SRI ram devi hospital 24 hours

SRI ram devi hospital 24 hours 24 hours hospital and medical service. emphasis on Wellness.

17/05/2024

சர்வதேச குருதி கொதிப்பு நாள்.மே-17.
World Hypertension Day.May-17.

அனைவருக்கும் வணக்கம்,

எந்தவித தொந்தரவும் இல்லை என்றாலும்
2 மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் இரத்த அழுத்தத்தை (BP) கண்டிப்பாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

The theme of World Hypertension Day 2024 is
"Measure Your Blood Pressure, Control It, Live Longer."

உலக உயர் இரத்த அழுத்த தினம் : மே-17.
இந்த ஆண்டிற்கான நோக்கம்

1. இரத்த அழுத்த பரிசோதனை

2. இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுதல்

3. நலமுடன் நீண்ட நாள் வாழ்தல்.


-பொது நல நோக்குடன்
டாக்டர்.R.பரணிதரன் .B.H.M.S.
பொது நல மருத்துவர்,
ராம் தேவிமருத்துவமனை .
Reg.under.TNCEA.
மேல்நிலை பள்ளி சாலை,
சேத்தியாத்தோப்பு.
9843462333.

🛑இரத்தக்கொதிப்பு என்றால் என்ன?ரத்தம் உடல் முழுவதும் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தேவை. இந்த அழுத்தம் அதிகமாக...
17/05/2024

🛑இரத்தக்கொதிப்பு என்றால் என்ன?

ரத்தம் உடல் முழுவதும் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தேவை. இந்த அழுத்தம் அதிகமாகும்போது, அதையே ரத்தக் கொதிப்பு என்கிறோம்.

🛑இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கலாம்?

✅இரத்த அழுத்தத்தில் சுருக்கழுத்தம் (systolic blood pressure) விரிவழுத்தம் (Diastolic blood pressure) என இரண்டு அலகுகள் உள்ளன.

✅படத்தில் இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 2-வது வகையில் உள்ளவர்கள் இரத்தக் கொதிப்பு வராது தடுக்க வேண்டுமானால், உணவு மற்றும் வாழ்க்கை முறையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

🛑இரத்தக் கொதிப்பை ஏற்படுத்தக்கூடிய காரணிகள்

✅இயற்கையாகவே வயதாக ஆக ரத்த நாளங்கள் அதனுடைய ஜவ்வுத்தன்மையை இழப்பதால், நாளங்களின் அகலம் குறுகி இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

✅மரபணுக்களால் மட்டுமின்றி, அதே உணவு, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் என்று பெற்றோர் வாழ்ந்த சூழ்நிலையிலேயே வாழும்போது குழந்தைகளுக்கும் அந்த நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.

✅தற்போதைய வாழ்க்கைமுறையில் அதிக ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தமே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

✅உடல் எடை அதிகரிப்பைப் பொறுத்து ரத்தக் கொதிப்பு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

✅உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளுதல்

✅அதிகக் கொழுப்பு மற்றும் குறைவான நார்ச் சத்துள்ள உணவுகள்

✅மது மற்றும் புகைப் பழக்கம்

✅சரியான உடற்பயிற்சி இன்மை

✅நீரிழிவு நோய்

🛑இரத்தக் கொதிப்பின் வகைகள்:

✅வகை 1: பெரும்பான்மையோருக்கு வரும் ரத்தக் கொதிப்பு இந்த வகைதான். இதற்கு இன்னமும் காரணம் கண்டறியப்படவில்லை.

✅வகை 2: இது சீறுநீரகம் மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சில வகை மருந்துகளால் ஏற்படுகிறது. கர்ப்பக் காலத்தில் வரும் ரத்தக் கொதிப்பும் இந்த வகைதான்.

🛑இரத்தக் கொதிப்பு வருவதற்கான அறிகுறிகள்:

✅பொதுவாக இது எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. மற்ற பல காரணங்களுக்காக உடலைப் பரிசோதிக்கும்போது இது கண்டு பிடிக்கப்படுகிறது.

✅எனினும் சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்போது தலை சுற்றல், தலைவலி, நெஞ்சுவலி, படபடப்பு, கால் வீக்கம் போன்றவை ஏற்படலாம்.

🛑இரத்தக் கொதிப்பால் ஏற்படும் விளைவுகள்:

✅மாரடைப்பு,
✅இதயத் துடிப்பில் கோளாறு,
✅இதயம் பெரிதாகுதல்,
✅பக்கவாதம்,
✅மூளையில் ரத்தக் கசிவு,
✅இரத்த நாளங்களில் நோய்கள்,
✅சிறுநீரகத்தில் பாதிப்பு மற்றும்
✅கண்களில் பாதிப்பு போன்றவை.

🛑சிகிச்சை முறைகள்:

❇️இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் மருத்துவரை அணுகி, பரிசோதித்து, தவறாது மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

❇️30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தவறாது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

❇️இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.

❇️கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பக் காலம் முழுவதிற்கும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

🛑உணவு முறைகள்:

❇️அதிக ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உணவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய தனிமங்கள் அதிக அளவிலும், கொழுப்பு குறைவான அளவிலும் இருக்க வேண்டும்.

❇️பொதுவாகப் பல்வேறு காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொண்டாலே இவை கிடைத்துவிடும்.

❇️சோடியம் என்னும் தனிமத்தைத் தவிர்ப்பது நல்லது.

❇️சமையல் உப்பு, பேக்கரியில் உபயோகப்படுத்தப்படும் சோடா உப்பு, சைனீஸ் உணவில் பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோவில் சோடியம் அதிகம் இருக்கும். எனவே, இவற்றைத் தவிர்க்கவும்.

❇️வடகம், ஊறுகாய், சாஸ், கெட்சப், பீட்ஸா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. இவற்றில் உப்பு அதிகம் இருக்கும்.

🛑உடற்பயிற்சி

ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 முறையாவது, 20 நிமிடங்கள் வீதம் மிதமான ஓட்டம், வேக நடை, நீச்சல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.

🛑யோகப் பயிற்சி

ஆசனங்கள், ‘அம்’ மந்திர உட்சாடணை, மூச்சுப் பயிற்சிகள், கிரியைகள், தியானம் அனைத்துமே ரத்த அழுத்தத்தைச் சீர்செய்ய பெரிதும் உதவுகின்றன.

Address

High School Road , Sethiyathope
Chidambaram
608702

Telephone

+919843462333

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRI ram devi hospital 24 hours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SRI ram devi hospital 24 hours:

Share

Category