Thozhar trust

Thozhar trust Our trust is dedicated to the services like funeral to the unclaimed bodies,medical camp,blood donation and awareness about eye donation &body donation.

26/04/2025
30/10/2024
ஊர்கூடி தேர் இழுத்தோம்  என்னசாமிக்கு பதிலாய் குப்பம்மாநேற்று இரவு 5-6-23 லாலிரோடு பகுதியிலிருந்து ஒரு போன் அண்ணா இங்க ஒர...
08/06/2023

ஊர்கூடி தேர் இழுத்தோம் என்ன
சாமிக்கு பதிலாய் குப்பம்மா

நேற்று இரவு 5-6-23 லாலிரோடு பகுதியிலிருந்து ஒரு போன் அண்ணா இங்க ஒரு அம்மா இறந்துட்டாங்க. வரிங்களா

லாலிரோடு
நான் கருவாகி உருவாகி 45 ஆண்டுகளாக வாழ்ந்த பூமி அங்கு குடியிருக்கும் எல்லோருமே என் சொந்தங்களே சாதியாலும் மதமாலும் அல்லநேசிப்பால்

லாலிரோடு

ஒருபுறம் நூற்றாண்டு கண்ட வேளாண்பல்கலைகழகம்
இன்னொருபுறம் வனக்கல்லூரி மற்றொருபுறம் GCT தொழில்நுட்ப கல்லூரி நான்குபுறமும்கல்லூரிகளால் சூழப்பட்டு
நடுவிலே பத்துரோடு இதுதான் லாலிரோடு

பத்து ரோட்டில் நான்கு ரோட்டில் தமிழீழ விடுதலைபுலிகள் பிரச்சாரபிரிவு வாரமொருமுறை வழங்கிய சுவரொட்டிகள்
ஒட்டப்பட்டுக்கொண்டே இருக்கும்

இந்திய இராணுவம் இலங்கையில் புலிகள் மீதான தாக்குதலை இலைமறைகாயாய் தொடங்கியகாலம் இந்திய இராணுவத்தின் துரோகத்தால்
குமரப்பா
புலேந்தி
அப்துல்லா
ரகு
நலன்
மிரேஸ்
ரெஜினால்ட்
அன்பழகன்
கரன்
ஆனந்தகுமார்
இப்படி 12 புலிகள் தங்களை மாய்த்துக்கொண்டனர்
இதை கண்டித்து லாலிரோட்டில்
S15A என்னும் பேருந்து தீக்கிரையாக்கப்படுகிறது

காவல்துறைக்கு சொல்லவா வேண்டும்
சுற்றி சுழன்று இராமகிருட்டிணன் தலைமையிலான திராவிடர்கழக தோழர்கள் கைது செய்யப்படுகிறார்கள்

சுவரொட்டி ஒட்டப்பட்ட பகுதியிலேயே மோப்ப நாய்களோடு காவல்துறை வலம் வருகிறது அதே பகுதியில் என்னை மட்டும் கைது செய்ய இயலவில்லை அந்த மக்கள் என்னை பாதுகாத்த பூமி

திக தரும் தினமொரு சிந்தனை லாலிரோடு மெயின் ரோட்டில் எழுதி வைப்போம்
அன்று
எழுதிய வாசகம்

நினைவில் கொள்வோம்
ஈழத்தமிழரை அழிக்க அமைதிப்படை
அனுப்பியவன் ராஜீவ்

அன்று ஏதேட்சையாக ராஜீவ் குண்டு வெடிப்பில் மரணமடைகிறார்

நினைவில் கொள்வோம் என எழுதியதை
கொல்வோம் என தெரிந்தே எழுதியிருக்கிறார்கள் என திமுக காங்கிரஸ் கும்பல் என் வீட்டை தாக்க அரண்போல் நின்று காத்த மக்கள்
ஒரு மணிநேரத்தில் மீண்டும் அதே பகுதியில் வலம் வரச்செய்த மக்கள்
லாலிரோடு என்றவுடனே ஏதேதோ நினைவுகளுக்குள் மூழ்கி விட்டேன்

அழைப்பை ஏற்று
சென்றேன் அங்கே காங்கிரஸ் பேரியக்கத்தின் கோவைமாவட்ட துணைதலைவர் எனது நண்பர் செல்வம் அவர்கள் அங்கு வந்திருந்தார்
சாந்து உடனே எடுக்கனும் னு சொன்னார் நாளை காலை அனைத்து வசதியும் இருக்குமே எடுக்கலாமே என்றேன்

தாயும் மனநலம் குன்றிய மகள் மட்டுமே உள்ளனர்
நீண்டநாட்களாக படுக்கையில் இருந்துள்ளார் அருகருகே வீடுகள் எனக்கூற சரி
சொக்கம்புதூர் மயானத்தில் புதைகுழி வெட்ட வாய்ப்பிருக்குமா எனில் வாய்ப்பில்லை மின்சார விளக்குகளே இல்லாதநிலை
பிறகு விறகு வேணும்னா வாங்கிட்டுவாங்க எரித்துத்தருகிறோம்
இப்பவே மணி 10.
உடனே செல்வம் அதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தி கிட்டத்தட்ட ஏழு எட்டு கிலோமீட்டர் அலைந்து விறகு ஏற்பாடு செய்துவிட்டார்
நான் உடனே ராஜா ஆம்புலன்ஸ் தோழர் ஸ்டீபனை அழைக்க
உடனே அம்புலன்ஸ் அனுப்ப உறவுகளற்றோருக்கு ஊர்கூடி நின்றது இரவு 11 மணி பார்த்தோரெல்லாம் நலம் விசாரிக்க பதில் சொல்லிக்கொண்டே அந்த வீட்டினை அடைந்தேன்

நெடுஞ்சான்கிடையாக கிடத்தப்பட்ட உடல்
அருகே மனநலம் குன்றிய அந்த பெண்

அம்மாவ கொண்டு போறீங்களா கொல்லிவைக்க இடைவிடாம கேட்டுகிட்டே இருந்தது இப்போதுவரை காதுகளில் ஒழித்துக்கொண்டே இருக்கிறது

உறவினர்கள் மரணத்திற்கு கூட இவ்வளவு கூட்டம் கூடாது
அவ்வளவு கூட்டம்

ஏராளமான இளைஞர்கள் துணையோடு மயாணம் வந்தார் குப்பம்மா

எரியூட்டுகிறபோது இரவு 11. 45
எரியூட்டிவிட்டு திரும்பினேன் தோழர்கள் சிறிதுநேரம் கழித்து வருவதாக சொன்னார்கள்
வீடு திரும்பி பாதிதூரம் வந்தபின்னால் ஆகா டாக்டர் சான்றிதழ் வாங்காம வந்துட்டோமே என திரும்பி மயானம் சென்றால்
ஒருவருமே இல்லை
நானும் எரிந்து கொண்டிருக்கும் அந்த அம்மாவை தவிர

லாலிரோடு சாந்து என்றால்தான் இயக்க தோழர்களுக்கு தெரியும்

ஆகவே தோழர்அறக்கட்டளை யின் மூலமாக உடலை எடுப்பதா
இல்லை
லாலிரோட்டின் செல்லபிள்ளை சாந்துவாக எடுப்பதா

தோழர்அறக்கட்டளை தோழர்கள்
க.ரா ஜீவா
அண்ணாதுரை
சம்பத்குமார் ஆகியோரிடம் சொல்லிவிட்டு
லாலிரோடு சாந்தாகவே எரியூட்டுகிறேன்

அடக்கம் செய்திட நான் நீ என போட்டிபோட்டு காசு கொடுத்த நல்உள்ளங்கள்

அந்தகாசில் ஒரு ரூபாயும் எடுக்காமல் மனநலம் குன்றிய அந்த பெண்ணை ஏதேனும் விடுதியில் இணைத்திட முடியுமா என பார்க்கிறோம்

நன்றிகள்
தோழர் செல்வத்திற்கு
தோழர்களுக்கு

Address

170 Metrical Street Near Flower Market Rspuram
Coimbatore
641002

Alerts

Be the first to know and let us send you an email when Thozhar trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram