Al - Ryan Health Centre

Al - Ryan Health Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al - Ryan Health Centre, Medical Center, near Eidgha masjid, Chepauk.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதஹூஅல்ஹம்துலில்லாஹ் ! நம்முடைய அல்-ரயான் ஹெல்த் கேர் சென்டர் & இன்ஸ்டிட்யூட், சென...
10/02/2020

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதஹூ

அல்ஹம்துலில்லாஹ் ! நம்முடைய அல்-ரயான் ஹெல்த் கேர் சென்டர் & இன்ஸ்டிட்யூட், சென்னை நடத்திய ஹிஜாமா வகுப்பு முதல் பேட்ச் நிறைவடைந்தது. அம்மாணவர்களுக்கு VKM ACADEMY (BSS Affiliated)யின் "டிப்ளமோ இன் ஹிஜாமா தெரபி" சான்றிதழ் வழங்கப்பட்டது.பத்து தெரபிஸ்ட்கள் இந்த வருடம் படித்து டிப்ளமோ பட்டம் பெற்றார்கள்.வல்ல இறைவன் இந்த தெரபிஸ்ட்கள் மூலம் இந்த சமூகத்திற்கு ஆரோக்கியமான வளமான வாழ்வை தருவானாக! ஆமீன்....

Assalamu Alaikum Va Rahmathullahi va barakathuhu.

Alhamdulillah. The first batch of Hijama course conducted by Al - Ryan Health care center has completed. The students were awarded "Diploma in Hijama Therapy" from VKM ACADEMY(BSS Affiliated). Ten students has graduated Diploma certificate this year. May Allah help them to serve the community. Aameen

30/07/2019
ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்ஒவ்வொருவரின் நடைமுறை வாழ்க்கை, பழக்க வழக்கங்களை பொறுத்து ஒற்றை தலைவலி தாக்குகிறது என...
23/01/2019

ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்

ஒவ்வொருவரின் நடைமுறை வாழ்க்கை, பழக்க வழக்கங்களை பொறுத்து ஒற்றை தலைவலி தாக்குகிறது என மருத்துவம் கூறுகிறது.
ஒரு வேலையில் தொடர்ந்து தொல்லை ஏற்பட்டால், அதனை பெரிய தலைவலியாக போய் விட்டது என்பார்கள். அந்த அளவிற்கு தலைவலி தொல்லை கொடுப்பதால் தான் அதனை உதாரணமாக கூறும் பழக்கம் வந்தது. தலைவலி என்பது பொதுவான ஒரு நோய். அதனை பெரிதுபடுத்துபவர்களும், அலட்சியப்படுத்திவிட்டு அடுத்த வேலையை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி வருவதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு என்பது ஆச்சரியமான தகவல். ஒவ்வொருவரின் நடைமுறை வாழ்க்கை, பழக்க வழக்கங்களை பொறுத்து ஒற்றை தலைவலி தாக்குகிறது என மருத்துவம் கூறுகிறது. இதனை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஒற்றை தலைவலி என்பது தலையின் ஒரு பக்கமாக ஏற்படும். தலையின் ஒரு பகுதி மட்டுமே கிட்டத்தட்ட 3 நாட்கள் தொடர்ந்து வலிக்கும் போது அது ஒற்றை தலைவலியாக உணர படுகிறது.
இதன் முக்கியமான அறிகுறிகள்:
ஒருபக்க தலைவலியுடன் வாந்தி குமட்டல் ஒளி மற்றும் ஒலி போன்றவற்றை உணர்வதில் சகிப்பு தன்மை குறைதல்

ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கு 15 நிமிடத்திலிருந்து 1 மணி நேரத்திற்கு முன்னர் பின்வரும் அறிகுறிகள் ஏற்படலாம்.

பார்வை திறனில் சில மாற்றங்கள் ஏற்படலாம். கருப்பு புள்ளிகள் அல்லது "Z" வடிவங்கள் கண் முன் தோன்றலாம். கழுத்து, தோள் ஆகிய இடங்களில் ஊசியால் குத்துவது போன்று இருக்கலாம். நுகர்தல் உணர்வு இல்லாமல் இருக்கலாம்.
உடல் சமநிலையில் இல்லாமலும், பேச்சில் தடுமாற்றமும் இருக்கலாம்.

ஒற்றை தலைவலி இரண்டு வகைப்படும்.

1.மரபார்ந்த ஒற்றை தலை வலி
2.பொதுவான ஒற்றை தலை வலி

மேலே குறிப்பிட்ட அறிகுறிகளுடன் ஏற்படும் தலைவலி மரபார்ந்த ஒற்றைத்தலைவலி எனவும். அப்படியான அறிகுறிகள் ஏதும் இல்லாமல் வருவது பொதுவான ஒற்றை தலைவலி எனவும் கூறப்படுகிறது. பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஒளி மற்றும் ஒலி உணர்வது பிடிப்பதில்லை ஆகையால் அமைதியான இருளான இடத்தில் இருப்பதையே விரும்புவர். ஒற்றைத் தலைவலிக்கான சரியான காரணம் அறியப்படாவிட்டாலும், மூளையில் செரோடோனின் மாறுபடுவதே பிரதான காரணமாக கருதப்படுகிறது. மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரோடோனின் அல்லது 5 ஐடிராக்சி டிரிப்டமைன் எனப்படும் ஒரு ஒற்றை அமைன் நரம்பு சமிக்ஞை கடத்தியாக செயல்பெறும் வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன.

காரணங்கள் :

இந்நோய் உருவாக பின்வரும் சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம்: மன அழுத்தம், அயர்ச்சி,நீண்ட பயணம், அழுவதற்கு பின்,பல்வேறு மாறுபட்ட உணர்வுகளுக்கு மத்தியில் இருக்கும்போது, வானிலை மாற்றம் ஏற்படும்போது தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும்போது, உணவு நேரத்தை புறக்கணிக்கும்போது, அதிகமான சத்தம் மற்றும் வெளிச்சம்,பெட்ரோல் அல்லது வாசனை பொருட்கள் நுகர்தல், தலை சாயம்வ,போர்வையை முழுவதுபோர்த்திக்கொண்டு உறங்கும்போது, தலையணையில் முகத்தை மூடிக் கொண்டு தூங்கும்போது, இறுக்கமான உடை அணியும்போது, கழுத்தில் இறுக்கமான ஆபரணம் அணியும்போது, பருவ மாற்றத்திற்கு பிறகு பெய்யும் முதல் மழையில் நனையும்போது, அதிக வெயிலில் நடக்கும்போது, தலை குளித்த பிறகு கூந்தலை சரியாக காய வைக்காமல் இருக்கும்போது,முடியை இறுக்கமாக பின்னும்போது, கண்களுக்கு லென்ஸ் அணியும்போது,பெண்களுக்கு மாத விலக்கின்போது, குளிக்கும்போது முகத்தில் தண்ணீர் வேகமாக என காரணங்கள் பல உள்ளன.

தூண்டும் காரணிகள் :

ஒவ்வொருவருக்கும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள் வேறுபடும். மாதவிலக்கின் போது மன அழுத்தம், வெப்பம்,புகை, சிகரெட், உயர்வான இடத்தின் அழுத்தம், அது மட்டுமின்றி கொட்டாவி விடுதல், எடை எடை தூக்குதல் போன்றவற்றால் கூட தலைவலி வரலாம். 50 வயதிற்கு பிறகு ஆண்களுக்கு ஒற்றை தலை வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு மெனோபாஸ் ஆனவுடன் ஒற்றை தலை வலி குறைய வாய்ப்புண்டு. குழந்தைகளுக்கான ஒற்றை தலை வலி பெரும்பாலும் 2 மணி நேரத்திற்கு நீடிக்கின்றது. ஒற்றை தலைவலி இருக்கும் குடும்பத்தில் அவர்கள் வாரிசுகளுக்கும் அது தொடர வாய்ப்பிருக்கிறது.

நீடிக்கும் காலம்:

பெரும்பாலும் 60% ஒற்றை தலைவலி தலை ஒரு பக்கம் மட்டுமே வலிக்கும். சிலருக்கு இரு பக்கமும் வலி இருக்கும். 72 மணி நேரம் நீடிக்கும். வலி இருக்கும் பக்கம் பார்வை தற்காலிகமாக தடைபடும்.ஒரு பகுதி மரத்து போகலாம்.தலைக்குள் வெளிச்சம் பாய்வதைப்போல் உணர்வார்கள். கை, கால், நாக்கு, உதடு ஆகியவை பலமிழக்கும். காய்ச்சல், நாளுக்கு நாள் அதிகமாகும் தலை வலி, தொடர்ச்சியாக ஏற்படுகின்ற வலி, வலிப்பு மற்றும் வாந்தியுடன் கூடிய தலைவலி ஆபத்தானது.

சிகிச்சை:
இன்ஷா அல்லாஹ் ஹிஜாமாவைக் கொண்டு ஒற்றை தலைவலியை முழுமையாக குணப்படுத்தலாம்.

மேலதிக தகவலுக்கு
அல் ரயான் ஹெல்த் கேர் சென்டர்
#1,அங்கப்ப நாயகன் தெரு,மண்ணடி,ஈத்கா பள்ளிவாசல் அருகில்,சென்னை-600001,
044 48618476,7395945666

வெரிக்கோஸ் வெயினா? மண்ணீரலைக் கவனிங்கப்பா!பலருக்கு கால் தொடைக்குக் கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்குபின்புறத்திலோ, நரம்...
17/01/2019

வெரிக்கோஸ் வெயினா? மண்ணீரலைக் கவனிங்கப்பா!

பலருக்கு கால் தொடைக்குக் கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்குபின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப்பார்த்திருப்பீர்கள். முட்டிக்கால்களுக்குக் கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள்இருக்கும்.

இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல்போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் ரத்த ஓட்டம் கடுமையாகபாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள்ஏற்படக்கூடும். நாள் பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும்வாய்ப்புண்டு.

அட இதுதான் வெரிகோஸ் வெயின் நோயா? இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமே... என்று நினைக்கத் தோன்றுகிறதா?

உண்மைதான். இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ,வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இதுஅலட்சியப் படுத்தக்கூடிய நோய் அல்ல.

நோய்களில் எதுவுமே அலட்சியத்துக்குரியது அல்ல என்பதுதான் உண்மை. தலைவலிகூட தலை போகும் பிரச்சனையாக மாறலாம். நோய் என்றால் நோய்தான். அவற்றால்ஏற்படும் விளைவுகளிலும், வேதனைகளிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம்.எப்படி இருந்தாலும், எந்த நோயாக இருந்தாலும் அதனைக் குணப்படுத்த முயலவேண்டும் என்பதே மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.

அது ஒருபுறம் இருக்கட்டும். இப்போது வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

கை கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்தரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களுக்கு வெயின் என்றுபெயர்.

வெரிகோஸ் (Varicos) என்றால் ரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள்.

இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்றுஅழைக்கிறோம்.

வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது

மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப்பதைப் போல் கீழ்நோக்கித்தொங்கியபடி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின்பெருங்குடல் அடைக்கப் பட்டுள்ளது. மலச்சிக்கல் ஏற்படும் போது, ரத்தநாளங்கள் அனைத்தும் அழுத்தப்படுகின்றன. நாளங்கள் புடைத்தல் அல்லதுவீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன. ஆக,மலச்சிக்கல்தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப்படுகிறது.

அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது,ஒரே இடத்தில் கால்களை தொங்கவிட்டபடியே அசைவற்று உட்கார்ந்திருப்பதுபோன்றவற்றாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவதற்கானவாய்ப்பு உள்ளது.

ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய்ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாதங்களில் இருந்து ரத்தத்தைஇதயத்திற்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிகவிசையுடன் வால்வுகள் இயங்க வேண்டி உள்ளது. அது இயலாமல் போகும்போது,ரத்தம் மீண்டும் கீழ்நோக்கியே செல்லத் தொடங்கும். இதனால், ரத்தநாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத்தும் வீங்கியும் காணப்படும்.

ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசைவில்லாத வாழ்க்கை முறையினால் வரும்கேடுகள் என்பது புரிகிறது. உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பும், அசைவும் தேவைஎன்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்
அதிக எடை, மலச்சிக்கல், கருவுற்றிருக்கும் காலத்தில் போதியபராமரிப்பின்மை, அசைவற்றிருத்தல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு வரவாய்ப்பு அதிகம்.

• பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் இந்நோய் இரு பாலருக்கும் வரும்.

வயது முதிர்ந்தவர்களுக்கு ரத்த ஓட்ட பாதிப்பினால் வர வாய்ப்புண்டு

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கால் பகுதிகளில் உள்ள ரத்த நாளங்களில்ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பாலான தாய்மார்களுக்கு3 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் இந்த நோய் வருகிறது.

அதிக எடை உள்ளவர்கள், மற்றும் கொழுப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் எளிதில் வரும்.

பொதுவாக பிள்ளைப்பேறு, மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாட்டுக்கான அறுவைசிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களைவிட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கானவாய்ப்பு அதிகம் உள்ளது.

அதிக நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டே வேலை செய்வது, (நர்ஸ், போலீஸ்,செக்யூரிட்டி வேலைகளில் இருப்பவர்கள்) அசைவற்று ஒரே இடத்தில்அமர்ந்திருப்பது போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய்க்கான அறிகுறிகள் என்ன?

தோலின் உட்புறத்தில் ரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும்.

கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல்.

பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படுதல்.

பாதப்பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல்.

கணுக்காலிலும், பாதங்களிலும் அரிப்பெடுத்தல் (இதனை சில சமயங்களில்உலர்ந்த சருமத்தின் காரணமாக ஏற்படும் நோயாக மருத்துவர்கள் தவறாககருதிவிடுவது உண்டு)

வெரிகோஸ் வெயின் (Varicose vein) இருக்கும் இடத்தில் தோலின் நிறம் வேறுபட்டு காணப்படுதல்.

வரும்முன் தடுக்க

இந்த நோயை வரும் முன் மட்டுமே தடுக்க முடியும். வந்துவிட்டால் அதனைஅவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. மேலும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பதையோ, நின்றுகொண்டு இருப்பதையோ தவிர்க்க வேண்டும்.

எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டே இருப்பது நல்லது.

தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது. தளர்ந்த ஆடைகளையே அணியவேண்டும். எடை அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் அதனைக் குறைக்க முயற்சிக்கவேண்டும். எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதைமுற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சிகிச்சை

வாழ்க்கை முறையை மாற்றச் செய்வதில் இருந்துதான் இந்த நோய்க்கானசிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் வெரிகோஸ் வெயின் புதிதாகஉருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே இருப்பவற்றால் வரும் வலி மற்றும்வேதனைகளைக் குறைக்க முடியும்.

ஹிஜாமாவைக் கொண்டு வெரிகோஸ் நரம்பை குணப்படுத்தலாம்.

மேலதிக தகவலுக்கு
அல் ரயான் ஹெல்த் கேர் சென்டர்
#1,அங்கப்ப நாயகன் தெரு,மண்ணடி,ஈத்கா பள்ளிவாசல் அருகில்,சென்னை-600001,
044 48618476,7395945666

தாங்க முடியாத குதிகால் வலியா? அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள்!தற்போது பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகளுள்...
16/01/2019

தாங்க முடியாத குதிகால் வலியா? அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள்!

தற்போது பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று தான் குதிகால் வலி. இதனால் சாதாரண செயல்பாடுகளைக் கூட செய்ய முடியாமல் பெரும் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். குதிகால் வலி வருவதற்கு முக்கிய காரணம், குதிகால் எலும்புக்கு கீழே கால்சியம் படிகங்கள் தேங்குவதால் வருவதாகும். இது தாங்க முடியாத வலியாக இருக்கும்

குதிகால் வலி வருவதற்கு காயங்கள், பிடிப்புகள், எலும்பு முறிவு, உடல் பருமன் மற்றும் பொருந்தாத காலணிகளை அணிவது போன்றவைகளும் முக்கிய காரணங்களாகும். இதனால் குதிகால் பகுதி வீக்கத்துடனோ, எரிச்சலுடனோ, குதிகால் பலவீனமாகவோ இருக்கும். சில சமயங்களில் குதிகால் வலியானது கீல்வாதம், ஆர்த்ரிடிஸ் போன்றவற்றாலும் வரும். ஹை-ஹீல்ஸ் கூட குதிகால் வலியை உண்டாக்கும். இங்கு குதிகால் வலியில் இருந்து உடனடியாக விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி குதிகால் வலியில் இருந்து விடுபடுங்கள்.

எப்சம் உப்பு :
எப்சம் உப்பு குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். ஏனெனில் இதில் வலி, வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்க உதவும் மக்னீசியம் சல்பேட் நிறைந்துள்ளது. அதற்கு 3 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பை வெதுவெதுப்பான நீரில் போட்டு, பாதங்களை அந்நீரில் 20 நிமிடம் ஊற வையுங்கள். பின் பாதங்களை நன்கு உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி குதிகால் பகுதியை மசாஜ் செய்யுங்கள்.

மஞ்சள் :
குதிகால் வலிக்கு மஞ்சள் உடனடி நிவாரணம் கொடுக்கும். ஏனெனில் மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலியில் இருந்து விடுவிக்கும். அதற்கு ஒரு கப் பாலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, சிறிது தேன் சேர்த்து தினமும் 2 முறை குடித்து வர, குதிகால் வலி நீங்கும்

ஸ்ட்ரெட்சிங் பயிற்சி :
ஸ்ட்ரெட்சிங் பயிற்சி வலியைக் குறைப்பதோடு, விரைவில் குணமாகவும் உதவும். மேலும் இப்பயிற்சி தசைகள் மற்றும் தசைநார்களை வலிமைப்படுத்தி, வலி வராமல் தடுக்கும். அதற்கு வெறும் காலில் சுவற்றின் முன் சற்று இடைவெளி விட்டு நிற்க வேண்டும். பின் இரண்டு கைகளையும் சுவற்றில் பதித்து, ஒரு காலை முன்புறம் எடுத்து வைத்து ஸ்ட்ரெட்ச் செய்யுங்கள். இப்படி 30 நொடிகள் செய்து, மறுகாலை மாற்றி 30 நொடிகள் செய்ய வேண்டும்.

மசாஜ் :
குதிகாலை மசாஜ் செய்வதன் மூலமும், குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் மசாஜ் செய்யும் போது, அது தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, குதிகாலில் உள்ள அழுத்தத்தைத் தடுத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதற்கு கடுகு எண்ணெய் கொண்டு குதிகால் பகுதியை மசாஜ் செய்யுங்கள்

இஞ்சி :
தசைப்பிடிப்புக்களாலும் குதிகால் வலி வரலாம். இதற்கு இஞ்சி நல்ல நிவாரணம் அளிக்கும். ஏனெனில் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வலி நிவாரண பண்புகள் உள்ளது. ஆகவே குதிகால் வலியால் கஷ்டப்படுபவர்கள், தினமும் இஞ்சி டீயைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள் அல்லது இஞ்சியை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

ஆப்பிள் சீடர் :
வினிகர் குதிகால் வலிக்கு ஆப்பிள் சீடர் வினிகர் மற்றொரு சிறந்த நிவாரணி. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. எனவே ஒரு கப் நீரில் 1/4 கப் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றிக் கொள்ளுங்கள். பின் ஒரு துணியை அந்நீரில் நனைத்து நீரைப் பிழிந்து வலியுள்ள பகுதியில் 15-20 நிமிடம் வைத்து எடுங்கள். இதனால் குதிகால் வலி சரியாகும்.

மிளகு :
மிளகில் வலிமையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மேலும் இதில் கேப்சைசின் எனும் வலி நிவாரண பண்புகள் உள்ளது. 1/4 கப் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயிலில் 1 டேபிள் ஸ்பூன் மிளகு சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் குதிகால் வலியில் இருந்து விடுபடலாம்.

ஆளிவிதை:
ஆயில் ஆளி விதையில் ஆல்பா-லினோலினிக் அமிலம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அழற்சியை எதிர்க்கும் பொருட்கள் உள்ளது. இது குதிகால் வலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். அதற்கு சிறிது ஆளி விதை எண்ணெயி வெதுவெதுப்பாக சூடேற்றி, ஒரு துணியில் நனைத்து குதிகால் பகுதியைச் சுற்றி 1 மணிநேரம் ஊற வையுங்கள். இதனால் குதிகால் வலி சரியாகும்.

பேக்கிங் சோடா :
பேக்கிங் சோடாவில் ஏராளமான ஆரோக்கிய பண்புகள் உள்ளது. இது குதிகால் பகுதியில் தேங்கிய கால்சியம் படிகங்களை நேரடியாக கரைத்து, குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அதற்கு 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, குதிகால் பகுதியில் தடவுங்கள். இதன் மூலம் கடுமையான குதிகால் வலியில் இருந்து விடுபடலாம்.

நறுமண எண்ணெய்கள் :
நறுமண எண்ணெய்களான ரோஸ்மேரி அல்லது லாவெண்டர் எண்ணெய்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், குதிகால் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு இந்த எண்ணெய்களுள் ஏதேனும் ஒன்றை வெதுவெதுப்பாக சூடேற்றி, குதிகால் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வலி வருவதை முற்றிலும் தடுக்கலாம்.

மேலதிக தகவலுக்கு
அல் ரயான் ஹெல்த் கேர் சென்டர்
#1,அங்கப்ப நாயகன் தெரு,மண்ணடி,ஈத்கா பள்ளிவாசல் அருகில்,சென்னை-600001,
044 48618476,7395945666

இருமல் குணமாக மனிதர்களுக்கு சளி மற்றும் இரும்பல் வந்துவிட்டால் படாத பாடு படுகின்றனர். சிலர் இரவில் தூங்க பாடு இரும்பிக்க...
15/01/2019

இருமல் குணமாக

மனிதர்களுக்கு சளி மற்றும் இரும்பல் வந்துவிட்டால் படாத பாடு படுகின்றனர். சிலர் இரவில் தூங்க பாடு இரும்பிக்கொண்டே இருந்து அவதிப்படுவதுண்டு. பெருபாலானோருக்கு பருவநிலை மாற்றத்தாலேயே சளி மற்றும் இரும்பல் தொல்லை அதிகரிக்கிறது. இதில் இருந்து விடுபட சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

குறிப்பு 1 :

இரும்பல் உடனே நிற்க, சிறிய இஞ்சி துண்டை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு உப்பை தூவி அதோடு துளசி சேர்த்து மென்றால் போதும். இரும்பல் விரைவில் சரியாகும்.
குறிப்பு 2 :

நான்கு முதல் ஐந்து பல் பூண்டை நெய்யில் நன்கு வதக்க வேண்டும் அதன் பிறகு அதை நன்கு நசுக்கி, சூப்பிலோ அல்லது குழம்பிலோ போட்டு சூடு ஆறுவதற்குள் சாப்பிட வேண்டும். இருமல் குணமாக இது ஒரு நல்ல தீர்வாகும்.

குறிப்பு 3 :

வறட்டு இருமல் சரியாக கருவேல மர கொழுந்தினை எடுத்து அதில் உள்ள சாறை நன்குபிழிந்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் சரியாகும்.

குறிப்பு 4 :

5 கிராம் சித்தரத்தை எடுத்துக்கொண்டு அதோடு உலர்ந்த திராட்சை சேர்த்து கசாயம் செய்து குடித்தால் இருமல் குணமாகும்.

குறிப்பு 5 :

இருமல் குணமாக, முருங்கை கீரையில் இருந்து சாறு பிழிந்து எடுத்துக்கொண்டு அதோடு தேன் மற்றும் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து தொண்டை பகுதியில் தடவலாம். இதன் மூலம் தொண்டை வலியும் குறையும். குறிப்பு: சுண்ணாம்பை அதிக அளவில் சேர்க்கக்கூடாது.

குறிப்பு 6 :

ஒரு டம்ளர் வெண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகு போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு அதை குடிக்கவும். இதன் மூலம் இருமல், சளி குணமாகும்

மேலே உள்ள குறிப்புகளை ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

மேலதிக தகவலுக்கு
அல் ரயான் ஹெல்த் கேர் சென்டர்
#1,அங்கப்ப நாயகன் தெரு,மண்ணடி,ஈத்கா பள்ளிவாசல் அருகில்,சென்னை-600001,
044 48618476,7395945666

*முதுகு வலியும்!! மருத்துவமும்!* முதுகில் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமானது, கீழ் முதுகு வலி (Low back pain). மனித வா...
12/01/2019

*முதுகு வலியும்!! மருத்துவமும்!*

முதுகில் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமானது, கீழ் முதுகு வலி (Low back pain). மனித வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நேரத்திலாவது கீழ் முதுகு வலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வலிகளுக்காகச் சிகிச்சை பெறும் பிரச்சினைகளில், கீழ் முதுகு வலி இரண்டாம் இடத்தில் உள்ளது.
காரணம் என்ன?
காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறி என்பது போலவே, கீழ் முதுகு வலியும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே தவிர, இதுவே ஒரு தனிப்பட்ட நோயல்ல! இந்த வலிக்குப் பல காரணங்கள் உண்டு. முதுகுப் பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசைநாண்கள், இடைவட்டு (Inter vertebral Disc) ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்சினைகளை இதற்கு முதன்மைக் காரணங்களாகச் சொல்லலாம்.
சில நேரம் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளாலும் கீழ் முதுகில் வலி உண்டாகலாம். உதாரணத்துக்கு, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பையில் கல் உள்ளவர்களுக்குக் கீழ் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும். வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்களுக்குக் கீழ் முதுகில்தான் முதலில் வலி ஆரம்பிக்கும். பொதுவாக, கீழ் முதுகு வலிக்கு 90 சதவீதம் முதுகெலும்பில் பிரச்சினை இருக்கும். மீதி 10 சதவீதம் வயிற்றுப் பகுதி தொடர்பாக இருக்கலாம்.
கூன் விழுந்த நிலையில் உட்காருவது, வேலை நிமித்தமாகத் தொடர்ச்சியாக கணினி முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், தினமும் இருசக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது, அதிக எடையைத் தூக்குவது, உடற்பயிற்சி இல்லாதது, ஊட்டச் சத்துக்குறைவு, தரையில் வழுக்கி விழுவது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, திடீரெனக் குனிவது அல்லது திரும்புவது, உடல்பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பு இடைவட்டில் அழுத்தம் அதிகமாகிக் கீழ் முதுகில் வலி ஏற்படும்.
‘ஆஸ்டியோமைலிட்டிஸ்’ (Osteomyelitis), ‘ஸ்பாண்டிலிட்டிஸ்’ (Ankylosing spondylitis), காச நோய் போன்றவற்றின் பாதிப்பாலும் கீழ் முதுகில் வலி வரும். வாகன விபத்துகள் அல்லது விளையாடும்போது ஏற்படுகிற விபத்துகள் காரணமாக எலும்பு முறிந்து இந்த வலி ஏற்படலாம். சிலருக்குப் பிறவியிலேயே தண்டுவடம் செல்லும் பாதை குறுகலாக (Spinal canal stenosis) இருக்கும். இவர்களுக்குச் சிறு வயதிலேயே முதுகு வலி ஏற்படும். முதுகெலும்பில் கட்டி அல்லது புற்று நோய் தாக்குவது காரணமாகவும் இந்த வலி வரும். கர்ப்பக் காலம், விபத்துக் காயங்கள், தசைப்பிடிப்பு, தசைநார் வலி, மன அழுத்தம், நீரிழப்பு போன்றவற்றாலும் முதுகு வலி வரும்.
வயதானாலும் இந்த வலி தொல்லை கொடுக்கும். காரணம்? முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள வட்டில் ஏற்படும் முதுமைப் பிரச்சினை. இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். புதிதாக வாங்கிய பந்தைக் கீழே எறிந்தால் நன்கு துள்ளியபடி மேலெழும்பும். நாளாக ஆக, அந்தப் பந்துக்கு மேலெழும்பும் தன்மை குறைந்துவிடும். அதுபோலவே வயதாக ஆக இடைவட்டில் நீர்ச்சத்து குறைந்துவிடுவதால் `குஷன்’ போல இயங்குகிற தன்மையும் குறைந்துவிடுகிறது. அதிர்ச்சியைக் கிரகித்துக்கொள்ளும் தன்மை குறைகிறது. இதனால் முதிய வயதில் கீழ் முதுகில் வலி வருகிறது.
எலும்பின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து தேவை. வயது அதிகமாக அதிகமாகக் கால்சியத்தின் அளவு குறைந்து எலும்பு மெலிந்துவிடும். இதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ (ஆஸ்டியோபோரோசிஸ்) என்று பெயர். இது கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தும்
முதுகு வலியைத் தடுக்க…
 அலுவலகத்தில் வேலை செய்யும்போது முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது, கீழ் முதுகுக்குச் சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம்.
 கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும்.
 ஒரே மாதிரியான நிலையில் வேலை செய்யும்போது, அவ்வப்போது உடலின் நிலையை மாற்றிக்கொள்ளுங்கள்.
 எந்த வேலையையும் தொடர்ந்து மணி கணக்கில் ஒரே நிலையில் உட்கார்ந்த வாறு செய்யாதீர்கள். வேலைக்கு நடுவில் சிறிதளவு ஓய்வு அவசியம்.
 அமர்ந்திருக்கும்போதுகூடக் கால்களின் நிலைகளை மாற்றுங்கள்.
 சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்வது, முதுகு வலி வராமல் தடுக்கும்.
 காற்றடைத்த பானங்கள், குளிர் பானங்கள், மென் பானங்கள், கோக் கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றில் பாஸ்பாரிக் அமிலத்தைச் சேர்ப்பார்கள். கால்சியம் சத்தைக் குடல் உறிஞ்சுவதை இது தடுக்கும். இதனால் இளமையிலேயே எலும்புகள் வலுவிழந்துவிடும். எனவே, இந்தப் பானங்களை அருந்தக் கூடாது.
 எலும்பையும் தசையையும் வலுப் படுத்தும் கால்சியம் மற்றும் புரதம் மிகுந்த பால், முட்டை வெள்ளைக் கரு, சோயா, உளுந்து. கொண்டைக் கடலைப் போன்ற உணவு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 முதுகு வலி உள்ளவர்கள் கயிற்றுக் கட்டிலில் படுத்துத் தூங்கக் கூடாது. சரியான மெத்தையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். கால்களைச் சிறிது மடித்த நிலையில், கால்களுக்கு இடையில் தலையணையை வைத்துப் படுத்துக்கொள்ளலாம்.
 அதிக எடையைத் தூக்கக் கூடாது. அப்படியே தூக்கவேண்டி இருந்தால், எடையைத் தூக்கும் போது இடுப்பை வளைத்துத் தூக்காமல், முழங்காலை முன்புறம் மடக்கித் தூக்க வேண்டும். சுமையை மார்பில் தாங்கிக் கொள்வது இன்னும் நல்லது.
 முதுகை அதிகமாக வளைக்கக் கூடாது. திடீரெனத் திரும்பக் கூடாது.
 குனிந்து தரையைச் சுத்தம் செய்வதற்குப் பதிலாக, நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே சுத்தம் செய்வது நல்லது.
 உயரமான காலணிகளை அணியக் கூடாது.
 இருசக்கர வாகனங்களில் கரடு முரடான பாதைகளில் செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
 நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது, நிமிர்ந்து ஸ்டியரிங் அருகில் அமர்ந்து ஓட்ட வேண்டும்.
 ஏற்கெனவே, முதுகு வலி உள்ளவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது நடுவிலுள்ள இருக்கையில் உட்கார்ந்து பயணிப்பது நல்லது.
 முதுகுத் தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளைத் தினமும் மேற்கொள்ளுங்கள்.
 உடல்பருமன் ஆவதைத் தவிருங்கள்.
 புகை பிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள். போதை மாத்திரை சாப்பிடாதீர்கள்.
 முதுகு வலி உள்ளவர்கள் குதித்து ஓடுதல், டென்னிஸ், இறகுப் பந்து, கூடைப் பந்து ஆகிய விளையாட்டு களை விளையாடக் கூடாது.
 மன அழுத்தத்தைத் தவிருங்கள்.
மேலதிக தகவலுக்கு
அல் ரயான் ஹெல்த் கேர் சென்டர்
#1,அங்கப்ப நாயகன் தெரு,மண்ணடி,ஈத்கா பள்ளிவாசல் அருகில்,சென்னை-600001,
044 48618476,7395945666

Address

Near Eidgha Masjid
Chepauk
641604

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al - Ryan Health Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category