Aram Healthcare Store

Aram Healthcare Store Aram Healthcare Store is giving complete healthcare solution through quality healthcare products and free consults.

Well experienced in reversing your health related disorders. We challenge you, you can feel better than before.Whatsapp ...
17/04/2025

Well experienced in reversing your health related disorders. We challenge you, you can feel better than before.

Whatsapp to book your 1:1 call
#9942007771



உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 💐🙏🏻
08/03/2025

உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 💐🙏🏻




26/11/2024

💠 *கொழுப்பு / இருதய அடைப்பு / உடல் பருமன்*

நமது உடலுக்கு சப்த தாதுக்களில் ஒன்றான கொழுப்பு என்ற தாது மிக முக்கியமானது. கொழுப்பு தான் தசைகளின் நெகிழ்வு இயக்கங்களுக்கும், உடலின் வெப்ப நிலையை கட்டுக்குள் வைப்பதற்கு மறைமுகமாகவும், செல் சுவர்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

நமது உடலில் “நல்ல” கொழுப்பு (HDL) & “கெட்ட” கொழுப்பு (LDL) என்று இருவேறு கொழுப்பு புரதங்களால் உருவாக்கப்பட்டு நமது உடலில் இயங்கிவருகிறது. இரண்டு வகையான கொழுப்புகளுமே அதன் அதன் விகிதத்தில் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மாறாக HDL குறைவாகவும் LDL அதிகமாகிக்கொண்டே சென்றால் உடலில் பல்வேறு பாதிப்புக்கள் உண்டாகும். அவற்றில் சில,

* இரத்தக் குழாய்களில் அடைப்பு (Atherosclerosis)
* இதய நோய் (Heart Disease)
* பக்க வாதம் (Stroke)
* உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure)
* இரத்த ஓட்டத் தடையினால் உண்டாகும் நோய்Peripheral Artery Disease
* கொழுப்புக் கற்கள் உண்டாகுதல் (Gallstones)
* சிறு நீரக பாதிப்பு (Kidney Damage)
* நீரிழிவு நோய் அபாயம் (Increased Risk of Diabetes)
* குறைவான இரத்த ஓட்டம் மற்றும் குறைவான பிராண சக்தி (Compromised Blood Flow and Oxygen Delivery)
* உடல் பருமன் (Obesity)

💠 *கொழுப்பு நோய் உண்டாகக் காரணங்கள் என்னென்ன?*

* தவறான / ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கம்
* போதுமான உடல் உழைப்பு இல்லாமை
* புகை பிடித்தல்
* அளவுகடந்த சாராயக் குடிப்பழக்கம்
* பரம்பரை நோய்
* மன அழுத்தம்
* போதை பழக்கம் / மருந்துகளின் பக்க விளைவுகள்

மேற்கண்ட காரணங்களைத் தாண்டி ஒரு சில காரணங்களும் இருக்கலாம் ஆனால் மேலே சொல்லப்பட்டவைகளால் தான் இன்னோய் வர அதீத காரணமாயுள்ளன.

💠 *சித்த மருத்துவத்தில் தீர்வு:*

உணவுகள் மற்றும் வாழ்க்கை சூழலியலில் சிறிது மற்றம் செய்ய வேண்டும்.

நார்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் தேர்ந்தெடுத்துச் சாப்பிடவேண்டும். குறிப்பாக, காய்கறிகள், கீரை வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். திட உணவுகளை விட திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். கருப்பு கவுனி அரிசி, கருங்குருவை அரிசி, சிகப்பு அரிசி இவற்றால் செய்த கஞ்சி வகைகளை காலையிலும், அவல் வகைகளை மாலையிலும் எடுத்துக்கொள்ளலாம். தேங்காய் எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தலாம். சமையலுக்கு கொடம்புளி சேர்த்துக்கொள்ளலாம். கொள்ளு ரசம் சாப்பிடலாம்.

நன்கு பசித்த பின்பே அடுத்த வேளை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்கொள்ளும் உணவு விரைவில் சீரணிக்கத்தக்கதாகவும், உடலுக்கு சோர்வை உண்டாக்காதவாரும் இருக்க வேண்டும். மலஜலம் நன்கு பிரியவும், உண்ட உணவு விரைவில் சீரணமாகவும் எப்பொழுதும் சுடு நீர் பருகும் பழக்கத்தை மேற்க்கொள்வது சாலச்சிறந்தது.

எக்காரணம் கொண்டும் பேக்கரி உணவுகளை சாப்பிடக்கூடாது. குறிப்பாக அதிக வெள்ளை சீனியில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள், கேக், பன், பரோட்டா, பிஸ்கட், ரொட்டி, பிஸ்சா, பாஸ்தா, மைதா தயாரிப்புகள் போன்றவைகளை அறவே தவிர்க்க வேண்டும். மாமிச உணவுகளால் உடலுக்கு தீமையே உண்டாகும், கெட்ட கொழுப்பு அதிகம் சேரும். கிழங்கு வகைகளைத் தவிர்க்க வேண்டும். டீ, காபி வகைகளை குறைத்துக்கொள்வது நலம். கருகி சமைத்த உணவுகள் உடலுக்கு தீமை செய்யும் (Triglycerides) கெட்ட மூலக்கூறுகளைக் கொண்ட கொழுப்புகளை உண்டாக்கும்.

💠 *சித்த மருந்துகள்:*

* மருதம்பட்டை சூரணம்
* வெண்தாமரை சூரணம்
* திரிபலாதி சூரணம்
* நிலாவாரை சூரணம்
* அஷ்ட சூரணம்
* பஞ்சதீபாகினி சூரணம்
* நவ உப்பு பற்பம்
* ஆளி விதை எண்ணெய் மாத்திரை

மேற்கண்ட சித்த மருந்துகளை தகுந்த மருத்துவ ஆலோசனைகளின் பேரில் எடுத்துக்கொள்ளலாம். இவை தவிர சித்த மருத்துவத்தில் பெரும் மருந்துகளும் உண்டு.

*இலவச மருத்துவ ஆலோசனைகளுக்கு அழைக்கவும்*

*க. குருபரன் M.Sc., DSMS*
அறம் சித்த மருத்துவம்
Cell: 9942007771

🔸 *நாகபற்ப மாத்திரை* 🔸🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭✅_*நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது*_ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க துத...
24/11/2024

🔸 *நாகபற்ப மாத்திரை* 🔸
🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭

✅_*நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது*_

ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க துத்தநாகம் அவசியம். நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும் நியூட்ரோபில்ஸ் மற்றும் மேக்ரோபேஜ்கள் போன்ற நோயெதிர்ப்பு உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு இது உதவுகிறது. துத்தநாகம் அழற்சியின் எதிர்வினைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது மற்றும் ஜலதோஷத்தின் தீவிரத்தையும் கால அளவையும் குறைக்கும்.

✅_*காயம் குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது*_

துத்தநாகம் கொலாஜன் தொகுப்பு மற்றும் செல் பிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றுகிறது. இவை இரண்டும் திசு சரிசெய்தலுக்கு முக்கியமானவை. போதுமான துத்தநாக உட்கொள்ளல் காயங்கள், வெட்டுக்கள் மற்றும் காயங்களை குணப்படுத்துவதை துரிதப்படுத்துகிறது. இது தோல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது மற்றும் முகப்பரு மற்றும் பிற தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

✅_*உடல் வளர்ச்சியை அதிகரிக்கிறது*_

துத்தநாகம் சாதாரண உடல் வளர்ச்சிக்கு முக்கியமானது, குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்ப காலத்தில். சரியான செல்லுலார் பிரிவு மற்றும் புரத தொகுப்புக்கு இது அவசியம், இது திசுக்கள், உறுப்புகள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு முக்கியமாகும்.

✅_*அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கிறது*_

நரம்பியக்கடத்தி செயல்பாடு, நினைவகம் மற்றும் கற்றல் ஆகியவற்றில் துத்தநாகம் பங்கு வகிக்கிறது. துத்தநாகத்தின் குறைபாடுகள் பலவீனமான அறிவாற்றல் செயல்திறனுடன் தொடர்புடையது, மேலும் கூடுதல் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும், குறிப்பாக வயதானவர்களுக்கு.

✅_*கருவுறுதல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது*_

ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு துத்தநாகம் முக்கியமானது. ஆண்களில், இது விந்தணு உற்பத்தி மற்றும் தரத்தை ஆதரிக்கிறது, பெண்களில், இது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது மற்றும் கர்ப்ப காலத்தில் கரு வளர்ச்சியை ஆதரிக்கிறது.

✅_*தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது*_

முகப்பரு, அரிக்கும் தோலழற்சி மற்றும் பிற தோல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் துத்தநாகம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, எண்ணெய் உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் சேதமடைந்த தோல் செல்களை குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

✅_*ஆரோக்கியமான பார்வையை பராமரிக்க உதவுகிறது*_

துத்தநாகம் விழித்திரையில் குவிந்துள்ளது மற்றும் கண்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாப்பதில் பங்கு வகிக்கிறது. இது வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் (AMD) அபாயத்தைக் குறைக்கும் மற்றும் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.

✅_*ஹார்மோன் சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது*_

துத்தநாகம் இன்சுலின், தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் செக்ஸ் ஹார்மோன்கள் போன்ற ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவுகிறது. சீரான டெஸ்டோஸ்டிரோன் அளவை பராமரிப்பதற்கும் இது முக்கியம், இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் முக்கியமானது.

✅_*செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது*_

துத்தநாகம் செரிமான நொதிகளின் தொகுப்பில் ஈடுபட்டுள்ளது, இது உணவின் முறிவு மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. துத்தநாகத்தின் குறைபாடு செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்கலாம், இது இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

✅_*ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை ஆதரிக்கிறது*_

துத்தநாகம் இன்சுலின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் உதவுகிறது, இது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதற்கு முக்கியமானது. போதுமான துத்தநாக உட்கொள்ளல் ஆரோக்கியமான இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவும், குறிப்பாக வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது பெரிதும் உதவுகிறது..

✅_*முடி உதிர்வதைத் தடுக்கிறது*_

ஆரோக்கியமான மயிர்க்கால்களுக்கு துத்தநாகம் அவசியம். இது முடி வளர்ச்சியை பராமரிக்க உதவுகிறது மற்றும் முடி உதிர்வும் வாய்ப்பைக் குறைக்கிறது, குறிப்பாக துத்தநாகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது நன்மையளிக்கும். துத்தநாகத்துடன் கூடுதலாக முடியின் அடர்த்தியை மேம்படுத்தலாம் மற்றும் உதிர்தலைக் குறைக்கலாம்.

✅_*ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது*_

துத்தநாகம் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது, உடலில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது மற்றும் இருதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

✅_*மனநிலையை மேம்படுத்தலாம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கலாம்*_

நரம்பியக்கடத்தி கட்டுப்பாடு மற்றும் மூளை செயல்பாட்டில் துத்தநாகத்தின் பங்கு உள்ளது. சில ஆய்வுகள் துத்தநாகச் சேர்க்கையானது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைப் போக்க உதவும் என்று கூறுகின்றன, குறிப்பாக குறைந்த துத்தநாக அளவு உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

🔹சித்த மருத்துவ முறைப்படி தயாரித்த _*முதல்தர நாகபற்ப மாத்திரை*_ நம்மிடம் கிடைக்கும்.🔹

💊ஒரு வயது குழந்தை முதல் சிறந்த துணை உணவாக இதை எடுத்துக்கொள்ளலாம். மேற்கண்ட ஆரோக்கியக் குறைபாடுகளுக்கு இதை துணை மருந்துணவாக எடுத்துக்கொள்வது சிறந்த வேகமான பயனைத் தரும்.

👉🏻_*எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு:*_
காலை வெறும் வயிற்றில் ஒரு மாத்திரை மட்டும்.

💵ஒரு மாத்திரையின் விலை ரூ.35/- மட்டுமே

💵ஒரு மாதத்திற்கு (30 நாட்கள்) வாங்குபவர்களுக்கு ரூ.900/- மட்டுமே. கூரியர் இலவசம் (தமிழ்நாடு மட்டும்)

✳️பலபேர் வாங்கி பயன்பெற்ற பக்கவிளைவுகள் இல்லாத *சிறந்த அனுபவ துணை மருந்துணவு* . வாங்கிப் பயன்பெறுங்கள்.

♾️♾️♾️♾️♾️♾️♾️♾️
க.குருபரன் M.Sc., DSMS.,
உடல் நல ஆரோக்கிய ஆலோசகர்
அறம் சித்த மருத்துவம்
செல்: 9942007771

💡 *உடல் ஆரோக்கியம் சம்மந்தமான அனைத்து ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படும்.*

15/10/2024

*மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு*

உடலில் இரத்த ஓட்டம் சரிவர முழுமையாக இயங்காததாலும்,
கால்சியம் பற்றாக்குறையினாலும்,
மூட்டுகளுக்கு இடையேயுள்ள சவ்வு தேய்மானத்தாலும்,
உடலின் மூட்டுக்களில் போதிய இயக்கம் இல்லாவிட்டாலும்,
வயது முதுமை போன்ற காரணங்களினாலும் ஏற்படும் மூட்டு வலிகளை எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் குணமாக்க நமது பாரம்பரிய அனுபவ சித்த மருந்துகளின் மூலம் நிரந்தர தீர்வு அளிக்கப்படும்.

மருந்து சாப்பிடும்போது என்னென்ன உணவுகளின் பத்தியம் - அபத்தியம் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன யோகாசனங்கள் செய்ய வேண்டும் உட்பட அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்படும்.

பலருக்கும் கொடுத்து பலன்கண்ட மருத்துவ முறை. நியாயமான விலையில் முழுமையான தீர்வு தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ளளாம்.

க.குருபரன்
பிரணவ மெய்ப்பொருள் ஆய்வாளர்
செல்: 9942007771

04/07/2024

மனித உடலில் முக்குற்றம் என சொல்லப்படுகிற வாதம், பித்தம் மற்றும் சிலேத்துமம் இவற்றின் சமநிலை குறைய முக்கிய இரண்டு காரணங்கள்.

1. அஜீரணம்
2. மலச்சிக்கல்

நீண்ட நாள் அசீரணமும், கவனிக்கப்படாத மலச்சிக்கலும் மனிதனுக்கு நோயை உண்டாக்குகின்றன.

மனிதனுக்கு நோயை உருவாக்குவதில் மேற்கண்ட இரண்டும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை மட்டுமில்லாது ஏனைய சில விஷயங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நோயை உண்டாக்கக்கூடிய காரணிகளாக இருக்கின்றன.

அவையெல்லாம் எவை, அவைகளை எப்படி போக்கிக் கொள்ளலாம் போன்ற விபரங்களை இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்.

-- *க.குருபரன்*

21/06/2024

*மனித உடலுக்கு நோய் வருவதற்கான காரணம் என்ன?*

வளி - அழல் - ஐயம் ( வாதம், பித்தம், கபம் ) இம்மூன்றின் சமநிலை தவறுவதால் நோய் உண்டாகிறது.

சரி, இம்முக்குற்றங்களின் சமநிலை எதனால் மாறுகிறது?

அடுத்த பதிவில்...

- க.குருபரன்

யாருக்கெல்லாம் பசி ஒழுங்காக வருவதில்லையோ, அவர்கள் உணவு சாப்பிடுவதற்கு முன்பு சிறிது இஞ்சித் துவையல் சேர்த்து வந்தால் பசி...
20/03/2024

யாருக்கெல்லாம் பசி ஒழுங்காக வருவதில்லையோ, அவர்கள் உணவு சாப்பிடுவதற்கு முன்பு சிறிது இஞ்சித் துவையல் சேர்த்து வந்தால் பசி தீபனம் அதிகம் உண்டாகும். இஞ்சித்துவையலில் இந்துப்பு சேர்ப்பது நலம் அல்லது வறுத்து சுத்தி செய்யப்பட்ட உப்பையும் பயன்படுத்தலாம்.

*CellBooster*நமது அன்றாட வாழ்க்கைச் சூழலினால் நமக்கு வேண்டிய முக்கிய சத்துக்களை நாம் உண்ணும் உணவுகளின் மூலம் பெற முடிவதி...
20/02/2024

*CellBooster*

நமது அன்றாட வாழ்க்கைச் சூழலினால் நமக்கு வேண்டிய முக்கிய சத்துக்களை நாம் உண்ணும் உணவுகளின் மூலம் பெற முடிவதில்லை. அதில் நமக்கு வேண்டிய அதி முக்கியமான சத்து எதுவென்றால் அது இரும்புச்சத்து என்று சொல்லக்கூடிய அயச்சத்து ஆகும்.

என்னதான் கீரைகள், பழங்கள், காய்கறிகளில் மனிதனுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், மேற்ச்சொன்னவாறு நமது உடலியக்கங்களில் மாறுபாடுகள் (வாதம், பித்தம், சிலேதுமம் போன்றவற்றில்) ஏற்பட்டதன் காரணமாக அந்தச் சத்துக்களை உடல் ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருக்கும்.

நமது சித்தர்கள் இந்த ஊட்டச்சத்துக்களை உடல் நேரடியாக எடுத்துக்கொள்ளும் வகையில் தாது உப்புக்களிலிருந்தும், உலோகங்களிருந்த்தும் பிரித்து எடுக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரடியாகக் கொடுக்கத் துவங்கினர். அதில் ஒன்றுதான் அன்னபேதிச் செந்தூரம்.

*அன்னபேதி (Ferrous Sulfate - ஃபெரஸ் சல்ஃபேட்)*

அன்னம் (உணவு) + பேதி (உணவை நீர்த்துப்போகச்செய்தல்). அதாவது உண்ணும் உணவிலிருந்து அதன் சாரத்தை பிரித்தும், மேலும் மருந்திலிருக்கும் தாது உப்பின் சத்தையும் இணைத்து நோயை குணமாக்கும்.

அன்னபேதியை சித்தர்களின் தொழில்நுட்பத்தில் சரியான்முறையில் புடமிட்டு வேதிக்கும் பொழுது செந்தூரமாகி “நமக்கு அன்னபேதிச் செந்தூரம்” கிடைக்கிறது.

*அன்னபேதியின் செய்கைகள்:*
🔹பலகாரி - Tonic (தாதுக்களுக்குப் பலங்கொடுக்கும்)
🔹ருதுவர்த்தனகாரி - Emmenagogue (சுரோணிதத்தை வெளியாக்கி இயல்பு தன்மைக்குக் கொண்டுவரும்)
🔹கிருமி நாசினி - Anthelmintic (வயிற்றிலுள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றும்)
🔹சங்கோசனகாரி - Astringent (சதை, நரம்பு முதலியவைகளைச் சுருங்கச் செய்யும் (தேவையில்லாததையும், ஒவ்வாததையும்)

*பயன்கள்:*
“முளைவிரணஞ் சூலைமந்த முட்டாமைக் கட்டி
விளையறன்ம கோதரநோய் வீட்டும் - வளைமலைபோற்
காட்டுமன்னந் தன்னைக் கணத்திற் சலமாக்கிக்
காட்டுமன்ன பேதியது காண்” - பதார்த்த குண விளக்கம்.

♦️ இரத்தத்திலுள்ள குருதிவளிக்காவியின் (ஹீமோகுளோபின் - Hemoglobin) அளவை கணிசமாக அதிகரிக்கச் செய்து இரத்ததிலுள்ள உலோகப்புரதத்தை வளப்படுத்தி பிராணனை உடலெங்கும் எடுத்துச்செல்ல வழிவகுக்கிறது.

♦️ இரத்தசோகையை (பாண்டு - Anemic) குணப்படுத்தும்.

♦️ அசீரணம், சீதபேதி, சுரம், பித்தப்பிணி போன்றவை கட்டுப்படும்.

♦️ காமாலை நோயைத் தீர்க்கும்.

♦️ முக வெளுப்பு, கைகால் வெளுப்பு போன்றவற்றைச் சரிசெய்து, முகப்பொலிவையும், தேஜசையும் தரும்.

♦️ ஞாபகத்திறன் அதிகரிக்கும், மூளைச் சோர்வு நீங்கும். தலைவலி குறையும்.

♦️ காளாஞ்சுப்படை எனச் சொல்லப்படுகின்ற சொரியாசிஸ் (psoriasis) வியாதிக்கு இதை பக்க மருந்தாகப் பயன்படுத்தலாம்.

♦️ அதிக உடல் சூட்டைக் குறைக்கும்.

♦️ அதீத வெட்டை (gonorrhoea) நோயினால் ஏற்ப்படும் எலும்பு மஜ்ஜை இழப்பைத் தடுக்கும்.

♦️ சிறுநீரில் விந்து வெளியாவதைத் தடுக்கிறது.

♦️ இம்மருந்து பெண்களுக்கான ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. இது மாதவிடாய் காலங்களில் கெட்டுப்போன சுரோணிதங்களைச் சரியாக வெளியேற்றி மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிசெய்கிறது.

♦️ வயிற்றிலுள்ள நாக்குப்பூச்சிகளை (parasitic worms) வெளியேற்றக்கூடியது.

*யாரெல்லாம் இம்மருந்தை எடுத்துக்கொள்ளலாம்?*

♦️ 3 வயதுக்கு மேல் உள்ள இருபாலரும் பயன்படுத்தலாம்.

♦️ உடல் சோர்வு, தலைவலி, மாதவிடாய் சமயங்களில் உண்டாகும் மனச்சோர்வு, உடலில் போதிய இரத்தமில்லாதவர்கள். குறிப்பாக வயதுக்கு வந்த பெண்கள். கர்ப்பிணி தாய்மார்கள். விந்து நஷ்டம் உண்டாகும் ஆண்கள். அதீத உடல் உஷ்ணத்தினால் அவதிப்படுபவர்கள் என பல்வேறு நோயுள்ளவர்களும் இதை தாராளமாகப்பயன்படுத்தலாம்.

குருப்பாரம்பரிய முறையில் அன்னபேதியிலுள்ள அயச்சத்து வீணாகாமல் முறைப்படி சித்தர்களின் சீரிய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த CellBooster (“மகா அன்னபேதி செந்தூரம்”) தேவைப்படுவோர் எங்களைத் தொடர்பு கொண்டு வாங்கிப்பயன்பெறுங்கள்.

நீண்ட நாட்களாக வேறுசிலபல நோய் பாதித்தவர்கள், தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம்.

- க.குருபரன் M.Sc., DSMS (Siddha)
பிரணவ மெய்ப்பொருள் ஆராய்ச்சியாளர்
Cell: 9942007771

#அன்னபேதிச்செந்தூரம்
#அன்னபேதி

25/12/2023

கீழ்க்கண்ட மூலிகை செடிகள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பது மிகவும் நன்று.

1. முருங்கை
2. ஆடாதொடை
3. கற்பூரவள்ளி (ஓமவல்லி)
4. துளசி
5. ஈஸ்வரமூலி
6. கரிசலாங்கண்ணி
7. திருநீற்றுப்பச்சிலை
8. மருதாணி
9. செம்பருத்தி
10. சிறியாநங்கை

எனக்குத் தெரிந்த மிக முக்கியமாக அவசியமாக இருக்க வேண்டியவர்களை பட்டியலிட்டுள்ளேன் மேற்கொண்டு ஏதாவது இருந்தால் தெரிவிக்கிறேன்.

இவைகளைக் கொண்டே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான வியாதிகளை எல்லாம் வீட்டிலிருந்தே சரி செய்து கொள்ளலாம். ஒரு சிறிய இடம் கிடைத்தால் கூட போதும் அதில் நாமே வளர்த்துக் கொள்ளலாம்.

அன்பர்கள் அனைவரும் இப்பொழுது இருந்தே சேகரிக்க தொடங்குங்கள்.

- க.குருபரன்

அருட்பெருஞ்ஜோதி 🪔

*குளிர்காலம் / பனி காலம் துவங்கி விட்டது*வரும் மார்கழி மாதம் முழுவதும் குளிர்காலமாக இருக்கப் போகிறது. குளிர்காலமாக இருந்...
15/12/2023

*குளிர்காலம் / பனி காலம் துவங்கி விட்டது*

வரும் மார்கழி மாதம் முழுவதும் குளிர்காலமாக இருக்கப் போகிறது. குளிர்காலமாக இருந்தாலும் நமது உடல் வெப்பநிலை உண்மையில் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.

இந்தக் காலகட்டத்தில் நமக்கு சளி, காய்ச்சல், வறட்டு இருமல் போன்ற உபாதைகள் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

ஆகவே உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடலை உஷ்ண படுத்தக்கூடிய உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஜீரணத்தை குறைக்கும் அளவிற்கு உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. முடிந்தால் இரண்டு வேளைகள் மட்டுமே உணவை எடுத்துக் கொள்வது நலம். தினமும் திரிகடுகு சாப்பிட்டு வரலாம். எப்பொழுதும் வெந்நீரே அருந்த பழகுங்கள்.

மார்கழி மாதம் ஆன்ம பலத்தை அதிகரிக்கச் செய்யக்கூடிய வாய்ப்பை நமக்குத் தருகிறது. ஆகவே இக்கால கட்டத்தில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கி அமைதியுடன் விழிப்புணர்வுடன் மௌனமாக இருங்கள் அல்லது மனதை ஒருமுகப்படுத்தக் கூடிய ஏதேனும் செயல்களையும் செய்து கொண்டு இருக்கலாம்.

- க.குருபரன்.

WhatsApp Group Invite

09/12/2023

Address

Coimbatore

Telephone

9942007771

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aram Healthcare Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category