Mystic Healing Wellness Center

Mystic Healing Wellness Center Mystic Healer

25/06/2024
சூரிய நமஸ்காரம்உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்து வாழ்வதற்கு சூரியனே காரணம் .  சூரியனை கடவுளாக வணங்கும் பழக்கம் பழங்கால தொட...
21/06/2024

சூரிய நமஸ்காரம்

உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்து வாழ்வதற்கு சூரியனே காரணம் .

சூரியனை கடவுளாக வணங்கும் பழக்கம் பழங்கால தொட்டெ இருந்து வருகிறது.

சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிய நோய் தீர்க்கும் யோக பயிற்சியாகும்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்ற பழமொழி உண்டு.

சூரிய நமஸ்காரத்திற்கும் கண்ணிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இதுகாட்டுகிறது.

கண்ணொளி வழங்கும் சூரியனின் சக்தி உடலில் ஏற்படும் நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக் கிய பங்கு வகிக்கிறது.

இதைத்தான் நமது பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர்.

சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம்.

இதனை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதுதான் சன்பாத் எனப்படும் சூரிய ஒளிக் குளியல். சூரியக் குளியலால் சிறுவர்களின் மன ஆற்றல் பத்து முதல் இருபது சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மேலை நாட்டு நவீன மருத்துவ ஆய்வு நிரூபித்துள்ளது.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம். இளஞ்சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது.

இரவில் தூக்கத்தால் உட லுக்கும், மனத்திற்கும் ஓய்வு கிடைப்பதா ல், அதிகாலையில் உடற்தசைகள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.


அனைவருக்கும் யோகா தின நல்வாழ்த்துக்கள்

01/06/2024
07/05/2024

நல்ல எண்ணங்களை விதை..!

Mystic Healing Wellness Center
Coimbatore | 096551 44466
ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும்.

அதில் தாழ்வு எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள், பலவீனமான எண்ணங்கள், முரட்டு எண்ணங்கள், அன்பு, தெய்வீகம் என பல உயர்ந்தும், அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே மனதில்தான் உருவாகின்றன.

மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ,அதுவகவேதான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது.

இதைத்தான் நம் முன்னோர்கள் "விதைப்பதே விளையும்" என்றார்கள்.

நாம் நம் வாழ்க்கையில் உயர்ந்து ஒளி வீச நம் மனம்தான் ஆணிவேர்.

உயர்ந்த எண்ணங்களை விதைத்து வாழ்வில் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்தல் நிச்சியம் வெற்றி கோட்டையை அடையலாம்.

தவறான எண்ணங்களை மனம் யோசித்தால் தவறான வழிகளைத்தான் அறிவு தரும்.

நம் எண்ணங்கள் எப்பொழுதும் சுத்திகரிக்கப்பட்டு புனிதமாக இருக்க வேண்டும்.

எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.

எண்ணம் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் வாழ்விற்கு நல்லது.

நீங்கள் ஒவ்வொருவரும் இரவும் பகலும் ஓடி ஓடி வேலை செய்து சொத்து, மட மாளிகை, புது மாடலான வண்டி வாகனங்கள், பொன் பொருள் என வாழ்கையில்சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நிலம் உள்ளவர்கள் நிலத்தை சுத்தம் செய்து உறமிட்டு நீர்பாய்ச்சி, பயிரிடுகிறார்கள்.

எத்தனை பேர் மனதை உழுது நல்லெண்ணங்களை விதைத்து, போட்டி, பொறாமை, புறம் பேசுதல், பிறருக்கு கேடு விலைவித்தல் என்ற எண்ணங்களை களையெடுத்து உள்ளன்போடு பழகுதல், உண்மையாக உழைத்தல், எதையும் எதிர்பாராமல் உதவி புரிதல் என்ற பண்புகளுடன் வாழ்கிறார்கள்.

இப்படி வாழக்கூடியவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாகவும், உற்சாகத்துடனும் வாழ கற்றுக் கொள்கிறார்கள்.

எண்ணம் அணுகுண்டை விட ஆற்றலுள்ளது என்று கூறினால் எத்தனை பேர் நம்புவீர்கள்?

ஏனென்றால் அணுகுண்டை செய்யக்கூடிய ஆற்றல் உருவானதே எண்ணத்திலிருந்துதானே!

மனம் எண்ணியதினால்தான் அறிவு செயல்பட்டு அணுகுண்டு உருவானது.

ஒரு எண்ணத்தை நம்பிகயுடேன் பலமுறை மனதில் நினைத்தால், அது நல்லதோ, கேட்டதோ அது நடந்தே தீரும்.

ஆகையால் நல்லதும் கேட்டதும் நடப்பது நாம் எண்ணும் எண்ணங்களினால்தான்,

"நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே மாறி விடுகிறாய்" என்பதை நீங்கள் கேள்விப்பத்டிருப்பீர்கள்.

உங்கள் எண்ணம் உறுதியாக இருந்தால் இயற்கையே உங்களுக்கு உதவி கரம் நீட்டி உதவி புரியும் என்பது உறுதி.

'மன வலிமை வளர்த்தால் மனம் வளம் பெறும்

🔴 நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு சுழன்று கொண்டிருக்கிறது...
11/03/2024

🔴 நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு சுழன்று கொண்டிருக்கிறது.

🔴ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

🔴 விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.

இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

🔴 விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.

காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

🔴 காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.

இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

🔴 காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.

காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

🔴 முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.

இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

🔴 பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.

இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

🔴 பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.

நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

🔴 மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.

பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

🔴 இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.

பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

🔴 இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

🔴 இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.

இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

🔴 இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.

இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

கண்ணின் பாதுகாப்பு இமைகளிடம் உள்ளது...குடும்பத்தின் கவனிப்பு பெண்மையிடம் மட்டுமே உள்ளது...மழலை முதல் மூப்பு வரை,இருக்கும...
08/03/2024

கண்ணின் பாதுகாப்பு இமைகளிடம் உள்ளது...

குடும்பத்தின் கவனிப்பு பெண்மையிடம் மட்டுமே உள்ளது...

மழலை முதல் மூப்பு வரை,
இருக்கும் நிலைக்கு ஏற்ப மாறும் மனம்...

கவலை சூழ்ந்தாலும்,
நிலை மாறாமல் தாங்கி‌ நிற்பவர்...

தன்னை சார்ந்தோருக்காக
வாழ்வதில்,தனித்துவம் பெற்றவர்.

சூரியன் இன்றி
பூமி சுழலாது

பெண்கள் இன்றி இப் பூவுலகம் இயங்காது

பெண்மையைப் போற்றுவோம்!

மிஸ்டிக் ஹுலிங் வெல்னஸ் சென்டர் சார்பாக உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

எல்லா வளமும் பெற்று
வாழ்க வளமுடன் பல்லாண்டு 👑

உண்மையை உணர்வோம்.!தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்..!பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றம்...
09/02/2024

உண்மையை உணர்வோம்.!

தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்..!

பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றம் எடுக்க வேண்டும்..!

காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்..!

நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்...!

ஆக எது கெட்டு போகிறதோ..!

புழு வண்டு வைக்கிறதோ..!

எது அழுகி நாற்றம் எடுக்கிறதோ..!

எது ஊசிப் போய் வீணாகிறதோ..!

எது குப்பைக்கு போகிறதோ..!

அவைகள் மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான தீங்கு இல்லாத உணவுப் பொருள்கள்..!

3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் பாட்டில் வாட்டர் கேன் வாட்டர் எப்படி நல்ல தண்ணீர் ஆகும்??

பழமுதிர் நிலையகளிலும் ரிலயண்ஸ் பிரஸ் களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரம் ஆனாலும் கெடாமல் அழுகாமல் இளமை மங்காது பள பளப்பாக விற்கப்படும் பழங்கள் காய்கறிகள் நல்ல தரமான பொருட்களா ?? சிந்திப்பீர்...

இரண்டு மூன்று மாதத்தில் வீட்டில் அரைக்கப் படும் மிளகாய் பொடி, இட்லிப் பொடியிலேயே கடும் காரத்தை உள்வாங்கி புழு வந்து வைத்து கெட்டுப்போகிறது...

பூச்சிக் கொல்லி மருந்து கலந்து பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது மணமாக விற்பனை செய்யப்படும் சக்தி மசாலா, ஆச்சி மசாலா போன்ற பாக்கெட்டுகள் நல்ல பொருளா??

இல்லவே இல்லை...!

ரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சு தான்..!

டி.வி. விளம்பரம் பார்த்து எந்த உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்களை வாங்கினால் அதை விட மடமையும் முட்டாள் தனமும் வேறு எதுவும் இல்லை...

கெட்ட உணவுப் பொருள்களை மெகா கடைகளில் வாங்குவது
ஒரு பொழுது போக்காகவும் - சமூக கௌரவமாக மாறி விட்டது...

உணவு முறை, நோய், நலம், மருத்துவம், சமூகம்
பற்றிய புரிதல் கோளாறே இதற்கெல்லாம் காரணம்.

வரை முறையற்ற நுகர்வு பண்பாடும் இதற்கு அடிப்படைக் காரணம்...!

உண்மையை உணர்வோம்..!

சுகமே சூழ்க

Address

Coimbatore

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm
Sunday 10am - 1pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mystic Healing Wellness Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram