதும், அந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் மகா பாவம். அத்தகைய நிலையில் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியவர்கள் அதனினும் மிகுந்த பாவத்தைச் செய்தவர்கள் என்று சொல்லலாம். இவையெல்லாம் நம் கண்முன்னாடி பார்க்கும் சாபங்கள்.

ஒருவர் செய்த துரோகத்தை நினைக்கும் போது மனமும் எண்ணமும் அதைப் பற்றிய சிந்தனையில் மட்டுமே இருக்கிறது. மீண்டும் மீண்டும் அதை நினைத்து நாம் மருகி அதற்கு ஒரு சக்தியை உண்டாக்கிவிடுகிறோம். நமது முழு எண்ணமும் அவர் மீதான கோபத்தில் தாக்குண்டு இருக்கிறது.தியானம் செய்யும் போது எப்படி ஒரே நோக்கோடு இறைவனை தியானிக்கிறோமோ அதே தீவிரத்துடன் நமக்கு துரோகம் செய்தவர்களைக் காணும் போது வரும் கோபமும் தீவிரமாகிறது. அப்போது வெளிப்படும் வார்த்தைகள் சக்தி மிகுந்ததாக பலிக்கும் வகையில் இருக்கிறது,.

பெண்சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், பித்ரு சாபம், கோ சாபம், பூமி சாபம், கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம், குலதெய்வ சாபம் என சாபத்தின் வகைகள் நிறைய உண்டு. சாபத்தைப் பெற்றவர்கள் அத்தகைய தவறை உண்மையாக செய்திருந்தால் நிச்சயம் அவர்கள் தங்கள் மனம், உடல் அல்லது வம்சம் ரீதியாக பிரச்னைகளை அனுபவிப்பார்கள். ஒருவரை சபித்து விட்டு பிறகு அவருடன் உறவு கொண்டு ஒட்டி வாழும்போது சாபம் சபித்தவரையே திருப்பி சேரும் என்ற நம்பிக்கையை முன்னோர்கள் கொண்டிருந்தார்கள். அதனாலேயே உறவுகளுக்குள் விரிசல் இல்லாமல் குறிப்பாக வாதங்களின் போது எதிர் மறையான வாக்குதல்களை ஈடுபடுத்தாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்தனர்.

முன்னோர்கள் எவ்வித மூடநம்பிக்கையையும் நம் மீது திணிக்கவில்லை என்பதை ஆய்வாளர்கள் சபிக்கும் நிகழ்விலும் நிரூபித்து இருக்கின்றனர். ஆம் சாப வார்த்தைகள் அதிக சதவீதம் பலிக்கும் என்று கூறி அதற்கான காரணத்தையும் விளக்கியிருக்கிறார்கள். சாப வார்த்தைகளை உச்சரிக்கும் போதே தவறு செய்தவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். அவரது மனதில் அவர் செய்த குற்றங்கள் உறுத்தி கொண்டே இருக்கும், வெளியில் இயல்பாக காட்டிக்கொண்டாலும் மனரீதியாக அவர்கள் பலவீனமடையத் தொடங்குவார்கள். இது அவர்களை எத்தகைய செயலிலும் முன்னொக்கி அழைத்து செல்லாது. படிப்படியாக அவர்களை வேதனைக்கு உண்டாக்கும். இவைதான் காலப்போக்கில் அவர்களை அழிவுப்பாதைக்கும் கொண்டு செல்லும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

சாபத்துக்கு பரிகாரம் உண்டா.. என்றால் அதற்கான பரிகாரம் நமது குலதெய்வ வழிபாடும், சிவ வழிபாடும் தான். அறிந்தும் அறியாமலும் நீங்கள் யாருக்கேனும் கொடுமை செய்ய நேர்ந்து விட்டால் உங்கள் குலதெய்வ கோயிலில் பொங்கல் வைத்து மனதார இனி இத்தகைய தவறை செய்யமாட்டேன் என்று வழிபடுங்கள். எத்தகைய சாபத்தையும் போக்கி நம்மை குலதெய்வ வழிபாடு காக்கும். எல்லாம் சரி… யார் சாபம் விட்டாலும் பலித்துவிடுமா? கெட்டவர்கள் கூட சாபம் இடமுடியுமா? நல்லவர்களுக்கு மட்டுமே அத்தகைய வாக்கு பலிக்குமா என்று தானே கேட்கிறீர்கள். ஒருவர் நல்லவராக இருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலையாலோ, பிறருக்கு உடந்தையாகவோ தன்னை காத்துக்கொள்ளவோ உண்மையாக தவறு செய்யும் பட்சத்தில் துன்பத்துக்கு ஆளானவரிடமிருந்து அழுது பதறிய நெஞ்சத்திலிருந்து விம்மி புடைத்து வெளியேறும் சொல்லொணாத் துயர வார்த்தைகள் சாபமாக மாறி எத்தகைய வலிமையான மனிதனையும் அழித்துவிடும் என்பதை மறந்து விடாதீர்கள். சபிக்கவும் செய்யாதீர்கள்.நீங்கள் விதைத்தால் நீங்களே அறுவடை செய்யவேண்டும்.

13 வகையான சாபங்களும், அதனால் வரும் சங்கடங்கள்.சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது. அவை என்ன, அந்த சாபத்தால் ...
11/08/2019

13 வகையான சாபங்களும், அதனால் வரும் சங்கடங்கள்.

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது. அவை என்ன, அந்த சாபத்தால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து கொள்வொம்.

1) பெண் சாபம்,
2) பிரேத சாபம்,
3) பிரம்ம சாபம்,
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம்,
6) கோ சாபம்,
7) பூமி சாபம்,
8) கங்கா சாபம்,
9) விருட்ச சாபம்,
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்,
13) குலதெய்வ சாபம்

அவற்றை வரிசையாக பார்க்கலாம்.

பெண் சாபம் :

இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை துனபுறுத்துவது ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.

பெண் சாபம் ஏற்பட்டால் ஆசைநிறைவேறாது உழைப்பு செல்வம். வம்சம் அழியும்.

பிரேத சாபம் :

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.

பிரேத சாபத்தால் சொந்தம்.ஆரோக்கியம். ஆயுள் குறையும்.

பிரம்ம சாபம் :

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.

பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது,செல்வம் குறைந்தது போகும்.தொழில்.வியாபாரம்.உத்தியோகம்.நஷ்டம். படிப்பு இல்லாமல் போகும்.

சர்ப்ப சாபம்:

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்.

இதனால், கால-சர்ப்ப தோஷமும்.பெணகளால் அவமானம். ஏற்பட்டு விவகரத்து. திருமணத் தடை ஏற்படும்.

பித்ரு சாபம் :

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.

பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி,முன்னோர்கள் சொத்துக்கள் அழிவும் வம்சவிரித்தி இல்லாமல் வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

கோ சாபம் :

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.

இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.இருக்கும் செல்வங்கள் குறையும்.

பூமி சாபம் :

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.

பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.திரதாவியாதி வம்பு வழக்குகள் உண்டாகும்.

கங்கா சாபம் :

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.

கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.அசுத்தமான நீர் அல்லது தண்ணீர் தட்டுப்பாடு சுபநிகழ்ச்சிகள் முழுமையாது.

விருட்ச சாபம் :

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.

விருட்ச சாபத்தினால்,பெற்றமக்காளால் பலன் இல்லை கடன் மற்றும் நோய் உண்டாகும்.

தேவ சாபம் :

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும்.பாசம் மோசம் தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

ரிஷி சாபம்:

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.

ரிஷி சாபத்தால்,புருஷாலக்ஷணம்கேடும் வம்சம் அழியும்.

முனி சாபம்:

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.

முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு மர்மங்கள் மனக்கவலை மனகுழப்பம ஏற்படும்.

குலதெய்வ சாபம் :

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.

சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்து விடும்.

11/08/2019

Address

Chennai
600116

Alerts

Be the first to know and let us send you an email when DHANVANTHRI NADI JOTHIDAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DHANVANTHRI NADI JOTHIDAM:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram