நம்மாழ்வாரின் வழியில்

  • Home
  • India
  • Chennai
  • நம்மாழ்வாரின் வழியில்

நம்மாழ்வாரின் வழியில் நம்மாழ்வார் ஐயா கண்ட கனவின் ஒரு விதை
(441)

18/07/2025

"ஏழு உடல் பிரச்சனைகளுக்கு கள் ஒரு எளிய மருந்து!"

 #வானகத்தில்"மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி" #நாள் : 08-08-2025 முதல் 10-08-2025 வரை #நம்மாழ்வாரின் நோக்கங்கிறத...
17/07/2025

#வானகத்தில்
"மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி"

#நாள் : 08-08-2025 முதல் 10-08-2025 வரை

#நம்மாழ்வாரின் நோக்கங்கிறது...
என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும், அது தான் வானகத்த மையமா வச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம். இந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம். #வானகம் எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக் கொள்ளும்.

#வானகம் நடத்தும்
இப் பயிற்சியில் :
↣ வானகம் அறிமுகம் மற்றும் செயல்பாடுகள்
↣ ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை
↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
↣ மழை நீர் அறுவடை
↣ உயிர்வேலி
↣ ஒருங்கிணைந்த பண்ணை
↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
↣ களப்பயிற்சி
↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
↣ கால் நடை பராமரிப்பு
↣ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு
↣ மரபு விளையாட்டு* ஆகியவை இடம்பெறும்.

பயிற்சியை #வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.

⇒ பயிற்சி வருகிற
08.08.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்கி
10.07.2025 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.

⇒ பயிற்சி நிகழ்விடம் :
“ #வானகம்” – #நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
சுருமான்பட்டி, கடவூர்,
கரூர் மாவட்டம்.
https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19

பயிற்சியில் 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

⇒ பயிற்சி நன்கொடை : ரூ 2,500/- (non-refundable)

தாங்கள் வங்கியில் பணம் செலுத்திய பின்பு அதன் விவரங்களை +91 94458 79292 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிக்கவும்.

*தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்
Nammalvar Ecological Foundation :
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
முன்பதிவு அவசியம்.
தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .

முன்பதிவுக்கு அழைக்கவும் :
+91 86680 98495
+91 86680 98492
+91 94458 79292

குறிப்பு :
⇛ வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
⇛ பாலித்தின் பைகள்
⇛ சோப்பு
⇛ ஷாம்பு
⇛ பேஸ்ட்
⇛ கொசுவர்த்தி
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .

களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.

பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :
https://vanagam.org
https://vanagam.page.link/app

நன்றி.

16/07/2025

ஓட்டு கேட்க மட்டும் வருவாங்க – பரந்தூர் பெண்கள் எழுச்சி வரலாறு!

Blue economy - A coastline opportunities என்ற பெயரில் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் மக்கள் விரோத அறிவிப்பு அதிர்ச்சி...
14/07/2025

Blue economy - A coastline opportunities என்ற பெயரில் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் மக்கள் விரோத அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை நீண்டிருக்கும் வளமான கடற்கரை பரப்பை தனியார் நிறுவனங்களுக்கு கூறுபோட்டு விற்க திட்டமிடும் இந்த அறிவிப்பு மீனவர்களின் வளர்ச்சியையோ, அவர்களின் தொழில் முன்னேற்றத்தையோ கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்டதாக தெரியவில்லை மாறாக மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அடகு வைத்து பெரும் முதலாளிகளுக்கும் தனியார் பெருநிறுவனங்களுக்கும் லாபம் கொழிக்கும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியாகத்தான் தெரிகிறது.

ஏற்கனவே சென்னை மற்றும் குமரி கடல் பகுதிகளில் ONGC நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருப்பதையும் அதை தமிழ்நாடு அரசு எவ்விதமான எதிர்ப்புமின்றி கள்ள மவுனம் காத்துக் கொண்டிருப்பதையும் வைத்து பார்க்கும் போது இது ஒன்றிய மாநில அரசுகளின் கூட்டுக் களவுத்திட்டமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

இதற்கு முன்பு இங்கு திணிக்கப்படும் மக்கள் விரோத திட்டங்கள் அனைத்திலும், மக்களின் எதிர்ப்புணர்வையும் போராட்டங்களையும் கண்டு ஒன்றிய அரசின் மேல் பழி போட்டு ஒளிந்து கொள்ளும் திராவிட மாடல் திமுக அரசு இம்முறை நேரடியாக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே ஒன்றிய அரசின் ஆசிபெற்ற பெருமுதலாளியான அதானி சென்னை காட்டுப்பள்ளியில் கட்டிவரும் தனியார் துறைமுகத்திற்கு இந்த திமுக அரசு மறைமுக ஆதரவு கொடுப்பது நாம் அறிந்ததே.
கடந்த காலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாடு கடற்கரைகளில் திணிக்கப்பட்ட பல அழிவு திட்டங்களும் இந்த திமுக அரசின் ஆதரவோடுதான் நிறைவேறின.

இதுபோன்று பல ஒன்றிய அரசின் மக்கள் விரோத திட்டங்களை இவ்வரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்து வருகிறது.
இவர்களின் இந்த விசுவாசத்திற்கு பரிசாக கடல் சூழலியலை அழித்து கடலுக்குள் பேனா சிலை வைக்கும் அனுமதியையும் ஒன்றிய அரசிடமிருந்து பெற்றார்கள் என்பதையும் நாம் மறந்து விடவில்லை.

கடற்கரை சார்ந்த சுற்றுலா வசதிகளை மேம்படுத்தவோ, மீன்பிடி சார்ந்த தொழில் வளர்ச்சிகளை கட்டமைக்கவோ எண்ணம் இருந்தால் அதை, அம் மக்களின் அனுமதியையும் ஆலோசனைகளையும் பெற்று, அரசே செய்ய வேண்டும். மாறாக
எங்கள் கடலையும் எங்கள் கடற்கரையையும் யாரோ ஒரு முதலாளிக்கு 30 முதல் 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதுதான் உங்கள் வளர்ச்சி திட்டம் எனில் அரசு எதற்கு?

ஒருபுறம் எங்கள் வாழ்வாதாரங்களை அழித்து நாசமாக்கிவிட்டு மறுபுரம் ' ஓரணியில் தமிழ்நாடு ' என தேர்தல் நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது திமுக. உண்மையில் இங்கு ஓரணியில் சேர்ந்திருப்பது திராவிட மாடல் திமுக அரசும் , பாசிச பாஜக அரசும் , பெருமுதலாளிகளும் தான்.
- மரிய ஜெனிபர்

 #வானத்தை_வாசித்தவர்கள்நாள், நேரம், பருவநிலை என அனைத்தையும் கணிக்க கற்றுத்தந்தவர்கள்—புத்திசாலிகள் அல்ல, புத்திசாலித்தனம...
10/07/2025

#வானத்தை_வாசித்தவர்கள்

நாள், நேரம், பருவநிலை என அனைத்தையும் கணிக்க கற்றுத்தந்தவர்கள்—புத்திசாலிகள் அல்ல, புத்திசாலித்தனமாக வாழ்ந்த மேய்ச்சல் மக்கள்.
வெளிச்சமும் வானமும் பார்த்துத் தங்கள் கால்நடைகளுடன் பரந்த பசுமை நிலத்தில் உறங்கியவர்கள்தான்,
“இந்த நட்சத்திரம் அந்த இடத்தில் வந்தால் மழை வரும்” என்று புரிந்துகொண்டார்கள்.

இது விஞ்ஞானம் பிறக்கும் முன், இயற்கையை வாசித்த அறிவு!

#ஆடுமாடுகளின்_மாநாடு

ஐநா சபை எதிர் வரும் 2026 ஆம் ஆண்டை "உலக மேய்ச்சல் நிலங்கள்" கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் மலைப்பகுதிகளின் ஆண்டாக அறிவித...
09/07/2025

ஐநா சபை எதிர் வரும் 2026 ஆம் ஆண்டை
"உலக மேய்ச்சல் நிலங்கள்" கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் மலைப்பகுதிகளின் ஆண்டாக அறிவித்துள்ளது (International Year of Rangelands and Pastoralists 2026)
கால நிலை மற்றதின் விளைவுகளை கருத்தில் கொண்டே
ஐநா சபை இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

09/07/2025

ஆடு மாடுகளின் உரிமைக்காக தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல்முறையாக #நாம்_தமிழர் அரசியல் கட்சி மாநாடு நடத்துவது நம்பிக்கை அளிக்கிறது. நமது நாட்டு மாட்டு இனங்களுக்காக உரிமைகளை காக்கும் இந்நிகழ்வு வெற்றியடைய வாழ்த்துக்கள்.

தண்டவாளம் = மின் நிலையம் ⚙️➡️⚡சுவிட்சர்லாந்து, இயற்கையை அச்சுறுத்தாமல் வளர்ச்சி எட்டும் பாதையில் ஒரு அசாதாரண பயணத்தைத் த...
09/07/2025

தண்டவாளம் = மின் நிலையம் ⚙️➡️⚡

சுவிட்சர்லாந்து, இயற்கையை அச்சுறுத்தாமல் வளர்ச்சி எட்டும் பாதையில் ஒரு அசாதாரண பயணத்தைத் தொடங்கியுள்ளது!
அங்கு, Sun-Ways எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம், ரயில்கள் பாயும் தண்டவாளங்களையே ஒரு பயன்படத்தக்க சூரிய மின் உற்பத்தி மையமாக மாற்றும் திட்டத்தில் களமிறங்கியுள்ளது.

இந்த புதிய முயற்சியின் மூலம், தண்டவாளங்களுக்கு இடையே நேரடியாக நீக்கக்கூடிய சோலார் பேனல்கள் பொருத்தப்படுகின்றன.
சிறப்பு என்னவென்றால், இவை ரயில்களின் ஓட்டத்திற்கோ, அதிர்விற்கோ இடையூறு ஏற்படுத்தாது —
எடை, வெப்பம், அதிர்வுகள் அனைத்தையும் தாங்கும் வல்லமை கொண்டவை.

ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கே பல வீடுகளுக்கான மின்சாரம் உருவாகும் அளவுக்கு திறன் கொண்டது.
சுவிட்சர்லாந்தில் மட்டுமே 5,000 கி.மீ.-க்கும் மேலான தண்டவாளங்கள் இருப்பதால், இது முழு நாட்டுக்கே ஒரு பசுமையான மாற்றுப் பயணம் ஆக அமையும்!

 #பூச்சிகளை_பார்த்தால்_புன்னகை_செய்🔴"வானில் பறக்கும் வயல் காவலர்கள்"🔴வானில் மெதுவாகச் சுழன்று, நீர்நிலைகளின் மேல் நெளிந்...
08/07/2025

#பூச்சிகளை_பார்த்தால்_புன்னகை_செய்
🔴"வானில் பறக்கும் வயல் காவலர்கள்"🔴

வானில் மெதுவாகச் சுழன்று, நீர்நிலைகளின் மேல் நெளிந்துசெல்லும் சில சிறு உயிர்கள், விவசாயத்தின் நிஜ ரட்சகராக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவைதான் தட்டான் மற்றும் ஊசி தட்டான் போன்ற உழவர்களுக்கு நன்மைதரும் பூச்சிகள்.

இவை வெறும் பறக்கும் உயிர்கள் அல்ல — விவசாய நிலங்களில் உழைக்கும் வீரர்கள். வயலில் பறந்து செல்லும் கொசுக்கள், சிறு சிறு தாவர உண்ணிப் பூச்சிகள் போன்றவை தங்களுக்கே தெரியாமல் இவற்றின் இரையாகின்றன. தங்களது கூரிய கண்களாலும், மெல்லிசைக் குரலில்லா பறப்பாலும், தட்டான்கள் தங்களது இரையை துல்லியமாக கண்டறிந்து, சுற்றிவளைத்து பிடிக்கும் வல்லமை உடையவை.

இதனால், வளரும் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், புழுக்கள் போன்றவை இயற்கையாக கட்டுப்படுகின்றன. வேளாண்மைச் சூழலுக்கு இதுவே ஒரு பெரிய வரப்பிரசாதம்.

மேலும், இவை மகரந்த சேர்க்கையிலும் முக்கிய பங்காற்றுகின்றன. பல தாவரங்கள் தங்களது மகரந்தத்தை மற்றொரு மலரில் சேர்க்கும்போது இந்த பூச்சிகளின் பங்கை நம்மால் மறக்க முடியாது.

மகரந்த சேர்க்கை உயர்ந்த அளவில் நடந்தால், மகசூலும் மேலோங்கும்.
இயற்கையின் ஒத்துழைப்பில் விளையும் அறுவடை என்பது, இந்த தட்டான் பூச்சிகளின் உழைப்பும் ஒருபக்கம் இருக்கிறது என்பதையே உறுதி செய்கிறது.

நாங்கள் மனிதர்களிடம் எதிர்பார்ப்பது
08/07/2025

நாங்கள் மனிதர்களிடம் எதிர்பார்ப்பது

திருச்சியில் #கள்_விடுதலை_மாநாடுபனையேறிகளால் நடத்தப்படும் பனையேறிகளின் உரிமை மீட்பு கள் விடுதலை மாநாட்டிற்கு  #அனைத்து_ம...
07/07/2025

திருச்சியில்
#கள்_விடுதலை_மாநாடு
பனையேறிகளால் நடத்தப்படும் பனையேறிகளின் உரிமை மீட்பு கள் விடுதலை மாநாட்டிற்கு #அனைத்து_மாவட்ட_பனையேறிகளும் அணி திரண்டு வாரீர்!

பனையேறிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் #தோழமைகள் அனைவரையும் மாநாட்டுக்கு அன்போடு அழைக்கின்றோம்.

நாள்: ஆடி 11 (27-07-2025) ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10: 00 மணி முதல் மாலை 5: 00 மணி வரை
இடம்: #சமயபுரம், சக்தி நகர் பனந்தோப்பு,
திருச்சி மாவட்டம்

தொடர்புக்கு:
துரைசாமி பனையேறி 8526853888
மணி பனையேறி 6383475660
பாண்டியன் பனையேறி 9500627289

#தமிழ்நாடு_பனையேறிகள்_பாதுகாப்பு_இயக்கம்

#கள்_எமது_உணவு
#கள்_எமது_உரிமை
#பனை #பனையேறிகள்

🌾 விவசாயிகளுக்கு நல்ல செய்தி!பாழடைந்த கிணறுகளை புதுப்பிக்க அரசு வழங்கும் மாபெரும் உதவி! 💧✅ ஒரு கிணறுக்கு ரூ.2.50 லட்சம் ...
05/07/2025

🌾 விவசாயிகளுக்கு நல்ல செய்தி!
பாழடைந்த கிணறுகளை புதுப்பிக்க அரசு வழங்கும் மாபெரும் உதவி! 💧

✅ ஒரு கிணறுக்கு ரூ.2.50 லட்சம் வரை மானியம்
✅ மத்திய + மாநில அரசுகளின் இணைத் திட்டம்
✅ உங்கள் செலவில் பணி செய்து முடித்த பிறகு, மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக!

📌 தேவையான ஆவணங்கள்:
பட்டா, அடங்கல், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம்

📍சென்னை, நீலகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திட்டம் அமலாகிறது!

🧑‍🌾 உரிமை உள்ள விவசாயிகள் உடனே உங்கள் வட்டார வேளாண் பொறியியல் அதிகாரியை அணுகுங்கள்!

🌱 பழைய கிணறு புது வாழ்வை பெறட்டும்!

📞 தலைமை அலுவலக தொடர்பு

Department of Agriculture, Tamil Nadu
Chepauk, Chennai –

பொதுக் கேள்விகளுக்கு: 044‑28583323

உதவி/office support: 044‑28524894

🏢 வேளாண் பொறியியல் துறை – சென்னை

Chennai Agricultural Engineering Department

தொலைபேசி: 044‑29510922 / 29510822 / 29515322

#விவசாயம் #கிணறு_புதுப்பிப்பு #மாநிய_திட்டம் #தமிழ்நாடு_விவசாயிகள் #வேளாண்துறை

Address

Chennai

Telephone

+918531848575

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்மாழ்வாரின் வழியில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to நம்மாழ்வாரின் வழியில்:

Share