Cinco Naturals

Cinco Naturals Cinco Natural Lifestyle Consortium, associated with farmers and producers network across the country

 #செறிவூட்டப்பட்ட_அரிசி = தீட்டிய அரிசி + அமிலம்WHO உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, இந்திய மக்களின் ஊட்டச்சத்தை பெ...
24/09/2020

#செறிவூட்டப்பட்ட_அரிசி = தீட்டிய அரிசி + அமிலம்
WHO உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, இந்திய மக்களின் ஊட்டச்சத்தை பெருக்க, ரேஷனில் வழங்கப்படும் அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice Kernels, or FRK) கலப்படம் செய்து வழங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு, ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசியை, மாநில அரசுகளுடன் இணைந்து வழங்குகிறது.
இதன் முதல் கட்டமாக சோதனை செய்ய போவது தமிழகத்தில் திருச்சியில் உள்ள கார்டுதாரர்களுக்கு, ரேஷன் கடைகள் வாயிலாக, செறிவூட்டப்பட்ட அரிசி, அக்டோபர் முதல் வழங்கப்பட உள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசியில் வைட்டமின் ஏ, வைட்ட மின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, போலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் துத்தநாக சத்து ஆகிய 9 நுண் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதனை சாப்பிடுவதால், ரத்த உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை பிரச்னை ஏற்படாது என்று அரசு கூறுகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசி Cold Extrution தொழில்நுட்பத்தின் லைசினுடன் அரிசியை தயாரிப்பது ஆகும். சாதாரண அரிசியுடன் சேர்த்துதான் சமைக்க முடியும். தயாமின், நயாசின் அடங்கியுள்ள திரவத்தில் அரிசியை நனைத்து உலர வைத்து, இரண்டாவது பூச்சாக இரும்புச்சத்து மிக்க பைரோ பாஸ்பேட்டுகள் அதன் மேல் தூவி செறிவூட்டப்பட்ட அரிசியை தயாரிக்கிறார்கள். இந்த பூச்சுக்கள் நீரில் கரையாதது எனவே சமைக்கும் போதும் நீரில் கரைந்து விடாது. தமிழ்நாடு அரசு #சத்துணவில் 100 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து சமைக்கிறது.
“செறிவூட்டப்பட்டவை” ஆரோக்கியமானதாகத் தெரிகிறது, இல்லையா? கெடுவாய்ப்பாக, இந்த உணவுகள் செயற்கை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் “செறிவூட்டப்படுகின்றன” நம் உடல் பெரும்பாலும் இதனை சரியாக அணுகாது. இந்த செயற்கை ஊட்டச்சத்துக்கள் உண்மையில் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும். பிளாஸ்டிக் அரிசி என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு சீன தொழிற்சாலைகளில் அரிசி தயாரிப்பது போன்ற காணொளிகள் வெளிவந்தது அனைத்தும் இந்த அரிசிதான்.
இதில் வேடிக்கை என்னவென்றால், அரிசியை தீட்டாமல் உண்டாலே இங்கு பாதி பிரச்சனை தீர்ந்து விடும். தானியங்களை தீட்டுவதால் ஏற்படும் உணவுச் சத்துக்களின் இழப்பு அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 15% கொழுப்பு, 82% தயாமின், 85% ரைபோபிளேவின், 70% பிரிடாக்ஸின் (உயிர்ச்சத்து B), 50% இயந்திரத்தில் தீட்டப்படுவதைப் பொருத்து.
அந்த பக்கம் அரிசியை பளபளன்னு ஆக்குறதுக்காக தீட்டுறோம். இந்த பக்கம் தீட்டுன அரிசியில ரசாயாணத்தை கலக்குறோம்.
பூமித்தாயின் மடியில் விலையும் நல்ல அரிசியை வெண்மை நிறத்தின் மீதுள்ள மோகத்தால் அளவுக்கதிகமாக தீட்டி வெண்மையாக மாற்றி, அதிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் நீக்கி, பிறகு சத்து குறைபாடு என்று தேவையற்ற அமிலங்களை சேர்த்து உண்ணும் இழி நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த உணவால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்று உலகம் இதுவரை ஆவணப்படுத்த வில்லை ஆனால் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தகவல்கள் மட்டும் கிடைக்கிறது. இதன் விஷத்தன்மை அறிய சில காலம் ஆகும். அதுவரை அதற்கு பலியாகப் போவது அரிசிக்கு கையேந்தி நிற்கும் நாம் தாய்த்தமிழ் உறவுகள் தான்.

24/08/2020
23/08/2020

It's better to conquer yourself than to win a thousands of battles

18/08/2020

“பனை பொருளியல் - ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில், இந்த வார “பனை பொருளியல்” நிகழ்ச்சியில், நம்மோடு பனையின் சிறப்புக....

16/08/2020

மேற்கு தொடர்ச்சி மலை !.
குஜராத்தின் தபதி நதியிலிருந்து ஆரம்பித்து தமிழத்தின் பொதிகை வரை கால் பரப்பி பறந்து விரிந்து காணப்படும் "மேற்கு தொடர்ச்சி மலை " ஒரு உலக அதிசயம்.
இமயமலையில் பனி உருகுவதால் வற்றாத ஜீவநதிகள் உருவாகிறது. ஆனால் பனியே இல்லாமல் ஜீவ நதிகளை உருவாக்கும் சோலைக்காடுகளை போர்த்தி கொண்டிருப்பது மேற்கு தொடர்ச்சி மலை .
பல்லுயிர் வாழும் அற்புத சோலைக்காடுகளைக்கொண்டது. உலகிலுள்ள அடர்ந்த காடுகளின் வரிசையில் இதிலுள்ள "சைலண்ட் வேலி " இடம் பெற்றுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் அங்கமான "நீலகிரி "யில், கிழக்கு தொடர்ச்சி மலை சங்கமிக்கிறது.
தொட்டபெட்டா, ஆனைமுடி என்னும் இரண்டு உயர்ந்த சிகரங்களைக்கொண்டது. இதில் ஆனைமுடி அதிக உயரமானது.
"வரையாடு " என்னும் அரிய உயிரினம் வாழும் ஆபூர்வ சூழல் அமைப்பை கொண்டது மேற்கு தொடர்ச்சி மலை.
மேற்கு தொடர்ச்சிமலையின் சிகரங்களில் பசுமை போர்த்திய புல்வெளிகள் உள்ளன.. .இவை மழை நீரை தன்னகத்தே பிடித்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது.
மேற்கு தொடர்ச்சி மலை ஆபூர்வ வன விலங்குகள், பல்லுயிரிகள், பறவைகள், பூச்சியினங்கள் வாழும் சூழலியலைக்கொண்டது.
மேற்குதொடர்ச்சிமலையின் ஆனைகட்டி மலைப்பகுதியில் "சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையம்" உள்ளது.
உலகின் அதிசய மலரான, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறைபூக்கும் "குறிஞ்சி மலர் " நீலகிரி மலையில் பூக்கிறது.
இங்குதான் முதுமலை விலங்குகள் சரணாலயம் உள்ளது.
களக்காடு, முண்டந்துறை புலிகளின்சரணாலயமும் மேற்கு தொடர்ச்சி மலையின் "பொதிகையில் " அமைந்துள்ளது.
திரிகூட ராசப்ப கவி வியந்துபாடிய "குற்றாலமும் "இங்குதான் உள்ளது.
ஆன்மீக வழிபாட்டின் புனித தீர்த்தமான "பாண தீர்த்தம் " இங்குதான் உள்ளது.
"ஜோக் பால்ஸ் " என்னும் அழகிய அருவி சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திளுக்கும் கவின்மிகு தலமாக உள்ளது.
காவிரி அன்னையின் உற்பத்தி கேந்திரமான "குடகின் வனப்புமிகு தலைக்காவிரியும் உள்ளது.
இன்னும் எண்ணிலடங்கா இயற்கை அதிசயங்களைக்கொண்டமேற்குதொடர்ச்சி மலையின் சூழலியல் கட்டமைப்பை தகர்த்தது ஆங்கிலேயன் காலத்தில் பயிரிடப்பட்ட தேயிலை என்றால் மிகையாகாது.
ஆங்கிலன் அதை மட்டுமா செய்தான் பல்லுயிரிகள் வாழும் புகலிடத்தை மனிதர்கள் வாழ்வதற்காக அதன் எழிலை அழித்து ஊட்டி, வெலிங்டன் என்னும் நகரங்களை உருவாக்கி, இயற்கைச்சூழலியல் சீர்கேட்டுக்கு முதன் முதலில் அச்சாரம் போட்டான்.!.
பின் வந்தவர்கள் அங்கு ரிசார்ட்டுகள் என்னும் கேளிக்கை விடுதிகளை யானைகளின் வலசைப்பாதையில் அமைத்து தடையேபடுத்தினான்.
ஆயிரக்கணக்கான வன விலங்குகளின் இருப்பிடத்தை பின் வந்த நம் இனக்கயவர்கள் சூரையாடியதால், அவை மக்கள் வசிக்கும் நகரங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தன!.
விளைவு விவசாயிகளின் விளை நிலங்கள் அழிந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்குப்பெரும் குந்தகம் ஏற்பட்டது!.
இதன் எதிரொலியாக வனவிலங்குகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டது!.
வன விலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதில், மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பான பகுதிகளை தேயிலை, காப்பித்தோட்டங்கள் ஆக்ரமித்துள்ளன.
இவற்றுக்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பூச்சியினங்களில் ஆபூர்வங்களாக எண்ணப்படும் தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளை அழித்துவிட்டது பெரும் சோகம் .
சூழலியலில் தகவமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்த வனவிலங்குகளுக்கு போதிய உணவு கிடைக்காமல் காடுகள் சூரையாடப்பட்டு தேயிலை, காப்பி, ரப்பர் போன்ற மரங்கள் ஆக்ரமித்துக்கொண்டன.
இவ்வகை தாவரங்களின் வேர்ப்பகுதி வலுவற்றதால் பொழியும் மழையினை பிடித்து வைத்துக்கொள்ளும் தன்மையை வெகுவாக இழந்து விட்டன!.
ஆபூர்வ இனமான யானைகளின் சரணாலயமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் வானளாவிய மரங்கள், சந்தணமரங்கள், தேக்கு மரங்கள், ஈட்டி மரங்கள், செம்மரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வெகுவாக காடுகள் விசமிகளால் அழிக்கப்பட்டுவிட்டன.
மேற்கு தொடர்ச்சி மலை என்னும் இயற்கையின் கொடை மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.
வருங்காலங்களில் இதை உயிர்ப்பித்து பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றால் இந்திய வரை படத்தில் "தென் இந்தியா " பாலைவனமாகும் அபாயத்திலிருந்து யாரும் காப்பாற்ற முடியாது !.
மேற்குத்தொடர்ச்சி மலையின் சூழலியலை பாதுகாக்கும் உறுதியை ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்.

15/08/2020

Address

215 I Floor Bharathiyar Road
Coimbatore
641044

Alerts

Be the first to know and let us send you an email when Cinco Naturals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram