28/06/2023
சர்வ வாத நிவராண உணவு மருத்துவம்.
வாத நோய் வராமல் தடுக்கவும், வந்தபின் அதிலிருந்து மீளவும் எளிமையான வீட்டு உணவு முறைகளை பார்க்கலாம்.
வாதம் 80 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. கீழே குறிப்பிடும் சர்வ வாத நிவாரண உணவு மருத்துவத்தை வாயு உடலமைப்பு கொண்ட எல்லோரும் கடைபிடிக்கலாம்.
நேரடியாக சாப்பிட வேண்டியதை முதலில் கூறுகிறேன். பின் மருந்தாக எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் எல்லோரும் சாப்பிட வேண்டியது என்னவென்று பார்க்கலாம்.
✓ காலையில் எள் எண்ணெய் ஒரு ஸ்பூன்
✓ மதியம் சாரணத்தி கீரை சாறாகவோ அல்லது சமைத்தோ, காயவைத்து பொடியாக்கி கசாயமாகவோ , கற்கண்டு கலந்து தேனீராகவோ தினசரி எடுக்க வேண்டும்.
✓ மாலையில் 100 மில்லி தேங்காய் பால்
இம்மூன்றையும் முறைப்படி எடுக்க இயலாதவர்கள் கூடுதலாக & எளிதில் கிடைக்காத விழுதி, வாத நாராயணன் போன்ற கூடுதல் மூலிகைகள் இணைத்து தயாரிக்கப்பட்ட சிரப் , தைலம், தேனீர் தூள் வடிவில் மருந்தாக எம்மிடம் பெற்றுக்கொள்ளவும்.
மருந்தினை எவ்வாறு தயாரிக்கலாம் பார்ப்போம்.
தேங்காய் 3 ( 2 லிட்டர் சாறு எடுக்கும் அளவு ) ,
வெள்ளை சாரணத்தி கீரை ( 2 லிட்டர் சாறு எடுக்கும் அளவு )
மரச்செக்கு நல்லெண்ணெய் 2 லிட்டர்
இம்மூன்றையும் புது பாத்திரத்தில் கலந்து எண்ணெய் பதம் வரும்வரை காய்ச்சி ஒரு பாட்டிலில் சேகரிக்கவும்.தினம் 2 வேளைகள் உணவுக்கு அரைமணி நேரம் முன்பு அல்லது அரைமணி நேரம் கழித்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு குடித்து வரவும்.
பத்தியம் :
வாழைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், மொச்சைக் கொட்டை,
தட்டைப்பயிர், பச்சைப்பயிர், துவரை,
உருளைக் கிழங்கு, கொண்டக்கடலை ஆகியவைகளை சாப்பிட கூடாது.
தீரும் வியாதிகள் :
அனைத்து வாய்வு சம்பந்தப்பட்ட வியாதிகளும் மேற்படி
எண்ணெயை (மூக்கின் வழியாக) நசியம் பண்ணினால் பீனிசம்
நிற்கும்.
சிரசு வாத ரோகங்களும் நிவர்த்தி ஆகும். தலை வலி,
ஒற்றைத் தலைவலி நிவர்த்தியாகும்.
நல்லதே நடக்கும்...
வாழ்க வையகம்...