Sex and Astrology

Sex and Astrology Consultant. Spritual Psychology.

27/07/2024

ஒருவர் காதல் வயப்பட வேண்டும் என்றால் ஒருவர் மீது காதல் கவர்ச்சியை ஏற்படுத்துகின்ற சுக்கிரனும் மனதை இயக்குகின்ற சந்திரனும் மிக முக்கியமான காரணிகளாக அமையும். இது தான் சாதாரண ஜோதிட அடிப்படை. இந்த இரண்டு கிரகங்களே ஒருவர் மீது காதல் ஏற்பட காரணமாக இருக்கிறது. ஆனால் அந்த காதல் சுகமானதாகவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும் என்றால் அவரின் ஜாதகத்தில் செவ்வாய் என்ன நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். செவ்வாய் வீரத்திற்கு உரிய கிரகம். அதே சமயம் காதலிலும் செக்ஸ் உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துவதில் மிக முக்கிய பங்கு செவ்வாய்க்கு உண்டு. ஆண் பெண் இருவர் உடலிலும் காதல் வேகத்தை ஏற்படுத்தும் கிரகம் செவ்வாய். ஆண்களின் ஆண்மைக்கு காரணமான டெஸ்டோடிரான் ஹார்மோனுக்கும் பெண்களின் பெண்மைக்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கும் காரணமான கிரகம் செவ்வாய். இதனால் தாம்பத்ய உறவில் வீரியத்தையும் வேகத்தையும் தரும் கிரகம்.

சமீப காலத்தில் காதல் என்ற ஒற்றைவார்த்தை மாறிப்போய் LUST...CRUSH...BESTY என்று பல வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. ஆனால் அடிப்படை ஒன்றுதான். அன்போடு காமம் கலக்கும் போது அது காதலாக மாறுகிறது. காமக் கலந்த அன்பு தம்பத்யத்தின் துவக்கமாக இருக்கும்.

பெண்களின் செக்ஸ் ஆசைகள் மற்றும் தேவைகளை பொருத்தவரை அவர்களின் ஜென்ம ஜாதகத்தில் செவ்வாவாயின் நிலை பணிரெண்டாம் பாவமான தாம்பத்ய ஸ்தானம் , நட்சத்திர யோணியின் தன்மை மற்றும் நால்வகை பெண்களில் அவள் எந்த இனத்தை சார்ந்தவள் என்ற நான்கு காரணிகளை கொண்டு அறிந்துகொள்ளலாம்.

27/07/2024

ஜோதிடத்தில் எப்படி செக்ஸ் அல்லது செக்ஸில் என்ன ஜோதிடம் இருக்கு என்று தான் எல்லோருக்கும் நினைக்க தோன்றும். ஆனால் காதல் மற்றும் திருமனவாழ்வில் வரும் அத்தனை பாதிப்புகளும் தாம்பத்ய வாழ்வு எனப்படும் செக்ஸ் வாழ்க்கையினால் தான் ஏற்படுகிறது என்பது ஆன்மீகம் மற்றும் உளவியல் இரண்டும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. அந்த தாம்பத்ய வாழ்க்கைக்கு ஜோதிடம் எப்படி உதவுகிறது அல்லது பாதிக்கிறது என்பது தான் இந்த பதிவின் மைய கருத்து.

ஒரு பெண்ணோ ஆணோ காதல் வாழ்க்கைக்கு தகுதியானவரா அல்லது காதலை அவர் காதலை சீரியாஸாக எடுத்துக்கொள்பவரா அல்லது மேம்போக்காக கடந்து செல்பவரா என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். ஒருவர் பேசுவதை வைத்து எதையும் கணிக்கவோ அல்லது முடிவு செய்யவோ முடியாது.

ஆனால் அவரின் கிரக நிலைகளை கொண்டு அவரின் நடவடிக்கைகள் அல்லது மன நிலை மற்றும் எண்ண ஓட்டம் எப்படி இருக்கும் என்பதை கணித்து விட முடியும். ஒருவரின் உடல் மொழிகள் மற்றும் நடவடிக்கைகளை கொண்டு அவரின் ஆண்மை திறம் செக்ஸ் ஒரியண்டேஷன் என்ன என்பதை கணித்து விட முடியும்.

வாத்ஸாயனரும் கொக்கோக முனிவரும் அபிஷ்ட வரதரும் எழுதி வைத்த கிரந்தங்களின் அடிப்பரையிலும் கடந்த முப்பது ஆண்டுகள் ஜோதிட துறையில் கிடைத்த அனுபவம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை சந்தித்து அதன் மூலம் கிடைத்த தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் ஒவ்வொருவரின் காதல் மற்றும் திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவர்களின் ஜாதக கிரக நிலைகளோடு பொருத்தி பார்த்ததன் அடிப்படையில் இந்த பதிவுகள் எழுதப்படுகிறது.

Address

Coimbatore
641020

Opening Hours

Monday 10am - 2am
Tuesday 10am - 2am
Wednesday 10am - 2am
Thursday 10am - 2am
Friday 10am - 2am
Saturday 10am - 2am

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sex and Astrology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram