29/08/2018
ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் வழி!!
நாம் வாழும் இந்த இயந்திர மயமான வாழ்க்கையில் முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களினாலும், நகர்புற உணவுக் கலாச்சாரத்தில் துரித உணவு வகைகளை உண்ணும் போக்கினாலும் நாம் எண்ணற்ற நோய்களுக்கு உள்ளாகிவிடுகிறோம்.
கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்றால் என்ன?
கொலஸ்ட்ரால் (கொழுப்பு) என்பது ஒட்டும் தன்மை கொண்ட வலுவலுப்பான பொருள்.
நம் உடலில் கொல்ஸ்ட்ராலின் பங்கு மிக முக்கியமான ஒன்று. ஹார்மோன் உற்பத்தி, விட்டமின் டி உற்பத்தி, உணவு செரிமானம் போன்ற உடலியல் செயல்பாடுகளில் கொலஸ்ட்ரால் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மனித உடலிற்கு தேவையான கொழுப்பு அனைத்தும் இரத்தத்தில் உள்ள லிப்போ புரதம் (லிப்போ புரோட்டின் – Lipoprotein) மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
லிப்போ புரதம் என்பது உட்புறம் கொழுப்பும், வெளிப்புறம் புரதமும் கொண்டது.
இருவகையான லிப்போ புரதங்கள் கொல்ஸ்ட்ராலை உடலிற்கு எடுத்துச் செல்கிறது :-
1. குறையடர்த்தி லிப்போ புரதம் (Low-density lipoproteins) – இதில் கொழுப்பு மற்றும் குறைந்த புரதச்சத்து இருக்கிறது.
2. மிகையடர்த்தி லிப்போ புரதம் (High-density lipoproteins) - இதில் கொழுப்பு மற்றும் தேவைக்கு அதிகமான புரதச்சத்து இருக்கிறது.
குறையடர்த்தி லிப்போ புரதம் உடலிற்கு தீயது எனவும் இல்லை!!!
மிகையடர்த்தி லிப்போ புரதம் உடலிற்கு நன்மை எனவும் இல்லை!!!
கொலஸ்ட்ராலின் நிலையை சீராக்கும் முறைகள்:
நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் (கொழுப்பு) சேர்வதற்கும் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுப்பதற்கும் நம் வாழ்வில் இரண்டும் முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வழிகள் பின்வருமாறு:
ஆரோக்கியமான உணவு முறை
நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் (கொழுப்பு) சேர்வதற்கும் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுப்பதற்கும் நம் வாழ்வில் இரண்டும் முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வழிகள் பின்வருமாறு:
பின்வரும் உணவுப் பழக்கங்களாலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம்.
1) நிறைவுறா கொழுப்பு (unSaturated fat) அடங்கிய உணவுப் பொருட்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். உதாராணமாக செயற்கையான முறையில் எடுக்கப்பட்ட கொழுப்பு சார்ந்த பொருட்கள்.
2) ரசாயனம் கொண்டு உற்பத்தி ஆகும் எண்ணையின் மூலம் வறுத்த மற்றும் காற்றேட்டப் பட்ட துரித உணவுப் பொருட்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
இயற்கை முறையில் உதவும் கொத்தமல்லி :
கொத்தமல்லியில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.
* கொத்தமல்லியில் இரும்புச்சத்து இருப்பதால், ரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின் இ இதில் நிறைவாக உள்ளது.
* இதில் உள்ள வைட்டமின் ஏ, சி, பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்கள், அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் பார்வைக் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. கண்ணில் ஏற்படக்கூடிய அதிகப்படியான அழுத்தத்தைப் போக்குகிறது. வயதாகும்போது ஏற்படக்கூடிய பார்வைக் குறைபாடுகளைத் தாமதப்படுத்துகிறது.
* கொத்தமல்லியைத் தொடர்ந்து சாப்பிட்டுவருபவர்களுக்கு செரிமானப் பிரச்னை பெரும் அளவுக்குக் குறைந்திருப்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. வாந்தி, குமட்டலைப் போக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைப் போக்குகிறது.
“எனவே நாம் வீட்டில் அன்றாட உணவாக உட்கொள்ளும் தோசை, இட்டிலி, போன்ற உணவுகளுடன் தொட்டு சாப்பிடும் வகையில் கொத்தமல்லி சட்னியாகவும், கொத்தமல்லி சாதமாகவும் எடுத்துக்கொள்ளலாம்”.