நிலத்தில் விழுந்த கோதுமை மணி

  • Home
  • India
  • Coimbatore
  • நிலத்தில் விழுந்த கோதுமை மணி

நிலத்தில் விழுந்த கோதுமை மணி கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம?
(256)

தேவனுடைய உதவியால் அவருடைய கனமகிமைக்காக தியாகமாய் கொடுத்தோர் பட்டியல் இங்கே பதிவிடப்படுகிறது.

உங்கள் ஊக்கமான ஜெபங்களுக்காக நன்றி
இந்த பகுதி தொடரும்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

நிலத்தில் விழுந்த கோதுமை மணிசாத்புரா: பீகாரின் அர்வால் மாவட்டத்தில் உள்ள சாத்புரா கிராமத்தில் பணிபுரியும் மிஷனரி போதகர் ...
15/07/2024

நிலத்தில் விழுந்த கோதுமை மணி

சாத்புரா: பீகாரின் அர்வால் மாவட்டத்தில் உள்ள சாத்புரா கிராமத்தில் பணிபுரியும் மிஷனரி போதகர் கார்த்திதாசன் சுஷில்குமாரின் மகன் நிலேஷ் (20 வயது) சுவிசேஷவிரோதிகளால் கொலை செய்யப்பட்டார்.
கொல்லப்பட்ட இளைஞன் போதகர் சுசீல்குமாரின் ஒரே மகன். வராண்டாவில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞனை பலர் சேர்ந்து அடித்து, இரு கைகளையும் முறித்த பின் கழுத்தில் துண்டு போட்டு கொலை செய்து, அருகில் உள்ள மூங்கிலில் கட்டி வைத்துள்ளனர். சம்பவத்தை அறிந்த போதகர் மற்றும் அவரது மனைவி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
https://www.facebook.com/photo/?fbid=895489692617439&set=a.609043544595390

29/01/2021

29-1-2021... ஓர் அவசர ஜெப குறிப்பு

பாகிஸ்தான் கிறிஸ்தவரான தபித்தா மஸியா மீது கொலைவெறி தாக்குதல். தான் கிறிஸ்தவர் என்றும் பொய் சொல்ல மாட்டேன் என்றும் எதன் மீதும் சத்தியம் செய்ய மாட்டேன் என் இயேசுவை விட்டு விலகுவதில்லை.. என்று துணிந்து சொன்ன தபித்தா வை கடுமையாக அடித்துள்ளனர்.

தபித்தா பாகிஸ்தானில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

யோவான் 16 “நீங்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப்போகாமல் இருப்பதற்காக இவற்றை நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன். 2 அவர்கள் உங்களை ஜெபக்கூடத்தைவிட்டு நீக்கிவிடுவார்கள்.+ சொல்லப்போனால், உங்களைக் கொலை செய்கிறவர்கள்+ கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்வதாக நினைத்துக்கொள்கிற காலம் வரும்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ் நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Amen
29/01/2021

Amen

கிறிஸ்தவர்களை நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என கதறினவர்களே.... இன்று பல  ஆயிரக்கணக்கான கொரோனா பாதித்தவர்களுக்கு கிறிஸ்த...
04/05/2020

கிறிஸ்தவர்களை நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என கதறினவர்களே.... இன்று பல ஆயிரக்கணக்கான கொரோனா பாதித்தவர்களுக்கு கிறிஸ்தவ மிஷ்னரிகள் கட்டின ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் அர்ப்பணிப்புடன் செயல் பட்டு வருகிறது.

கிறிஸ்தவர்கள் மருத்துவமனையில் மதமாற்றம் நடக்கிறது என்று மதவெறி ஏற்ற முயன்ற ஓநாய்கள்... இன்று அதே கோரிக்கையை வைத்து கிறிஸ்தவர்கள் கட்டின மருத்துவமனையில் யாரையும் சேர்க்க கூடாது என மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் அறிக்கை விட முடியுமா? 'ரொட்டி துண்டு க்கு மதம் மாறியவர்கள் ' என்று சூடு சொரனை இல்லாமல் கதறினவர்களே..... இன்று கிறிஸ்தவ மருத்துவமனைகளுக்கு சென்று உங்கள் மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி அவர்களை உங்கள் வீட்டில் வைத்து மருத்துவம் பார்க்க முடியுமா?

5 காசு கொடுக்காத மதவெறி கும்பல் தான் கிறிஸ்தவர்களை ஏளனமாக பேசி வருகிறது...

In a letter to Prime Minister Narendra Modi, the organisation offered all facilities in Christian hospitals across India for coronavirus treatment
https://www.moneycontrol.com/news/trends/health-trends/over-1000-christian-hospitals-across-india-available-for-covid-19-treatment-5077671.html

சாரங்கி ஒரிசாவை மையமாக கொண்ட பஜ்ரங்தல் என்ற மதவெறி கும்பல்களின் தலைவனாய் இருந்தவன். கிறிஸ்தவ ஊழியர் கிரகாம் ஸ்டைன்ஸ் மற்...
01/06/2019

சாரங்கி ஒரிசாவை மையமாக கொண்ட பஜ்ரங்தல் என்ற மதவெறி கும்பல்களின் தலைவனாய் இருந்தவன். கிறிஸ்தவ ஊழியர் கிரகாம் ஸ்டைன்ஸ் மற்றும் அவரின் இரு மகன்கள் கொல்லப்படுவதற்கு காரணமாய் இருந்த தாரா சிங் இந்த அமைப்பின் பின்னணியில் தான் செயல்பட்டு அனைவரையும் உயிரோடு எரித்தவன். இன்று சாரங்கி அமைச்சர் ஆகி விட்டார். பஜ்ரங்தல் என்ற மதவெறி கும்பல்களின் தலைவனாய் இருந்தவன் பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றுள்ளான்.

இவன் மீது சுமார் 7 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. மறைமுகமாய் பல கொலைகளை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. இப்படிப்பட்டவர்கள் நல்லவர்கள் என்று பெயர் எடுத்து மக்கள் மத்தியில் ரத்த வாடையோடு உலா வருகின்றனர். தொழு நோயாளிகளை கைகளால் அரவணைத்து மருந்து கொடுத்த கிறிஸ்தவ ஊழியர் கிரஹாமின் குடும்பத்தை வேரோடு சாய்க்க இவர் கண்ட கனவு வீணானது உங்கள் அனைவர்க்கும் நினைவிருக்கும் என நம்புகிறேன்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

பாரத்தோடு உங்கள் ஜெபத்திற்காக எரித்திரியா தேசத்தில் ஓர் இடத்தில் கூடி ஜெபித்ததற்காக 141 கிறிஸ்தவர்கள் சிறையில் வைக்கப்பட...
31/05/2019

பாரத்தோடு உங்கள் ஜெபத்திற்காக

எரித்திரியா தேசத்தில் ஓர் இடத்தில் கூடி ஜெபித்ததற்காக 141 கிறிஸ்தவர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்று வரை அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதில் 104
பெண்கள், 23 ஆண்கள் மற்றும் 14 குழந்தைகள் அடங்குவர். இவர்களுக்காக ஜெபிக்க கேட்டு கொண்டதனால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் ஜெபங்களில் இவர்களின் விடுதலைக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.

Our field has asked us to pray with 141 Christians arrested in Eritrea in the capital city of Asmara. On Friday, May 10, security agents arrested 141 Christians, mostly women. Police rounded up 104 adult females, 23 men and 14 minors from the Mai Temenai area of the city.

As far as we know, none of them have been charged. However, concern is growing over the well-being of the children and the elderly in the group.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குசில் நகர் பகுதியில் உள்ள ஹிமாலயன் மிஷன் சார்பாக நடந்து வரும் சபையில் கடுமையான தாக்குதல்....
29/05/2019

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குசில் நகர் பகுதியில் உள்ள ஹிமாலயன் மிஷன் சார்பாக நடந்து வரும் சபையில் கடுமையான தாக்குதல். பாஜக தூண்டுதல் பேரில் போலீசார் அராஜகம். போதகர் கைது. ஜெபித்து கொள்ளுங்கள்

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

பாரத்தோடு ஜெபிக்க ஓர் அழைப்பு. சராசரியாக ஒவ்வொரு நாளும் 10 முதல் 11 கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகின்றனர். ஒவ்வொரு இரண்டரை மண...
27/05/2019

பாரத்தோடு ஜெபிக்க ஓர் அழைப்பு.

சராசரியாக ஒவ்வொரு நாளும் 10 முதல் 11 கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகின்றனர். ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கும் எதாவது ஓர் இடத்தில் ஓர் கிறிஸ்தவன் இயேசுவை ஏற்று கொண்ட விசுவாசத்திர்க்காக கொல்லப்படுகிறான். இந்த மரண நிகழ்வுகள் நீங்கள் இதை வாசித்து கொண்டிருக்கும் போதே எங்காவது நிகழ்திருக்கலாம்.

இந்த விசுவாச போராட்டத்தில் பல குடும்பங்கள் இன்றும் வாழ்ந்து வருகிறன்றன. இவர்களுக்காக ஜெபிக்க உங்களால் முடியும் என்றால் உங்கள் குடும்ப ஜெபங்களில், சபைகளில் தினமும் கூடி ஜெபியுங்கள். இந்த பிசாசு உங்கள் வீட்டிலும் நுழைந்து விடாதபடி எச்சரிக்கையாய் இருங்கள்.

1 கொரிந்தியர் 12:26. ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்;

உங்கள் அவயவம் உபத்திரவப்படுபவர்களுக்காக என்றைகாவது சோர்ந்தது உண்டா? ஜெபித்தது உண்டா? பிறகு நாம் எப்படி கிறிஸ்துவுக்குள் ஒரே அவயவமாய் இருப்பது? நாம் கிறிஸ்துவுக்குள் ஒன்று என்றால் ஜெபியுங்கள், இழந்து போன குடும்பங்களுக்கு உதவுங்கள். உங்களை தேடி இவர்கள் வருவார்கள் என்று காத்திருக்கும் சோம்பேறிகளை போல அல்லாமல், தேடி சென்று உதவுங்கள்.

தேவன் கொடுத்த ஓர் வேதாகம உவமையை உங்களுக்கு தருகிறேன்....

மத்தேயு 25: 37. அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?

38. எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக்கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?
39. எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
40. அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

ஆதலால் நீங்களும் ஜெபியுங்கள், சிறைபட்டு போனவர்களை சந்தியுங்கள், உங்களால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுங்கள். 'தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்களுக்கு' நீங்கள் எதையும் கொடுக்க தேவையில்லை. உங்கள் ஊக்கமான ஜெபங்களில் எங்களை தாங்குங்கள். சில வலைத்தளங்களை தருகிறேன். நீங்கள் அங்கு செண்டு மற்றவர்களுக்கு உதவலாம். அல்லது நீங்களே முன் வந்து ஓர் ஊழியத்தை ஆரம்பித்து அல்லது சபையோடு இனைந்து இப்படிப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு உதவி செய்யலாம். தேவன் உங்கள் மூலம் மகிமைப்படுவாராக.

http://www.opendoorsusa.org/christian-persecution/
http://www.persecution.org/
http://www.prisoneralert.com/vompw_prisoners.html
http://shoebat.com/

இன்னும் பல வலைத்தளங்கள் உண்டு. உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.

வெளி 13:10 சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.

மேலும் இந்த தகவல்களின் உண்மைகளை அறிந்து கொள்ள
https://www.opendoorsusa.org/christian-persecution/

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

பாவத்தை குறித்து தேவன் உங்களை எச்சரிக்கிறார்.எது பாவம்? நிச்சயம் நான் பரலோகம் செல்வேனா? உங்கள் கேள்விகளுக்கு இங்கே பதில்...
27/05/2019

பாவத்தை குறித்து தேவன் உங்களை எச்சரிக்கிறார்.

எது பாவம்? நிச்சயம் நான் பரலோகம் செல்வேனா? உங்கள் கேள்விகளுக்கு இங்கே பதில்

பாவம்... இது கிறிஸ்தவர்கள் பலவாறாக எடுத்துரைக்கும் ஓர் முக்கியமான பதம். தவறு செய்யாமல் யாரும் பிறக்க முடியாது என்பது நமக்கு தெரிந்த ஒன்று. இதை ஓர் சிறு குழந்தையிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். சிறு குழந்தை பேச ஆரம்பித்தவுடன் செய்யும் காரியம் நமக்கு தெரியும். தவறு செய்யும் போது அதட்டினால் அடம் பிடிக்கும்... சிறிது காலத்தில் பெற்றோருக்கு தெரியாமல் அதே காரியத்தை செய்யும், பிறகு பொய் சொல்ல ஆரம்பிக்கும். யாரும் சிறு குழந்தைக்கு இவைகளை கற்று தருவதில்லை. தாய் தன் பிள்ளையை பாவத்தில் கர்ப்பந்தரிக்கிறாள் என்று வேதாகமம் நமக்கு கற்று தருகிறது.

எது பாவம் என்று அடுத்த கேள்வி? இதன் விடையோ எளிது. நம் தெய்வம் மிகவும் பரிசுத்தம் உள்ளவர். அவரிடம் பாவம் இல்லை. உள்ளத்தில் பாவமான சிந்தனைகளை வைத்துகொண்டு அவரை தரிசிக்கவும் முடியாது. பரிசுத்தமான வாழ்க்கை என்பது பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை. "கடவுள் என்று ஒருவர் இருந்தால் என்னவெல்லாம் அவருக்கு பிடிக்காதோ" அதை செய்யாமல் இருந்தாலே நிச்சயம் பாவம் செய்ய மாட்டோம்.

பரிசுத்த வேதாகமத்தில் பாவத்தை தேவன் கடுமையாக எதிர்க்கிறார். சிறிய பாவம், பெரிய பாவம் என்று கிடையாது. பாவத்திற்கு ஒரே தண்டனை தான். அது "நித்திய மரணம்". உங்களுக்கு தவறான காரியத்தை கொடுத்து விட்டு சோதிப்பவர் தெய்வமாய் இருக்க முடியாது. தீயில் நிற்க வைத்துவிட்டு "சுடுகிறதா?" என்று கேள்வி கேட்டபது எவ்வளவு முட்டாள் தனமான காரியம். நம்மிடம் உள்ள குறைகளை வைத்து அதை வேண்டுமென்றே தேவன் சோதிக்கமாட்டார்.

சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல (யாக்கோபு 1:13). ஆனால் இந்த பாவத்தை குறித்து தேவன் நமக்கு எச்சரிக்கையாய் இருக்க அறிவை கொடுத்திருக்கிறார். "தேவன் காப்பாற்றுவார்" என்று மலையில் மேல் இருந்து குதிக்க முடியுமா? முட்டாள்களை பார்த்து தேவன் வருத்தப்படத்தான் முடியும். மிருகங்களுக்கு இருக்கும் அறிவை விட சற்று அதிகமாக தேவன் மனிதனுக்கு கொடுத்திருக்கிறார். பலரும் இதை பயன்படுத்துவதில்லை.

நம்மை சுற்றிலும் பாவம் பெருகி இருக்கிறது. ஆடை குறைத்து மற்றவர்களை கவர்ந்திழுக்கும் பெண்கள், எவ்வளவு ஆடை அணிந்திருந்தாலும் பெண்களை இச்சையுடன் பார்க்கும் ஆண்கள், இருட்டறைகளில் பாவத்தை பெருக்கி கொண்டிருக்கும் வாலிப உள்ளங்கள், சிந்தனையில் பாவத்தை சாபமாய் மாற்றி கொண்டிருக்கும் இளம் உள்ளங்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இது தவறில்லை என்று போதிக்கவும் ஓர் மிகபெரிய கூட்டம் உண்டு.

இந்த பாவமான வாழ்க்கையில் இருந்து தப்பிக்க தேவன் ஓர் வழியை யாக்கோபு அதிகாரத்தில் கூறியுள்ளார். பாவம் எப்படி உள்ளே நுழைகிறது என்று புரிந்து கொண்டால் அந்த வாசலை நீங்கள் அடைத்துவிட முடியும்.

"யாக்கோபு 1:14. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்". இந்த வசனத்தில் "அவனவனுக்கு" என்பதின் மூலம் ஒவ்வொருவனுக்கும் வித்தியாசமான இச்சைகள் வாழ்வில் உண்டு என்பதை புரிந்து கொள்ளலாம். உங்களை போலவே உங்கள் பிள்ளைகளும் இச்சிக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் பாவ வேர்கள் வேறு விதமாய் முளைத்தேளும்பும்.

யாக்கோபு 1:14 கவனமாய் படியுங்கள். முதலாவது "இச்சையினால்" இழுக்கப்படுகிறான். ரோட்டில் நடந்து கொண்டிருக்கும் போது ஓர் கவர்ச்சியான படத்தை தவறுதலாக பார்க்க நேரிடுகிறது. அது பாவம் அல்ல. உடனே மனம் உடைந்து விடாதீர்கள். ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த படத்தை பார்க்க மனதில் தோன்றி பின் சிந்தனையில் முடிவு செய்து அதன் பிறகு திரும்பி பார்ப்பீர்கள் என்றால் இச்சையானது பிறக்கும். முதலில் பார்த்தது தவறு அல்ல, அது எதிர்பாராமல் நிகழ்ந்தது. ஆனால் இரண்டாம் முறை முடிவு செய்து பார்த்தது பாவத்தின் ஆரம்பம். இப்பொழுது யாக்கோபு 1:15ல் சொல்லப்பட்டது போல "இழுக்கப்படுகிரீர்கள்".

இப்படி பட்ட காட்சிகள் பலரது சிந்தனையை விட்டு நீங்காது. இரவு பொழுதுகளில் வரும் சில சினிமா பாடல்கள் மிகவும் கேவலமாக பெண்களை உடலை காட்டுகின்றனர். பலருக்கு இப்படிப்பட்ட பாடல்கள் பற்றி நன்றாய் தெரிந்தும் மீண்டும் மீண்டும் அதை பார்ப்பர். அவ்வாறு பாவத்திர்க்குள் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க ஆரம்பிக்கின்றனர். அதன் பிறகு தான் நீங்கள் உங்களை நீங்களே சோதனைகுட்படுத்தப்படுகிரீர்கள். பலர் "தேவனே ஏன் என்னை சோதிக்கிறீர்" என்று கடவுளையே கேள்வி கேட்பர். சிலர் "தேவனே, இந்த இருட்டறை சுகத்தை/புகை பழக்கம்/ குடி/ஆன் பெண் காதலை என்னால் விட முடியவில்லை" "எல்லாரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன்" என்று தேவனை சமாதானம் செய்ய முயல்கின்றனர்.

யாக்கோபு 1:15. பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

சோதிக்கப்படும் போது நீங்கள் பாவ உணர்வடைந்து மனம் மாறாவிட்டால் அடுத்ததாக நிகழ்வது மிகக் கொடூரமாய் இருக்கும். இச்சையானது கர்ப்பந்தரித்து". கர்ப்பம் தரித்து என்றால்???? ஓர் பெண்ணிற்கு எப்போது கர்ப்பம் தரிக்கும் என்று நமக்கு நன்றாய் தெரியும். ஆண் பெண் இணையும் போது கர்ப்பம் தரிக்கிறாள். தேவன் "கர்ப்பம்" என்ற வார்த்தையை இங்கே பயன்படுத்தியமைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரிகிறதா? அதவாது, நீங்கள் பாவத்தை அனுபவிக்கும் போது சாத்தானோடு உடல் உறவு வைத்து கொள்வதற்கு சமானம். அப்படி உடல் உறவு கொள்ளும் போது நீங்கள் கர்ப்பம் அடைகிறீர்கள். அதாவது பாவத்தை சுமக்குகிரீர்கள். இந்த சுமை மேலும் மேலும் அதிகரிக்கும்.

இந்த கர்ப்பம் எப்போது களையும் தெரியுமா? நீங்கள் மரணத்தை சந்திக்கும் போது. மரணம் என்றால் சரீர மரணம் அல்ல. உங்கள் ஆத்துமா மரணம். உங்கள் கண்கள் பிடுங்கப்பட்ட நிலைமையில் யார் என்ன சொன்னாலும் "அவர்கள் நமக்கு எதிரானவர்கள்" என்று நினைக்க வைத்து உங்களை பாவ நரகத்தில் சுகத்தை அனுபவிக்க வைத்து கொல்லும். நித்திய நித்தியமாய் மரணத்தை சுவாசிக்க செய்யும்.

அன்பு தம்பி தங்கையே, உன்னுடைய பாவத்தின் வீரியத்தை அறிந்து கொண்டாயா? இது என்னுடைய சொந்த கருத்து அல்ல. வேதாகம வசனத்தை தெளிவாக பார்த்திருக்கிறோம். பாவம் செய்து கொண்டிருக்கிறாயா? வலைத்தளங்களில் ஆபாசம் இழுக்கிராதா? பள்ளி கல்லூரிகளில் ஆபாசம் அசை போட சொல்கிறதா? தொலைகாட்சி நிகழ்ச்சி பாக்கும் போது கவர்ச்சியான இடங்களில் கண்கள் விரிந்து ரிமோட் அங்கேயே நிற்கிறதா? தனிமையான அறையில் உன் கைகள் பாவத்தில் உச்சத்திற்கு செல்ல துடிக்கிறதா? நண்பர்களோடு ஒரு வேஷம், வீட்டில் ஓர் வேஷம், ஆலயத்தில் ஓர் வேஷம் என்று ஓர் நடிகனாய் வாழ்கிறாயா? உன் பிதா யார்? கர்த்தரா? சாத்தானா?
பெண்களே நீங்கள் அழகான ஆடை அணிவதை குறை கூற வரவில்லை. ஆனால் நீங்கள் ஆடை அணியும் போது யாரை மகிமைப்படுத்த அணிகிறீர்கள்?. பல பெண்கள் ஆடை அணியும் போது "பார்க்கும் ஆண்களுக்கு அழகாய் இருக்க வேண்டும்" என்று அணிகிறார்கள், சிலரோ "மயக்க வேண்டும்" என்று அணிகிறார்கள். நீங்கள் எந்த வகை? நீங்கள் ஒருவரை பார்க்க செல்ல உடை அணியும் போது உங்கள் நினைவுகள் என்ன? உங்களுக்கும் தேவனுக்கும் நிச்சயமாய் இது தெரியும். பாவத்தை பணம் கொடுத்து வாங்காதீர்கள்.

ஓர் பெண்ணை இச்சையோடு பார்ப்பது தவறானது. அப்படி பார்க்கிறவன் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று என்று வேதாகமம் கடுமையான எச்சரிப்புகள் கொடுக்கிறது. ஆனால் அதே வேளையில் ஓர் ஆணை பாவம் செய்ய தூண்டும் விதமாக ஆடை அணிவதும் தவறான செயல் ஆகும். சிந்தனையில் எழும் பாவமான காரியங்கள் நம்மை மட்டும் அல்ல. நம்மை சுற்றியுள்ளவர்களையும் சாம்பலாக்கி விடும்.

உங்களுக்கு ஓர் காரியம் மிகவும் பிடித்திருக்கலாம். வேதாகமத்தின் அடிப்படையில் அவை நல்லதா என்று சோதித்தறிந்து அதை செய்யுங்கள். நம்மையும் நம் பரிசுத்த தேவனையும் பிரிக்கும் எந்த ஓர் காரியத்தையும் நம் வாழ்க்கையில் அனுமதிக்காமல் இருப்பது சிறந்தது.

ஏசாயா 59:2. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது;

நம் சிந்தனைகள், செயல்கள் நம் கர்த்தருக்கு வெளியரங்கமான தெரியும். நம் பாவமான காரியங்களை அவர் பார்த்துகொண்டிருக்க மாட்டார். நிச்சயம் அதற்குரிய தண்டனை நம்மை தேடி வரும்.

பாவத்தின் தண்டனையில் இருந்து மீட்பதற்க்கா இயேசு வந்தார்? அப்படி என்றால் ஏன் மக்கள் இன்னும் பாவம் செய்து கொண்டிருப்பாருக்கிரார்கள்?. இயேசு அனைத்து மக்களின் பாவங்களையும் மன்னித்து விட்டார் என்றால் மனிதன் பாவம் செய்தாலும் பரலோகம் செல்வானா? என்று பலரும் என்னிடம் கேள்வி கேட்பது உண்டு.

சில உண்மைகளை இங்கே வேத வசனங்களின் அடிப்படையில் ஆராய்வோம்.
1)பாவத்தின் தண்டனையில் இருந்து மீட்பதற்க்கா இயேசு வந்தார்?

விடை: ஆம்.. பாவத்தின் பலன் நரகம். வெளிப்படுத்தல் 21:8. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

இங்கே நான்கு விதமான பாவங்களை உங்கள் முன் வைக்கிறேன், பயப்படுகிறவர்கள் (மனிதருக்கு, வாழ்க்கைக்கு, எதிர்காலத்திற்கு பயந்து இன்று மனிதன் பல மறைமுக பாவங்களில் ஈடுப்பட்டு வருகிறான்) அவிசுவாசிகள் (இயேசுவை தெய்வம் என்று நம்பாதவர்கள், மறுமையில் நமிக்கை இல்லாதவர்கள்) விபசாரக்காரர் (சிந்தனையில், செயல்களில், பார்வையில், தனிப்பட்ட விதங்களில் பாவத்தில் ஈடுபடுவோர்) பொய்யர் (பொய் சொல்லும் அனைவரும்) நரகத்தில் தள்ளப்படுவர் என்று வேதம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

ஆதலால் பாவத்தின் பலன் மரணம்... நித்திய மரணம்... இதில் எந்த ஓர் மனிதனும் தப்ப முடியாது

2) அப்படி என்றால் ஏன் மக்கள் இன்னும் பாவம் செய்து கொண்டிருப்பாருக்கிரார்கள்?

தேவன் சிலுவையின் மரணத்தின் மூலம் நமக்கு பாவ மன்னிப்பின் நிச்சயத்தை வைத்திருக்கிறார். இதை நாம் தேவனின் கிருபை என்கிறோம். கிருபை என்பது கிடைக்க கூடாத ஒருவருக்கு தேவன் கொடுக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம். இந்த கிருபை இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதருக்கும் உள்ளது.

தீத்து 2:11. ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது

இதில் தேவனின் கிருபை நம் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ள ஒன்று. அதை பெற்று கொள்ள நாம் முன் வர வேண்டும். பாவமான வாழ்க்கையை விட்டு வரமுடியாதபடி அதின் இன்பத்தில் திளைத்திருக்கும் யாரும் இந்த கிருபையை பெற்று கொள்ள முடியாது. உதாரணமாக தகப்பனின், தாயின் அன்பிருந்தும் பலர் இன்று காதல் என்ற போர்வையில் வீதிகளில் உலா வந்து இருட்டில் சுகம் தேடி அலைகிறார்கள் அல்லவா? அதை போல பாவம் உண்மையான தெய்வ அன்பை மனிதர்களின் கண்களில் இருந்து மறைத்து விட்டது.

3)இயேசு அனைத்து மக்களின் பாவங்களையும் மன்னித்து விட்டார் என்றால் மனிதன் பாவம் செய்தாலும் பரலோகம் செல்வானா?

இல்லை... பாவத்தோடு தேவனிடம் செல்ல முடியாது. பாவ சிந்தனையோடு, வாழ்க்கையோடு நாம் ஏறெடுக்கும் ஜெபங்கள் வீணாய் போகும். ஆனால் பாவ மன்னிப்பு என்பது நாம் தேவனை விசுவாசிக்கும் போது நமக்கு உடனே கிடைக்கும் ஓர் ஆசீர்வாதம்.. இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் மூடும். ரோமர் 10:13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்

நீங்கள் இயேசு கிறிஸ்து என் பாவத்தை மன்னித்து விட்டார் என்று நிச்சயமாய் நம்பினீர்கள் என்றால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும். எபேசியர் 2:8. "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" என்கிற வசனம் தான் இதற்க்கு ஆதாரம். கிருபை என்பது நமக்கு வைக்கப்பட்டுள்ள ஒன்று. ஆனால் நாம் அதை விசுவாசிக்காவிட்டால் நமக்குள் அந்த கிருபை முழுமை பெறாது. இந்த பாவ மன்னிப்பு எந்த ஓர் செயலினாலும், உங்கள் கிரியைகளினாலும் வராது. தேவனை தேடி அவரை உங்கள் சொந்த ரட்சகராக ஏற்று கொண்டால் மட்டுமே பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று கொள்ள முடியும்.

ஆதலால் பாவத்தோடு பரலோகம் போக முடியாது. நீங்கள் சபையில் முக்கிய உறுப்பினராக இருக்கலாம், இசை கருவியை வாசிக்கலாம், பாடும் வரம் பெற்றிருக்கலாம், ஊழியம் செய்யலாம், பணத்தை வாரி கொடுக்கலாம். ஆனால் இது பரலோகம் செல்லும் ஓர் துருப்பு சீட்டு அல்ல. இயேசுவை உண்மையாய் விசுவாசித்து வேதாகமத்தில் தேவன் சொல்லி இருக்கிறபடி வாழ வேண்டும்.

எசேக்கியல் 18:20. பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.

எனக்கு அன்பானவர்களே... இதனை மனதில் வைத்துதான் பாவத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று வேதம் நமக்கு கற்று கொடுக்கிறது. பாவத்தோடு வாழ்வது சாத்தானோடு திருமண உறவாடுவதற்கு சமம். எச்சரிக்கையாய் இருப்போம்.

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லலாம். ஒரு ஆத்துமா இதன் மூலம் ரட்சிக்கப்பட்டால் தேவனின் நாமம் மகிமைப்படும் அல்லவா.. ???

பாவத்தை குறித்த உங்கள் சந்தேகங்களை எங்களுக்கு எழுத மறவாதீர்கள். பரிசுத்த வேதாகமத்தை வாசித்து பாவத்தை குறித்து தெளிவு பெறுங்கள்.

பரிசுத்த வேதாகமம்
உங்களை பாவத்தில் இருந்து பிரிக்கும்
அல்லவெனில்
பாவம்
உங்களை பரிசுத்த வேதாகமத்தில் இருந்து பிரிக்கும்
முதன்முதலாய் தவறுவது பாவம் அல்ல
முடிவெடுத்து தவறுவது
காசு கொடுக்காமல்
சாத்தானோடு உடலுறவு கொள்வதற்கு சமம்

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உண்டு. நான் தினமும் பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கிறேன். இது அவர் கொடுத்த வெற்றி என்று உறுதியா...
24/05/2019

எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உண்டு. நான் தினமும் பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கிறேன். இது அவர் கொடுத்த வெற்றி என்று உறுதியாய் நம்புகிறேன். என்னுடையதல்ல. நான் அவர்களை (காங்கிரஸ்) மன்னிக்கிறேன். மன்னித்து விட்டேன். - ஜெகன் மோகன்

ஜெகன் மோகன் ரெட்டி ஏன் காங்கிரஸ் என்ற ஓர் மாபெரும் இயக்கத்தின் பெயரை தன் கட்சியில் பெயரில் வைத்திருக்கிறார் தெரியுமா? ஏன் நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறார் என்பதற்கு இந்த விளக்கம்.

2009 ல் ஆந்திர பிரதேசத்தின் காங்கிரஸ் சார்பாக முதல் அமைச்சராக இருத்தவர் Y. S. Rajashekhara Reddy . காங்கிரஸ் இங்கு செல்வாக்கு சரிவை சந்தித்த போது குழப்பமான சூழ்நிலையில் இருந்த போது சாதாரண MLA வாக இருந்த Y. S. Rajashekhara Reddy முதல் அமைச்சராக்கப்பட்டார். இவர் தலைமையில் இரண்டாவது முறையாக காங்கிரஸ் ஆட்சியை பெருமான்மையோடு பிடித்தது. இவர் உயிருடன் இருந்த போது இப்போது உள்ள தெலுங்கானாவை பற்றி ஒருவரும் குரல் எழுப்பவில்லை. அவ்வளவு துணிவும் இல்லை. தனி பெரும் தலைவராக உருவெடுத்தார் Y. S. Rajashekhara Reddy . இவர்கள் பாரம்பரியமாக மிகப்பெரிய பணக்கார குடும்பம்.

இவரின் குடும்பம் ஓர் பக்தியுள்ள குடும்பம். இரவு கண்டிப்பாக குடும்ப ஜெபம் இருக்குமாம். அதிகாலையில் பரிசுத்த வேதாகமம் வாசித்து விட்டு தான் குடும்ப உறுப்பினர்கள் வேலைக்கு செல்வார்கள். Y. S. Rajashekhara Reddy அவர்களின் மனைவி மிகவும் கண்டிப்பான கிறிஸ்தவ மார்க்கத்தை பின்பற்றும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.

2009 ல் ஓர் வானவூர்தி விபத்தில் Y. S. Rajashekhara Reddy அவர்கள் காலமானார். இது யாரும் எதிர்பாராத ஓர் மரணம். இதில் காங்கிரசில் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி வந்தது. Y. S. Rajashekhara Reddy அவர்களின் மகனான ஜெகன் மோகன் அவர்கள் முதல்வராக்க அனைவரும் ஒன்று திரண்டனர். ஆனால் அப்பொழுது காங்கிரஸ் ல் இருந்த சில மூத்த அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு முதல் அமைச்சர் பதவியை பறித்து கொண்டனர். இது ஜெகனுக்கும் காங்கிரசுக்கும் விரிசல் உண்டாக்கியது .

Y. S. Rajashekhara Reddy யின் தீவிர தொண்டரான ஓர் வழக்கறிஞ்சர் Y. S. Rajashekhara Reddy பெயரில் கட்சியை ஆரம்பித்தார். அப்பொழுதும் ஜெகன் காங்கிரஸ் தனக்கு கை கொடுக்கும் என்று நம்பி இருந்தார். அதன் பிறகு YSR காங்கிரசில் 2010 ல் இணைத்தார். இவருடன் ஆந்திராவின் அதிக மூத்த அரசியல்வாதிகள் YSR காங்கிரசில் இணைந்தனர். இதை காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை.

2012 ல் காங்கிரஸ் ஆட்சியோ ஜெகன் திருட்டு தனமாய் பணம் சம்பாதிக்கிறார் என்று சொல்லி அவரை சிறையில் தள்ளி அவமானப்படுத்தியது. https://www.ndtv.com/india-news/jagan-mohan-reddy-arrested-by-cbi-after-three-days-of-questioning-in-assets-case-485148

இது மிகப்பெரிய மதிப்புடன் இருந்த ஜெகன் குடும்பத்திற்கு மிகுந்த தலை குனிவை ஏற்படுத்தியது. ஆனால் CBI இந்த குற்றசாட்டை நிரூபிக்க முடியாமல் விடுதலை செய்தது.

சிறையில் இருந்து வந்தவுடன் கொடுத்த பேட்டியில் தான் காங்கிரசை மன்னித்து விட்டதாக கூறினார். இயேசு கிறிஸ்து தனக்கு மன்னிக்க கற்று கொடுத்திருக்கிறார். ஆதலால் நான் மன்னிக்கிறேன் என்று தைரியமாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்தார். இது மக்கள் மத்தியில் அவருக்கு நன் மதிப்பை உருவாக்கியது.

1 பேதுரு 6. ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.7. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

என்ற பரிசுத்த வேத வாக்கியம் நிறைவேறியது அல்லவா?

நான் இப்படியும் யோசித்து பார்க்கிறேன். ஏன் காங்கிரஸ் இந்த தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும்? மீண்டும் எதிர்க்கட்சியாக இருப்பதற்கு கூட எண்ணிக்கைகள் இல்லாமல் போய் விட்டதாய்? அப்பொழுதுதான் இந்த வசனம் நினைவிற்கு வந்தது..

உபாகமம் 28:7 உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்குமுன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.

தேவனுடைய மனிதர்களுக்கு விரோதமாய் எவன் எலும்பினாலும் எத்தகைய ஆட்சியை கையில் வைத்திருந்தாலும் தேவன் அவர்களை அழித்து போடுவார். இது பாரதீய ஜனதா கட்சிக்கும் நிச்சயம் பொருந்தும். இன்று ஒரு வேலை அவர்கள் உச்சத்தில் இருக்கலாம். ஆனால் தேவனுடைய பிள்ளைகளுக்கு தொடர்ந்து தீங்கிழைக்க நினைத்தால் என் தேவன் அவர்களை அழிப்பார். உன் கண்மணியை தொடுகிறவன் என் கண்மணியை தொடுகிறான் என்ற வசனத்தின் அர்த்தத்தை அவர்களும் புரிந்து கொள்ளும் நாள் வரும்.

சங்கீதம் 23:5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

பாரத தேர்தல் 2019 தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள் சார்பாக வெற்றி பெற்ற பாரத பிரதமர் திரு மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள். தே...
23/05/2019

பாரத தேர்தல் 2019

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள் சார்பாக வெற்றி பெற்ற பாரத பிரதமர் திரு மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள். தேவன் உங்களை வழிநடத்துவாராக.

ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

இதுவே உண்மை என்று உண்மையாய் இந்த தேர்தலுக்காக ஜெபித்த தேவனுடைய சீஷர்களுக்கு நன்றாய் தெரியும்.
தேவனுடைய திட்டத்தை உணர்தவனுக்கு இந்த தேர்தல் நம்பிக்கையைத்தான் கொடுத்திருக்கிறது

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Please pray for Pr. Sunil kumar CNI Church Mainpuri Uttar Pradesh yesterday middle night fanatic peoples come in his hou...
04/05/2019

Please pray for Pr. Sunil kumar CNI Church Mainpuri Uttar Pradesh yesterday middle night fanatic peoples come in his house and beaten him and family members by naif now in Saifai hospital but in serious condition please pray for them.

Address

Sanganoor Main Road
Coimbatore
641027

Alerts

Be the first to know and let us send you an email when நிலத்தில் விழுந்த கோதுமை மணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to நிலத்தில் விழுந்த கோதுமை மணி:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram