� ஏன் வழிபடவேண்டும்… யந்திரங்களை?
� இந்த உலகத்தின் தன்மை, இந்தப் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம், எல்லா கோள்களும் சரியாக நகர்வதையும், சூரியன் சரியாக தினமும் உதிப்பதையும், அஸ்தமிப்பதையும், வெயில் சுட்டெரிப்பதையும், மழை வருவதையும், காற்று வீசுவதையும்; எல்லாம் பார்க்கும்போது நமக்குள் ஏதோ ஒன்று இயக்குகிறது என்று தோன்றும்? எல்லாவற்றையும் கடந்த ஒரு சக்தி என்பதை புரிந்துகொண்ட நமது முன்னோர்கள் அதற்கு "கடவுள்" என்று பெயர் வைத்தார்கள்.
� கடவுள் வழிபாட்டில் பல பரிணாமங்கள் காணப்படுகிறது, அதில் ஒன்றுதான் “யந்திர வழிபாடாகும்.”
� பெரும்பாலானோர் இல்லங்களிலும் மற்றும் தொழில் செய்யும் இடங்களிலும் யந்திரங்கள் வைத்து வழிபடும் முறை இன்றளவும் உள்ளது.
� மதம், இனம், மொழி கடந்து உலகெங்கிலும் இவ்வாறான வழிபாட்டு முறைகள் உள்ளது என்பது உலகறிந்த உண்மை.
�வாழ்வில் அவ்வப்போது ஏற்படும் தடைகள் ஊழ்வினைப்பயனால் நடப்பவையே. அத்தடைகளை நீக்கி நமக்கு நல்வாழ்வை அருளும் ஒரு சாதனமே சக்கர வழிபாடு ஆகும்.
� பல ஆயிரமாண்டுகளாகவே நடைமுறையில் இருக்கும் இவ்வழிபாட்டு முறையில் பலன்பெற்றோர் ஏராளம் என்பது நிதர்சனமான உண்மை.
� “எந்திர யுகம்” எனும் இக்காலத்திலும் இது தொடர்ந்து கொண்டுள்ளது என்பது நமக்கு மகிழ்ச்சியையும் வியப்பையும் தருகிறது. இதன் மூலம் நமக்கு உணர்த்துவது யாதெனில் யந்திர வழிபாடு பல யுகங்களைக் கடந்தது என்பதே.
� ஒளியும் - ஒலியும் சேர்ந்த வழிபாடாகப் போற்றப்படுவது யந்திர வழிபாடாகும். ஏனெனில், ஒளி - யந்திரங்களாகவும், ஒலி - மந்திரங்களாகவும் செயல்படுகின்றது.
� பாலினுள் இருக்கும் நெய்யினை எவ்வாறு நாம் காண முடியாதோ, பலாவின் சுவையினை எப்படி உண்ணாமல் உணர இயலாதோ, அதுபோலத்தான் இறைவழிபாடும் என்பதை உணர்ந்தோர் ஏராளம்.
இவ்வகை மந்திர - யந்திர வித்தைகளை, மஹான் திருமூலரும் நமக்கு அருளியுள்ளார். திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்தில் மறைபொருளாம் யந்திர வித்தையினைத் தெளிபொருளாய் உணர்த்தியுள்ளார்.
�" திருவம்பலச் சக்கரம்" என்பது மனித வாழ்வை வளப்படுத்த, திருமூலர் பெருமான் நமக்கருளிய மிக உன்னதமான பொக்கிஷமாகும். இறைவனின் திருவருளைப் பெற்றிட, வாழ்வில் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ "திருவம்பலச் சக்கரம்" நிச்சயமான பலன்களை அருளும் என்று சத்தியம் செய்து உரைக்கின்றார் திருமூலர்.
� இலட்சக் கணக்கான யந்திரங்கள் உண்டு எனப் பலர் அறிந்திருக்கக் கூடும். ஆனால் நமது நோக்கம், வெற்றி பெற உகந்த சக்கரங்களைத் தேர்ந்தெடுப்பதே.
� ஆனாலும் சிவயந்திரங்கள் என்பது, நாம் முறையாக அமைத்து வழிபட்டால், நிச்சயமான பலன்களைப் பெற்றிட வழிவகுக்கும் என்பது அனுபவ உண்மை.
�"சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் யாவரு மில்லை"
எனும் வரிகளுக்கேற்ப, சிவயந்திரங்கள் என்பது சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றது.
� பிழை ஏதுமின்றி யந்திரங்கள் வரைந்து, அதற்கு உயிர் கொடுக்கும் கலையான "பிராண பிரதிஷ்டை" செய்து வழிபடுவோர், பலன்கள் பலபெற்று மகிழ்வுடன் வாழலாம் என்பது, நமது முன்னோர்கள் காலம் தொட்டு இன்று வரை, வழிபடுவோர்கள் யாவரும் உணர்ந்த உண்மையாகும்.
� இறைவனின் தரிசனத்தை, இருந்த இடத்திலிருந்தே பெற்றிட உதவும் ஒரு கருவியே "சிவச்சக்கரங்கள்."
�அட்சரங்கள் அமைக்கும் முறையறிந்து அமைத்து, தெய்வீக மந்திரங்களை அதில் பதிந்து, மந்திரங்களினால் உயிர்கொடுத்து, ஆகம முறைப்படி தயார்செய்த யந்திரங்களை வழிபட்டோரை, இறைவன் கைவிட்டார் இல்லை என்பது சத்தியம்.
குறிப்பு: யந்திரங்கள், எந்திரங்கள், அட்சரங்கள், சக்கரங்கள் போன்ற வார்த்தைகள் நடைமுறையில் உள்ளது.. .