QubePix Health Tips

QubePix Health Tips Daily Health Tips

Lemon drinks for weight loss | Fat burning drink | Boost immune system https://youtu.be/nCuKolrgTJ4
04/06/2020

Lemon drinks for weight loss | Fat burning drink | Boost immune system

https://youtu.be/nCuKolrgTJ4

INGREDIENTS: Day - 1 - Lemon - Chia seeds - Salt - Honey Day - 2 - Lemon - Salt - Mint leaves - Cucumber Day - 3 - Lemon - Salt - Mint leaves - Ginger Day - ...

இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க நம் முன்னோர்கள் சாப்பிட்டது இந்த நாட்டு உணவுகளை தான்...உயர் நார்ச்சத்து உள்ள ...
13/02/2020

இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க நம் முன்னோர்கள் சாப்பிட்டது இந்த நாட்டு உணவுகளை தான்...

உயர் நார்ச்சத்து உள்ள உணவுகள் இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுவதால் நீரழிவு நோயாளிகள் இந்த உணவை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை விரைவாக குறைக்கும் சில உணவு பற்றிய குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

முள்ளங்கி :-

முள்ளங்கியில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மேலும் இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. நீங்கள் நீரிழிவு நோயாளி என்றால் முள்ளங்கி கொண்டு சாலட், பரோட்டா , சாம்பார் போன்றவற்றை உட்கொள்ளலாம். முள்ளங்கியில் எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு மற்றும் சில காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்து சாலட் போல் உண்பதால் அதன் நன்மைகள் உங்களுக்கு அப்படியே கிடைக்கின்றன.

பாகற்காய்:-

பாகற்காய் கசப்பு சுவையைக் கொண்டிருந்தாலும் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. கசப்பாக இருக்கும் மருந்து விரைவில் உடலை குணப்படுத்துவது போல் பாகற்காயும் உடலுக்கு நன்மை அளிக்கிறது. பலருக்கும் அதன் கசப்பு தன்மை காரணமாக பாகற்காயை பிடிக்காமல் இருந்தாலும், எடை இழப்பில் சிறந்த முறையில் உதவும் பாகற்காய், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பாலிபெப்டைடு - பி அல்லது பி-இன்சுலின் என்னும் கூறு பாகற்காயில் உள்ளது. இதனால் நீரிழிவு கட்டுப்படுகிறது.

கேழ்வரகு :-

கோதுமையில் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக உள்ளது . அதனால் நீரிழிவு நோயாளிகள் அதன் அளவைக் குறைப்பது நல்லது. கோதுமைக்கு மாற்றாக நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகைப் பயன்படுத்தலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ராகி என்று அறியப்படும் கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இதனால் இதன் ஊட்டச்சத்து மிக அதிகம். நீரிழிவு நோயாளிகள் ராகி தோசை அல்லது ராகி பரோட்டா செய்து சாப்பிடலாம்.

நெளிகோதுமை (Buckwheat):-

விரத காலத்து உணவாக அறியப்படுவது இந்த நெளிகோதுமை. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஊட்டச்சத்துகளைக் கொண்ட ஒரு ஆரோக்கிய உணவாக இது கருதப்படுகிறது. குறைந்த க்ளைசீமிக் குறியீடு கொண்ட இந்த உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது.

Instant healthmix - உடல் எடையை அதிகரிக்க இந்த Health Mix சாப்பிடுங்க .... http://bit.ly/2QYCWUF
29/11/2019

Instant healthmix - உடல் எடையை அதிகரிக்க இந்த Health Mix சாப்பிடுங்க ....
http://bit.ly/2QYCWUF

How to make instant coconut milk - தேங்காய் பால் செய்வது எப்படி ??http://bit.ly/2rpzAiA
29/11/2019

How to make instant coconut milk - தேங்காய் பால் செய்வது எப்படி ??

http://bit.ly/2rpzAiA

உடல் சோர்வை போக்கும் வேப்பம்பூ:-இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும், அவை எல்லாம் வேப்பமரத்...
14/02/2018

உடல் சோர்வை போக்கும் வேப்பம்பூ:-

இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும், அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக, மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.

சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து, காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும்.

கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன வெயிலால் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது.

கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.

குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `

அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.

காய்ந்த வேப்பம்பூ , உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும்.

வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும். வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

வேப்பம்பழ சர்பத்தை குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

கருப்பை வீக்கத்தை போக்கும் இலந்தை:-மாதவிலக்கு கோளாறால் பெண்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கருமுட்டை சிதைவ...
13/02/2018

கருப்பை வீக்கத்தை போக்கும் இலந்தை:-

மாதவிலக்கு கோளாறால் பெண்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கருமுட்டை சிதைவு, கருப்பை சுவர்களில் நீர்க்கட்டி போன்ற காரணங்களால் குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அத்தகைய நிலையை தவிர்க்கவும், சீரான மாதவிலக்கை தூண்டவும் பக்கவிளைவில்லாத இயற்கை மூலிகைகளை கொண்டு தீர்வு காண்பது பற்றி பார்க்கலாம்.

பெண்மைக்குரிய முக்கிய ஹார்மோன் சுரப்பியாக ஈஸ்ட்ரோஜன் இருந்து வருகிறது. இந்த ஹார்மோனின் குறைபாட்டினால் கருப்பையில் கட்டிகள், மாதவிலக்கு கோளாறு, குழந்தை இன்மை, மாதவிலக்கின் போது இடுப்பு வலி, உபாதைகள், அடிவயிற்று வலி ஏற்படுகிறது. ஆண்களின் சுரப்பியான ஆன்ட்ரோஜன் அதிகப்படியாக உடலில் சுரக்கப்படுவதால் தேவையற்ற இடங்களில் முடி வளர்தல், தலை முடி மென்மையாதல், உடல் சோர்வு போன்ற நிலை ஏற்படுகிறது. இதனுடன் நச்சுகளும் உடலில் சேர்ந்து கொண்டு உடல் பருமனடைய செய்கிறது. இத்தகைய பிரச்னைகளுக்கு சதக்குப்பை, மரமஞ்சள், கருஞ்சீரகம், கொள்ளு, இலந்தை இலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு மருந்து தயாரிக்கலாம்.

ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் உடல்பருமனை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சதக்குப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் பொடி, பனைவெல்லம்.பாத்திரத்தில் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், அரை ஸ்பூன் சதக்குப்பை, கால் ஸ்பூன் மரமஞ்சள் பொடி, ஒரு ஸ்பூன் வெல்லம் மற்றும் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.சதக்குப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் ஆகியன நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்ற மூலிகைகள். இவை கலந்த பானத்தை தொடர்ந்து குடித்து வர கருப்பை நீர் கட்டிகள் கரைந்து வெளியேறும். மேலும் இது ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு மற்றும் மாதவிடாய் கோளாறால் உடலில் தேங்கும் சிதைந்த கருமுட்டை உள்ளிட்டவற்றை வெளித்தள்ளுகிறது. மேற்கண்ட பானத்தை வழக்கமான மாதவிடாய் காலத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் எடுத்து வருவதால் வலியற்ற, முறையான மாதவிடாய் ஏற்படும்.

கெட்ட கொழுப்புகளை அகற்றும் கொள்ளு கஞ்சி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொள்ளு-50 கிராம், பார்லி அரிசி-50 கிராம், மிளகு- 10 கிராம், உப்பு.பார்லி அரிசி, கொள்ளு, மிளகு ஆகியவற்றை சுத்தம் செய்து பொடித்து கொள்ளவும். பாத்திரத்தில் 2 ஸ்பூன் பொடித்த கலவையுடன், உப்பு மற்றும் நீர் சேர்த்து கரைத்து கொதிக்கவிடவும். இந்த கஞ்சியை 3 மாதம் குடித்து வர சீரான மாதவிடாய் ஏற்படும். உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கும்.

கருப்பை வீக்கத்தை குறைக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: இலந்தை இலை, பூண்டு, மிளகு. இலந்தை இலையை கையளவு எடுத்து பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன் சிதைத்த பூண்டு, மிளகு சேர்த்து கொதிக்கவிடவும். இந்த பானத்தை ஓரிரு வேளை அன்றாடம் குடித்து வரும்போது, வீக்கம் குறைவதோடு, கருப்பை பலம் பெறும். இலந்தை இலையில் மாவு சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு சுவை கொண்டுள்ள இலந்தை இலையில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது.

இந்த இலை உடலின் ஜீரணசக்தியை அதிகரித்து பசியை தூண்ட செய்யும் தன்மையுடையது. முதுகுவலி, இருதய நோயால் அவதிப்படும்நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும். குறிப்பாக பெண்களின் பிரச்னையான கருப்பை வீக்கத்தை சரிசெய்கிறது.
இலந்தை வேர்பட்டை-40 கிராம், மாதுளம் பட்டை-40 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் நன்கு கொதிக்கவிடவும். இந்த நீர் 125 மி.லிட்டராக குறையும் போது இறக்கி வடிகட்டி கொள்ளவும். இதனை தினமும் 4 வேளை அருந்துவதால் மாதவிலக்கு பிரச்னை சரியாகும்.கருப்பை வீக்கத்தை போக்கும் இலந்தை

இரத்த சோகை மற்றும்  சிறுநீரக பாதிப்புகளை போக்கும் சுரைக்காய்!!! நமது கிராமங்களில் இன்றும் உயிர்ப்புடன் காணப்படும் ஒரு தொ...
19/10/2017

இரத்த சோகை மற்றும் சிறுநீரக பாதிப்புகளை போக்கும் சுரைக்காய்!!!

நமது கிராமங்களில் இன்றும் உயிர்ப்புடன் காணப்படும் ஒரு தொன்மையான காய் வகை, சுரைக்காய். கொடிகளில் படரும் தன்மையுள்ள சுரைக்காயின் இலை, பிஞ்சு, காய் மற்றும் பழங்கள் மனிதர்க்கு நன்மையளிப்பவை. வீடுகளின் கூரைகளில், வேலிகளின் மேல், அல்லது தரையில் எங்கும் பரவி வளர்பவை, சுரைக்காய்.

சுரைக்காய் பெரிய நீர்க்குடுவை போன்ற வடிவத்தில் இருப்பதால், நன்கு முற்றிய சுரைக்காயின் உள்ளே உள்ள சதைப்பகுதிகளை நீக்கி, அவற்றை வெயிலில் காய வைத்து, அக்காலங்களில் நீரை சேமிக்க, மற்றும் வைத்தியர்களின் மருந்துகளை சேகரித்து வைக்க, வெளியூருக்கு எடுத்துச்செல்ல, பயன்படுத்தி வந்தனர். இந்த சுரைக்காய் குடுவை பொருளை சேமிக்க மட்டுமல்லாமல், பொருள்களை நீண்ட காலம் கெடாமல், பாதுகாக்கும் தன்மையும் மிக்கது.

கிராமங்களில் நாட்டுக்காய்கள் என்று சில காய்கறிகளை, குறிப்பிடுவார்கள், அதில் சற்று விலையில் குறைந்தது இந்த சுரைக்காய், ஆயினும் உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியது. கிராமங்களில் பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, சிறுவர்கள் அல்லது அந்த பேச்சுக்கு தொடர்பு இல்லாதவர்கள் அவர்களிடம் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று கேட்கும்போது, "சுரைக்காய்க்கு உப்பு இல்லை என்று சொன்னேன்" என்று குறும்பாக, பதில் சொல்வார்கள்.

எங்கள் பேச்சில் நீங்கள் குறுக்கிடவேண்டாம், மேலும், எங்களுக்கு, உங்களை பேச்சில் சேர்த்துக் கொள்ள விருப்பம் இல்லை என்பது, இதற்கு பொருள். அதை உணர்ந்து அவர்களும், விலகிச் சென்று விடுவர்.

புரோட்டின், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் தாதுக்கள் அதிகம் உள்ள சுரைக்காய்களில், மிக அதிக அளவில் நீர்ச்சத்தும் உள்ளதால், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகிறது. உடல் சூட்டை தடுத்து, உடலை கோடைக்கால வெப்ப வியாதிகளில் இருந்து காக்கிறது

சுரைக்காய் உடலில் கொழுப்பு சேர்வதை தடுத்து, செரிமான பாதிப்புகளை நீக்கி, எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதியை அளிக்கிறது.

சிலருக்கு, முகத்தில் எண்ணை வழியும் சருமமாக இருக்கும், இதனால் அவர்களின் முகம் எப்போதும், ஒரு வாடிய தன்மையில் காணப்படும், இந்த நிலையை மாற்றி, அவர்களின் முகத்தை பொலிவுடன் திகழ வைக்க, சுரைக்காய் சாறெடுத்து சிறிது இந்துப்பு கலந்து அதை பருகிவர, முகத்தில் எண்ணை வடிவது நிற்கும்.

பொதுவாக அதிக குளிர்ச்சித் தன்மை மிக்க சுரைக்காய் போன்ற காய்கறிகளை குளிர் காலத்தில் சாப்பிடும்போது, அதில் இந்துப்பு, சுக்கு, மிளகு, மல்லித்தூள் இவற்றை கலந்து, காய்கறி கலவை போல, சாப்பிடுவதன் மூலம், குளிர்ச்சியான பொருளை உட்கொண்டதால் ஏற்படும் சளி பிடிப்பதைத் தவிர்க்கலாம். மேலும், நன்கு பசியெடுக்கும்.

இந்த சுரைக்காய் சாறே, அதிக உடல் எடையை குறைக்கும், தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி, முடி கருமையாக வளர்வதை, ஊக்கப்படுத்தும்.

சுரைக்காய் சாற்றில் சிறிது நல்லெண்ணை கலந்து பருகி வர, இரவில் உறக்கமின்மை வியாதி நீங்கி, நல்ல ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.

பெண்களின், இரத்த சோகை வியாதியை போக்கி, இரத்தத்தை சுத்திகரிக்கும் அருமருந்தாக, சுரைக்காய் ஜூஸ் விளங்குகிறது.

சுரைக்காய் தேன் கலந்த ஜுஸ், உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து, இரத்த ஓட்டத்தை சமமாக்கி, உடலின் சீரான இயக்கத்திற்கு, வழி செய்கிறது.

உடலில் வெளியேறாமல் தேங்கும் சிறுநீரை வெளியேற்றி, சிறுநீரக நச்சுத் தொற்றுகள், கற்கள் மற்றும் சிறுநீரகத்தை தூய்மை செய்து, சிறுநீரகத்தை காக்கிறது.

சுரைக்காய் ஜூஸ் கல்லீரல் நோயை சரியாக்கும் ஆற்றல்மிக்கது, வயிற்றில் புண்களை ஏற்படாமல் காக்கும் தன்மை மிக்கது, மேலும், மன அழுத்தத்தை குறைத்து, மன இறுக்கத்தை சரியாக்குகிறது.

நலன்கள் பல நமக்கு தந்தாலும், சுரைக்காயை ஒருபோதும், பச்சையாக சாப்பிடக்கூடாது, பெரிய வயிறு உள்ளவர்கள், குரலை காக்க வேண்டிய பாடகர்கள் யாவரும், சுரைக்காயை உணவில் தவிர்க்க வேண்டும், அது போல, பெண்களின் மாத விலக்கின் போது சுரைக்காயை உணவில் தவிர்க்க வேண்டுமென, வைத்திய சாத்திரங்கள் சொல்கின்றன.

உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்கும் மூலிகைகள்!நீங்கள் உங்களது முழு உள் உடலை எப்போது கடைசியாக சுத்தம் செய்தீர்கள்...
18/10/2017

உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்கும் மூலிகைகள்!

நீங்கள் உங்களது முழு உள் உடலை எப்போது கடைசியாக சுத்தம் செய்தீர்கள் என்று நியாபகம் இருக்கிறதா? நமது வெளி உடலை எப்படி தினமும் குளித்து செய்யாவிட்டால் அதிகப்படியான அழுக்கு சேர்ந்து உடல் நலம் பாதிக்கப்படுமோ அதை விட அதிகமாக உள் உடல் பாதிக்கப்படும். எனவே நமது முழு உடலையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இல்லை என்றால் உடலின் உட்பகுதியில் அங்காங்கே நச்சுக்கள் சேர்ந்துவிடும்.

உடலில் அதிகமாக நச்சுக்கள் சேர்ந்துவிடுவதால், உங்களது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இந்த நச்சுக்களை நீக்க மூலிகைகளே மிகச்சிறந்த தீர்வாகும். இது நச்சுக்களை நீக்க உங்களது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

கொத்தமல்லி - கொத்தமல்லியில் ஆன்டி மைக்ரோபையல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன், உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கும் திறன் ஆகியவை அடங்கியுள்ளன. இது வயற்று கோளாறுகளை சரி செய்கின்றன. அதுமட்டுமின்றி இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனை நீங்கள் ஜூஸ் செய்தும் பருகலாம்.

திரிபலா - திரிபலா ஒரு ஆயுர்வேத மருந்தாகும். கடுக்காய், தான்றி, நெல்லிக்காய் ஆகிய மூலிகைகளை ஒன்றாக சேர்ந்து அரைப்பதால் கிடைப்பதாகும். தினமும் இரவில் அரை டீஸ்பூன் திரிபலா சூரணத்தை அரை கப் சூடான நீரில் கொதிக்க 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து பருகலாம்

மில்க் த்ரிஸ்டில் - இது ஒரு ஆன்டி ஆக்ஸிடண்டாக செயல்படுகிறது. இது உடலில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. இதன் விதைகளை உணவுக்கு முன்னர் வேறும் வயிற்றில் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். இது உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் அகற்றும் தன்மை கொண்டது.

வேம்பு - வேம்பு இலை மிகவும் கசப்பானதாக தான் இருக்கும். ஆனால் இதில் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் உள்ளன. இது செரிமானத்திற்கும் உதவுகிறது. தினமும் வேம்பின் இலைகளை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் அழியும். இது வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா என அனைத்தையும் எதிர்க்கும் திறன் கொண்டது.

புதினா - புதினாவில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. புதினா டீ வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது. இது குடல் எரிச்சலை போக்கும் தன்மை உடையது. இது வயிற்றை குளுமைப்படுத்துகிறது. தோல் அரிப்பு, பற்களை வெண்மையாக்குதல், வாய்துர்நாற்றம் போக்குதல், இரத்தம் செய்தல், உடலில் உள்ள நஞ்சுகளை போக்கவும் உதவுகிறது.

பல நோய்களுக்கு மருந்தாகும் நாம் மறந்து விட்ட இலந்தைப்பழம்!!!இலந்தை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதில் மாவுப்பொருள், ...
17/10/2017

பல நோய்களுக்கு மருந்தாகும் நாம் மறந்து விட்ட இலந்தைப்பழம்!!!

இலந்தை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதில் மாவுப்பொருள், புரதம் , தாது உப்புக்கள் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது. இலந்தை பழத்தில் மட்டுமல்லாமல், இலந்தை இலையிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இத்தகைய சிறப்புகள் மிக்க இலந்தையின் மருத்துவ குணங்களை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

எலும்புகள் வலு பெற - உடலில் கால்சியம் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும். இதனால் லேசாக கீழே விழுந்தாலும் கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தை பழம் சாப்பிட்டால், எலும்புகள் பற்கள் இரண்டுமே வலுவாகும்.

பித்தம் குறைய - பித்தம் அதிகரித்தால், தலைவலி, மயக்கம், தலைசுற்றல் என பல பிரச்சனைகள் உண்டாகும். இந்த பித்தத்தை குறைக்க இலந்தைப்பழம் சாப்பிட்டால் போதும். பித்தம் குறையும்.

வாந்தி, தலைசுற்றல் - நீண்ட நேரம் பயணித்தால் சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

உடல்வலி - சிறிய வேலை செய்தால் கூட உடல் ரொம்ப வலியாக இருக்கிறதா? இந்த உடல் வலியை போக்கி உடலை வலுவாக வைத்துக்கொள்ள இலந்தை பழம் சாப்பிடுவது சிறந்த மருந்தாக அமையும்.

பசியின்மை மற்றும் செரிமான பிரச்சனை - பசியின்மை மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாக இலந்தை உள்ளது. இலந்தையின் விதையை நீக்கிவிட்டு பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும்.

மாதவிலக்கு கால பிரச்சனை - மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளை குறைக்கவும், உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப்பழம் பயன்படுகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் இந்த பழங்களை சாப்பிடலாம்.

புத்திகூர்மைக்கு - மந்த புத்தி உள்ளவர்கள் இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை புத்துணர்சி பெறும். இதனை பகல் உணவிற்கு பின்னர் சாப்பிட வேண்டும். மூளை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, தூக்கத்தையும் மன அமைதியையும் தருவதுடன், உணவு, சிறுநீர்ப்பாதை மற்றும் சுவாசப் பாதையில் தோன்றும் வறட்சியை நீக்கி, புண்களை ஆற்றி, உடலுக்கு குளிர்ச்சியையும் தருகின்றன

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காயின் நன்மைகள்!!!கோவைக்காய் பலரும் அறிந்திருக்கலாம். ஆனால், எத்தனை பேர் இதை வாரத்த...
16/10/2017

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காயின் நன்மைகள்!!!

கோவைக்காய் பலரும் அறிந்திருக்கலாம். ஆனால், எத்தனை பேர் இதை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்க்கிறார்கள்? வாரம் ஒருமுறையாவது இறைச்சி சாப்பிட்டுவிட வேண்டும் என்ற ஆசை, ஈர்ப்பு, வெறி இருக்கும் நம்மிடம், அதே அளவு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த காய்கறிகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை இல்லையே, ஏன்?

கோவைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் என தெரியாது... ஆனால், இதில் இத்தனை நன்மைகள் இருக்கிறது என தெரிந்தால் நீங்களும் இதை விரும்பி சாப்பிடுவீர்கள். சாம்பார், பொரியல் எப்படி வேண்டுமானாலும் இதை சமைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை வெறுமென கழுவி மென்று வந்தாலும் உடல் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

கல்லீரல் பலம்! - மிக எளிதாக, விலை குறைவாக கிடைக்க கூடியது கோவை காய். இது கல்லீரலின் பலத்தை அதிகரிக்கும். நீரிழிவு நோய்க்கு உகந்த மருந்தாகவும் செயற்படுகிறது.

நோய் எதிர்ப்பு! - கோவைக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இது சரும நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது. சரும அரிப்பு, சரும எரிச்சல் போன்றவைக்கு கைவந்த மருந்து கோவைக்காய். மேலும், இது சளியை குறைக்கவும் உதவும்.

கோவை செடி இலைகளை எடுத்து சரும பிரச்சனைகளுக்கு மருந்து உருவாக்கலாம். ஐந்து கோவை இலைகளை எடுத்து சுத்தம் செய்து, நீரில் கொதிக்க வைத்த நீரை அதில் ஊற்றி ஊற வைக்க வேண்டும். பிறகு, இலைகளை வடிக்கட்டி நீரை குடித்து வந்தால் சரும தடிப்புகள், அரிப்பு போன்றவை குணமாகும்.

கோவைக்காய், இலைகள் மட்டுமின்றி, கோவைக்காய் செடி தண்டும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. இதன் இலைகளை எடுத்து, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அந்த பசையை தைலம் போல காய்ச்சிக்கொள்ளவும். இந்த தைலத்தை சொறி, சிரங்கு, படை போன்ற சரும கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.

வாய் புண்! - இதன் இலைகளை நீரில் கழுவி சுத்தம் செய்து மென்று சாப்பிட்டு வந்தால் வாய் புண், வயிற்று புண், குடல் புண் போன்றவை சரியாகும். உதட்டு வெடிப்புகளும் குணமாகும். மேலும், இந்த கோவைக்காய் நுரையீரல் தொற்று, நெஞ்சு சளி போன்றவற்றையும் போக்கும் குணம் கொண்டுள்ளது.

லஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் ஆச்சரியப்படுத்தும் பலன்கள்அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் பால், தயிர்,மோர் போன்றவற்றினால்...
15/10/2017

லஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் ஆச்சரியப்படுத்தும் பலன்கள்

அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் பால், தயிர்,மோர் போன்றவற்றினால் மட்டுமல்ல தயிரின் மூலம் தயாரிக்கப்படும் லஸ்ஸியை குடிப்பதாலும் உடலுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். உடனடியாக புத்துணர்சி அளிப்பதால் பலரும் லஸ்ஸியை விரும்பி குடிக்கிறார்கள்.

இதைத் தவிர லஸ்ஸி பல மருத்துவ பயன்களையும் தருகிறது. தயிருடன் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். சிலர் இதில் தேன், ஏலக்காய் உட்பட பல பொருட்களை மிக்ஸ் செய்தும் குடிக்கிறார்கள்.

பால் பொருட்கள் உடலுக்கு நன்மைசெய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கக்கூடிய புரோபயாட்டிக்ஸ் (Probiotics) நிறைந்த உணவுகள். இவை, வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதுடன், நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் உதவும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

லஸ்ஸியில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்துக்கு தேவையான என்சைம்களை அதிகரித்து, செரிமானத்துக்கு உதவும். உடலின் ஜீரண சக்தியை பலப்படுத்தும்.

மலச்சிக்கல், வயிற்றுப் புண், வயிறு உப்புசம் உள்ளிட்ட வயிற்று உபாதைகளைச் சரியாக்கும்.

லஸ்ஸியில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது நம் எலும்புகளும் பற்களும் வலிமையாக உதவுகிறது. மேலும், எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

வைட்டமின் பி 12 ரத்தத்தில் உள்ள குளூக்கோஸை ஆற்றலாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின் பி 12 இருப்பதால், ஒரு டம்ளர் லஸ்ஸி குடித்தால் உடனடி ஆற்றல் கிடைக்கும். தொடர்ச்சியாக, லஸ்ஸி சாப்பிட்டு வந்தால், வைட்டமின் பி 12 குறைபாட்டு நோய் நீங்கும்.

லஸ்ஸியில் புரோட்டீன் நிறைவாக உள்ளது. இது தசைகளை வலிமையாக்கும். உடற்பயிற்சி செய்கிறவர்கள், பாடி பில்டர் போன்றவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவு. கோடைகாலத்தில் வெப்பத்தால் ஏற்படும் வியர்குரு, இரைப்பை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

புற்று நோயை தடுக்கும் பூசணி விதைகள்!!அறிவியலின் வளர்ச்சியால் நாம் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்களை கேள்விப்படுகிறோம். ...
14/10/2017

புற்று நோயை தடுக்கும் பூசணி விதைகள்!!

அறிவியலின் வளர்ச்சியால் நாம் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்களை கேள்விப்படுகிறோம். மருத்துவத்தில் அறிவியல் ஆராய்ச்சியின் பங்கு இன்றியமையாதது. பல நோய்க்கு , அதன் அறிகுறிகள், அதற்கான மருந்துகள் போன்றவற்றை கண்டுபிடிக்க ஆரய்ச்சிகள் பெருமளவில் உதவுகின்றன.

இப்படி சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு குழுவினர் நடத்திய ஆய்வில், ஜிங்க் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் உடலில் புற்று நோய் உருவாக்கும் அணுக்களின் வளர்ச்சி தடைபடுவதாக கூறப்படுகிறது. இதனை பற்றிய விளக்கம் தான் இந்த தொகுப்பு.

யுனிவர்சிட்டி ஆப் டெக்சாஸ் நடத்திய ஒரு ஆய்வில், ஜிங்க் மாத்திரைகள் உணவு குழாய் புற்று நோய் பெருக்கத்தை கணிசமாக குறைப்பதாக கூறப்படுகிறது..

ஜிங்க் மாத்திரைகள் புற்று நோய் அணுக்களில் இருக்கும் தேவைக்கு அதிகமான கால்சியம் சிக்னல்களை தடுக்கிறது. இவை சாதாரண அணுக்களில் நடப்பதில்லை . இதன்மூலம், புற்று நோய் செல்களை ஜிங்க் குறிப்பாக தடுப்பதை நம்மால் கணிக்க முடிகிறது.

உணவு குழாயின் மேற்புற அணுக்களுக்கு இந்த மாத்திரையால் எந்த ஓரு விளைவும் ஏற்படுவதில்லை. புற்று நோயை உண்டாக்கும் அணுக்களின் வளர்ச்சி மட்டுமே கட்டுப்படுகிறது, என்று இந்த குழுவின் தலைவர் ஸுய் பான் கூறுகிறார். உணவுக்குழாய் புற்றுநோயின் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு இந்த கண்டுபிடிப்பு நல்ல ஒரு வழிகாட்டுதலாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஜிங்க் சத்து குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. பல மருத்துவ ஆய்வுகளும் , குறிப்புகளும் ஜிங்க் சத்தின் தேவை ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது என்று கூறுகின்றன. புரதம் மற்றும் என்சைம்களில் ஜிங்க் ஒரு முக்கிய சத்தாக உணரப்படுகிறது. இதன் குறைபாடு , அணுக்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்று ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகிறது.

ஜிங்க் குறைபாடு, புற்று நோயை உண்டாக்கும் அல்லது வேறு பல நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு என்பது ஒரு அச்சமூட்டும் செய்து தான். கீரை, ஆளி விதைகள், மாட்டிறைச்சி, பூசணி விதைகள் , இறால் , கடல் சிப்பி போன்றவற்றில் ஜிங்க் அதிகம் உள்ளது. இவற்றை நமது தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

கால்சியம் மற்றும் ஜிங்க் ஆகிய இரண்டுக்கும் ஒரு வித இணைப்பு உள்ளது. அவை நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா அல்லது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்திகின்றனவா என்பதை பற்றிய ஆராய்ச்சியில் விரைவில் நல்ல தகவல்கள் நம்மை வந்து சேரும். இந்த இணைப்பின் தகவல் மூலம் நமக்கு பல நோய்களின் தடுப்பு மற்றும் சிகிச்சைகளின் வழிமுறைகள் எளிதாக கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதிகளவு  ப்ரோடீன் சத்து நிறைந்துள்ள சைவ உணவுகள்!உடலுக்கும், உடற்தகுதியை சிறப்பாக வைத்துக் கொள்வதற்கும் தேவையான அத்தியாவச...
13/10/2017

அதிகளவு ப்ரோடீன் சத்து நிறைந்துள்ள சைவ உணவுகள்!

உடலுக்கும், உடற்தகுதியை சிறப்பாக வைத்துக் கொள்வதற்கும் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து புரதமாகும். முக்கியமாக தசை வலிமை சிறக்க பாடி பில்டிங் செய்பவர்களுக்கு புரதம் மிகவும் அவசியம்.

பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். அதிகமாக சிக்கன் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்கும். அதிலும் தற்போது விற்கப்படும் பிராயிளர் கோழிகளில் இருக்கும் மிகுதியான கொழுப்பு மக்களை கொல்லும் கொழுப்பாக இருக்கிறது.

இதற்கு நல்ல மாற்று சைவ புரத உணவுகள் இருக்கின்றன. எனவே, சிக்கன் பிடிக்காதவர்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணிகாக்க சிக்கனை குறைத்துக் கொண்டு வேறு புரத சத்து உணவு உண்ண வேண்டியவர்களுக்கான புரத உணவுகள்...

தயிர், சீஸ்!
--------------------------
தயிர் மற்றும் சீஸ் உணவுகளில் புரதம் இருப்பினும், இவற்றில் கொழுப்பு சத்தும் இருப்பதால் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

நாள் முழுக்க உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு உடல் சூடு அதிகரிக்கும். இதனால் செரிமானம் பாதிக்கும். எனவே, நீங்கள் தினமும் மதிய உணவில் கொஞ்சம் சேர்த்துக் கொள்வது உடல் சூடு மாற்றம் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

சோயா பீன்ஸ்!
--------------------------
சோயா பீன்ஸ் எதில் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். வாரத்தில் இரண்டு முறை உணவில் சோயாவை சேர்த்து வந்தால் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும். கோதுமை உணவு விரும்பாதவர்கள் நூறு கிராம் சோயா டயட்டில் சேர்த்து வந்தால் போதுமானது.

பருப்பு உணவுகள்!
----------------------------
எல்லா பருப்பு உணவுகளிலும் புரதம் அதிகமாக கிடைக்கும். சிக்கன் பிடிக்காது என கூறும் நபர்கள் உங்கள் டயட்டில் பருப்பை சேர்த்துக் கொள்ளலாம். இது உங்கள் உடலுக்கு தேவையான புரத சத்தை அளிக்கும்.

பட்டாணி!
-----------------------
அதிகளவில் புரதம் கொண்டுள்ள உணவில் முதன்மை உணவு பட்டாணி. வைட்டமின் சத்துக்களும் மிகுதியாக காணப்படும் பட்டாணி உடல் ஆரோக்கியத்தை, வலிமையை அதிகரிக்கும் உணவாக திகழ்கிறது.

கீரை!
-----------------------
அகத்தி, முருங்கை, வல்லாரை, பசலை என பெரும்பாலான கீரைகளில் புரதம் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பை அதிகரிக்கவும் உதவும்.

அறுபதை எட்டும் நீரிழிவு நோயாளிகள் கீரையை அதிகம் உண்ண வேண்டாம், ஏனெனில் கீரையை செரிமானம் செய்ய சிறுநீரகம் சிரமப்படலாம்.

முளைக்கட்டிய உணவுகள்!
----------------------------
தானியங்களை சமைத்து சாப்பிடுவதை காட்டிலும், முளைகட்ட வைத்து சாப்பிடுவது சிறப்பு. இதனால் புரதம் அதிகளவில் கிடைக்கும். முளைக்கட்டிய தானியங்களை பச்சையாகவே உண்ணலாம். அல்லது நீரில் உப்பு சேர்த்து வேகைவைத்தும் சாப்பிடலாம். ருசி பெரிதாக இருக்காது எனிலும், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மேன்மையான உணவு இது.

சோளம்!
------------------------------
சுவை மிகுந்த புரத சத்து உணவுகளில் சோளமும் ஒன்று. சோளத்தை வேக வைத்தும் உண்ணலாம், பச்சையாகவும் உண்ணலாம். இதிலிருக்கும் கூடுதல் நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவும்.

நிலக்கடலை
------------------------
முட்டையை காட்டிலும் இரட்டிப்பு மடங்கு அதிக புரதம் கொண்ட உணவு நிலக்கடலை. எலும்புகளுக்கு வலு சேர்க்கும் கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ள உணவு. விலையில் குறைவு என்பதால் நட்ஸ்'ல் ஏளனமாக காணப்படும் நிலகடலை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராது, இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

கேழ்வரகு
----------------------------
பாலுக்கு நிகரான புரதம் கொண்டுள்ளது கேழ்வரகு. பால் குடித்தால் அலர்ஜி, பால் குடிக்க கூடாத மருத்துவ நிலையில் உள்ளவர்கள் கேழ்வரகை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நாவல் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! நாவல் பழத்தை சாப்பிடுவதால் இந்த நோய்கள் எல்லாம் உங்களுக்கு வராது!நாவல்...
12/10/2017

நாவல் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

நாவல் பழத்தை சாப்பிடுவதால் இந்த நோய்கள் எல்லாம் உங்களுக்கு வராது!

நாவல் மரம், அக்காலத்தில் நம் தேசம் முழுவதும் விரவி இருந்தது, இம்மரங்களின் செழுமையான பழங்கள் மனிதர்க்கு மட்டும் விருப்பமானவை அல்ல, கிளி போன்ற பறவை இனங்களுக்கும் பிடித்தமானவை. நாவல் மரங்கள் உயர்ந்து வளர்ந்து நிழல் தருபவை.

மேலும், மனிதர்க்கு, ஆயுள் வழங்கும் ஆக்சிஜனை அதிக அளவில் வெளியிடுபவை, இதனாலேயே, அக்காலங்களில், சாலையோரங்களில், நாவல் மரங்களையும் அதிக அளவில் வளர்த்து, மனிதர்கள் பகலில் இளைப்பாறி செல்ல, வழி வகைகள் செய்தனர்.

சாதாரணமாக எங்கும் வளரும் இயல்புடைய நாவல் மரங்கள், மற்ற பலன் தரும் மரங்கள் போலவே, தற்போது காண்பதற்கு அரிதாகிவிட்டது என்பது, வருத்தமான ஒன்று.

இத்தகைய சமூக நன்மைகள் செய்யும் நாவல் மரங்கள், அளிக்கும் கனிகள், பட்டைகள் மற்றும் வேர்கள் ஆகியவையும், மனிதர்களின் தனிப்பட்ட வியாதிகளை போக்கும் தன்மைகள் கொண்டவை.

முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை, வீடுகளில் கிணறுகள் கட்டாயம் இருக்கும், தண்ணீர் பஞ்சம் எனும் ஒன்றே, அவ்விடங்களில் இல்லாதிருக்கும். அந்தக் கிணறுகளில், கோடைக் காலங்களில், கிணற்று நீரை தூய்மை செய்யவும், நீருக்கு சுவை கூட்டவும், நாவல் மரக் கிளைகள் மற்றும் நெல்லி மரக் கிளைகளை, கிணற்று நீரில் இடுவர். அதன்பின், அந்த நீர் பருக மிகவும் சுவையாக இருக்கும்.

நாவல் மரங்கள் செழித்து வளரும் இடங்களில், நிலத்தடி நீர் நிறைந்திருக்கும், மேலும், அந்தப் பகுதிகளில் தங்கத் தாதுக்கள் மிகுந்து காணப்படும் என்று தொன்மையான இதிகாச நூல்கள் குறிப்பிடுகின்றன.

இப்படி, அற்புதங்கள் பல, தன்னகத்தே கொண்டு விளங்கும் நாவல் மரங்கள், பொதுவாக, மனிதரின் சர்க்கரை பாதிப்புகளுக்கு தீர்வாக விளங்கி, இரத்தத்தை, சுத்திகரிக்கும் தன்மை மிக்கதாகத் திகழ்கின்றன. நாவல் மரத்தின் விதைகள் மற்றும் பழங்கள் மனிதர்க்கு ஏற்படும் கபம் மற்றும் பித்தம் எனும் பாதிப்புகளை சரியாக்கும்.

நாவல் பழங்களில் உள்ள தாதுக்கள், இரும்புச்சத்தின் காரணமாக, உடலுக்கு வலிமை தரும் ஆற்றல் மிக்கது. செரிமானத்தை தூண்டி, பசியை அதிகரிக்கும்.

நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக் கட்டு உண்டாவது குறையலாம். நாவல் பழத்தினால் அதிக தாகம் நீங்கும். பழுக்காத காய்களை நன்கு உலர்த்திப் பொடி செய்து, சிறிது அதில் எடுத்து, மோரில் கலந்து பருகிவர, வயிற்றுப் போக்கு குணமாகும்.

நாவல் பழம் சாப்பிட்டுவர, மூக்கில் இருந்து இரத்தம் வடிவது குறையும், செரிமான சக்தியை அதிகரிக்கும், உடல் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்தத்தை அதிகரிக்கும். ஊற வைத்த நாவல் பழ சாறு, உடலுக்கு சிறந்த வியாதி எதிர்ப்பு மருந்தாக விளங்கும்.

நாவல் பழத்தை உப்பிட்டு உண்டுவர, தொண்டைக்கட்டு, நா வறட்சி சரியாகும். நாவல் பழக் கொட்டைகளை காய வைத்து பொடியாக்கி, தினமும் இருவேளை நீரில் கலந்து பருகிவர, சர்க்கரை பாதிப்புகள் விலகும்.

உணவில் பச்சைப் பயிறை சேர்த்துக் கொண்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!!பருப்பு வகைகளில் அதிக அளவில் ஊட்டச் சத்துக்கள் இருப...
11/10/2017

உணவில் பச்சைப் பயிறை சேர்த்துக் கொண்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!!

பருப்பு வகைகளில் அதிக அளவில் ஊட்டச் சத்துக்கள் இருப்பதாலும், மேலும் அவற்றில் உள்ள புரதச் சத்துக்கள் உடலுக்கு நன்மைகள் செய்வதாலும், நாம் தினசரி உணவில் பருப்பு வகைகளை சேர்த்து, உண்டு வருகிறோம்.

இந்த வகையில், பச்சைப் பயிறு மிக சிறந்த அளவில் மனிதருக்கு பலன்கள் தர வல்லவை. எனவே தான் அக்காலங்களில், உணவு வகைகளில் மட்டுமன்றி, இதர இனிப்பு மற்றும் கார வகைகளில், நிறைய பலகாரங்கள் செய்து கொடுத்து, குழந்தைகளின் மாலைநேரத் தீனியை அவர்களின் வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் துணைபுரியும் பயிறு வகைகளைக் கொண்டு, செய்து தந்தனர்.

அதிகம் தண்ணீர் தேவைப்படாத பயிர் வகைகளில் ஒன்றான பச்சைப் பயிறு எல்லா வகை நிலங்களிலும் விளையக்கூடியது. சிறு செடிகளாக வளரும் இவற்றை அறுவடைப் பருவம் வந்ததும், சிறிய பீன்ஸ் வடிவில் இருக்கும், காய்களைப் பறித்து, காயவைத்து அதன் பின், அவற்றை அடித்து, பயறுகளை சேகரிப்பர். பயறு அறுவடைக்கு பின் ஆறு மாதங்கள் கழித்தே, உணவில் சேர்த்துக் கொள்ள சிறப்பாகும். பயிறு ஓராண்டு காலம் வரை அதன் தன்மை மாறாமல், வளமுடன் இருக்கும்.

பயறு சாப்பிடுவோருக்கு பசியைத் தூண்டி, நல்ல ஊட்டமும், உடலுக்கு பலமும் தரும், இரத்த அழுத்த பாதிப்புகளை சரி செய்து, சிறுநீரை சீராக வெளியேற்றும், உடலின் பித்த கபத் தன்மைகளை சீராக்கும். உடலில் எளிதில் செரிமானமாகும் தன்மையுள்ள பயிறுகளில், உடலுக்கு நன்மைகள் தரும் அநேக வைட்டமின், அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, ரிபோ புளோவின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன.

உடலுக்கு வியாதி எதிர்ப்பு தன்மை தரும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இதில் மிகுந்துள்ளது. இதனால், பச்சைப் பயிரை உணவில் அவ்வப்போது சேர்த்து வர, உடலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி உண்டாகி, உடலை வலுவாக்கி, சருமத்துக்கும், கேசத்துக்கும் ஏற்படும் பாதிப்புகளையும் அகற்றி, உடலை நலமுடன் செயல்பட வைக்கும்.

சிலருக்கு, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பு அதிகம் கலந்து, இரத்த அழுத்த பாதிப்புகள் உண்டாகலாம், அவர்களும் பச்சைப் பயிறை உணவில் சேர்த்து, பாதிப்புகள் நீங்கி, நிம்மதி அடையலாம்.

உடல் பருமன் தற்காலத்தில் அதிகம் மனிதர்களை பாதிக்கும் ஒரு உடல் வியாதியாகிவிட்டது. மேற்கத்திய உணவுகள், துரித உணவுகள் போன்ற நமது உணவு முறைக்கு ஒவ்வாத உணவு வகைகள் மற்றும் வேறு சில பாதிப்புகளாலும், உடல் பருமன் ஏற்படக்கூடும்.

இந்த உடல் பருமன் அவர்களின் அன்றாடப் பணிகளை பாதிக்கும் அளவிற்கு வந்த பின், இந்த உடல் பாதிப்பை குறைக்க மிகவும் முயற்சி செய்வர். அவர்கள் எல்லாம், தினமும் வேக வைத்த பச்சைப் பயிறை இரு வேளைகள் சாப்பிட்டு வந்தால், அதிக உடல் எடை காணாமல் போய், இயல்பான உடல் எடையுடன் மகிழ்ச்சியாக காணப்படுவர்.

பச்சைப் பயிறை வேக வைத்து, சிறிது மிளகு, இந்துப்பு சேர்த்து, சிறிது பச்சை மிளகாய், கடுகு, ஜீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளித்து சிறிது பெருங்காயத்தூள் தூவி, நன்கு கிளறி, மேலே, தேங்காய் துருவல், கறி வேப்பிலை கலந்து பரிமாற சுவையான, பயிறு சுண்டல் ரெடி, மாலை நேரத்தில், அனைவரும் விரும்பிச் சாப்பிடும், சிறந்த ஊட்டச்சத்துமிக்க பதார்த்தமாகும், இந்த பயிறு சுண்டல்.

பச்சைப் பயிறை வேக வைத்து, வெல்லம் சேர்த்து பாயசம் போல வைத்து பருகலாம், நல்ல சுவையான ஆரோக்கிய பானம் இது. வேக வைத்த பச்சைப் பயிறை கொண்டு, வடை, பக்கோடா போன்ற எண்ணையில் பொரிக்கும் உணவு வகைகள் செய்து சாப்பிடலாம். பச்சைப் பயிறு மாவை சற்றே வறுத்து, வெல்லம் நெய், ஏலக்காய் பொடி இவற்றை சேர்த்து, உருண்டையாகப் பிடித்துவைக்க, சுவையான பயிற்றம் பருப்பு உருண்டை தயார். இதைப் போல, பயிற்றம் பருப்பு குழம்பு மற்றும் பல உணவு வகைகள் செய்யலாம்.

தினமும் பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!!பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்...
05/07/2017

தினமும் பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!!

பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.

இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.

இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.

உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.

தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.

தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.

உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.

2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும். இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க இப்போதே இந்த மருத்துவ குணம் வாய்ந்த கற்கண்டை பயன்படுத்தி உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்.

Address

Coimbatore
Coimbatore
641024

Alerts

Be the first to know and let us send you an email when QubePix Health Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram